Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Analum Nee! Punalum Nee!
Analum Nee! Punalum Nee!
Analum Nee! Punalum Nee!
Ebook181 pages1 hour

Analum Nee! Punalum Nee!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொலிவான தோற்றமும் ஜொலிக்கும் நிறமும் அழகான உடலமைப்பும்தான் ஒரு பெண்ணின் அடையாளமா? பொலிவான தோற்றம் அமையப் பெறாத ஒரு பெண்ணால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதா? இந்த எண்ணம்தான், அனலும் நீ! புனலும் நீ! என்ற இந்தப் புதினம் பிறந்த கதை.

இந்தப் புதினத்தில் நாயகியான தேன்மொழிக்கு உதவி செய்பவராக மகேந்திரன் என்ற ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளேன். அவர் ரீல் இல்லை; ரியல்! ஆமாங்க! மகிழ்ச்சி எஃப்.எம் என்றொரு வலைதள வானொலி அதாவது வெப் ரேடியோ இருப்பது உண்மை. மகிழ்ச்சி எஃப்.எம்மின் நிறுவனர் திரு. மகேந்திரன் அவர்கள் என் எழுத்துப்பயணத்தில் கிடைத்த மகத்தான நண்பர், என் உடன் பிறவா சகோதரர். அவரிடம் ஏதேச்சையாகப் பேசும் போது கிடைத்த ஒன்லைன் தான் இந்தக் கதையின் கருவாக மாறிப் போனது.

இதை டெவலப் செய்து எழுத நினைத்த போது அவரை விட்டு எழுத முடியவில்லை; அவர் இடத்தில் கற்பனையாக ஒரு கதாபாத்திரத்தையும் இணைக்க மனமில்லை. அவரையே தேன்மொழியின் வழிகாட்டியாய் காட்டினால் என்ன என்று தோன்றியது. இதை அவரிடம் கேட்டு அவரிடம் அனுமதி வாங்கியே கதையில் இணைத்துள்ளேன். அவர் கொடுத்த ஒன்லைனுக்கு நான் செய்யும் சிறு நன்றியாகவே இதை நினைக்கிறேன்.

இந்தப் புதினம் உருவாகக் காரணமான, மகிழ்ச்சி எஃப் எம் நிறுவனர் திரு மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் புதினத்தை புத்தகமாக பதிப்பிக்க முன்வந்த புஸ்தகா நிறுவனர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தக் கதையை படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மேலும் இந்தக் கதையை உங்கள் நண்பர்களிடம் பரிந்துரை செய்யுங்கள்.

அன்புடன்,

அன்னபூரணி தண்டபாணி

comments2purani@gmail.com

Languageதமிழ்
Release dateDec 16, 2023
ISBN6580144010547
Analum Nee! Punalum Nee!

Read more from Annapurani Dhandapani

Related to Analum Nee! Punalum Nee!

Related ebooks

Reviews for Analum Nee! Punalum Nee!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Analum Nee! Punalum Nee! - Annapurani Dhandapani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனலும் நீ! புனலும் நீ!

    Analum Nee! Punalum Nee!

    Author:

    அன்னபூரணி தண்டபாணி

    Annapurani Dhandapani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1.

    இடியட்! கெட் ஔட் ஆஃப் தி க்ளாஸ்! பேராசிரியை அந்த மாணவியைப் பார்த்துக் கத்தினாள்!

    கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூட மனமின்றி கூனிக் குறுகிப் போன ஒரு மாணவி, தன் புத்தகங்களைத் திரட்டிக் கொண்டு அந்த வகுப்பறையை விட்டு வெளியேறினாள்!

    நடந்தது இதுதான்! தண்டனை பெற்ற மாணவி, இரண்டு பெஞ்சுகள் முன்னால் அமர்ந்திருக்கும் தன் தோழி ஒருத்திக்கு தன் பேனாவை தூக்கிப் போட, அது கொஞ்சம் அதிக வேகமாகத் தூக்கிப் போடப்பட்டதால் தன் இலக்கைத் தாண்டிப் போய், தவறுதலாக பேராசிரியையின் மேல் பட்டு விட்டது! பாட வேளையில் விளையாட்டா எனக் கோபபட்டு பேராசிரியை அந்த மாணவியை தண்டித்தாள்!

