Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanendrum Neeyendrum...! Part - 2
Naanendrum Neeyendrum...! Part - 2
Naanendrum Neeyendrum...! Part - 2
Ebook344 pages2 hours

Naanendrum Neeyendrum...! Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உமாகாந்தனின் மாறுபட்ட வாழ்க்கையால் தன் குடும்பத்தினர் அடையும் துன்பத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனது இந்த முடிவால் பல நன்மைகளும், பல துன்பங்களும் நிகழ்கிறது. கூண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட உமாகாந்தனின் நிலை என்ன? மேலும் சத்தியா, வல்லபி, மைதிலி மற்றும் சம்பத்தின் வாழ்க்கையில் உமாகாந்தனின் முடிவு பெரும் புயலை வீசியதை தொடர்ந்து படித்து அறிவோம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580106007023
Naanendrum Neeyendrum...! Part - 2

Read more from Jaisakthi

Related to Naanendrum Neeyendrum...! Part - 2

Related ebooks

Reviews for Naanendrum Neeyendrum...! Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanendrum Neeyendrum...! Part - 2 - Jaisakthi

    https://www.pustaka.co.in

    நானென்றும் நீயென்றும்...! பாகம் - 2

    Naanendrum Neeyendrum...! Part – 2

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் -14

    அத்தியாயம் -15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் -21

    அத்தியாயம் -22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் -27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 1

    இன்றைக்காவது நல்ல பொழுதாக விடிய வேண்டும். என்று வேண்டிக் கொண்டேதான் விழித்தாள் ஏழிசை வல்லபி.

    உமாகாந்தன் போய் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி இருந்தது.

    இந்த ஒரு வாரத்திலும் சத்யபிரகாஷின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் அவள் மனத்தைப் புரட்டிப் போட்டுவிட்டன.

    அந்த வீட்டில் எல்லையற்ற சோகம் கப்பியிருந்தது.

    சத்யபிரகாஷுக்கு பட்ட பாடெல்லாம் வீணாப் போச்சே என்ற துக்கம் பொங்கிப் பொங்கி வந்தது. ஆனால், தானே சோகமயமாக உட்கார்ந்து விட்டால் குடும்பத்தில் எல்லோரும் நிலைகுலைந்து போவார்கள் என்றுதான் அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், என்ன ஆச்சு இப்போ? வெளியுலகம் பார்க்கறேன்னு போயிருக்கான். பார்த்துட்டு வரட்டுமே, வெளியுலகம் பார்த்தால்தான் நாம எவ்வளவு அவனுக்காக வொரி பண்ணினோம்னு அவனுக்கு தெரியும். விட்றலாம். என்றான்

    அப்பா அவனை கவலையுடன் பார்த்தார்.

    என்ன சத்யா, இப்படி சொல்றே?. நீயே இப்படி சொன்னா என்றார்.

    அவன் அப்பாவை வாஞ்சையுடன் பார்த்துப் புன்னகைத்தான்.

    அப்பா! அவன் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. ஹி கேன் மேனேஜ் என்றான்.

    அப்பா அவனை மறுபடியும் பார்த்து சின்னக் குழந்தை இல்லைதாம்ப்பா ஆனா, மத்தவங்களைப் போல இல்லையே என்றார்.

    சத்யபிரகாஷ் மறுக்கவில்லை. மேலும் கீழும் தலையாட்டிக் கொண்டான்.

    அது உண்மைதாம்பா, ஆனா அதுக்காக அவனை சிறகில வச்சு எத்தனை நாளைக்கு காப்பாத்த முடியும் சொல்லுங்க? ஒரு வேளை அவன் சொல்ற மாதிரி ஓவர் அஃபக்ஷன், ஓவரா போட்டு மூடி வைச்சு அவனுக்கு மூச்சு முட்டிடுச்சு போல இருக்கு. லெட் ஹிம் கோ. லெட் ஹிம் கோ என்றான்.

    அம்மா இப்போது அவனை கவலையுடன் பார்த்தாள்.

    மைதிலியும் கூட என்ன அண்ணா இப்படி சொல்றே? என்று பார்த்தாள்.

    அவன் எல்லோரையும் ஆழமாகப் பார்த்தான்.

