Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இனி... ராகினி...!
இனி... ராகினி...!
இனி... ராகினி...!
Ebook149 pages35 minutes

இனி... ராகினி...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குட்லக் ஹாஸ்பிட்டல்.
 தலைமை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் திலீபனையும் அவருடைய தங்கை ராகினியையும் ஒரு புன்னகையோடு பார்த்தார்.
 "ஸாரி...! ஒரு ஆப்ரேஷனை முடிச்சுட்டு இப்பத்தான் வர்றேன். உங்களை ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டேன்... வெரி ஸாரி."
 "நோ... ப்ராப்ளம் டாக்டர்... வி ரியலைஸ் யுவர் டைட் ஷெட்யூல்..."
 ராஜேந்திர பிரசாத் தன் சுழல் நாற்காலியில் ஒரு அரைவட்டம் அடித்தார். "சொல்லுங்க... உங்க ரெண்டு பேர்ல யார்க்கு, என்ன ஹெல்த் ப்ராப்ளம்..?"
 திலீபன் கண்களில் இப்போது கவலை ஒட்டிக்கொள்ள பேசினார்.
 "டாக்டர்...! என்னோட தங்கை ராகினி கடந்த ஒரு மாத காலமாவே இயல்பான நிலைமையில் இல்லை. காலையில் கண் விழித்ததுமே யாரோடவும் பேசாமல் சிட் அவுட்டில் போய் உட்கார்ந்துட்டு தோட்டத்துமரங்களையும் வானத்தையும் வெறிச்சு பார்த்துட்டிருக்கா... ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கொஞ்சம் இயல்பான நிலைமைக்கு வந்து என்னோடவும் என் மனைவியோடவும் பேசுவா... மத்தியானம் வரைக்கும் நார்மலா இருப்பா. லஞ்ச் சாப்பிட்ட பிறகு பெட்ல போய்ப் படுத்தா சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் தூங்குவா. தூங்கி எழுந்ததும் அவளுடைய நடவடிக்கைகள் காலையில் போலவே இருக்கும். எட்டு மணிவரைக்கும் யாரோடவும் பேசாமல் ஒதுங்கியே இருப்பாள். எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு போய் படுக்கையில் விழுந்தால் காலையில் ஆறு மணி வரைக்கும் அடித்துப் போட்ட மாதிரி தூங்குவாள். இது ராகினியின் ஒரு நாள் நடவடிக்கைகள் பற்றிய அட்டவனை."
 திலீபன் சொல்லச் சொல்ல டாக்டர் ராஜேந்திரபிரசாத் ராகினியைப் பார்த்தார்.
 சற்றே மெலிவான தேகத்தோடு அழகாய் இருந்த ராகினி தலைகுனிந்தபடி வலதுகையின் ஆட்காட்டி விரலால் மேஜையின் முனையைக் கீறிக் கொண்டிருந்தாள். காதுகளில் போட்டிருந்த பொன் வளையங்கள் வேகமாய் சுழன்று கொண்டிருந்த சீலிங் ஃபேன் காற்றுக்கு அழகாய் அசைந்து கொண்டிருந்தன.
 டாக்டர் கேட்டார்.
 "ஏம்மா... அண்ணன் சொல்றதெல்லாம் உண்மையா?"
 ராகினி பெருமூச்சோடு நிமிர்ந்தாள்.
 "உண்மைதான் டாக்டர்..."
 "ஏம்மா அப்படி நடந்துக்கிறே..? உனக்கு ஏதாவது பிரச்னைன்னா அண்ணன்கிட்டே சொல்லலாம்... அண்ணன்கிட்டே சொல்றதுக்கு தயக்கமாய் இருந்தா அண்ணிகிட்டே சொல்லலாம்..."
 "எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது டாக்டர்."
 "பின்னே ஏம்மா... அப்படி இருக்கே..?"
 ராகினிக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு பளபளத்தது. டாக்டர் தன்னுடைய கையை நீட்டி அவளுடைய தோள்மேல் கையை வைத்தார்இதோ பாரம்மா..! நான் இப்போதைக்கு டாக்டர் கிடையாது. உனக்கு அப்பா மாதிரி...! உனக்கு என்ன பிரச்னைன்னு என்கிட்டே சொல்லு... எதையுமே துணிச்சலோடு எதிர்கொண்டால் இந்த உலகத்துல தீர்க்க முடியாத பிரச்னைகளே கிடையாது."
 ராகினி தன்னுடைய அண்ணனை ஒரு தயக்கப் பார்வை பார்த்துவிட்டு டாக்டரை ஏறிட்டாள்.
 "டா... க்... ட...ர்..."
 "சொல்லும்மா..."
 "நான் உங்ககிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும்..."
 ராஜேந்திர பிரசாத் திலீபனை ஏறிட்டு மெளனமாய் பார்க்க - அவர் எழுந்து போனார்.
 அண்ணனின் தலை மறையும்வரை தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த ராகினி பின் நிமிர்ந்தாள். கண்ணீரோடு பேசினாள்.
 "டாக்டர்...! கடந்த ஒரு மாத காலமாவே நான் இயல்பாக இல்லைன்னு எனக்கே தெரியுது. எனக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்னை கொஞ்சம் விநோதமானது. அதை எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை."
 "உன்னோட பிரச்னை எதுவாக இருந்தாலும் பரவாயில்லேம்மா... சொல்லு..."
 "டாக்டர்...! ராத்திரி சாப்பிட்டதுமே எனக்கு தூக்கம் வந்துடுது... உடனே படுக்கைக்கு போயிடறேன்... ராத்திரி முழுக்க கனவுகளோடு தூக்கம். காலையில் ஆறு மணிக்கு கண் விழிக்கும் போதுதான் அந்தப் பிரச்னை எனக்கு எட்டிப் பார்க்குது டாக்டர்..."
 டாக்டர் மெளனமாய் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, ராகினி சில விநாடி தயக்கத்துக்குப் பின் தொடர்ந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 31, 2023
ISBN9798223021469
இனி... ராகினி...!

