Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullathiley Neeyirukka...!
Ullathiley Neeyirukka...!
Ullathiley Neeyirukka...!
Ebook261 pages2 hours

Ullathiley Neeyirukka...!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

அழகும், இரக்க குணமும் உடையவள் தீபமாலினி. தீபமாலினி அனாதை இல்லங்களுக்கு உதவும் மனப்பாண்மை கொண்டவள். இளம் தொழிலதிபரான ரவீந்திரன் தீபமாலினியின் குணத்தால் கவரப்பட்டு காதல் வயப்படுகிறான். தீபமாலினியுடன் இணைந்து இவனும் நன்கொடைகளை வழங்குகிறான். இவன் தன் காதலை தீபமாலினியிடம் சொல்வானா? உள்ளத்திலே நீயிருந்தால் எதையும் நான் செய்வேன் என காத்திருக்கும் ரவீந்திரனின் காதலை தீபமாலினி ஏற்பாளா? வாருங்கள் வாசித்துத் தெரிந்து கொள்வோம்.....

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580106007527
Ullathiley Neeyirukka...!

Read more from Jaisakthi

Related to Ullathiley Neeyirukka...!

Related ebooks

Reviews for Ullathiley Neeyirukka...!

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullathiley Neeyirukka...! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    உள்ளத்திலே நீயிருக்க...!

    Ullathiley Neeyirukka...!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 1

    நல்லாச் சேர்ந்தீங்கடி! என்று சிரித்தாள் தீபமாலினி. தோழிகளாகச் சேர்ந்து அந்த வண்டலூர் ஜுவுக்கு வந்திருந்தார்கள்.

    அவர்கள் எல்லோருமே ஒரே கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது சென்னையிலே பணி புரிகிறார்கள்.

    ஒவ்வொருத்தியும் பி.எஸ்.சி., ஐ.டி., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இப்படிப் படித்துவிட்டு சென்னையிலே வேலை கிடைக்கவும் வந்து விட்டார்கள்.

    அவர்களுடைய பெற்றோர்கள் வந்து பாதுகாப்பாக ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார்கள். அடுத்தடுத்த அறைகள் என்று இரண்டு அறைகளை எடுத்துக் கொண்டு தங்கியிருக்கிறார்கள். கல்யாணி நல்ல வசதியானவள். அவளுக்கு அவளுடைய பெற்றோர்கள் தனி அறையே எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால், தனியாக இருப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது என்று தோழிகளில் ஒருத்தியான கலாராணியை கூட தங்கவைத்துக் கொண்டிருக்கிறாள்.

    மல்லிகாவுடன் கூட மற்றவர்கள் ஒரு அறையிலே இருந்தார்கள்.

    இன்றைக்கு சேர்ந்தாற் போல இரண்டு நாள் லீவு கிடைத்தது. மூன்று நாள், நான்கு நாள் என்று லீவு வரும்பொழுதுதான் ஊருக்குப் போவார்கள். இரண்டு நாள் விடுமுறையில் போய்விட்டு வருவதற்கே சரியாக இருக்கும் என்று போக மாட்டார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமையன்று பெற்றோர்கள் தாங்களே வருவதாகக் கூறியிருந்தார்கள். அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். சரிடி, வண்டலூர் ஜு போகலாம். ரொம்ப நாளா வண்டலூர் போலாம்னுன்னு மல்லிகா சொல்லிக்கிட்டிருக்கா. போய்ப் பார்க்கலாம்! என்றாள் கலாராணி.

    அது எதுக்குடி அங்கே போகணும்? உங்க நாலு பேரையும் வரிசையா நிக்க வச்சுப் பார்த்தாலே போதுமே என்றாள் தீபமாலினி.

    உடனே அவர்கள் நாலு பேரும் ஓஹோ! என்று சொல்லி விட்டுச் சிரித்தார்கள்.

    மல்லிகா கல்யாணியைப் பார்த்து. இது ஜோக்காம்டி. சிரிச்சுடுடி என்றாள்.

    அதாண்டி சொன்னேன். அவள் சிரிச்சா மட்டும் எப்படி இருக்கும்? கொரில்லா சிரிச்ச மாதிரி இருக்கும் என்றாள் தீபமாலினி.

