Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vandhal Mahalakshmiye...
Vandhal Mahalakshmiye...
Vandhal Mahalakshmiye...
Ebook303 pages3 hours

Vandhal Mahalakshmiye...

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

சடகோபன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவரின் ஒரே மகள் மீரா. இவர்களின் எதிர்வீட்டில் யதுநந்தன் என்ற இளைஞனை மீரா சந்தித்தாள். இருவரும் காதலித்தனர். இவர்களின் காதல் பற்றி அறிந்த சடகோபன் யதுநாதத்திற்கு விடுத்த சவால் என்ன? யதுநந்தன் அந்த சவாலை வென்றானா? வந்தாள் மகாலட்சுமியில் படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580133810073
Vandhal Mahalakshmiye...

Read more from Muthulakshmi Raghavan

Related to Vandhal Mahalakshmiye...

Related ebooks

Reviews for Vandhal Mahalakshmiye...

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vandhal Mahalakshmiye... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வந்தாள் மகாலட்சுமியே...

    Vandhal Mahalakshmiye…

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    "தாமரைப் பூவில் அமர்ந்தவளே...!

    செந்தூர திலகம் அணிந்தவளே...!

    தேவி... செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே...!"

    கண்மூடி... கை குவித்து... பக்திபரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தாள் மீரா... ஹாலில் இருந்த சடகோபனின் காதுகளில் நுழைந்தது தேன் தமிழில் தோய்த்தெடுத்து தீந்தமிழில் வந்த பாடல்... பேப்பரில் மூழ்கியிருந்தவரை மீராவின் லட்சுமிகானம் அசைத்துப் பார்த்தது, அவர் பேப்பரை மறந்து கண்மூடி பாடலில் லயித்து ரசிக்க ஆரம்பித்தார்...

    வணக்கம்... என்ற குரலில் கண்விழித்தவர் எதிரே நின்றிருந்த எதிர் வீட்டுக்காரரை பார்த்ததும் பதில் வணக்கம் வைத்து உட்காரச் சொன்னார்...

    என் பெயர் வாகீசன்... எதிர் வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கிறேன்... வந்தவர் அறிமுகப்படுத்திக் கொள்ள...

    தெரியுமே... என்றார் சடகோபன்...

    இன்னைக்குப் பால் காய்ச்சறோம்...

    அதுவும் தெரியும்...

    எப்படி...? இப்பத்தானே நான் வந்து சொல்றேன்...?

    ஆனா பாருங்க சார்... உங்க வீட்டுக்காரம்மா... என் வீட்டுக்காரிகிட்ட நேற்றைக்கு சாயங்காலமே இதைச் சொல்லிட்டாங்களே... நீங்கதான் லேட்...

    நான் லேட்டா...?

    திகைத்துப் போனார் அந்த வாகீசன்... முதல் நாள் மாலையில்தான் எதிர் வீட்டில் அவருடைய குடும்பம் கால் வைத்தது... லாரியில் வந்து இறங்கிய பொருள்களை ஒழுங்கு படுத்தி... வீட்டைத்துடைத்து ஹோட்டலில் வாங்கிய சாப்பாட்டை உண்டு விட்டு அவர்கள் தூங்க ஆரம்பித்போது இரவு மணி பதினொன்று...

    ‘அதுக்குப் பின்னாலேயா இவர் வீட்டம்மாகிட்ட என் வீட்டுக்காரி விசயத்தைச் சொல்லியிருப்பா...?’

    இல்லையென்றார் சடகோபன்...

    ஆக்சுவலா சார்... லாரியில உங்க சாமன்கள் முன்னே வந்ததா...?

    ஆமாம் சார்...

    நீங்க குடும்பத்தோட காரில் பின்னால் வந்தீங்களா...?

    இதுவும் ஆமாம்தான் சார்...

    அப்ப வந்து காலை தரையில் வைச்சு உங்க வீட்டுக்காரம்மா இறங்கின அடுத்த வினாடியே அவங்களுக்குத் தண்ணீர் தாகம் வந்து என் வீட்டுக் காரியிடம்தான் தண்ணீர் வாங்கிக் குடித்திருக்காங்க... அப்பத்தான் நீங்க டிரான்ஸ்பர்ல இந்த ஊருக்கு வந்திருக்கீங்கன்னும் உங்களுக்கு ரெண்டே பசங்கன்னும்... ரெண்டுமே ரெட்டை வால்கள்ன்னும்... அவங்களுக்கு ஸ்கூலில் இனிமேல்தான் இடம் வாங்கனும்னும் பல்வேறு விவரங்களை உங்க வீட்டுக்காரம்மா சொன்னாங்களாம்... அதில ஒன்னுதான் இன்னைக்கு காலையிலே நீங்க பால் காய்ச்சப் போகிற விவரம்...