    சரி சரி ரொம்ப கவலைப்படாதீங்க. அதுக்காக ஒண்ணும் அவனை அப்படியே விட்டுடலை. தமிழ்நாடு முழுக்க உள்ள நண்பர்கள்கிட்ட சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த வாரத்துக்குள்ள கிடைச்சிருவான். ஆனா நாம்பளும் ஒண்ணு ஞாபகம் வச்சுக்கணும். அவன் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. அவனா ஏதாவது முடிவு எடுத்தான்னா மோதிப் பார்க்கட்டும் அப்படின்னு விடறதுதான் நல்லது என்றான்.

    என்னமோப்பா நீயேதான் சொன்னே அவனை வெளியில் விட்டா ரெண்டே ரெண்டு விஷயங்கள் தான் இருக்குன்னு ஒரு தடவை நீதானே சொன்னே? என்றார் அப்பா.

    ஆமா, இப்பவும்தான் சொல்றேன். ஆனா இப்ப எனக்கு கொஞ்சம் கான்ஃபிடன்ஸ் வந்திருக்குப்பா. ஏன்னா அவனுக்கு ஓவியம் வரையத் தெரியும். எங்கிருந்து வேண்ணா ஓவியம் வரைஞ்சுக்கலாம். சப்போஸ் சென்னை போனா அங்கே ஓவியக் கண்காட்சி இருக்கு. அல்லது எங்கிருந்து வேண்ணாலும் தொடர்பு வச்சுககலாம். ஓவியக் கண்காட்சி நிறுவனர்கள்கிட்டே தொடர்பு வச்சுக்கிட்டு இயர்ன் பண்ணிக்க முடியும். அப்படியும் இல்லைன்னா செலவுக்கு அவனுக்கு பேங்க் அக்கவுண்ட்ல போட்றலாம். கிரெடிட் கார்டெல்லாம் எடுத்துட்டுத்தான் போயிருப்பான். டெபிட் கார்டெல்லாம் எடுத்துட்டுத்தான் போயிருப்பான்.

    தேடிப் பார்த்தியாப்பா? என்று கேட்டார் அப்பா.

    ஆமாம்பா. தேடிப் பார்த்தேன். இப்ப அவன்கிட்ட ஓரளவுக்கு பணமும் இருக்கு. அதனால மேனேஜ் பண்ணிப்பான். வெளி உலகமும் சுத்திப் பார்த்துட்டு வரட்டும் என்றான்.

    என்னமோப்பா, நீ தான் இவ்வளவு தைரியமா சொல்றே என்றார் அப்பா.

    வேற ஒண்ணும் பண்ண முடியாதுப்பா வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க? என்றான்.

    அப்பா ஒரு பெருமூச்சு விட்டுட்டு. அதுவும் நிஜம்தான். நீ சொன்ன மாதிரி நாம ரொம்ப அவனைப் பொத்திப் பொத்தி வைச்சுட்டோம் போலிருக்கு. அவன் போன உடனே இப்ப நம்பளுக்குத் தாங்க முடியலை. என்றவர்

    அவனுக்கும் ரொம்ப நாளைக்கு வெளியில சுத்த முடியாது. வந்துருவான்ற நம்பிக்கை இருக்கு. சரிப்பா நாங்க வேண்ணா சம்பத் குமாரோட அம்மா அப்பாவோட சேர்ந்து இந்த ராமேஸ்வரம் அங்க இங்கன்னு போயிட்டு வரோம்ப்பா. மனசு ரொம்ப கெட்டுக் கிடக்குது என்றார் அப்பா.

    சத்யபிரகாஷ் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து, சரி மைதிலியையும் கூட்டிட்டுப் போங்க என்றான்.

    மைதிலியையுமா? என்றார்கள் அவர்கள்.

    ஆமாம்பா, அவளை மட்டும் நீங்க தனியா விட்டீங்கன்னா..! நான் கம்பெனிக்குப் போயிடுவேன். அவ ரொம்ப ஒர்ரி பண்ணிப்பா என்றான்.

    அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சரிப்பா.. நீ? என்றார்கள்.