    மற்றவர்கள் எல்லாம் ஏளனமாகப் பார்க்க, அவமானத்தால் தலை கவிழ்ந்தபடியே வெளியே போகும் தன் வகுப்பு மாணவியை பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென்று எழுந்து,

    சாரி மேம்! இது அவ பண்ல! நா பண்ணினேன்! என்னுடைய மிஸ்டேக் இது! ஐம் சாரி மேம்! என்றாள்!

    வாட் இஸ் திஸ்? யூ பீபுள் ஆர் ஆல்வேஸ் மிஸ் பிஹேவிங்! என்றாள் பேராசிரியை!

    சாரி மேம்! என் கை ஸ்லிப் ஆயிருச்சு! இப்டி ஆகும்னு நா எதிர்பாக்கல! வெரி சாரி! ஐ டின் மீன் இட்! என்று பவ்யமாகக் கூறினாள்!

    ம்... ம்... இட்ஸ் ஓகே! ஹே கேர்ள்! கோ டு யுவர் ப்ளேஸ்! என்று பேராசிரியை பெரிய மனதுடன் மன்னிக்க, வெளியே சென்ற மாணவி கசியத் தொடங்கியிருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னுடைய இருக்கையில் வந்தமர்ந்தாள்!

    அமரும்போது தனக்காக பேசிய தன் தோழியைப் பார்த்து கண்களாலேயே நன்றி கூறினாள்!

    அதற்குள்,

    நீ ஏண்டீ அவளக் காப்பாத்தின? அந்த ஹிட்லர் கிட்ட செம்மையா பனிஷ்மென்ட் வாங்கியிருப்பா. இந்தம்மா பெரிய காந்தி பாரு? ஜீவகாருண்யம் பாக்கறாங்க! என்று கிசுகிசுத்தாள் வீணா!

    ஹே விடுடீ! என்ன இருந்தாலும் அவ நம்ம க்ளாஸ் மேட்! என்று பதிலளித்தாள் இவள்!

    ம்க்கும்... என்று வீணா அங்கலாய்க்க,

    "நல்லதோர் வீணை செய்தே,

    அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ!" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பாடினாள்.

    ம்க்கும்... எப்ப என்ன கேட்டாலும் இதையே சொல்லு... என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் வீணா.

    அட்டென்ஷன் ஹியர்! பேராசிரியையின் அதட்டலில் மாணவர்களின் கவனம் அவள் எடுக்கும் பாடத்தில் குவிந்தது!

    அன்றைய வகுப்புகள் முடிந்ததும் மாணவிகள் எல்லாரும் கிளம்ப, இவளும் இவளுடைய தோழியும் மெதுவாக நடந்து கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்தம் வந்தனர்! அங்கே ஏற்கனவே இன்னும் பல மாணவிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்!

    சளசளவென்று அவர்களின் சத்தம் அந்த இடத்தையே ஒரு பூஞ்சோலையாக மாற்றிக் கொண்டிருந்தது!

    வீணா கேட்டாள்!

    ஏன்டி அவள காப்பாத்தின?

    ம்ச்! பாவம்டீ அவ.

    நீ இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு என்னடீ நடந்துச்சு?

    நேத்திக்கு மத்யானம் நா மேம் கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு கௌம்பினேன்ல... அப்ப இவளும் என்னை மாதிரியே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு வந்திருந்தா... நா பஸ் ஸ்டாப் வரும்போது இவ அங்க தனியா நின்னுகிட்டிருந்தா!

    ம்...

    "பஸ் ஸ்டாப்ல வேற யாருமேயில்ல. மத்தியானம்ங்கறதால, ரோடே காலியா இருந்துச்சு! ரெண்டு ரௌடிப் பசங்க இவகிட்ட வம்பு பண்ணிகிட்டிருந்தாங்க! இவ பயந்து நடுங்கிகிட்டிருந்தா!

    நா பக்கத்தில வரதப் பாத்ததும் என்னையும் கேலி பண்ண ஆரம்பிச்சாங்க! என் க்ரச்சஸ் (crutches) பிடிங்கிகிட்டு என்ன தள்ளி விட்டாங்க! நா சட்டுன்னு யோசிச்சி என் மொபைல்ல காவலன் ஆப் ரெட் பட்டனை அழுத்திட்டேன்! அஞ்சு நிமிஷத்தில போலீஸ் வந்துடுச்சி! எல்லாருக்கும் செம்ம அடி வெளுத்துட்டாங்க!

    அவனுங்கள அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனப்றம் நா அவ கிட்ட தைரியமா இருக்கணும்னு சொன்னேன்! அவ அழுதுட்டா!

