Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உறவு பந்தயம்..!
உறவு பந்தயம்..!
உறவு பந்தயம்..!
Ebook118 pages38 minutes

உறவு பந்தயம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுமதியின் அப்பா பெருமாள், மொட்டை மாடி சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
 மெதுவாக கல்பனா மேலே வந்தாள்.
 "அப்பா! நீங்க சாப்பிடவே இல்லையே?"
 "வேண்டாம்மா!"
 "ஏன்ப்பா? சுமதி ஞாபகமா இருக்கா? அவளுக்கு இப்ப சாந்தி முகூர்த்தம் நடந்துகிட்டிருக்கும்!"
 "எனக்கு ரொம்ப பயமா இருக்கு கல்பனா!"
 "எதுக்குப்பா?"
 "சம்பந்தியம்மா கல்யாணத்துல நம்மை நாயை நடத்துற மாதிரி நடத்தினாங்க! அசிங்கப்படுத்தினாங்க! யாரையும் வீட்டுக்கு வாங்கன்னுகூடக் கூப்பிடலை! சுமதியை அவங்க எப்படி நடத்தறாங்களோ! அன்பே வடிவா இருந்தாங்க! எப்படி இந்த மாற்றம்? எதுக்கு?"
 "புரியலைப்பா!"
 "சுமதி உன்னை மாதிரி பொறுமையா இருக்கமாட்டா கல்பனா! பேசிடுவா! வாழப்போன புதுசுல மனசுக்குப் புடிக்காம இவ ஏதாவது பேசித் தொலைச்சிட்டா, இன்னும் தப்பா முடிஞ்சிடுமேம்மா!"
 கல்பனா பேசவில்லை.
 "நீதான் வாழலை! பெத்த குழந்தையைக்கூட பறிச்சு வச்சிட்டு பாவிங்க ஆட்டம் போடுறாங்க! சுமதிக்கும் கஷ்டம் வந்துடக்கூடாதும்மா! தாயை இழந்த உங்க மூணு பேரையும் ஆளாக்க நான் பட்டபாடு கொஞ்சமில்லை! தெய்வத்துக்கு என் மேல என்ன கோபம்? என் குழந்தைங்க வாழலைன்னா, அது எனக்குத் தர்ற தண்டனையாச்சே கல்பனா?அப்பா குரல் உடைந்து, அழத் தொடங்கினார்.
 கல்பனா பதறிப்போனாள்.
 "வேண்டாம்ப்பா! நீங்க அழக்கூடாது! அது எங்களை தண்டிக்கிற மாதிரி இருக்கு."
 "ஒரு ஆம்பிளை அளவுக்கு மீறி அடிவாங்கும்போது எங்கியாவது ஒரு இடத்துல அழுதுதாம்மா ஆகணும்!"
 "வேண்டாம்ப்பா! பிரச்சினை எதுவும் இருக்காது! தைரியமா இருங்க! நாளைக்கு போய்ப் பார்த்துட்டு வந்துடுங்களேன்!"
 "போகலாமா?"
 "சரி வேண்டாம். போன்ல பேசுங்களேன். தப்பென்ன?"
 "சரிம்மா!"
 "எல்லாம் நல்லதா நடக்கும்ப்பா! பட்டினியா இருக்கக் கூடாது! நீங்க தெம்பா இருந்தாத்தான் நாங்க தைரியமா இருக்க முடியும்! வாங்க!"
 தன்னுடன் அழைத்து வந்தாள்.
 கட்டாயப்படுத்தி அவரை சாப்பிட வைத்தாள்.
 "அம்மாடி! இத்தனை கனிவான உன்னை, உன் புகுந்த வீட்டுக்காரங்க ஏன்ம்மா புரிஞ்சுக்கலை?".
 "என் தலையெழுத்துப்பா! நீங்க படுங்க!"
 அப்பாவை படுக்க வைத்துவிட்டு, கல்பனா இந்தப் பக்கம் வந்தாள்.
 'கடவுளே! என் நிலைமை என் தங்கைக்கும் வந்துடக்கூடாது!

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223305187
உறவு பந்தயம்..!

Read more from Devibala

Related to உறவு பந்தயம்..!

Related ebooks

Related categories

Reviews for உறவு பந்தயம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உறவு பந்தயம்..! - Devibala

    1

    கல்யாணத்தில் ஆண்டாளம்மா ஆடித் தீர்த்து விட்டாள். மூன்று பெண்களைப் பெற்ற பெருமாளை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டாள்.