    நான் மேனேஜ் பண்ணிப்பேன்பா. எனக்கு ஒண்ணும் பிரச்சினையே இல்லை. கங்காம்மாவை வந்து சமைத்துக் கொடுக்கச் சொன்னா சமைத்துக் கொடுத்துருவாங்க. நான் போய் கம்பெனியை பார்த்துக்குவேன். பிரச்சினை இல்லை.

    ஒரு வழியாக அடுத்த நாள் சம்பத் குமாரின் பெற்றோர்களும் இவர்களுமாக சேர்ந்து ஒரு காரை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் போகிறோம் என்று கிளம்பிப் போனார்கள்.

    அப்பா வழியில் இருக்கிற ஊர்களையெல்லாம் பார்த்துட்டு வாங்க. மதுரையில் எல்லாம் ஸ்டே பண்ணுங்க ஒரு ஒன் வீக் இருந்து பார்த்துட்டு வாங்க என்றான்.

    மைதிலிக்கு துணையாக நித்திய கல்யாணியையும் அழைத்துக் கொண்டார்கள்.

    ஏழிசை வல்லபியும் சம்பத் குமாரும் மட்டும்தான் அவர்கள் வீட்டிலே இருந்தார்கள்.

    போனதெல்லாம் நினைவுக்கு வர தன்னுடைய அலுவலகத்தில் உள்ளே அதாவது ஓய்வறையிலே அமர்ந்திருந்தவன் தன் முன்னால் இருந்த நீள மேஜையிலே கவிழ்ந்து தலை வைத்துக் கொண்டான்.

    பெற்றோர்களிடமும் மைதிலியிடமும் அவன் கவலையைக் காட்ட முடியவில்லை.

    பொய்யாக நடிக்க வேண்டியிருந்தது.

    தைரியமானவனாக காட்டிக் கொள்ள வேண்டியிருந்தது.

    தானும் சோர்ந்து நின்றால் அவர்கள் சுத்தமாக நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற கவலை மிகுந்திருந்தது.

    அவனுக்கு இருந்த நண்பர்களின் மூலமாக உண்மையாகவே தமிழகம் முழுவதிலும் அவன் தொடர்பு கொண்டிருந்தான்.

    எப்படியாவது தனக்கும் உமாகாந்தனுக்கும் பரிச்சயமானவர்கள் யாராவது ஒருவரிடம்தான் அவன் போவான். அடைக்கலம் கேட்பான் என்ற எண்ணம் அவனுக்குள்ளே தீவிரமாக இருந்தது.

    ‘எங்கே போனானோ? என்ன செய்கிறானோ சாப்பிட்டானோ, தூங்கினானோ? சும்மாவே சென்சிடிவ். ரெண்டுங்கெட்டான் அப்படிங்கற ஒரு வார்த்தையை சொன்னதுக்கே மூட் அவுட் ஆனான். என்ன செய்வானோ தெரியலையே என்று எண்ணிய போது அவனுக்கு உடம்பில் இருக்கிற ஒவ்வொரு அணுவிலும் கவலையும் வருத்தமும் பொங்கியது.

    அந்த மேஜையிலே தலையைக் கவிழ்த்து வைத்து படுத்துக்கொண்டான்.

    நல்ல வேளையாக அது உணவு நேரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனேகமாக யாரும் வர மாட்டார்கள் அந்த நேரத்தில் என்று ஓய்வறைக்குப் போயிருந்தான்.

    மைதிலியும் பெற்றோர்களுடன் போயிருந்ததால் வெளியேதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    சம்பத் குமாரும் ஏழிசை வல்லபியும் வற்புறுத்தி அழைத்தார்கள். ஆனால், அங்கே போகவில்லை. ஏழிசை வல்லபியை பார்த்தால் உள்ளம் வெடித்து விடுமோ போன்ற ஒரு மனப்பாங்கிலே இருந்தான்.

    ‘கண்டதையும் யோசித்து உடம்பைக் கெடுத்துக்காதீங்க தம்பி.’ என்று கங்காம்மா கூட அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

    அவனும் இப்பொழுது ஓரளவுக்கு தேற்றிக் கொள்ள முனைந்து கொண்டிருந்தான்.

    உடனே கிளம்பியிருப்பான் வெளியூரிலே சென்று தேடிப்பார்ப்பதற்கு. ஆனால் தானும் விட்டுவிட்டு சென்றால் இங்கே குடும்பத்தில் பெரிய குழப்பம் வரும் என்றுதான். ஆங்காங்கே தகவல்கள் கொடுத்து உமா காந்தன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டிருந்தான்.