    அப்பதான் கவனிச்சேன், அவ கை கால்ல எல்லாம் சூடு போட்ட தழும்பு! பாவம்! அவளுக்கு அம்மா கிடையாது போல!"

    க்ரேட் டீ! உன்னால மட்டும் தான் இப்டி எல்லார்க்காகவும் பாசம் காட்ட முடியும்! என்று வீணா சொல்லிக் கொண்டிருக்க, அவள் ஏற வேண்டிய பேருந்து வந்தது!

    வீணாவிடம் விடை பெற்றுக் கொண்டு பேருந்தில் ஏறியவள், அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தாள்!

    வீட்டு வாசலில் காலை நீட்டியபடி அமர்ந்து வருவோர் போவோரை எல்லாம் வம்பு செய்யும் இவளுடைய பாட்டி இவளைப் பார்த்ததும் ஏதோ வேண்டாத விருந்தாளியைப் பார்த்தது போல வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்!

    வீட்டுக்கு வெளியே மிகவும் ஜாலியான பேர்வழியாக எப்போதும் சிரித்துக் கொண்டும் கும்மாளம் போட்டுக் கொண்டும், எந்தப் பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்த்துவிடும் அளவுக்கு தைரியசாலியாக புலி போன்றிருப்பவள் வீட்டுக்குள்ளே அழுமூஞ்சியாக, யார் என்ன சொன்னாலும் பயந்து போய்த் தன் கூட்டுக்குள்ளேயே ஒடுங்கிவிடும் எலியாக மாறிவிடுவாள்!

    அந்த வீட்டின் கடைக் குட்டியாய்ப் பிறந்தாலும் அன்புக்கு ஏங்கும் அநாதைக் குழந்தையாய் அவள் பரிதவிப்பாள்!

    இதாவது புள்ளையா பொறக்கும்னு பாத்தா பொட்டச்சியா போச்சு! என்று கல்லூரிப் படிப்பு வந்த பின்பும் புலம்பும் பாட்டி! அவரை அடி பிறழாமல் பின்பற்றும் அப்பா! இவர்களைத் தாண்டி, பெற்ற மகளிடம் தன் தாய்ப் பாசத்தைக் கூட காட்டுவதற்கு கையாலாகாத அம்மா! தங்களுக்குப் போட்டியாகப் பிறந்ததாகக் கருதும் சகோதரிகள்! அட பொறந்ததுதான் பொறந்தா... கொஞ்சம் கலரா பொறந்திருக்கக் கூடாதா? என விமர்சிக்கும் உறவுகள்! இது ஒரு புறம் என்றால்,

    அவ கண்ணு இப்டி ஆந்தைக் கண்ணாட்டமா இருக்கு! பல்லு வரிசையில்லாம, மேல் உதடு பிளந்து மூஞ்சியே விகாரமா இருக்கு! தலைமுடி ரெண்டு இஞ்சுக்கு மேல வளராம சுருட்டிகிட்டு வளமே இல்லாம வறண்டிருக்கு!

    கை காலெல்லாம் குச்சி குச்சியா... அதுலயும் வலது கை கொஞ்சம் வளைஞ்சிருக்குல்ல! விந்தி விந்தி நடக்கறாளே! அப்ப அவ வலது கால் இடது காலை விட குட்டை போலிருக்கு...

    நல்ல வேளை! பேரழகன் படத்தில வர சூரியா மாதிரி இவ முதுகுல மூட்டையில்ல! இல்லன்னா, இவ இந்த வீட்லேயே இருந்திருக்க மாட்டா! இவ அப்பத்தா அப்பவே இவள எங்கியாவது குப்பைல வீசச் சொல்லியிருப்பா!

    இப்படிப்பட்ட விமர்சனங்களைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போய்விட்டாள் அவள்!

    குழந்தைப் பருவத்தில் ஒன்றும் புரியவில்லை! வளர வளர, தன்னுடைய தோற்றம் மற்ற குழந்தைகளிலிருந்து வேறுபடுகிறது என உணரத் தொடங்கினாள்! ஒரு மடங்காக இருந்த அவளுடைய வேதனையை தன் கனமான வார்த்தைகளால் நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக உயருவதற்கு உற்றார் உறவினர், அக்கம் பக்கத்தினருடைய சொல்லம்புகள் போதுமானதாக இருந்தன!