    கல்பனா மூத்த பெண். ஏற்கெனவே கணவன் வீட்டில் கொடுமைக்கு ஆளாகி, பிறந்த வீட்டோடு வந்து கடந்த நாலு ஆண்டுகளாக வாழாவெட்டியாக இருப்பவள். கல்பனாவின் மூன்று வயது குழந்தையையும் பறித்துக்கொண்டு, இவளை விரட்டிவிட்டவள், மாமியார்.

    வழக்கு தொடரலாம் என்று பலபேர் சொல்ல, கல்பனா தடுத்துவிட்டாள். வழக்கென்றால், விவாகரத்து வரை போக வேண்டும். அதன்பிறகு குழந்தையை மீட்டாலும் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகும். குழந்தையை அவர்கள் தாங்குவார்கள். காரணம், அவர்களது குடும்ப வாரிசு! விட்ரலாம்!

    பெற்ற குழந்தையைப் பிரிந்து பல இரவுகள் புழுவாக கல்பனா துடித்ததுண்டு. அவள் படும் நரக வேதனையை அப்பாவும், தங்கைகளும் பார்த்துக் கண்ணீர்விடாத நாளில்லை!

    கல்பனா வேலை பார்க்கவில்லை.

    அப்பாவுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று. ஊறுகாய், அப்பளம் போன்றவைகளை தயாரித்து ஒரு சில வாடிக்கையாளர்களைப் பிடித்து வாழ்க்கையை ஓட்டுகிறவள்.

    அடுத்தவள் சுமதி!

    பட்டப்படிப்பு. தனியார் வேலை. அப்பாவுக்கு அடுத்தபடியாக சம்பாதிக்கும் பெண்.

    அவளுக்குத்தான் இந்தக் கல்யாணம்.

    மூன்றாவது சந்திரா- கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் பெண்.

    சுமதியைப் பெண் பார்க்க வந்தபோது ஆண்டாளம்மா மெழுகு போல உருகினாள்.

    இரண்டு மகன்கள். இவன் சீனு மூத்தவன். அரசாங்க உத்தியோகம். அடுத்தவன் வெளியூர்ல் வேலை. தொந்தரவு இல்லாத குடும்பம். அப்பா இல்லை.

    எதையும் கேட்கவில்லை!

    சகலத்துக்கும் அம்மாவும், பிள்ளையும் தலையாட்ட, பெருமாள் மகிழ்ச்சியடைந்தார்.

    கல்பனா போல கஷ்டங்கள் வராது! சுமதி நன்றாக வாழ்வாள் என முடிவெடுத்து அத்தனைப் பேரும் சம்மதித்துவிட்டார்கள்.

    அதற்காக பெருமாள் எந்தக் குறையும் வைக்கவில்லை!

    நன்றாகவே செலவழித்துத்தான் ஏற்பாடுகளை செய்தார். சுமதிகூடத் தடுத்தாள்...

    அப்பா! நீங்கள் பதவியிலேருந்து ஓய்வு பெற ரெண்டு வருடங்கள்தான் இருக்கு. சந்திராவையும் கட்டிக்கொடுக்கணும். என் வருமானமும் இல்லை. அவங்க எதையும் கேக்கலியேப்பா.

    தப்பும்மா! கேக்கலைன்னா ஏமாந்தவங்களா? என் கடமை நல்லா செய்யணும். செஞ்சிடுறேன். சந்திராவுக்கும் வாழ்க்கை அமையும்.

    தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்தார்.

    கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்ததும் இவர்கள் பார்த்த அந்த ஆண்டாளம்மா இல்லை!

    ஆட்டிப் படைத்துவிட்டாள்.

    பெருமாளை ஆயிரம் கேள்விகள் கேட்டு, குற்றம் குறைகளை கண்டுபிடித்து பலபேர் முன்னிலையில் அவமானப்படுத்தி பேயாட்டம் ஆடிவிட்டாள். காரணம், யாருக்கும் புரியவில்லை!

    சுமதி எரிச்சலாகிவிட்டாள்.

    என்னப்பா இது?

    புரியலைம்மா!

    எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்ப்பா!

    என்னம்மா பேசற நீ? வரவேற்பு முடிஞ்சாச்சு. விடிஞ்சா கல்யாணம். இதை நிறுத்திட்டு, நான் சாகிறதா? இப்படியெல்லாம் சொல்லாதேம்மா. எல்லாம் சரியாகும்.

    சுமதி கல்யாணத்துக்கு பெருமாள் குடும்பம் அழைத்தும் கல்பனாவின் கணவனோ, மாமியாரோ கல்யாணத்துக்கு வரவில்லை.

    சுமதி கல்யாணம் முடிந்துவிட்டது!

    அவள் கழுத்தில் தாலி ஏறிவிட்டது!

    கணவன் வீட்டில்தான் முதலிரவு என்று முடிவாகிவிட, சுமதி கணவனுடன் புறப்பட ஆயத்தமானாள்.