    பலவற்றையும் யோசித்துக் கொண்டு கண்களை மூடித் தலைசாய்த்திருந்த சத்யபிரகாஷுக்கு அந்த அறையின் வாயிலிலே யாரோ நிற்பது போல ஒரு உள்ளுணர்வு தோன்றியது.

    தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

    ஏழிசை வல்லபி நின்று கொண்டிருந்தாள்.

    அவள் முகத்திலும் எல்லையற்ற துக்கம்!

    சத்யா என்று ஒரு மாதிரி குழைந்த குரலிலே சொல்லிக் கொண்டு உள்ளே வந்தாள்.

    தன்னையும் அறியாமல் அவள் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.

    சத்யபிரகாஷும் தன்னிலை மறந்தவனாக கண்களில் கண்ணீர் கொட்ட குலுங்கி அழுதுவிட்டான்.

    ப்ளீஸ் சத்யா என்று அவள் அருகிலே நின்று அவனுடைய தலையை இழுத்து தன்னுடைய வயிற்றிலே சாய்த்துக் கொண்டாள்.

    சத்யபிரகாஷ் அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.

    ப்ளீஸ் சத்யா! ப்ளீஸ் சத்யா! என்றாள் ஏழிசை வல்லபி. அவனைத் தேற்றுவதற்கான வார்த்தைகளே அவளுக்கு கிடைக்கவில்லை.

    ஐந்து நிமிடங்கள் அழட்டும் என்று விட்டுவிட்டாள்.

    வல்லபிக்குத் தெரிந்திருந்தது. இந்த ஒரு வார காலமாகவே அவன் தன்னுடைய துக்கத்தை காட்டிக் கொள்ளாமல் மற்றவர்களை எல்லாம் தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

    இப்படித் துக்கத்தை அடக்கினால் அதனுடைய விளைவு என்ன ஆகுமோ என்ற அச்சமும் அவளுக்கு இருந்தது.

    அதனால் இப்போது அவன் தேம்பி அழுததை அவள் உள்ளூர வரவேற்றாள். வெடிச்சு வெளியே வந்துரட்டும். அப்பதான் ஆறுதலாகும் மனசு என்று எண்ணிக் கொண்டாள்.

    தன்னுடைய கண்ணையும் கண்ணில் பெருகுகிற கண்ணீரையும் மெல்ல துடைத்துக் கொண்டாள்.

    சத்யா ப்ளீஸ், நீங்களே அப்ஸெட் ஆனீங்கன்னா என்ன பண்றது. ப்ளீஸ் என்று தேற்றினாள்.

    நானே! நீங்களே! எல்லாரும் இப்படியே சொல்றீங்களே. நான் மட்டும் மனுஷன் இல்லையா என்று அவன் கோபித்தான்.

    மெல்ல அவளிடமிருந்து விலகிக் கொண்டான்.

    அந்த நிமிடத்தில்தான் தாங்கள் இருவரும் இருந்த நிலை அவர்களுக்கு புரிந்தது போலும்.

    அந்தத் துக்கத்துக்கு நடுவிலேயும் அவள் முகம் சிவந்ததை ஒரு தரம் தன்னை மறந்து ரசித்துப் பார்த்தான்.

    உடனேயே இந்தத் தொடுகை ஒரு நட்பு ரீதியிலானது இதற்கு மேல் கற்பனையெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்ளவும் செய்தான்.

    என்ன சத்யா, இப்படி ஆகிப்போச்சு என்றாள் ஏழிசை வல்லபி.

    அதான் ஏழிசை எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அவனை உருவாக்கவும் அவனை ஸ்டெடி பண்ணவும் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டேன். அத்தனையும் இப்போ விழலுக்கு இறைச்ச நீராப் போச்சே. வீணாப்போச்சே என்றான் அவன்.