    தண்ணீர் குடிக்கும் நேரத்திற்குள் இத்தனை விவரங்களை ஒலிபரப்பி விட முடியுமா...? மலைத்தார் வாகீசன்... அவருடைய மனையாட்டி பாகீரதியினால் எதுதான் முடியாமலிருந்திருக்கிறது...?

    எந்த ஊருக்குப் போனாலும்... அந்த ஊரில் கால் பதித்த மறு நிமிடமே... எதிர்வீடு... பக்கத்து வீடு... என்று அனைத்து வீடுகளிலும் தோழமை பூண்டு ஐக்கியமாகி விடும் அசாத்திய திறமை பாகீரதியிடம் உண்டு... அது அவளிடம் உள்ள சிறப்பம்சம்... வாகீசன் அப்படியல்ல... தேவையில்லாமல் யாரிடமும் வாயைத் திறந்து பேச மாட்டார்...

    உன் கூடவாவது பேசுவாரா இல்லையா...?

    பாகிரதியின் தோழிப் பெண்கள் ரகசியமாய் அவளிடம் கேலி பண்ணச் சிரிப்பது உண்டு...

    ரெண்டு பிள்ளைகளை பெத்திருக்கா... பேசாமலா பெத்துப் போட்டிருப்பா... வேண்டுமென்றே அவர்களில் பாதிப்பேர் கேள்வி கேட்டவளைத் தூண்டி விடுவார்கள்...

    கேட்டவளுக்கும் தெரியும்... அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும்... வரப் போகும் பதில் என்னவாக இருக்குமென்று...

    அதை செவி மடுக்கும் ரகசிய உற்சாகம் அவர்களது விழிகளில் கரை புரண்டோடும்...

    ஏண்டி... பேச்சுக்கும்... பிள்ளை பெறுகிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்காடி...?

    விசமத்துடன் வரும் பதிலில் அங்கே வெடிச்சிரிப்பு புறப்படும்... இப்படிப்பட்ட குழுக்களில் ஐக்கியமாகாமல் கணவரைப் போல பேசுவதற்கு கூலி கேட்க பாகிரதி தயாராக இருப்பதில்லை...

    வாகீசன் காரணமில்லாமல் யாரிடமும் பேச மாட்டார்... அப்போது கூட சடகோபனைத் தேடி அவர் வீட்டுக்கு வந்து எதிர்வீட்டில் தான் பால்காய்ச்சப் போகும் விவரத்தினை எதற்காக அவர் சொல்லி வைத்தார் என்றால்... அவர் விவரம் சொல்ல வந்த சடகோபன் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதினால்தான்...

    யோவ்...! வெண்ணையை கையில் வைத்துக்கிட்டு நெய்க்கு அலைகிறவனைத் தான் நான் பார்த்திருக்கேன்... நீ என்னடாவென்றால் நெய் கிணறையே எதிரில் வைத்துக்கிட்டு சொட்டு நெய்க்கு லோ... லோன்னு அலைகிறயே...

    அவருடைய மகன்களின் ஸ்கூல் அட்மிசனுக்காக அவரது நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான் இவை...

    நெய் கிணறா...?

    ஆமாய்யா... நீ குடி போகப் போகிறது எந்த வீடுன்னு நினைக்கிற...?

    தனிகாசலத்தோட வீடுன்னு நினைக்கிறேன்...

    வாகீசனுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்த ஹவுஸ்ஓனரின் பெயர் தணிகாசலம்... அதைக் குழப்பத்துடன் வாகீசன் சொன்ன போது...

    நீ சரியான டியூப் லைட்டுய்யா... என்று திட்டித் தீர்த்தார் அந்த நண்பர்...

    செல்போனின் மறுமுனையில் கேட்ட சப்தத்தில் அவர் தலையில் அடித்துக் கொண்டிருப்பாரோ என்ற சம்சயத்திற்கு ஆளானார் வாகீசன்...

    ‘இவதான் இப்படிச் சொல்றான்னா... கூடப் பழகுகிறவன்களும் இதையே சொல்கிறான்களே...’ அவருக்கு ஆற்றாமையாக இருந்தது...

