Karuppu Mullai
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Iraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Iraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Iniyaa Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKanna Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarendru Enni... Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Kana Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi! Rating: 0 out of 5 stars0 ratingsThevatha Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Kolai Endru Sonnale! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karuppu Mullai
Related ebooks
Thaalattum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsNaaladi Gopurangal...! Rating: 0 out of 5 stars0 ratingsThoorangal Nagarkindrana Rating: 5 out of 5 stars5/5‘Gopu’win Sirapana Kathaigal Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsVidikindra Velaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsவிட்டு விடுதலையாகி... Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthaiyaagi Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pengalin Sneham Rating: 0 out of 5 stars0 ratingsNagarangal Moondru Sorgam Ondru Rating: 5 out of 5 stars5/5Maranathin Niram Manjal Rating: 5 out of 5 stars5/5Neerottam Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsKanavugalukku Kaathiruthal Rating: 0 out of 5 stars0 ratingsRoja Ithazhgal Rating: 0 out of 5 stars0 ratingsபுரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsMathamennum Vaanaththil Manamennum Pura Rating: 5 out of 5 stars5/5Vellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsThalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsChinnajchiru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ்சிறு கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsAabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsAathma Logam Rating: 0 out of 5 stars0 ratingsSolla Thudikkuthu Manasu Rating: 4 out of 5 stars4/5Ellaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Karunaagapura Giraamam Rating: 0 out of 5 stars0 ratingsகருநாகபுர கிராமம் Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5
Reviews for Karuppu Mullai
0 ratings0 reviews
Book preview
Karuppu Mullai - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
கறுப்பு முல்லை
Karuppu Mullai
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
ஜீப் போர்டிகோவில் இளைப்பாறி நிற்கிறது. அதிலிருந்து இளங்கோ வெளிக் குதித்து, நெஞ்சு முட்ட சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, பிறந்த மண்ணைத் தொட்டதில் மகிழ்ந்து பங்களாவின் வெளிப்புறம் பார்க்கிறான். இதோ அந்தப் பால் கனியில் நின்றுதான் கல்யாணத்தின் போது இவன் ஊர் வலம் வருதைப் பார்த்திருந்தாள் மனோ. அழகிய மணமகளாய் அலங்கரிக்கப்பட்ட அவளின் தேவதை உருவம் இன்னமும் இவன் நெஞ்சில் செதுக்கபட்டிருக்கிறது, ஆனால்... இன்று...
இந்த ஐந்து வருடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்காமல். காலத்திற்குச் சவால் விட்டபடி வெள்ளை பெயிண்ட் கண்ட சுவர்களும், எப்போதும் மூடப்பட்ட கதவுகளும் சாளரங்களும் வீட்டைச் சுற்றி நெடிதுயர்ந்த பலா மரங்களும், ஆங்காங்கே கண் சிமிட்டி இவனுக்குத் தலை ஆட்டி, வரவேற்பு கூறும் டாலியா புஷ்பங்களும், வண்ண வண்ண ரோஜாக்களும்...
இளங்கோ தன் பார்வையைத் திருப்பினபோது எஸ் டேட் மானேஜர் அன்புமணி, யாருக்கோ சைகை காட்ட, ஓர் இளம் பெண் மஞ்சள் நீர் கரைத்த தட்டில் கற்பூரம் சுடர்விட இவனுக்கு ஆரத்தி எடுக்கிறாள். இவன் நெற்றியில் நடுவிரலால் திலகமிடுகிறாள்.
அன்புமணி, என்னது ஆரத்தி எல்லாம்... ம்... நான் என்ன ஃபாரின் போயிட்டு வரேனா இல்லை ஏதானும் வெற்றி வாகை சூடி வரேனா? மை காட், ஜெயிலுக்குப் போய் வர்றவனுக்கு...
இளங்கோ சொல்லி முடிப்பதற்குள் அவனைவிட இளைஞனான அன்புமணி, அவன் விரல்களை அழுத்தி - மேற்கொண்டு சொல்ல வேண்டாம் என எச்சரிக்கிறான்...
இது நர்ஸ் மல்லிகா. நம்ம அம்மாவைப் பார்த்துக்க நியமிச்சிருக்கேன். வாங்க இளங்கோ, அம்மா உங்களைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க.
நர்ஸ் மல்லிகா ஒதுங்கிக் கொள்ள, வேலைப்பாடமைந்த கதவிற்குள் நுழைகையில், சர விளக்குகளும், பாடம் செய்த புலித் தலைகளும், மான்களும், வெல்வெட் குஷன் மர இருக்கைகளையும் மாடிப் படிகளையும் துழாவி ஏமாற்றமடைகின்றன் இளங்கோவின் விழிகள்.
