Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இந்தியன் என்பது என் பேரு!
இந்தியன் என்பது என் பேரு!
இந்தியன் என்பது என் பேரு!
Ebook148 pages36 minutes

இந்தியன் என்பது என் பேரு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹாங்காங்கின் பரந்த விக்டோரியா கடற்கரைச் சாலையில் க்ரே நிற டிஸ்டெம்பர் பூச்சோடு, அந்த நான்கு மாடிக் கட்டிடம் தெரிய, கட்டிடத்தின் நெற்றியில் ஜீனோமிக் சயின்ஸ் சென்டர் (GENOMIC SCIENCE CENTRE) என்ற எழுத்துக்கள் சீன மொழியில் பெரிதாகவும், ஆங்கில மொழியில் சிறிதாகவும் ஒட்டியிருந்தது. 'நோ அட்மிஷன்' பெயர்ப்பலகை கட்டிட காம்பௌண்ட் கேட்டின் முகப்பில் மையமாய் தெரிந்தது. காம்பௌண்ட் கேட்டுக்கு முன்னால் அந்த NET TV லக்ஸரிவேன் வேகமாய் வந்து நின்று காதுகளை உறுத்தாத டெஸிபிளில் ஹார்ன் சத்தத்தை எழுப்பியது.
 சத்தம் எழுப்பிய அடுத்த விநாடி - 
 காம்பௌண்ட் கேட்டின் விக்கெட் டோர் திறந்தது. க்ரே நிற யூனிபார்ம் தரித்திருந்த அந்த சீன இளைஞன் டி.வி. வேனை நெருங்கி முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த வழுக்கைத்தலை நபரை ஏறிட்டான்.
 "யாரைப் பார்க்க வேண்டும்?"
 "மரபியல் விஞ்ஞானி சுமோ-லாய்."
 "என்ன விஷயமாய்...?"
 "நாங்கள் நெட் டி.வி.யிலிருந்து வருகிறோம். அவரைப் பேட்டி எடுக்க வேண்டும்."
 "பேட்டி எடுக்க அவர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்கிறாரா?ஆமாம்..."
 "அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்தைக் காட்டுங்கள்."
 வழுக்கைத்தலை ஒரு கடிதத்தை எடுத்துக் காட்ட க்ரே நிற யூனிஃபார்ம் அதைப் பார்த்துவிட்டு பின்பக்கம் திரும்பி கையை அசைக்க கேட் மெதுவாய் திறந்தது. வேன் உள்ளே போயிற்று.
 ஜீனோமிக் சயின்ஸ் சென்டர் அந்தக் காலை வேளையில் வீசும் கடல் காற்றோடு ரம்மியமாய் இருந்தது. ஒழுங்காய் பராமரிக்கப்பட்ட புல்வெளிகளுக்கு நடுவே கான்க்ரீட் ரோடுகள் சீராய் தெரிய டி.வி. வேன் சிரமம் இல்லாமல் பயணித்தது.
 'சயன்டிஸ்ட் ப்ளாக்' என்று அம்புக்குறி காட்டிய இடத்தில் வேன் திரும்பியதும் ஒரு செக்யூரிட்டி ஸ்க்வாடால் மறிக்கப்பட்டது. சம்மர் க்ராப் அடித்த சீனியர் செக்யூரிட்டி ஆபீஸர் வேனின் பின் பக்கக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். கேட்டார்.
 "டி.வி. பீப்பிள் மொத்தம் எத்தனை பேர்?"
 வழுக்கைத்தலை சொன்னது:
 "மொத்தம் ஐந்து பேர். நான் எபிசோட் டைரக்டர். பெயர் 'ஹாரி'. இவள் காம்பியரிங் பெண் எரிகா. இவர் காமிராமேன். இவர்கள் இருவரும் லைட் பாய்ஸ்..."
 "எத்தனை மணி நேர பேட்டி?"
 "ஒரு மணி நேரம்."
 "உங்கள் கைரேகைகளை இதில் பதிவு செய்துவிட்டு எதிரில் இருக்கிற கட்டிடத்துக்கு போங்கள்."
 ஐந்து பேரும் கீழே இறங்கி கைரேகைகளை பதிவு செய்துவிட்டு எதிரே தெரிந்த கட்டிடத்தை நோக்கிப் போனார்கள். தங்களுக்குள் சீன மொழியில் பேசிக் கொண்டார்கள். காம்பியரிங் பெண் எரிகா வியப்போடு பெருமூச்செறிந்தாள்.
 "ஒரு பேட்டி எடுக்க இவ்வளவு கெடுபிடிகளா?ஹாரி சிரித்தார்.
 "சுமோ - லாய் ஒரு சினிமா நடிகரோ, அரசியல்வாதியோ கிடையாது. ஹாங்காங்கின் மதிப்பு மிக்க மரபியல் விஞ்ஞானி. மனிதனின் மரபியல் சம்பந்தமாய் இவர் கண்டு பிடித்து சொன்ன எத்தனையோ விஞ்ஞான உண்மைகள் மற்ற நாட்டு விஞ்ஞானிகளை மலைக்க வைத்திருக்கின்றன. நம்முடைய நெட் டி.வி. உலகம் முழுவதும் பிரபலமாய் இருக்கப்போய்த்தான் சுமோ - லாய் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டார். இதுவே சாதாரண டி.வி.யாக இருந்தால் ஒத்துக் கொண்டிருக்கமாட்டார்."
 "மனிதர் சுமுகமாய் பேட்டி கொடுப்பாரா...?"
 "சுமோ-லாய் ஒரு மென்மையான மனிதர். அவர் ஒரு தடவை பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். சரளமான ஆங்கிலத்தில் ஒரு மணி நேரம் பேசினார். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மிகவும் பொறுமையாக பதில் சொன்னார். எனவே இன்றைக்கு நாம் சுமோ - லாயிடம் பேட்டி எடுப்பதில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது."
 கட்டிட நுழைவாயிலுக்குள் நுழைந்தார்கள். ஒரு பெண் எதிர் கொண்டாள். 'வெல்கம்' சொல்லி உள்ளே கூட்டிப் போனாள். சொன்னாள்.
 "மிஸ்டர் ஹாரி! உங்களுடைய பேட்டியை ஒரு மணி நேரத்துக்குள் முடித்துக் கொண்டால் நல்லது. அவர்க்கு வேறு சில முக்கியமான பணிகள் வந்துவிட்டன."
 "பேட்டியை நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் முடித்துக் கொள்கிறோம். போதுமா...?"
 "போதுமானது."
 மூன்று அறைகளைக் கடந்து நான்காவதாய் இருந்த ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தார்கள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 8, 2024
ISBN9798224241798
இந்தியன் என்பது என் பேரு!