    ஆனால் பிறப்பிலேயே பிளவுபட்ட இவளுடைய மேலுதட்டையும் கோணலாக இருந்த பல்வரிசையையும் இவளுடைய தாய்வழித் தாத்தா வேலுசாமி, அவளின் இரண்டு வயதுக்குள்ளேயே, தன் சொந்த முயற்சியெடுத்து மருத்துவர்களிடம் காண்பித்து உரிய அறுவை சிகிச்சைகள் செய்து சரி செய்துவிட்டார். இந்த பிளவுபட்ட உதடும், பல்வரிசையும் சரியாகிப் போய்விட்டது. இவளுடைய பேச்சுக்கும் பங்கம் வராமல் காப்பாற்றப்பட்டது. மேலும் இவளுடைய முகத்தின் விகாரம் மறைந்து கருப்பாக இருந்தாலும் அழகாக இல்லையென்றாலும் அகோரமாக இல்லாமல் கொஞ்சம் பார்க்கும்படியான முகமாக மாறிப் போனாள்.

    அதே போல அவளுடைய காலின் உயரத்தை சரி செய்ய அதற்கேற்ற காலணிகளின் உதவியுடன் அவளை ஓரளவு சாதாரணமாக நடக்க வைத்தார்கள். ஆயினும் அவளுக்கு ஊன்றுகோலின் உதவியும் தேவையாகத்தான் இருந்தது.

    ஆனால் அவளுடைய வளைந்த கையை என்ன செய்தும் சரி செய்ய முடியாமல் போனது அவளின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இதெல்லாம் அவளுடைய தாத்தாவின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாயிற்று. மற்றபடி அவளுடைய தந்தை ராஜரத்தினம் அவளுக்காக ஒரு சிறு துரும்பையும் அசைக்கத் தயாராக இல்லை.

    இப்போதிருக்கும் மருத்துவத் துறையின் வளர்ச்சியினால் இந்தக் குறைகளெல்லாம் கருவிலேயே கண்டறிந்து களையப்பட்டு விடுமே; அதையெல்லாம் இவர்கள் செய்யவில்லையா? என்று யாராவது கேட்டால், அந்தக் குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் இதையெல்லாம் செய்திருப்பார்கள். அது அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படி அதற்கு சிகிச்சை செய்வார்கள்.

    ஆமாம். அவளுடைய தந்தை ராஜரத்தினத்தின் ஜாதகப்படி இப்போது அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கே நாசம் ஏற்படும்; இன்னும் ஒரு வருடம் கழித்துப் பிறந்தால் குடும்பத்துக்கு நலம் வந்து சேரும்; குடும்பமே செல்வச் செழிப்பில் உயரும் என்றெல்லாம் ஏதோ ஒரு வீணாய்ப் போன ஜோசியக்காரன் சொல்லை முழுதாய் நம்பி, அஞ்சலைக்கு கருக்கலைப்பு மருந்தை கொடுக்க முயன்றனர். ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்.

    நிறையோ குறையோ இந்தக் குழந்தை பிறந்தேவிட்டது.

    அவளைப் படிக்க வைப்பதற்கும் அவளுடைய அவளுடைய தந்தை முன் வரவில்லைதான்! ஆனால் அவர் அந்த ஊர்ப் பெரிய மனிதர்! தன் வீட்டுப் பிள்ளையை படிக்க அனுப்பாமல் இருந்தால் தனக்கு ஊருக்குள் இருக்கும் மரியாதைக்கு பங்கம் வந்துவிடும் என்பதாலேயே அவள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள் எனலாம்!

    சாதாரணமாக இது போல குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் சற்று மந்தமாகவேதான் இருக்கும். ஆனால் இவள் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை! இத்தனை குறைகளை அவளுடைய உடலில் வைத்த இறைவன் அவளுக்கு அறிவை வெகு தாராளமாகக் கொடுத்து தன் தவறை சமன் செய்துவிட்டான் போலும்! அவள் படிப்பில் படு சுட்டி!

    அதே போல, குரலிலும் குயில் குடி கொண்டுள்ளதோ என்று நினைக்கும்படி அத்தனை அருமையாகப் பாடுவாள்! அதுவும் பாட்டுக்கென்று தனியாக வகுப்பொன்றும் செல்லாமலேயே!

    பிளவுபட்ட உதட்டுடன் இருந்திருந்தால் இவள் பேச்சுக்கே பங்கம் வந்திருக்கும்.

    த... கருவாச்சி... சொம்மா கத்தாத... வாய மூடிகினு கம்னு கெட... என்று அவளுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1