Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkagave Naan
Unakkagave Naan
Unakkagave Naan
Ebook149 pages53 minutes

Unakkagave Naan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மானசா ஒரு பிரைவேட் கம்பெனியில் பணிபுரிகிறாள். தான் வேலை செய்யும் கம்பெனியின் எம்.டி. தன்னை காதலிப்பதாக கூறினார். மானசா அதை தட்டி கழித்துவிட்டாள். மானசா நிரஞ்சனை காதலிக்கிறாள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நிரஞ்சனை பிரிக்கிறாள். மானசாவின் காதல் கை கூடியதா? இல்லை எம்.டி.யின் காதல் கை கூடியதா? காதலில் நனையலாமா உனக்காகவே நான்…

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580140907126
Unakkagave Naan

Read more from Lakshmi Sudha

Related to Unakkagave Naan

Related ebooks

Reviews for Unakkagave Naan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkagave Naan - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    உனக்காகவே நான்

    Unakkagave Naan

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சூரியன் தன் தங்கக் கரத்தால் பூமியை வருடும், அந்தி சாயும் பொழுது. பறவைகள் கீச் கீச்சென கத்திக்கொண்டு, கூட்டைத் தேடி கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. மல்லிகைப் பூவின் நறுமணத்தை சுமந்து வந்த காற்று, ஏனோ மானசாவின் மனதை வருடவில்லை.

    அதற்குக் காரணம் தம்பி ஜகன். அவனிடமிருந்து வந்த போன் கால். அவன் போன் பண்ணியபோது மணி சுமார் நான்கு இருக்கும். அதற்கு மேல் மானசாவால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. கொஞ்சம் உடம்பு சரியில்லை. தலை வலிக்கிற மாதிரி இருக்கு. அதனால நான், சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பறேன் சார் என்று கௌதமிடம் அவசர அவசரமாக சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

    நான் வேணும்னா, காரில் டிராப் பண்றேன் மானசா, எதுக்கு தலைவலியோட பஸ்ல போற என்று கரிசனமாக கேட்ட கௌதமிடம் வேண்டாம் சார். நான் பஸ்ல போறதைத் தான் விரும்பறேன். அந்தக் கூட்டத்துல, லேடிஸ் ஸ்பெஷல் பஸ் கூட்டத்துல, பஸ், ஸ்டெப்ஸ் கிட்ட நின்னா போதும், தானா உள்ள போயிடலாம். அதே மாதிரி இறங்கற இடம் வர்ற போது, ஸ்டெப்ஸ் கிட்ட ஜஸ்ட் நின்னா போதும். தானா இறங்கிடலாம். இறங்கும் போது, தலைவலியும் பறந்து போயிடும். இதெல்லாம் காரில் வரவே வராது. திங்கட்கிழமை பார்க்கலாம் சார் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.

    கௌதம், ரொம்ப நல்லவன். கண்ணியமானவன். முகத்தைப் பார்த்து, கண்களைப் பார்த்து நேராகப் பேசுபவன். எல்லாவற்றுக்கும் மேலாக இவளைத் திருமணம் பண்ண விரும்புகிறான்.

    ஆனால் மானசாவால் நிரஞ்சனைத் தவிர வேறு யாரையும், நினைக்க முடியவில்லை. கௌதமின் மனம் புண்படாமல் யாரையும் கல்யாணம் பண்ணும் எண்ணம் தனக்கில்லை என்று பொதுவாக சொல்லி மறுத்து விட்டாள்.

    ஆனால், உன் மனம் மாறும் வரை நான் காத்திருப்பேன் என்று கௌதம் சொன்னபோது, என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தாள். நல்லவன் தான். தம்பியையும் சேர்த்து நன்றாகப் பார்த்துப்பான். ஆனால் என் மனம் நிரஞ்சனை மறக்க முடியாமல் தவிக்கிறதே. இதை கௌதமிடம் சொல்லவும் முடியாது. சொன்னால் நிரஞ்சனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்கிறாய். அப்புறம் நீ அவனையே நினைத்துக் கொண்டிருப்பது நல்லாயில்லை. அதனால சீக்கிரம் நல்ல முடிவாக எடு என்று வற்புறுத்துவான். ஆனால், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எவ்வளவு நாள் இப்படி, கண்ணாமூச்சி கௌதமிடம் ஆடுவது என்று நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

    சே தம்பி சொன்ன விஷயத்தை எப்படி சமாளிப்பது என நினைக்காமல், நிரஞ்சனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேனே என தன்னையே நொந்து கொண்டாள். ஏதாவது ஒரு சிக்கல், ஆபத்து என வந்தால் மனம் தன்னையறியாமல் அவனை நினைக்கிறதே என நினைத்து பெருமூச்செறிந்தாள்.