Read more from Rajeshkumar

Related to இந்தியன் என்பது என் பேரு!

Related ebooks

Related categories

Reviews for இந்தியன் என்பது என் பேரு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இந்தியன் என்பது என் பேரு! - Rajeshkumar

    இந்தியன் என்பது என் பேரு!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாசகர்கள் கவனத்திற்கு:

    இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ள ஆங்கில சொற்றொடரின் தமிழாக்கம் நாவலின் கடைசி பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.

    1

    THE WAY TO BE HAPPY IS

    TO MAKE OTHERS HAPPY.

    ஹாங்காங்.

    ஹைடாக் ஏர்போர்ட் விடிகாலையின் வைகறை இருட்டில் இருக்க சி.எக்ஸ் 702 விமானம் ரன்வேயில் இறங்கி ஒரு ஐஸ் துண்டமாய் இரண்டு நிமிஷ நேரம் வழுக்கி பின் நின்றது.

    பயணிகள் பெல்ட்டை தங்களின் இடுப்புகளிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்க விமானத்தின் உள்ளேயிருந்த ஒலிபெருக்கியில் ஒரு பெண்ணின் குரல் சீனமொழியிலும், ஆங்கிலமொழியிலும் மாறி மாறி கொஞ்சியது.

    ஹாங்காங் என்னும் இந்த அழகிய தீவுக்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் வியாபார விஷயமாக வந்திருந்தாலும் சரி, இங்கே உள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி பயில வந்திருந்தாலும் சரி, அல்லது உங்கள் நண்பர்களோடும், வாழ்க்கைத் துணையோடும் பொழுதை இனிமையான முறையில் கழிக்க வந்திருந்தாலும் சரி - உங்கள் ஹாங்காங் பயணம் வெற்றிகரமாய் அமைய எங்கள் வாழ்த்துக்கள். உலகத்திலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் முதல் பத்து இடங்களில் ஹாங்காங்கிற்கு இரண்டாவது இடம். இருப்பினும் சமூக விரோதிகளால் உங்களுக்கு ஏதாவது தொல்லை நேர்வதாக இருந்தால் போலீஸ் உதவியை நாடுங்கள். அவசர போலீஸ் உதவிக்கு ’0’ எண்ணை ஒருமுறை சுழற்றினால் போதும். நல்ல ஹோட்டல்களில் தங்க ஏர்போர்ட் ஆபீஸரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவர் உங்களுக்கு உதவுவார். மறுபடியும் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம்.

    விமானத்தின் இடுப்போடு ஒட்டிக்கொண்ட ‘ஸ்டேர்ஸ்’ வழியாக பயணிகள் இறங்கிக் கொண்டிருக்க அட்சதா ஏர்வேஸ் பேக்கை தோளில் ஏற்றிக்கொண்டு எழுந்தாள். அந்த ஏர்ஹோஸ்டஸ் பளீரென்ற சிரிப்போடு பக்கத்தில் வந்தாள். சீனப்பெண். துடைத்து வைத்த கண்ணாடி பாத்திரம் போன்ற முகம். நல்ல ஆங்கிலத்தில் பேசினாள்.

