Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moondram Kai
Moondram Kai
Moondram Kai
Ebook119 pages1 hour

Moondram Kai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வி.எஸ்.வி. எம்.எல்.ஏ வாக இருந்து லஞ்சம், ஊழல் மூலமாக அநியாயமாக நிறைய சொத்துக்களை சம்பாதித்து வந்தார்.. இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் அதை தெரிந்து தடுக்க முயன்று, முடியாமல் போக உருவானதுதான் மூன்றாம் கை. யார் அந்த மூன்றாம் கை? மூன்றாம் கை மிரட்ட எதையும் பொருட்படுத்தாத வி.எஸ்.வி என்ன ஆனார். வாழ்வா? சாவா? நாமும் பயணிப்போம் மூன்றாம் கையில்...

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580100906984
Moondram Kai

Read more from Pattukottai Prabakar

Related to Moondram Kai

Related ebooks

Related categories

Reviews for Moondram Kai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moondram Kai - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    மூன்றாம் கை

    Moondram Kai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    வானத்திற்கு இப்போதுதான் இடுப்பு வலி ஆரம்பித்திருக்க... சூரியப் பிரவசத்திற்கு இன்னும் நேரமிருந்தது.

    பங்களாவின் மாடியில் - ஒரு ஜன்னலில் - வெளிச்ச சதுரம் ஏற்பட்டவுடன், கேட் அருகே செக்யூரிட்டி கார்ட் ஸ்டூலில் இருந்து எழுந்துகொண்டான்.

    போர்ட்டிகோ வரையில் சிமெண்ட் பாதை, விளிம்புகளில் தொட்டி தொட்டியாய்ப் பனி பருகிக்கொண்டு பூக்கள். களையெடுத்து, கத்தரிக்கப்பட்ட புல்வெளி.

    சந்தன நிற அம்பாஸிடர் அருகில், யூனிஃபார்மில் டிரைவர் சங்கிலியில் கட்டிப் போடப்பட்டிருக்கும் பிரௌன் நிறத்து நாயைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான், ‘பவ் பவ்’ என்றது அது.

    வரவேற்பறையில் ரத்த நிறத்தில் சோபாக்கள், முதுகில் லேஸ் வைத்து தைக்கப்பட்ட விரிப்புகள், கண்ணாடி டீப்பாய், அடியில் அனைத்துக் கட்சிகளின் தினசரிகள், பித்தளையில் ஆஷட்ரே. ஒரு நீள சோபாவில் பாண்ட் அணிந்து உறங்கிக்கொண்டிருந்தவன் அருகில் டெலிபோன். வெளிர்பச்சை.

    அருகில் கண்ணாடிச் சுவர் அமைத்த சின்ன அலுவலகம். நீளமான மேஜையின் மேல்பாதி போர்ஷனில் இரண்டு டெலிபோன்களும், ஒரு இண்ட்டெர்காம் செட்டும். பிளாஸ்டிக் தொட்டி நிறைய பேனாக்கள். வெயிட் வைக்கப்பட்ட காகிதங்கள். ஃபைல்கள், சுழல் நாற்காலிக்குப் பின்னால் ஏர்கண்டிஷனர். அதற்கு நான்கடி உயரத்தில் தங்க பிரேமுக்குள் எதையும் தாங்கும் இதயம்.

    மற்றொரு மேஜை மேலிருந்த எலெக்ட்ரிக் டைப்ரைட்டரை இயக்கிக்கொண்டிருந்தவன், நடுவில் நிறுத்திவிட்டு விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டான். கொட்டாவிவிட்டான். சுவரில் மணி பார்த்தான். அருகில் காலண்டரில் தேதி கிழித்தான். மீண்டும் விரல்களை நடனமாடவிட்டான். மீண்டும் கொட்டாவி.

    ஹாலின் வயிற்றில் துவங்கின மாடிப்படிகளுக்கு வளைந்து வளைந்து கார்ப்பெட் விரிக்கப்பட்டிருக்க... கடைசிப் படியில் அந்தப் பூனையும், அவனும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அருகில் ஹெச்.எம்.டி.யின் அலாரம் டைம்பீஸ் டிக், டிக், டிக், டிக்…

    அது விழித்துக்கொண்ட போது... பூனை பதறித் தாவியது. மியாவ்...

    அவன் உடனே அதை நிறுத்தி, கண்களை கசக்கிக்கொண்டு மேலே இருந்த சாத்தப்பட்ட அறையின் தலையின்மேல் இருந்த வெண்டிலேட்டரில் டியூப்லைட் வெளிச்சத்தைப் பார்த்தான்.

    அவசரமாக இடுப்பு வேஷ்டியை இறுக்கிக்கொண்டு சமையலறை வந்து கியாஸ் திறந்து, ப்ரிஜ்ஜில் இருந்த பால் பாக்கெட் எடுத்துக் கத்தரித்துக் கொட்டிக் கொதிக்க வைத்துவிட்டு, பிளாஸ்கைக் கழுவி வைத்தான்.