    உன் வீட்டுக்கு எதிர் வீட்டை பார்த்தியா...?

    நண்பர் சொன்ன பின்புதான் எதிர் வீட்டையே ஏறெடுத்துப் பார்த்தார் வாகீசன்... அந்தத் தெருவில் இருந்த வீடுகளிலேயே தனித்தும்... வெகு பிரம்மாண்டமாகவும்... செல்வச் செழிப்புடனும் தெருவில் பாதியை அடைத்துக் கொண்டிருந்த வீட்டைப் பார்த்ததும்...

    ‘அப்பாடி...’ என்ற மலைப்புடன் பார்வையைத் தழைத்துக் கொண்டார்...

    இப்பத்தான் பார்த்தேன்ப்பா...

    இப்போதாவது பார்த்து வைச்சியே... அது யாரோட வீடு தெரியுமா...?

    யார் வீடுப்பா...

    கலெக்டர் சடகோபனோட வீடுய்யா...

    அப்படியா...?

    வாகீசன் இதில் என்ன இருக்கிறது என்ற நினைவுடன் சுரத்தில்லாமல் அசுவராஸ்யமாக கொட்டாவியை அடக்கியபடி பதில் சொன்னதில் அந்த நண்பருக்கு கோபம் வந்து விட்டது...

    என்ன நொப்புடியா...? ஏன்ய்யா இப்படி இருக்க...? கலெக்டர் சடகோபனுக்கு இந்த ஊரில செல்வாக்கு ஜாஸ்திய்யா... அவர் பரம்பரை கோடிஸ்வரர்... அவர் குடும்பத்திலே மூத்த தலைமுறையினர் வியாபாரத்திலே கொழிக்க... இவர் மட்டும் கலெக்டராகியே தீருவேன்னு அடம் பிடிச்சு பரிட்சை எழுதி கலெக்டர் ஆனாராம்... அப்பேற்பட்டவர்...

    அதுக்கு இப்ப என்னங்கிற...?

    உன்னை என்னதான்ய்யா செய்கிறது...? அவர்கிட்ட நீ ஒரு வார்த்தை கேட்டா... அவரும் ஒருவார்த்தை சொல்வாரில்ல...?

    எதுக்கு...?

    இன்னும் விடுபட முடியாத குழப்பத்தில்தான் இருந்தார் வாகீசன்... அவர் காதுகளில்...

    ‘ஒரு வார்த்தை கேட்க...

    ஒரு வருசம் காத்திருந்தேன்...’

    என்ற பாடல் ஒலித்தது...

    அந்த வார்த்தை கதாநாயகி எதிர்பார்த்த காதல் வார்த்தை... இந்த வார்த்தை என்ன வார்த்தை...?

    உன்னோட நிஜமாவே முடியலைய்யா... எப்படித்தான் உன் வீட்டுக்காரம்மா பிளட்பிரசர் எகிறாம உன்கூட குடும்பம் நடத்தறாங்களோ...

    ‘அதைப்பத்தி இவனுக்கென்ன கவலை...’

    வாகீசனுக்கு கோபம் பொத்துக் கொண்டுதான் வந்தது... ஆனாலும் அவர் அதை வெளிவிடவில்லை...

    அவருக்கிருப்பதே அத்தி பூத்தாற்போல சில நண்பர்கள்தான்... அதிலும் பேசிக் கொண்டிருந்த நண்பர் கொஞ்சம் நெருக்கமானவர்... மற்றவர்களைப் போல வாகீசனின் உம்மணாம் மூஞ்சியைப் பொருட்படுத்தாமல் மனம் விட்டுப் பேசிப் பழகக் கூடியவர்...

    இருக்கிற ஒன்றிரண்டு நட்புக்களையும் முறித்துக் கொள்ள வேண்டுமா என்ற ஞானோதயத்துடன் வாகீசன் பேசாமல் இருந்துவிட்டார்...

    நல்லாக் கேட்டுக்க வாகீசா... கலெக்டர் மனசு வைத்து ஒரு வார்த்தை சொன்னா நீ கேட்கிற ஸ்கூலில உன் பிள்ளைகளுக்கு சீட் கிடைத்து விடும்... அதிலும் உன் பெரிய மகன் இந்த வருசம் டென்த் படிக்கப் போகிறான்னு சொல்கிற...