    அடுத்து என்ன செய்வது, என யோசிக்கத் தொடங்கினாள். பதினைந்து இலட்சம் ரூபாய்க்கு, ஜகன் தன்னுடன் படிக்கும் மாணவனுக்காக சூரிட்டி கையெழுத்துப் போட்டிருக்கிறான். கூடப் படித்த அந்தப் பையனின் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான். பெரிய பணக்காரப் பையன் தான். அண்ணன் மாதா மாதம் பணம் அனுப்பி கடனை அடைத்து விடுவதாகச் சொல்லியிருக்கிறான். ஆறு மாதம் சொன்ன படியே நடந்தது. கடனை ஒழுங்காக கட்டி இருக்கிறான். இன்னும் 6 மாத தவணை வட்டியோடு சேர்த்து சுமார் ஒன்பது லட்சம் பாக்கி உள்ளது. இதற்கிடையே அந்தப் பையனுக்கு தன் சொந்த ஊரான பூனேவில் உள்ள ஒரு மெடிகல் காலேஜில் இடம் கிடைத்து விட்டதால், அங்கே படிப்பு தொடரச் சென்று விட்டான். மாதா மாதம் கடனை நான் கட்டி விடுவேன் ஜகன், நீ பயப்படாதே எனச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் பேசியே இரண்டு மாதம் ஆகி விட்டது. உரிய கடனைச் செலுத்தவில்லை. தொடர்பு கொள்ள முயன்றால் அவன் செல்போன் நம்பரும் மாறி உள்ளது. அவன் படிக்கும் காலேஜில் பூனேவில் தொடர்பு கொண்டு கேட்டால்,

    அந்த மாதிரி யாரும் இங்கே படிக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள். கிணற்றில் போட்ட கல் போல் நிலமை ஆகி விடவே ஜகன் பயந்து போய் தன்னிடம் போனில் சொன்னதை நினைக்க நினைக்க மறுபடியும் தலைவலியும், கோபமும் வந்தது. இவ்வளவு பெரிய தொகைக்குப் போய் காரண்டர் கையெழுத்துப் போட்ட தம்பியின் மேல் கோபம் வந்தது. உலக அனுபவம் தெரியாமல், அவனை வளர்த்து விட்டாளோ என தன் மேலேயே கோபம் வந்தது.

    அப்பா அம்மா விபத்தில் இறந்த போது ஜகனுக்கு வயது பத்து. ஏழாம் வகுப்பு, படித்துக் கொண்டிருந்தான். மானசா, பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் படித்து முடித்து விட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அப்பா, அம்மா பெரிதாகச் சொத்து ஏதும் வைத்துப் போகவில்லை. அதனால் அவள் வேலை மூலமாக வந்த சம்பளம் அவன் படிப்பிற்கு சரியாக இருந்தது. சொந்த வீடு என்பதால் வாடகைப் பிரச்சினையும் இல்லை. தம்பியை ரொம்ப நல்லவனாக வளர்த்து விட்டோமோ என பழசையெல்லாம் ஞாபகப்படுத்தியவாறே தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

    ஒன்பது இலட்சத்திற்கு என்ன செய்வது? அந்தக் கடன்காரன், கடன் கொடுத்தவன் ஜகனை மிரட்டி இருக்கிறான். கொடுத்த கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால், காலேஜ் பிரின்சிபாலிடம் விஷயத்தைச் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தி இருக்கிறான். அதனால் ஜகன் பயந்து போய் என்ன செய்வது என தன்னிடம் அழுதது மனதை சங்கடப்படுத்தியது. என்ன செய்வது இவ்வளவு பெரிய தொகைக்கு? கௌதமிடம் கேட்கலாமா, கேட்டால் தருவான் தான், கண்டிப்பாகத் தருவான், ஆனால், அவன் எதிர்பார்ப்புகளை ஊக்குவிப்பது போல் ஆகி விடும். அநாவசியமாக அவனை என்கரேஜ் பண்ணக் கூடாது. அதனால் அவனைக் கேட்கக் கூடாது என முடிவு செய்தாள். யோசித்து யோசித்து முடிவே தெரியாமல் தலைவலி அதிகரித்தது.