Read more from Rajeshkumar

Related to இனி... ராகினி...!

Related ebooks

Related categories

Reviews for இனி... ராகினி...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இனி... ராகினி...! - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் ஒன்றை இந்த உலகத்தில் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடவுளைக் காட்டிலும் ஒரு சிறந்த ஸாஃப்ட்வேர் என்ஜினியர் யாரும் இருக்க முடியாது. இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து ஒருவேளை எந்த ஸாஃப்ட்வேர் என்ஜினியராவது மனித மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் ஒன்றைக் கண்டுபிடிக்கும் காலத்தில் அவன் மரணத்தை வென்றவனாக இருப்பான். அல்லது அவனுடைய ஆயுள் உச்சபட்சமாக 1000 வருஷங்களாக இருக்கும். அந்த கால கட்டத்தில் வாழ்பவர்கள் மணமக்களை வாழ்த்தும்போது ஆயிரம் ஆண்டு காலம் வாழ்க என்று வாழ்த்த வேண்டியிருக்கும். மூளை ஆராய்ச்சி மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் விலாண்டர் பேசியது.

    சங்கரநாராயணன் இரண்டாவது தடவையாய் அன்றைய நாளிதழை எடுத்து, விட்டுப்போன சின்னச் சின்ன செய்திகளைக் கண்களால் மேய்ந்து கொண்டிருந்தபோது மாடியிலிருந்த அவருடைய மனைவி வாசுகி படிகளில் வேகமாய் இறங்கிக் கொண்டே குரல் கொடுத்தார்.

    என்னங்க...

    ஏழு வயது சிறுமியை எழுபது வயது கிழவர் கற்பழித்த கொடுமையை நெஞ்சம் பதற படித்துக் கொண்டிருந்த சங்கரநாராயணன் நிமிர்ந்தார்.

    என்ன வாசுகி..?

    பக்கத்தில் இருக்கிற டெலிபோன் ரிஸீவரை எடுங்க... லைன்ல மாப்பிள்ளையோட அப்பா...! உங்ககிட்டே ஏதோ பேசணுமாம்...

    சங்கரநாராயணன் கையில் இருந்த நாளிதழை டீபாயின் மேல் அப்படியே போட்டுவிட்டு ரிஸீவரை எடுத்தார். ஹலோ...

    வணக்கம்... சம்பந்தி... மறுமுனையில் இன்னும் ஒரு மாதம் கழித்து தன் மகள் ப்ரீதாவை மருமகளாக்கிக் கொள்ளப் போகிற கோமதிநாயகம் பேசினார்.

    வணக்கம்...! எப்படியிருக்கீங்க... சம்பந்தி..?