    இல்லை. இல்லை. வீணாப் போகலை.ஏன் அப்படி நினைக்கறீங்க. இப்படி யோசித்துப் பாருங்க. தனியா தன்னால உலகத்தை சந்திக்க முடியும் அப்படீங்கற துணிவோடதானே கிளம்பியிருக்காரு. அந்தத் துணிவை நீங்க கொடுத்திருக்கீங்களே. அது எவ்வளவு பெரிய விஷயம் என்றாள்.

    எதையாவது சொல்லி தன்னைத் தேற்ற முயற்சிக்கின்ற அவளை அவன் புரிந்து கொண்டவன் போல பார்த்தான்.

    நீ எனக்கு ஆறுதலுக்காக சொல்றே என்றான்.

    இல்லை சத்யா. ஆறுதலுக்காக இல்லை. இப்ப உங்களை அழ விட்டேன் பார்த்தீங்களா அதுதான் ஆறுதலுக்காக. ஏன்னா உங்க துக்கத்தை அடக்கி வச்சிட்டிருக்கீங்க. மத்தவங்க யாரும் வருத்தப்படக் கூடாதுங்கறதுக்காக நீங்க எல்லாத் துக்கத்தையும் சுமந்துக்கிட்டிருக்கீங்க. உங்களுக்கு சொல்லிக்கறதுக்கும் அழறதுக்கும் பகிர்ந்துக்கறதுக்கும் நான் இருக்கேன் என்றாள் அவள்.

    அது தெரிஞ்சுது என்றான் அந்த நேரத்திலும் அவன் குறும்பாக.

    அவள் முகம் சிவந்தது.

    ஓ.கே. ஓ.கே. நான் ரைட் சென்ஸ்லதான் எடுத்துக்கிட்டேன்பா என்ற அவன் மறுபடியும் பாரு இசை. இத்தனை கஷ்டப்பட்டு எல்லாம் வீணாப்போச்சே! என்றான்.

    முகத்தை துடைத்துக் கொண்டு எதிரிலே இருந்த சீட்டை காட்டினான்.

    அவள் டேபிளுக்கு அந்தப் புறமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

    அவன் எழுந்து போய் வாஷ்பேஸினில் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தான்.

    நீயும்! என்றான்.

    அவளும் எழுந்து போய் வாஷ்பேஷனில் முகத்தை கழுவிக் கொண்டு எதிரிலே வந்து அமர்ந்தாள்.

    அதே நேரத்தில் கங்காம்மா அங்கே வந்தார்.

    போனவாரம் இப்படித்தானே தம்பி, நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கும்போதுதான் அந்தத் தம்பியும்,, என்று ஆரம்பித்து ஒரு சில செய்திகளை சொன்னார்.

    அவர் சொல்வதை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட சத்யபிரகாஷும் ஏழிசை வல்லபியும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அப்படின்னா இதான் காரணமா? என்ற பார்வை அவர்கள் இருவருக்கும் இடையேயும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

    அதிர்ச்சியில் இருந்து மீளாமலே ஒருவரை ஒருவர் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அப்படி ஒரு செய்தி கங்காம்மா சொன்னார்.

    அத்தியாயம் - 2

    என்ன கங்காம்மா சொல்றீங்க? என்று கேட்டான் சத்ய பிரகாஷ்.

    ஆமாம், தம்பி போன வாரம் நீங்க ரெண்டு பேரும் இங்க பேசிட்டிருந்தப்போ. தம்பி வந்துச்சு என்றார் கங்காம்மா.

    தம்பி வந்தானா? இங்கேயா? என்றான் மறுபடியும் சத்ய பிரகாஷ்.

    ஆமாம் தம்பி பின்வாசல் வழியா வந்து இந்த ரூம்ல உட்கார்ந்திட்டிருந்தது என்றாள்.

    எவ்வளவு நேரம் உட்கார்ந்திட்டிருந்தான்? என்று கேட்டான் சத்யபிரகாஷ்.

    ஆமாம் தம்பி, ஒரு அரை மணி நேரத்துக்கு மேல உட்கார்ந்துக்கிட்டிருந்தது என்றாள் கங்காம்மா.

    அப்படியா? என்றான் அவன் ஆழ்ந்த யோசனையுடன்.

    என்ன தம்பி இப்படி சொல்றீங்க? அப்ப தம்பி உங்க கிட்ட வந்து பேசலையா? நான் உங்களோடதானே பேசிட்டிருந்ததுன்னு நினைச்சேன்.