    உதை வாங்குவடி! கொரில்லாவோட ஃப்ரெண்டு யாராம்? என்றாள் மல்லிகா. இப்படிப் பேசிக் கொண்டே கிளம்பினார்கள்.

    என் கார் சர்வீஸூக்குப் போயிருக்கு. ஒரு டாக்ஸி புடிச்சுக்கலாம்டி என்றாள் தீபா. ஆமா, ஆனா வெயிட்டிங் எல்லாம் போட வேண்டாம். இப்பத்தான் ஓலா, ஊபர் அப்படியெல்லாம் இருக்கில்லே? அதுமாதிரி சாயங்காலம் வரும்பொழுது வேற ஏதாவது வண்டி பிடிச்சுக்கலாம் என்றார்கள்.

    அப்படி இப்படி என்று அவர்கள் கிளம்பும் போதே மணி 11.30 ஆகிவிட்டது. அவர்கள் இருந்த ஹாஸ்டல் வார்டனை காக்கா பிடித்துத் தனக்கு நட்பாக வைத்துக் கொண்டிருந்தாள் கல்யாணி. ஆன்ட்டி ஆன்ட்டி, நாங்க வண்டலூர் ஜுவுக்குப் போகலாம்னு இருக்கோம். காலையிலே டிஃபன் பொங்கல்தானே? அதை நீங்க பேக் பண்ணிக் கொடுத்திடுங்களேன்" என்றாள்.

    அது எதுக்கு மிச்சம் பண்ணினதைக் கொடுக்கறது. இன்னைக்கு மத்தியானம் டொமேட்டோ ரைஸ் பிளான் பண்ணியிருக்கு! என்றாள் வார்டன்.

    அப்போ ரெகுலர் சாப்பாடு இல்லையா? என்றாள் கலாராணி.

    இல்லை. நீங்களும் நாலு பேர் வெளியே கிளம்புறீங்க. இன்னொரு பதினைந்து பேருக்கு மேலே வெளியே கிளம்பினாங்க. அதனாலே இன்னைக்கு டொமேட்டோ சாதம், நல்ல சைட்டிஷ்ஷா பண்ணிக் கொடுங்கன்னு கேட்டாங்க. அதான் அப்படி ஏற்பாடு பண்ணிட்டேன் என்றார் வார்டன்.

    அப்ப எங்களுக்கு பேக் பண்ணிக் கொடுத்துட்டீங்கன்னா? என்றாள் கல்யாணி.

    அது ஒண்ணும் பிரச்சினை இல்லை. நீங்க பேக் பண்ணிட்டுப் போங்க. நான் மறுபடியும் வேண்ணா தயிர் சாதம் பண்ணிக்கறேன் என்றாள்.

    இந்தத் தடவை ஊருக்குப் போயிட்டு வரையில பத்து கிலோ பருப்பு கொண்டு வரேன் என்றாள் கல்யாணி

    போடி கள்ளி, லஞ்சம் கொடுக்கறாளாம் என்று சிரித்தார் வார்டன். எல்லாருமாக வெளியே வந்தார்கள்.

    ஓலோ வண்டி பிடித்தார்கள். டிராஃபிக்கைக் கடந்து டாக்ஸி போய் சேருவதற்கு பன்னிரெண்டரை மணி ஆகிவிட்டது. உள்ளே நுழைந்தவுடனேயே அந்த ஜு கேம்பஸ்குள்ளே போனா சாப்பிடக் கூடாதாம்டி. இங்கேயே சாப்பிடலாம்! என்று அங்கேயே சாப்பிடுவதற்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இடம் நோக்கிப் போனார்கள்.

    ‘டொண்டொடஞ்ய்!’ என்று குரல் கொடுத்தபடி ஒரு சாப்பாட்டுப் பையை எடுத்தாள் தீபமாலினி. வெஜிடபிள் பிரியாணியும் தயிர் சாதமும் கொண்டு வந்திருந்தாள். ‘ஹை’ என்று உற்சாகக் குரல் எழுப்பிவிட்டு அமர்ந்து சாப்பாட்டை ஒரு கட்டுக் கட்டினார்கள். கல்யாணி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பாள். அவளுக்கு ஒரே கவலையாகப் போய் விட்டது.