    அப்போதுதான் அந்த ஒரு வார்த்தை எந்த வார்த்தை என்பது வாகீசனுக்கு பிடிபட்டது...

    ‘இதுதான் அந்த ஒரு வார்த்தையா...?’

    அவர் முக்தியடைந்து விட்டதைப் போல மகிழ்ந்து போனாலும்... எப்படி அறிமுகமில்லாத எதிர் வீட்டு கலெக்டரிடம் ஒரு வார்த்தை பேசுவது என்று அடுத்து மலைத்தார்...

    பால் காய்ச்சப் போகிறேன்னு சொல்லிக்கிட்டுப் போய்யா...

    நண்பர்தான் திட்டம் வகுத்துக் கொடுத்தார்... அதை செயல் படுத்த வந்தால் பாகீரதி அவரை முந்திக் கொண்டாளா...?

    ஜானகி... காபி கொண்டா...

    சடகோபன் குரல் கொடுத்துவிட்டு வாகீசனைப் பார்த்தார்... உடனே வாகீசன் சோபாவின் நுனிக்கு வந்து விட்டார்...

    நல்லா உட்காருங்க... சடகோபன் சொல்லிப் பார்த்தார்...

    இருக்கட்டும் சார்... வாகீசனால் நிமிர்ந்து உட்கார முடியவில்லை...

    அதற்குள் காபிக் கோப்பைகளுடன் ஜானகி வந்து விட்டாள்...

    ஜானு... சார் யாரு தெரியுமா...? சடகோபன் அறிமுகப் படுத்தி வைக்க வாய் திறந்த போதே...

    தெரியுமே... எதிர் வீட்டு பாகீரதியோட வீட்டுக்காரர்... என்றாள் ஜானகி...

    நான் சொல்லலை...? சடகோபன் சிரித்தார்...

    அது எப்படித்தான் வாகீசனாலேயே சகஜமாக பேசிப் பழக முடியாத உயரத்தில் இருப்பவர்களிடம் கூட பாகீரதி இயல்பாக பேசிப் பழகி விடுகிறாளோ என்ற பொறாமை வாகீசனின் இதயத்தில் வந்தது...

    பிள்ளைகளுக்கு ஸ்கூலில் இடம் கிடைக்கனு மேன்னு பாகிரதி வருத்தப் பட்டா... நான் இவரிடம் சொல்லியிருக்கேன்... கவலையே படாதீங்க... உங்க பிள்ளைகள் நாளைக்கே ஸ்கூலில் ஜாயின் பண்ணிருவாங்க... அதுக்கு நான் கேரண்டி... ஜானகி அபயம் கொடுத்தாள்...

    எப்படி ஆர்டர் போடுகிறா பாருங்க... வீட்டுக்காரியோட ரெக்கமென்டேசன்... மீற முடியாது... நீங்க இன்னைக்கே போய் ஸ்கூல் பிரின்ஸிபாலைப் பாருங்க... என்றார் சடகோபன்...

    வந்த வேலை இவ்வளவு எளிதாக முடியக்கூடும் என்று எதிர் பார்க்கவில்லையாதலால் வாகீசனுக்கு மயக்கம் வருவதைப் போல இருந்தது...

    ‘என் பொண்டாட்டிக்கு இவ்வளவு பவரா...?’

    பின்னே...? என்றாள் பவர் ஸ்டாரான பாகீரதி...

    உங்களைப் போல ஒரு உம்மணாம் மூஞ்சிக்கு வாழ்க்கைப்பட்டு ஒன்றுக்கு இரண்டாய் பிள்ளைகளைப் பெற்றுப் போட்டு வைத்திருக்கிறேனே... நாலு மக்க மனுசங்க துண கிடைச்சாத்தானே அதுகளையும் வளர்த்து ஆளாக்க முடியும்...?

    என்னவோ போடி... வரவர உன் பவரைப் பார்த்து எனக்கே மலைப்பா இருக்கு...

    பவர் ஸ்டாருக்கு கணவரான மலைப்பு வாகீசனுக்கு...

    வீட்டுக்குப் பால் காய்ச்சிய போது சடகோபன் மனைவியுடன் வந்து ஒரு தம்ளர் பாலருந்தி வாகீசனுக்கு மீண்டும் மயக்கத்தை வரவழைத்தார்...

    காலையிலே உங்க வீட்டுக்கு வந்தப்ப பாடிக்கிட்டு இருந்தது யாருங்க...? அப்போதுதான் ஞாபகம் வந்தவராக கேட்டார் வாகீசன்...