    மாடியறையில் மாண்புமிகு அமைச்சர் வி.எஸ். விஸ்வநாதன் பல் தேய்த்து, முகம் கழுவினார். வெள்ளை டவுசர் போட்டு, கான்வாஸ் ஷூவில் முடிச்சிட்ட போது... தமிழ்நாட்டின் தொண்ணூறு சதவீதம் இன்னும் உரத்த உறக்கத்தில் இருந்தது. கொக்கரக்கோக்கள் கூட இன்னும் கனைக்கவில்லை.

    வி.எஸ்.வி. ஒரு பூத்துவாலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு, படுக்கையில் வாய் திறந்து உறங்கும் மனைவியைப் பார்த்தார்...

    கிட்டே வந்து விலகியிருந்த சேலையைக் கால்வரையில் இழுத்துவிட்ட போது விழித்துக்கொண்டாள். புரண்டாள். மறுபடி விலகியது.

    எந்திரிச்சிட்டிங்களா?

    அஞ்சி மணி கூட ஆகலை. நீ தூங்கு நான் போய்ட்டு வந்துடறேன்.

    ஏசியை அணைச்சிட்டுப் போங்க. குளிருது.

    அணைத்துவிட்டு கதவை உள்பக்கமாக இழுத்து வெளியேற, கதவு தானாக ஓசையில்லாமல் சாத்திக்கொண்டது.

    வி.எஸ்.வி.க்கு பேசாய் முன்வழுக்கை, லேசாய் தொந்தி லேசாய் நரை, லேசாய் முகத்தில் சுருக்கம், கழுத்தருகில் லேசாய் ஒரு காய வடு, உதடுகளில் நிரந்தரமாய்ப் புன்னகை, கண்களில் முப்பத்திரெண்டு வருட அரசியல் அனுபவங்கள் தந்த தெளிவு, கூர்மை, அழுத்தம்.

    படிக்கிற காலத்திலேயே மாணவர் தலைவர் பதவிக்கு நாமினேஷன் கொடுத்து குதிரைமேலே ஏறிவந்து பிரச்சாரம் செய்து, தலைக்கு ஒரு பேனா வழங்கி, வெற்றி பெற்ற... பதினைந்தாம் நாள்...

    சார், உங்களை எம்.எல்.ஏ கையோட கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்...

    எங்கே?

    ஹோட்டல் டீலக்ஸ் ஸ்டார்...

    எதுக்கு?

    அங்கே வந்து அவரையே கேளுங்களேன்...

    குளிர் அறையில் எம்.எல்.ஏ. எதிரில் ஸ்காட்லாந்திலிருந்து விமானத்தில் வந்திருந்த விஸ்கி.

    கமான், சியர்ஸ்…

    வேணாங்க... பழக்கமில்லைங்க...

    தினம் ஒன்னு புதுசா பழகிக்கணும் தம்பி

    எதுக்கு வரச் சொன்னீங்க?

    துடிப்பா இருக்கீங்க. கட்சில மெம்பர் ஆமிடுங்களேன் விஸ்வநாதன்.

    எனக்கு அரசியல் ஆர்வம் உண்டுங்க. ஆனா படிப்பு முடியட்டுமேன்னு...

    அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்மந்தம்? வெளிப்படையா பேசுவமே. தலைவர் ஒரு போராட்டம், மறியல்ன்னு ஈடுபடறப்போ உங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ் ஆதரவு இருந்தா பக்கபலமா இருக்கும் நமக்கு நீங்க சப்போர்ட் பண்றதா இருந்தா மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக் கூட மாத்திடலாம் உங்களை என்ன. இன்னும் கைல வச்சிக்கிட்டு இருக்கிங்க தம்பி, குடிங்க...

    இரண்டு சிப் குடித்துவிட்டு, சரி சார் என்று சொன்ன வில்வநாதன். படிப்படியாக வளர்ந்தார்.

    மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்... தலைவர்... மாநில இளைஞர் அணி உதவிச் செயலாளர்... கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர்... கட்சிப் பொருளாளர்... அப்புறம் எம்.எல்.ஏ. மூன்று முறை கட்சித்தாவல். ஒவ்வொருமுறையும் பெட்டி நிறையப் பணம்.

    இரண்டு தடவைகள் எம்.எல்.ஏ.வாக இருந்து, மேடைதோறும் பேட்டி தோறும் தலைவரைப் பன்னீர் வார்த்தைகளில் குளிப்பாட்டியதன் விளைவாக…

    கடந்த ஆறு மாதமாக… துறை அமைச்சராக உள்ள வி.எஸ். விஸ்வநாதன் நடந்து, அலுவலக அறைக்குள் எட்டிப் பார்த்து, மோகன், இன்னும் முடிக்கலையா? என்றார்.

    இன்னும் ஒரு பக்கம் இருக்கு சார்...

    முடிச்சிட்டு முதல் டிராயர்ல வச்சிட்டு நீ வீட்டுக்குப் போ…

    வாசலுக்கு வந்து நின்றதும், டிரைவர் காரின் பானெட்டில் வைத்திருந்த தொப்பியை எடுத்து அணிந்துகொண்டு, பின் கதவைத் திறந்து வைத்தான்.

    வி.எஸ்.வி. அமர்ந்ததும் முன் சீட்டின்

    Enjoying the preview?
    Page 1 of 1