    ஏண்டி, பன்னிரெண்டரைதான் ஆச்சு. ஒரு மணி கூட ஆகலை. சாப்பாட்டுப் பெட்டியை காலி பண்ணியாச்சு. அப்புறம் பசிச்சதுன்னா என்னடி பண்றது?என்றாள்.

    அப்புறம் பக்கத்தில் இருந்தவர்கள் யாரோ அங்கேயே ஒரு கேன்டீன் இருக்குங்க. அங்கேயும் சாப்பிடலாம்! அது போக உள்ள ஒரு கேன்டீன் இருக்கு. அங்கே இந்த சமோசா அதுமாதிரி ஐட்டம்ஸ் இருக்கும்! என்றார்கள். செய்திகளை சேகரித்துக் கொண்டு போய் சுற்றிப் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு போய் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    வண்டி சுற்றி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ஆங்காங்கே நிறுத்திக் காண்பிப்போம் என்று சொன்னார்கள். இவர்களுக்கு வண்டி கிடைப்பதற்கே ஒரு மணி ஆகிவிட்டது. ரெண்டு மணிக்கு வண்டி கிளம்பியது. ஒவ்வொரு இடமாக நிறுத்திக் காண்பித்தார்கள்.

    புலிகள் இருந்த இடத்தைக் காட்டுவதற்கு முன்பு சிங்கம் இருக்கும் இடத்தைக் காண்பித்தார்கள். தூரத்திலே ஒரு சிங்கம் இருந்தது. அதன் முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை. வால் மட்டும்தான் தெரிந்தது. ‘இன்னைக்கு அவ்வளவுதான். சிங்கமெல்லாம் ஒண்ணும் இங்க வராது!’ என்றார்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். போங்கடி, சிங்கத்தைப் பார்க்க முடியலை! என்றாள் சித்ரா.

    அதோ, அங்கே தெரியுது பார்! அதான்! என்றாள் மல்லிகா. கலாட்டாவாகப் பேசிக் கொண்டே வந்து வண்டியிலே ஏறினார்கள். இவர்கள் நால்வரைத் தவிர இன்னும் நால்வர்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் இரண்டு ஜோடியும் அமர்ந்திருந்தார்கள். அதனால் அவர்கள் நெருக்கத்தை கவனித்தபடி இவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து களுக்கென்று சிரித்துக் கொண்டு நகர்ந்தார்கள்.

    அந்த இரண்டு ஜோடிகளுமே அதையெல்லாம் கவனிக்கிற நிலைமையிலே இல்லை. சற்று நேரம் கழித்து புலிகள் இருக்கிற இடத்திற்குப் போனார்கள். அங்கே பெரிய ஒரு போர்டு வைத்திருந்தது. சங்கீதா, தீபிகா என்று நான்கைந்து பேர்களில் அங்கே புலிகள் இருந்தன.

    வெள்ளைப் புலி கூட இருந்தது. புலிகள் எல்லாம் ஹாயாகப் படுத்துக் கொண்டிருந்தன. இவர்கள் அந்தக் கம்பி ஓரமாக பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பிரம்மாண்டமான புலி ஒன்று வேகமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது.

    நடையைப் பாருடி என்ன கம்பீரமா இருக்குது என்றாள் கலாராணி. சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருக்கில்லே? என்று இவர்கள் ரசித்துக் கொண்டிருக்கையிலேயே திடீர் என்று அந்தப் புலி ஒரு கர்ஜனையைச் செய்தது. கர்ஜனை செய்து அந்தக் கம்பி வேலி ஓரமாக வந்து ஒரு மிரட்டு மிரட்டியது. இவர்கள் அத்தனை பேரும் ஹாய், ஊய் என்று கத்திக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தார்கள்.

    ஓடி வந்த கணத்திலே சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தவர்களிடம் மோதினார்கள். தீபமாலினி யார் மேலேயோ மோதி விட்டு நிமிர்ந்து பார்த்தாள். ஒரு இளைஞன் ஆறடி இருப்பான். கண்களில் குறும்பு கொப்புளிக்க இவளைக் குனிந்து பார்த்து என்ன ஆச்சுங்க? பயந்துட்டீங்களா? என்றான்.

    இவள் வேர்த்துப் போன முகத்தைக் கர்ச்சீஃபால் துடைத்துக் கொண்டு ஆமாம்! என்பதுபோல தலையாட்டினாள்.