நீங்க வர்றது தெரியும். மேடம், மாடியிலே - இருப்பாங்க. போய் அழைச்சிட்டு வரணுமா?
நோ... நோ... நானே போய்ப் பார்த்துக்கறேன். பர்ஸ்ட் அம்மா.
அன்புமணியின் பார்வையில் தென்படுவது இரக்கமா, பரிவா புரியவில்லை இளங்கோவிற்கு..
அந்தப் பெரிய ஹாலை ஒட்டின, திரையிடப்பட்ட அறைக்குள் நுழைந்த போது உள்ளிருந்து நர்ஸ் மல்லிகா வெளியேறுகிறாள். தேக்கு மரக் கட்டிலில் உயர்த்தப்பட்ட தலையணையில் சாய்ந்தபடி நிர்மலமான முகத்தில் நெடுநாள் பிரிந்த மகனைக் காணும் ஆவலில் செண்பகம் அம்மையாரின் இமைகள் மறந்து பார்க்கின்றன. அவர் மெலிந்த தேகத்தை மெல்லிய பட்டுச் சேலை போர்த்தியிருக்கிறது.
இளங்கோ அவர் பாதம் தொட்டு கண்களில் ஒற்றி, அவர் அருகே போய் அமர்ந்து அவர் இரு கரங்களையும் தன் கரங்களில் ஏந்திக் கொள்கிறான். இருவர் விழிகளிலும் ஈரம்.
அன்புமணி வெளியே போய் விடுகிறான்.
பாசம் இருவர் மனத்தில் எழுந்து பேச்சைத் துரத்தி விடுகிறது.
இந்த ஐந்தாண்டுகளில் ஓட்டமும் இவன் நிரந்தரப் பிரிவும் அந்த அம்மையாரின் நிறத்திலும் முக வசீகரத்திலும் கை வைத்திருக்கிறது. சுருங்கின அவர் முகத்தில் கண்ணீர் முத்துக்கள் உருள்கின்றன. இளங்கோவின் பார்வையைத் திரையிடுவது கண்ணீர்.
அம்மா.... அம்மா...
இளங்கோ.... மகனே.... உன்னைப் பார்க்காமே என் முடிவு வந்துடுமோன்னு பயமா இருக்கும்பா. ஊம்.... இப்பத்தான் என் மனசு நிறைஞ்சிருக்கு. சந்தோஷத்திலே மூச்சு விடக் கூட முடியலே.
அவர் தலையை அணைத்திருந்த இளங்கோவின் கண்ணீர்த் துளிகள் அவர் கன்னத்தில் சங்கமிக்கின்றன.
அம்மா, தண்டனை முழுக்க முடிச்சிட்டு வரணும் என்கிறது என் பிடிவாதம்மா. பரோல்லே வெளியே வர எனக்குப் பிடிக்கலேம்மா. இங்கே வந்து சுதந்திரமா இருந்துவிட்டுத் திரும்ப ஜெயிலுக்குப் போறது எனக்குப் பிடிக்கலேம்மா. அதான் உங்களைப் பார்க்கக்கூட நான் பிடிவாதமா வரலைம்மா.
மகனின் முதுகைச் சுருங்கின எலும்பான விரல்களால் மயிலிறகாய் வருடி, தெரியும்பா, உன் மனசைப் பற்றிப் பலமுறை எழுதியிருக்கியே. நீ சொல்றதும் சரிதான். வந்துட்டுத் திரும்பிப் போகணும் என்கிற கொடுமையை நினைச்சா வந்த சந்தோஷம் இருக்காது. போனது போகட்டும். இனி கசப்பான விஷயங்களைப் பேசவோ நினைக்கவோ கூடாது. அதனால் மனச் சங்கடம் அதிகமாகும்,
என்கிறார்.
அம்மா, இப்ப எப்படிம்மா இருக்கு உடம்பு? எனக்கு உங்க கவலைதாம்மா.
உம்... அப்படியேதாம்பா இருக்கு. ரெண்டு வருஷமா படுக்கை போட்டிருக்கிறதுக்கு அப்படியே நிரந்தரமா போயிடக் கூடாதான்னு இருக்கு. அங்கே உனக்குச் சிறைக் கம்பிங்க தடை. இங்கே என் உடம்பே எனக்குத் தடையாய்ப் போச்சு.
அம்மா, அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா. நான் தான் வந்திட்டேனே. அப்புறம் என்னம்மா! எனக்காக நீங்க உயிரோட இருக்கணும்மா.
ஊம்...
பெரு மூச்சு விட்ட செண்பகம் அம்மையாரின் கண்ணீரை மகன் துடைக்கிறான்.
"இளங்கோ, நல்ல சாப்பாடு இல்லாமல் ஆளே உரு