    நல்லாயிருக்கேன்..! உங்க பொண்ணை நிச்சயம் பண்ணின நாளிலிருந்து எங்க பிசினஸும் அமோகமா இருக்கு.... பையனுக்கு ஆபீஸ்ல ப்ரமோஷனும் கிடைக்கும் போலிருக்கு...

    கேட்கவே சந்தோஷமாயிருக்கு... சம்பந்தி...

    அப்புறம்... நான் எதுக்காக போன் பண்ணினேன்னு சொல்லிடறேன்.

    சொல்லுங்க.... சொல்லுங்க...

    இன்னிக்குக் காலையில் பத்து மணிக்கு எங்க குலதெய்வமான அங்காளம்மன் கோயில்ல ஒரு அபிஷேகப் பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். வருஷத்துக்கு ஒரு தடவை நடத்தற பூஜை இது. இந்த வருஷ பூஜையில் எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போகிற உங்க பொண்ணு ப்ரீதாவும் கலந்துக்கணும்ன்னு என் பையன் பாலு ரொம்பவும் பிரியப்படறான். நீங்க உங்க பொண்ணை அனுப்பி வைக்கணும்....

    .......

    சங்கரநாராயணன் பதில் பேசாமல் மெளனமாய் இருக்க, கோமதிநாயகம் கேட்டார்.

    என்ன சம்பந்தி...! பதிலையே காணோம்.

    அது... அது... வந்து...

    எனக்குப் புரியுது சம்பந்தி... நிச்சயதார்த்தம் முடிஞ்சு பதினஞ்சு நாள் தான் ஆச்சு... கழுத்துல தாலி ஏறாமே மாப்பிள்ளை கூட எப்படி அனுப்பி வைக்கிறதுன்னு யோசனை பண்றீங்க... இல்லையா..?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை... நம்ம ஜாதி ஜனங்களைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே... ஏதாவது சொல்லி வைப்பாங்க. அதான் கொஞ்சம் தயக்கமாயிருக்கு...

    ஒரு அரைமணிநேரம் போதும். பத்து மணிக்கு பூஜை ஆரம்பமானா பத்தரை மணிக்கெல்லாம் முடிஞ்சுடும்... பத்தே முக்காலுக்கெல்லாம் ப்ரீதாவைக் கொண்டு வந்து உங்க வீட்ல விட்டுடறோம். இது ஒரு வேண்டுகோள்தானே தவிர... கட்டாயம் இல்லை... ப்ரீதாகிட்டே கேட்டுப்பாருங்க... இஷ்டமில்லேன்னா விட்டுருங்க...

    அவ... சின்னப் பொண்ணு...! அவகிட்டே எதுக்குக் கேட்கணும்..? கோயிலுக்குத்தானே கூட்டிட்டுப் போறீங்க... நீங்க... வாங்க... நான் அனுப்பி வைக்கிறேன்...

    ரொம்ப நன்றி... சம்பந்தி...!

    அட... என்னங்க... நீங்க! இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிகிட்டு..! ப்ரீதா... யாரு..? உங்க வீட்டு மருமகள். அவளுக்கு என்னிக்கு உங்க பையனோடு நிச்சயதார்த்தம் நடந்ததோ அன்னிக்கே அவ உங்கவீட்டு பொண்ணாயிட்டா... நீங்க எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்றீங்க சம்பந்தி..? நான் ப்ரீதாவை ரெடியா இருக்கச் சொல்றேன்...

    ஒன்பதரை மணிக்கு வர்றேன்...

    வாங்க... சங்கரநாராயணன் ரிஸீவரை வைத்துவிட்டு மனைவி வாசுகியிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் லேசாய் முகம் மாறினாள்.

    என்னங்க..! இது சரியில்லையே..? கழுத்துல தாலி ஏறினாத்தான் ப்ரீதா அவங்க வீட்டுப் பெண். அதுவரைக்கும், அவ நம்ம வீட்டுப் பெண்தான்.... அவங்க குலதெய்வக் கோயிலுக்கு நம்ம பொண்ணு போக வேண்டிய அவசியமே இல்லை... நீங்க ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்து இருக்கணும்.

    சங்கரநாராயணன் அவளைக் கோபமாய் ஏறிட்டார்.

    "வாசுகி… அவங்க நம்ம பொண்ணை உரிமையோடு கூப்பிடும்போது நாம மறுக்கிறது சரியில்லை. அப்படி மறுத்தா

    Enjoying the preview?
    Page 1 of 1