    பெருமாள், ஆண்டாளிடம் வந்தார்.

    கல்யாணத்தை நல்லவிதமா நடத்திக் கொடுத்துட்டீங்க! நன்றிம்மா!

    அதற்கும் ஆண்டாள் கடுமையாக ஏதோ ஒரு பதில் சொன்னாள்.

    அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.

    யார் சுமதியைக் கொண்டுபோய் விடுவது என யோசித்து, கல்பனா போவதாக முடிவாக,

    உங்க மூத்த பொண்ணா? வாழாவெட்டி கூட்டிட்டு வந்தா விளங்குமா? யாரும் வரவேண்டாம். பொண்ணை மட்டும் அனுப்பி வையுங்க.

    கல்பனா கண்ணீருடன் உள்ளே போக,

    சுமதி வந்து மன்னிப்பு கேட்டாள்.

    ஏன் இப்படி பேசுறாங்க? பெண் பார்க்க வந்தப்ப வேற மாதிரி இருந்தாங்களே?

    வேனில் சுமதி ஏறிவிட்டாள்.

    கண்ணீருடன் கைகளை அசைத்தாள்.

    பிறந்த வீட்டு மனிதர்களை பிரிவதே ஒரு வேதனை. அந்தப் பிரிவில் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் தப்பில்லை. அவமானப்பட்டு வலியில் துடிக்கும் அப்பாவை, அக்காவை நினைக்க நினைக்க சுமதிக்கு ஆறவில்லை.

    புகுந்த வீட்டுக்குள் வலக்காலை வைத்து நுழைந்து விட்டாள்.

    அங்குள்ள சம்பிரதாய, சடங்குகள் நிறைவேறின.

    உறவுக்காரர்கள் நிறைய இருந்தார்கள்.

    ராத்திரி மருமகள் கையால் விருந்தா? யாரோ கேட்க,

    எதுக்கு? வந்ததும் வராததுமா அவ வேலை செய்யணுமா? சமையல்காரியா என் மருமகள்? எல்லாத்துக்கும் ஆள் இருக்கு!

    சுமதி காதில் இது விழுந்தது!

    சுமதி! இப்ப மணி மூணு! நீ உள்ளே போய் ரெண்டு மணி நேரம் தூக்கம் போடு! அப்புறமா குளிச்சிட்டு, அலங்காரம் பண்ணிட்டு வந்தா, சாந்தி முகூர்த்தத்துக்கு தயாராகலாம்! போம்மா!

    சுமதி உள்ளே வந்தாள்.

    சீனு! நீ இப்படி வா!

    ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தது முதல், ஆண்டாளம்மா வேறுவிதமாக இருக்கிறாள். பெண் பார்க்க வந்தபோது பாசமாக இருந்த அந்த ஆண்டாளம்மா, மறுபடியும் மாறிவிட்டாள்.

    நடுவில் எதுக்காக அந்த மாற்றம்?

    ‘ஏன் அந்த முரண்பாடு?’

    சுமதிக்குக் குழம்பியது!

    உள்ளே வந்து படுத்தாள்.

    மருமகள் வந்ததும் ‘ஓய்வெடு என்று சொன்ன முதல் மாமியார் இவர்களாக மட்டுமே இருக்க முடியும்!’

    சுமதி கண்களை மூடிப் படுத்தாள்.

    மனக்கணக்கு ஒன்று ஓடியது!

    கல்பனாக்கா ஊறுகாய், வறுவல் என வர்த்தகம் நடத்தினாலும், அது அவளது திருப்திக்குத்தான்.

    அப்பா வருமானத்தில் குடித்தனம் நடத்த முடியமா?

    கல்யாணக் கடன் வேறு!

    ‘ஏதாவது செய்யணும். மாமியார் இதே பாசத்துடன் இருந்தால் செய்யலாம்!’

    ‘இருப்பார்களா?’

    லேசான சிந்தனையில் கல்யாணக் களைப்பும் சேர, உறங்கிவிட்டாள்.

    ஆண்டாளம்மா வந்து எழுப்பினாள்.

    மன்னிச்சிடுங்க அத்தே!

    எதுக்கு? நான்தானே தூங்கச் சொன்னேன். நீ போய் குளிச்சிட்டு வாம்மா!

    குளியலறையில் வெந்நீர் தயாராக இருந்தது.

    சுமதி குளித்துவிட்டு வர, புது பட்டுச்சேலையுடன் ஆண்டாள் நின்றாள்.

    "இதைக் கட்டிக்கோ. எளிமையா அலங்காரம் பண்ணிக்கோ.

    Enjoying the preview?
    Page 1 of 1