    இல்லையேம்மா.

    இந்த இடைவெளிக்குள்ளாக சத்ய பிரகாஷும் ஏழிசை வல்லபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    தாங்கள் இருவரும் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்ததை இவன் கேட்டுக் கொண்டிருந்தான் போலும். என்ன நினைத்தானோ தெரியவில்லையே? ஏதேதோ முடிவு செய்து கொண்டானோ? என்று எண்ணிய போதே சத்ய பிரகாஷுக்கு உறுத்தலாக இருந்தது.

    ஏழிசை வல்லபிக்கும் கூட கொஞ்சம் வெட்கமாகப் போய் விட்டது.

    அப்படியானால் உமாகாந்தனுடைய இந்த முடிவுக்கு தாங்கள்தான் காரணமா? என்ற எண்ணம் அவளுக்குள்ளும் ஓடியது.

    அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து பின் வாசல் வழியாவே போச்சு. என்ன தம்பி நீங்க வடை பஜ்ஜி சாப்பிடலையான்னு நான் கேட்கும் போது உஷ் அப்படின்னு வாயில விரலை வச்சு காண்பிச்சுட்டு போயிடுச்சு.ஆனா அவசரமா போன மாதிரி இருந்தது. போன அரை மணி நேரத்துல இப்படி நியூஸ் வருதே தம்பி. என்ன தம்பி இப்படி ஆயிப் போச்சு? என்றாள் கங்காம்மா.

    உடனே வல்லபி குறுக்கிட்டு கங்காம்மா இப்பதான் கொஞ்சம் அவரு தெளிவாயிட்டு வர்றாரு. திரும்பத் திரும்ப நாம அதைப் பேச வேண்டாமே என்றாள்.

    சரிங்கம்மா! சரி, என்றவர் திரும்ப மனது கேட்காமல். கண்டுபிடிக்கறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா தம்பி? என்று கேட்டாள்.

    எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் இருக்கேன் கங்காம்மா. ஆனா அவன் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. அவனா பார்த்து நாம கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் போய் இருந்தா யார்தான் என்ன செய்ய முடியும்? என்றான் சத்ய பிரகாஷ்.

    கங்காம்மா ஒரு பெருமூச்சு விட்டார். ராஜா மாதிரி வச்சுக்கிட்டீங்க. கொஞ்சம் கூட தம்பி புரிஞ்சுக்கலையே என்றாள் வருத்தத்துடன்.

    இல்லை. இல்லை புரிஞ்சுக்கிட்டான். ரொம்ப நாளா நான் வெளியூர் போயிட்டு வர்றேன்னு கேட்டுட்டு இருந்தான். நான் தான் அவனை தனியா அனுப்பக் கூடாது. அதனால் நிறைய பிரச்சினை வரும்னுட்டு வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்தேன். ஒரு வழியா அண்ணன்கிட்ட சொன்னா ஒத்துக்கமாட்டான்னு கிளம்பிட்டான் போலிருக்கு என்றான் சத்ய பிரகாஷ்.

    இருக்கும், இருக்கும். இந்தக் காலத்துப் பசங்களுக்கு வெளியூர் போய் சுத்திப் பாக்கணும்னு ஆசை இருக்குமோ என்னவோ? போயிட்டு வரட்டும் அதெல்லாம் சமாளிச்சுப்பாப்ல. தைரியமான பையன்தான். வந்துருவாப்ல. என்றார் கங்காம்மா.

    இதையேதான் நாங்களும் சொல்லிக்கிட்டு சமாதானப்படுத்திட்டு இருக்கோம் என்றான் சத்ய பிரகாஷ் வருத்தம் தோய்ந்த குரலில்.

    சரிங்க தம்பி. ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் எதுவும் வாங்கிட்டு வரணுமா? என்று கேட்டார்.

    இல்லை இல்லை ஒண்ணும் வேண்டாம் என்று அவசரமாக சொல்லிவிட்டாள் ஏழிசை வல்லபி.

    கங்காம்மா சற்று தூரம் நடந்து செல்லுவதை இரண்டு பேரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டார்கள்.

    அதற்குப் பிறகு சத்ய பிரகாஷ் திரும்பி வல்லபியை பார்த்தான்.