    நீங்கள் இந்தியா...?

    ஆமாம்...

    பயண நேரத்தில் உங்களை தொல்லைப்படுத்தக்கூடாது என்பதற்காக நான் பேசவில்லை. இப்போது உங்களோடு ஒரு பத்து நிமிட நேரம் பேசிக் கொண்டு வரலாமா...?

    அட்சதா புன்னகைத்தாள்.

    தாராளமாய்.

    இருவரும் ஸ்டேர்ஸில் கடைசியாய் இறங்கினார்கள். ஏர்ஹோஸ்டஸ் சொன்னாள்: என்னோட பெயர் மெலன்-லீ.

    நான் அட்சதா...

    நீங்கள் ரொம்பவும் அழகாய் இருக்கிறீர்கள்.

    நன்றி.

    பொதுவாய் இந்தியப் பெண்கள் அழகுதான். எனக்கு இந்தியாவை பிடிக்கும்.

    நீங்களும் அழகுதான் மெலன்-லீ. ஒரு பீங்கான் சிலைக்கு கவுன் மாட்டிவிட்டதைப் போல் அமர்க்களம் பண்ணுகிறீர்கள்.

    அப்படியா...?

    அதில் என்ன சந்தேகம்...?

    இருந்தாலும் ஒரு இந்தியப் பெண்ணோடு என்னால் போட்டியிட முடியாது.

    இருவரும் சிரித்துக் கொண்டே ஏர்போர்ட்டில் லௌன்ஞ்சை நோக்கி நடந்தார்கள். ஏர்போர்ட் அந்த அதிகாலைவேளையில் ஒரு தீபாவளியின் உற்சாகத்தோடு இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஈஸ்ட்மென் நிறத்தில் நியான் விளக்குகள். வெளிச்சமான விசாரணை கௌன்டர்களுக்கு முன்னால் நீளமான க்யூ. க்யூவில் பெரும்பாலும் சீன முகங்கள். போனால் போகிறதென்று சில வேற்று முகங்கள். ‘எங்கள் விமானங்களில் ஒரு இளவரசனைப் போல் ஒரு இளவரசியைப் போல் பயணம் செய்யுங்கள். வானத்தில் வாழ்க்கையை அனுபவியுங்கள்’ - என்று ஆசை காட்டி அழைக்கும் ஹாங்காங் ஏர்வேஸின் விளம்பர வாசகங்கள் ஏர்போர்ட் கூரையில் வைக்கப்பட்டிருந்த மெகா சைஸ் கம்ப்யூட்டர் திரையில் கலர் கலராய் ஓடிக் கொண்டிருந்தன.

    இருவரும் லௌன்ஞ்சுக்குள் நுழைந்தார்கள். மெலன்-லீ கேட்டாள். ஹாங்காங்கிற்கு இதுதான் முதல் தடவையா... இல்லை இதற்கு முன் வந்திருக்கிறீர்களா...?

    இது ஏழாவது தடவை.

    உண்மையாகவா...? உங்களை எப்படி பார்க்காமல்விட்டேன்...?

    இந்த விமான ஏர்வேஸில் நான் வருவது இதுதான் முதல்தடவை. பொதுவாக கோல்ட் லைன் ஏர்வேஸில் வந்துவிடுவேன்.

    பர்ப்பஸ் ஆப் விசிட்...?

    இங்கே என்னுடைய அண்ணன் இருக்கிறார். ஹாங்காங் சவுத் வெஸ்ட் பீச்சில் ஒரு ரெஸ்டாரெண்ட் வைத்து நடத்தி வருகிறார். நான் வருஷத்துக்கு ஒரு தடவை அண்ணனைப் பார்க்க ஹாங்காங் வருவேன். இரண்டுவார காலம் தங்கியிருந்துவிட்டு இந்தியா புறப்பட்டுப் போய்விடுவேன்.

    உங்களுடைய அண்ணன் வைத்து இருக்கிற ரெஸ்டாரெண்டுக்கு என்ன பெயர்...?

    டேஸ்டி ரெஸ்...

    மெலன்-லீ தன் சிறிய பளபளப்பான கண்களை விரித்தாள். நண்டுக் கறிக்கும் இந்திய உணவு வகைகளுக்கும் பெயர் பெற்ற ரெஸ்டாரெண்டாயிற்றே அது... நானும் என்னுடைய காதலரும் அடிக்கடி அங்கே சாப்பிட போய்விடுவோம். உங்களுடைய அண்ணன் பெயர் என்ன?

    தருண்...

    அடுத்த தடவை பார்க்கும்போது பார்த்து பேச வேண்டும்... பை த பை... உங்களுக்கு கல்யாணம்?

    இன்னமும் இல்லை...

    கஸ்டம்ஸ் நெருங்கியது.

    Enjoying the preview?
    Page 1 of 1