    யாரா இருக்கும்ன்னு நினைக்கறிங்க...?

    கானக்குயிலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...

    வாகீசனுக்குப் பாவம் ஐஸ் வைக்கவெல்லாம் தெரியாது... அது போன்ற ஆயகலைகளை அவர் அறிந்திராதவர்... அப்பாவி... முசுடு...

    அவர் காதில் விழுந்த இனிமையான கானத்தில் கவரப்பட்டவராய் இயல்பாக அவர் சொன்ன சொல்லில் மகிழ்ந்து போனார் சடகோபன்...

    அது என் பொண்ணு மீரா...

    சடகோபன் போனதும் வாகீசனுக்கு அருகில் வந்த பாகீரதி...

    பரவாயில்லையே... நீங்ககூட நல்லாப் பேசக் கத்துக்கிட்டிங்களே... இப்படித்தான் இருக்கனும்... என்று கணவருக்கு கை கொடுத்தாள்...

    ‘நான் எப்போதும் போலதானடி இருக்கேன்...?’

    ம்ஹீம்... உண்மையைச் சொன்னால்கூட அதை புகழ்ச்சியாக இந்த உலகம் எடுத்துக் கொள்ளும் போது அப்பாவி வாகீசனால் என்ன பேச முடியும்...?

    2

    தோட்டத்தில் இருந்த பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் வாகீசன்... முண்டா பனியனும், மடித்துக் கட்டிய வேட்டியுமாக தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையைச் சுற்றி முண்டாசு கட்டி தண்ணீர் பைப்பை பிடித்தவரைப் பார்த்த பாகீரதி...

    அச்சு அசல் தோட்டக்காரனேதான்... என்று சான்றிதழ் வழங்கி விட்டுச் சென்றாள்...

    போடி...

    மனைவியிடம் சிலுப்பி விட்டு கர்மமே கண்ணாக செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவர்...

    தோட்டக்காரரே... என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தார்...

    அவர் வீட்டுக் காம்பவுண்டு கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தாள் ஒரு அழகான பெண்... சீரான நாசியும்... பிறை போன்ற நெற்றியுமாக... வட்ட வடிவ முகத்துடன் இருந்தவளைப் பார்த்தவர்...

    ‘இந்தப் பெண் யாரைக் கூப்பிடறா...?’ என்று யோசித்தார்...

    அதற்குள் அந்தப் பெண் அருகில் வந்திருந்தாள்... அவளிடமே சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்ற நினைவுடன் அவர் பேச வாய் திறந்தபோது அந்தப் பெண் அவரை முந்திக் கொண்டு...

    உங்களைத்தான் தோட்டக்காரரே...! வீட்டில் யாருமில்லையா...? என்று தெள்ளத் தெளிவாகக் கேட்டு அவருடைய சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்...

    ‘இந்தப் பொண்ணு என்னைத்தான் தோட்டக் காரரேன்னு கூப்பிட்டிருக்குது...’ வாகீசன் நொந்து நூடுல்ஸாகி விட்டார்...

    அச்சு அசல் தோட்டக்காரனேதான் என்று பாகீரதி அவருக்கு சான்றிதழ் வழங்கிய விவரம் இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிய வந்தது...?

    வாகீசன் தண்ணீர் பைப்பை செடிகளுக்கு அடியில் விட்டார்... மடித்துக் கட்டியிருந்த வேட்டியை இறக்கி விட்டார்... தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து தோளில் இரு பக்கமும் வழியுமாறு கெத்தாக போட்டுக் கொண்டார்...

    ஏம்மா... நானிருக்கேனே... என்று சொன்னார்...

    நீங்க இருக்கிறது தெரியுது... உங்க முதலாளி குடும்பத்தார் இருக்காங்களான்னுதான் நான் கேட்டேன்... என்றாள் அந்தப் பெண்...

    இங்கே தொழிலாளியெல்லாம் கிடையாதும்மா... அதனால முதலாளியும் இங்கே கிடையாது... இருக்கிறது எங்க குடும்பம் மட்டும்தான்... வாகீசன் விளக்கத்தில்...

    அங்கிள் நீங்களா...? என்று வாய் பொத்தினாள் அவள்...

    அங்கிளா...?