    வீட்டில் டெலிபோன் டிரிங் டிரிங் என அடிக்க, தம்பியாகத்தான் இருக்கும். கடவுளே என்ன பதில் சொல்வது என யோசித்தவாறே ஹலோ மானசா ஸ்பீக்கிங் என்றாள்.

    மறுமுனையில் அக்கா நான் ஜகன் தான் அக்கா பேசறேன் என்ற குரலில் இருந்த கரகரப்பு அவன் அழுததை ஊர்ஜிதப்படுத்தியது.

    சொல்லுடா. நானும் என்ன செய்யறது அப்படின்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன் ஜகன். சொல்லு, உனக்கு ஏதாவது யோசனை தோணிச்சா என்றாள் பரிவாக.

    அக்கா, கடன் கொடுத்தவன் அவனே ஒரு யோசனை சொன்னான் அக்கா. அவனுக்கு சொந்தமாக ஒரு ஹோட்டல், பெங்களூரில் உள்ளதாம். அதில் வந்து ஒரு ஐந்து ஆண்டுகள், நீ வேலை பார்த்தால், கடன் தொகை கழிந்து விடும் என்று சொன்னான். நான் தான் தப்பு செய்தேன். நானே கடனை அடைக்கிறேன். அதனால் நானே வேலை பார்க்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவன் உன் அக்கா வேலைக்குச் செல்கிறாள் என்றாய், சென்னைக்கு பதில் இங்கே வேலை பார்க்கட்டும். நீ மெடிக்கல் காலேஜில் படிக்கிறாய், உன் படிப்பு வீணாகிவிடும். அதனால் யோசிச்சு சொல் என்று இப்போது தான் அக்கா பண்ணி சொன்னான். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை அக்கா.

    ஏன் ஜகன். ஐந்து ஆண்டுகள் தானே? ஒரு ஆண்டிற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் அவன் சம்பளம் தர சம்மதிக்கிறான். அதனால் கண்டிப்பாக, நல்ல வேலையாகத்தான் இருக்கும். நீ ஏன் பயப்படற?

    சம்பளம், எல்லாம், நன்றாகத் தான் இருக்கிறது அக்கா. அதுவும் இது, உன் உணவு, உடை, இருப்பிடம் போகத்தானாம். அதனால் அந்தப் பிரச்சினை ஏதும் இல்லை. இருந்தாலும், இருந்தாலும்

    தம்பி ஏதோ சொல்லத் தயங்குவதை உணர்ந்தவள் சும்மா சொல்லு ஜகன். நீ சொன்னாத் தானே எனக்குத் தெரியும். நான் ஒண்ணும் மைண்ட் ரீடிங் எல்லாம் படிக்கல. அதனால வாயைத் திறந்து சொல்லுடா என்று ஊக்குவித்தாள்.

    இல்ல அக்கா. நீ ஒரு அழகான இளம் பெண். புது இடம், புது ஊர், போதாக் குறைக்கு, இவன் எப்படிப்பட்டவன் என்று தெரியவில்லை. அது தான் எனக்கு ஒரே குழப்பமாக இருக்குது.

    தம்பிக்குப் பரவாயில்லை. உலக அனுபவம் இருக்கிறது தன் மேல் இப்படிப்பட்ட அக்கறை இருக்கிறது என நினைத்து மானசாவுக்கு சட்டென கண்கள் கலங்கின.

    டேய், உன்னோட அக்காவை என்னவென்று நினைச்ச? நோ ஒன் கேன் ப்ளே கேம்ஸ் வித் மி. கராத்தே கத்துகிட்டு இருக்கேன். மறந்துட்டியாடா?

    "இல்ல அக்கா, என்னால தானே எல்லாம், பாவம் நீ. என்னால எப்பவுமே உனக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1