Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasanthathil Oru Naal
Vasanthathil Oru Naal
Vasanthathil Oru Naal
Ebook76 pages28 minutes

Vasanthathil Oru Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சர்மிளா அருணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு அவள் எதிர்பார்த்த வாழ்க்கை, வசதி அவளுக்கு கிடைத்தா? இல்லை அவள் மனதில் மாற்றம் நிகழ்ந்து அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாளா? வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580155610936
Vasanthathil Oru Naal

Read more from Lakshmi

Related to Vasanthathil Oru Naal

Related ebooks

Reviews for Vasanthathil Oru Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasanthathil Oru Naal - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வசந்தத்தில் ஒரு நாள்

    Vasanthathil Oru Naal

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    அவர்களது திருமணம் திருத்தணியில் நடந்தது. வேண்டுதலை அங்கேதான் நடத்தவேண்டும் என்று ஆரம்பத்திலேயே அருணின் தாய் சொல்லிவிட்டிருந்தாள். சங்கரனைப் பொறுத்தவரை சென்னையை விட்டு எங்கேயாவது ஒரு கோவிலில் தம் மகளின் கல்யாணத்தை முடித்துவிடத் தயாராக இருந்தார். சென்னை என்றால் உறவினர் கூட்டம் தாங்க முடியாது போய்விடும் என்ற கவலை,

    கல்யாணத்திற்கு வருகிறவர்களுக்கு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் எதிர்பார்த்ததுபோல உறவினர்கள் படையெடுக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டவர்களும், பெண் வீட்டவர்களும் சேர்ந்து ஒரே பஸ்ஸில் பயணப்பட்டும் அதில் இன்னமும் சிலருக்கு இடமிருந்தது.

    கல்யாணத்தை சிக்கனமாக செய்து முடிக்க வேண்டும் என்பது என் மகனின் ஆசை சம்பந்தியம்மாள் மீனா சொல்லிவிட்டிருந்தாள். இப்படிப்பட்டதொரு வரன் கிட்டியது தமக்கு பெருத்த அதிர்ஷ்டம் என்றுதான் சங்கரன் எண்ணினார்.

    ஆனால் சர்மிளாவுக்கு மனதிலே ஒரு உறுத்தல். கொஞ்சம் வருத்தமும்கூட. சென்னையில் உள்ள தன் கல்லூரி தோழிகள் கண்டு வியக்கும்படி அப்பா அவளது கல்யாணத்தை நகரத்து கல்யாண மண்டபமொன்றில் நடத்தி இருக்கலாம். போகட்டும் ரிஸப்ஷனையாவது சிறப்பாக செய்திருக்கலாம். விடியற்காலை முகூர்த்தம். மணமக்களுடன் உறவினர் புடைசூழ முருகனுக்கு அபிஷேக ஆராதனை. பகல் உணவு முடிந்ததும் திருமணத்தைப் பதிவு செய்துவிட்டு சென்னைக்குத் திரும்புவது. உடனடியாக மணமக்களை ஊருக்கு அன்று இரவு ரயிலுக்கு அனுப்பிவிடுவது. அப்பாவின் திட்டம் அவளுக்கு பிடிக்கவேயில்லை.

    கல்யாண மண்டபத்திலேயே உறவினரிடையே ஏற்பட்ட கிசுகிசுப்பு அவள் காதில் பட்டும் படாமலும் கேட்டுவிட்டது. இரண்டு பேருக்கும் ஏற்கனவே காதலாம். இது ஒரு காதல் கல்யாணம்.

    இருக்கட்டுமே, அதுக்காக படிச்சவன் சொத்து இருப்பவன் வரதட்சணை வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்?

    இந்தக் காலத்தில் எந்த மாமியார் வரதட்சணை வேண்டாம்னு சொல்ல முன்வரா.

    ‘சிலபேர் இருக்காங்களே...’

    ‘அங்கே ஏதாவது காரணம் இருக்கும்.’

    ‘மேடையில் வரதட்சணையைப் பத்தி தாக்கிப் பேசுவாங்க. அவனவன் வீடுன்னதும்... விஷயம் வேறாகிடுமோ?’

    ‘நீ சொல்றபடி இதிலே ஏதோ காரணம் இருக்கு.’ மாப்பிள்ளைக்கு ஏதாவது ஊனமா? பெண்ணுக்கு மாமனார் இல்லையாம். இரண்டு வருஷத்துக்குமுன் தவறிப் போனாராம். என்ன வியாதியிலே மனுஷன் செத்தானோ? சில நோய்கள் பரம்பரையாக வரதுண்டு தெரியுமில்லையா?

    பந்தியில் உட்கார்ந்து கணவனுடன் காப்பி, பலகாரம் சாப்பிட்ட சர்மிளா காதுகளில் சில கேட்கவே அவளுக்கு தொண்டைமட்டும் துக்கம் அடைத்துக் கொண்டது.

    ஆமாம்! அவளுக்கு அருணின் குடும்பத்து விவகாரம் எதுவுமே தெரியாதே.

    அருண் என்கிற அருணாசலம்தான் வீட்டுக்கு மூத்த பிள்ளை. இரண்டு தம்பிகள். இருவரும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்தனர். ஒரு தங்கை விதவைத் தாய். போதாததிற்கு தந்தைவழி பாட்டி ஒருத்தி பெரிய குடும்பந்தான்...

    காதலித்தபோது அது பெரியதொரு பாரமாகத் தெரியவில்லை,

    உறவினர்களில் சிலர் கிசுகிசுத்ததைக் கேட்டபின்பு மனதிலே பல சந்தேகங்கள்!

    நெஞ்சை என்னவோ கல்போன்றதொரு கடினமான உணர்வு கவ்விக் கொண்டிருப்பதை அறிந்தாள்.

    மாலை காப்பி, டிபனை முடித்துக்கொண்டு அவர்கள் கிளம்பி மந்தைவெளி மகாலிங்கத் தெருவிலிருந்த அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதற்குள் இருட்டத்தொடங்கி விட்டது. அம்மா அவசரமாக சம்பந்தி வீட்டவர்களுக்கு சமைத்து போட்டு வழிஅனுப்பி விட்டாள். அவசர சமையல் வெந்ததும், வேகாததுமான காய்கள், பாயாசம் என்று பெயருக்காக ஒரு இனிப்பு.

    கூடத்தில் கிடந்த பழைய மேஜைமேல் இலைகளை விரித்து அம்மா பரிமாற... உணவு ஆறும் பொருட்டு அப்பா மின்விசிறியை சுழலவிட இலையில் வைத்த அப்பளங்கள் பறக்க, நாத்தி துளசி களுக்கென்று சிரிக்க, கூட அனைவரும் சேர்ந்து சிரிக்க, ஒரே கலகலப்பாகத்தான் விருந்து முடிந்தது.

    சம்பிரதாயப்படி சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். அம்மாவின் கண்களில் ஏராளமான கண்ணீர். ஒரு பக்கம் தன்மகளுக்கு கல்யாணமாகிவிட்டதே என்ற திருப்தியும் கண்ணீர் இடையே தெரியத்தான் செய்தது.

    அப்பா பரபரத்தார். ரயிலை சம்பந்திகள் தவற விட்டுவிடப் போகிறார்களே என்ற அச்சம் அவருக்கு. "பெட்டியை எடுத்து வச்சுக் கொண்டுவிட்டாயா மகளை லேசான அதட்டும் குரலில் கேட்டார்.

    அவளது துணிகள், சோப்பு, சீப்பு,

    Enjoying the preview?
    Page 1 of 1