    ‘இசை’ என்றான். ஆழமான குரலில்.

    அவள் மௌனமாக சொல்லுங்க என்பது போல அவனைப் பார்த்தாள்.

    நாம பேசிட்டிருந்ததைப் பார்த்து அவன் ஏதாவது நினைச்சுக்கிட்டானோ? நமக்குள்ள ஏதாவது இருக்கறதா நினைச்சுக்கிட்டானோ? என்றான் கவலை தோய்ந்த குரலில்.

    இந்தக் கேள்வியைக் கேட்டவுடனே வல்லபி இன்னும் அதிர்ந்து போனாள்.

    ‘இல்லையா பின்னே? நமக்குள்ள ஒண்ணும் இல்லையா?’ என்று கேட்க வேண்டும் என்று அவள் மனது ஓலமிட்டது.

    இந்தக் கட்டத்திலே சத்ய பிரகாஷ் தன்னுடைய மனத்திற்கு எதிராக தான் போராடிக் கொண்டிருக்கிறான் என்பதையும் ஏதோ ஒன்று இருப்பதை இல்லை என்று நிரூபித்துக் கொள்வதற்காகத் தேவையில்லாமல் தன்னை வருத்திக் கொள்கிறான் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

    அதனால் அவள் மறுப்பெதுவும் சொல்லாமல் கசப்பாகப் புன்னகைத்தாள்.

    வேறொரு சமயமாக இருந்தால் ஏன் இருக்கக் கூடாதா? உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கக் கூடாதா? என்றெல்லாம் அவள் வாதிட்டிருப்பாள்.

    ஆனால், இந்தச் சூழ்நிலையில் அப்படியெல்லாம் பேசுவது அபத்தமாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

    இதற்கு என்னதான் முடிவு? என்றான். சத்யபிரகாஷ் அவளை நோக்கி.

    தெரியலையே? என்றாள் அவள்.

    அவன் திரும்ப அவளைப் பார்த்து ஏன் இசை பத்திரமா வந்துருவான்தானே? என்று கேட்டான்.

    கண்டிப்பா வந்துருவாருங்க இப்படியும் வெளி உலகம் போய் சுத்திப் பார்க்கும் போதுதான். அங்கிருக்கிற அவலங்கள் எல்லாம் தெரிய வரும். அப்பதான் ஒரு அனுபவம் கிடைக்கும். நம்ம எவ்வளவு வசதியா இருந்தோம். அப்படிங்கற எண்ணமும் வந்தால் ஒருவேளை திரும்ப வந்துடுவாரு என்றாள்.

    அப்போது கூட முழுமையாக வந்துவிடுவான் என்று சொல்வதற்கு அவளுக்கு துணிவு இருக்கவில்லை. ‘ஒரு வேளை வந்துவிடுவார்’ என்றுதான் சொன்னாள்.

    அம்மாவும், அப்பாவும் ரொம்ப வெக்ஸ் ஆயிட்டாங்க ஏழிசை, அதனாலதான் உங்க பேரண்ட்ஸோட சேர்ந்து கோயிலுக்கெல்லாம் போயிட்டு வரச் சொல்லி அனுப்பிச்சேன் என்றான்.

    அதுவும் ஒரு நல்ல முயற்சிதான் சத்யா. வெளியே இறங்கினாங்கன்னா மனசு மாறும். ஒரு வேளை உமாகாந்தன் கூட கண்ணுக்கு தட்டுப்படலாம் என்றாள் ஏழிசை வல்லபி.

    இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் சத்யாவுக்கு தோன்றவில்லை.

    ஆமாம் இல்லே, அப்படி ஒரு சான்ஸ் இருக்கில்லே? எதிர்பாராத விதமாக சந்திச்சு கூட்டிட்டு வந்துட்டாங்கன்னா கூட நல்லாருக்கும் என்றான் ஆசையோடு.

    சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இசை என்னைப் புரிஞ்சுக்குவீங்கதானே? என்று கேட்டான் சத்ய பிரகாஷ்.

    ‘சொல்லுங்க’ என்றாள் அவள்.

    "இதுக்குத்தான் இசை எனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாம்? எந்த ஆசைகளும்

    Enjoying the preview?
    Page 1 of 1