    என்னடா இது என்று ஆகிவிட்டது வாகீசனுக்கு... யாரோ ஒரு பெண் வந்து அவரை உறவு முறை சொல்லி அழைக்கிறாள்...

    வாகீசன் எப்போது அந்தப் பெண்ணுக்கு அங்கிளானார்...?

    ‘இந்த வீட்டுக்கு குடி வந்தாலும் வந்தோம்... நடக்கிற எல்லாமே நான்-ஸின்க்காவே நடக்குது...’ வெறுத்துப் போய் விட்டார் வாகீசன்...

    எப்படி அவர் அந்தப் பெண்ணுக்கு ‘அங்கிள்...’ ஆனாள் என்பதை அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெளிவு பண்ணிக் கொள்ளலாம் என்று வாகீசன் வாய் திறந்த போது அந்தப் பெண்...

    ஆண்ட்டி... என்றாள்...

    ‘இது வேறா...?’

    வாகீசன் தலையை ஒரு தினுசான கோணத்தில் வைத்து தோராயமாக திரும்பிப் பார்க்க முனைந்தார்... அவருடைய பார்வை வட்டத்துக்குள் வீட்டுக்குள்ளிருந்து பாகீரதி வெளிப்படுவது தெரிந்தது...

    ‘இனி இவ வேற கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாளே...’

    பாகீரதி வருவதற்குள் இந்த அங்கிள், ஆண்ட்டி விவகாரத்தை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசரமானார் வாகீசன்... இல்லாவிட்டால் பாகீரதி அவரை உண்டு... இல்லையென்று ஓர்வழி பண்ணி விட மாட்டாளா...?

    இங்கே பாரம்மா...

    வாகீசன் சொன்னதை அந்தப் பெண் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் எங்கேயோ பார்த்தாள்...

    ‘அதுசரி... என் வீட்டுப் பொம்பளையே என் சொல்லைக் கேட்க மாட்டா... இதில ஊரார் வீட்டுப் பெண் என் பேச்சைக் கேட்டு விடப் போகிறாளா என்ன...?’

    அவர் எனக்கென்ன என்று நின்றிருந்த அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார்... அவர் பார்வையை கண்டு கொள்ளாமல் புன்னகை அரசியாக நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் வந்த பாகீரதி...

    வா மீரா... இப்பத்தான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா...? என்று உரிமையுடன் கேட்டபடி கட்டிக் கொண்டாள்...

    பதிலுக்கு அந்தப் பெண்ணும் பாகீரதியைக் கட்டித் தழுவிக் கொள்ள... ஊடே நின்றிருந்த வாகீசன் இமை கொட்டி விழித்தார்...

    இதுபோன்ற ஆச்சரியங்களை அனாசியமாக நிகழ்த்திக் காட்டுவதில் பாகிரதிக்கு நிகர் பாகீரதிதான் என்று அவர் உள்ளம் சொன்னது...

    காலம் காலமாய் பழகியவர்களைப் போல கட்டித் தழுவி முடித்தவர்கள் ஒரு வழியாய் பிரிந்து நின்றார்கள்...

    இவர்தான் எங்க வீட்டு அங்கிள்... பாகிரதி அவரை மீராவுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்...

    ஏண்ட்டி...? வாகீசன் அழமாட்டாத குறையாய் ஆற்றாமையுடன் வினவினார்...

    இப்படியொரு அறிமுகத்தைப் பண்ணி வைக்கச் சொல்லி அவரா கேட்டார்...? இதற்கு அவள் பேசாமலே இருந்திருக்கலாமே...

    ‘நான் இவளுக்கு வீட்டுக்காரனா... இல்லை... வீட்டு அங்கிளா...?’ அவருக்கு வெறி வெறியாக வந்தது...

    மீரா அவரைப் பார்த்ததும் எழுந்த குபிர் சிரிப்பை அடக்கிக் கொள்ள வாய் பொத்தினாள்...

    ‘இது எதுக்கு இப்ப சிரித்து வைக்குது...?’ வாகீசனுக்கு கடுப்பு மேலிட்டது...

    ஊரில் உள்ள நண்டு, சிண்டுகள் கூட எல்லாம் அவர் மனைவி சிநேகிதம் பிடித்து... அவர்கள் முன்னால் அவரை காமெடியனாக்கிக் கொண்டிருக்கிறாளே என்ற கோபம் அவருக்குள் எழுந்தது...

    அந்தக் கோபத்தை அவரால் பாகீரதியிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1