    என்னங்க லேடீஸ் சுதந்திரம் வேணுங்கறீங்க. நாங்கல்லாம் வீர மங்கை வேலு நாச்சியார் மாதிரிங்கறீங்க. ஆனா இந்த கர்ஜனைக்கே பயந்துட்டீங்களே? இந்த உறுமலுக்கே பயந்துட்டீங்களே? என்றான்.

    ஹலோ! அந்த வசனமெல்லாம் பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும். இது நிதர்சனம். உங்களை இழுத்துக்கிட்டு போய் புலிக்கு முன்னாடி நிறுத்தறேன். நீங்க தைரியமா நிக்கறீங்களான்னு பார்ப்போம் என்றாள்.

    அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கறதுக்கு நாம தயாரா இல்லைங்க.

    அதானே? என்று இவள் முறைத்தாள்.

    சும்மா ஃப்ரென்ட்லியா ஒரு ஜோக் மேடம். ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க என்றான்.

    ஓ.கே! ஓ.கே! என்று இவள் புன்னகைத்து விட்டு நகர்ந்தாள். கலாராணி, சித்ரா, மல்லிகா, கல்யாணி நாலு பேரும் நாலடி தள்ளி நின்று இதை வேடிக்கை பார்த்தார்கள்.

    அதைப் பார்த்து தீபமாலினிக்கு முகம் சிவந்து போனது. ‘வாங்கடி போகலாம்!’ என்று முணுமுணுத்துக் கொண்டு நகர்ந்தாள். ‘வரா, வரா’ என்று அவர்களும் முணுமுணுத்தபடி இவள் அருகிலே வந்தார்கள்.

    இவர்கள் நால்வரும் வண்டியை நோக்கிப் போனார்கள். அந்த நேரத்தில் அந்த வண்டி ஓட்டுகிற பெண்மணி டிஃபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு போய் அங்கே இருந்த ஒரு மேடையிலே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவுடனே இவர்கள் மறுபடியும் திரும்பி நின்று புலிகளை சற்று நேரம் வேடிக்கை பார்க்கலானார்கள். அந்த இளைஞனும் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தான்.

    அவனோடு கூட இரண்டு மூன்று இளைஞர்கள் வந்திருந்தார்கள். கலாராணி, தீபமாலினியிடம் சூப்பர் பர்சனாலிட்டி இல்லே? என்றாள்.

    தீபமாலினி முறைத்தாள். மேடம், சும்மா ரசிக்கறதிலே என்ன தப்பு? நல்லாயிருக்காரு. கம்பீரமா இருக்காரு. அழகா இருக்காரு. பாக்கறதுக்கு ரொம்ப பாந்தமா இருக்காரு. இதைச் சொன்னா என்ன? இதுக்கு எதுக்கு முறைக்கறே என்றாள் சித்ரா.

    தீபமாலினி ஒன்றும் சொல்லவில்லை. இவளிடம் பதில் சொல்லிக் கொண்டே ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தாள். அந்த நேரத்தில் தலையை உயர்த்தி சிரித்து விட்டு அவனும் திரும்பி அவளைப் பார்த்தான்.

    அவன் புருவம் லேசாக உயர்ந்து இறங்கியது. இவள் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஒரு நிமிடம் கழித்துத் திரும்பிப் பார்த்தபொழுது அவன் குறுகுறுவென்று இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    வாங்கடி போய் உட்காரலாம் என்றாள் தீபா. சரி வா, போகலாம்! என்று இவர்கள் வண்டியில் ஏறினார்கள். இவர்கள் வண்டி நகர்ந்தது. அப்போதுதான் கவனித்தார்கள். அந்த நான்கு இளைஞர்களும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்ப்பதற்காக வந்தார்கள் என்று.

    இவர்கள் வண்டியிலே அமர்ந்து போகும்பொழுது சற்று முன்னாலேயே அவர்கள் சைக்கிள்கள் போய்க் கொண்டிருந்தன. தீபமாலினிக்கு ஏனோ மனதுக்குள்ளே ஒரு குறுகுறுப்பாகவே இருந்தது.

    இவனை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்று அவளுக்கு தோன்றியது. அவளுக்குத் தோன்றியது பொய்யாகவும் போகவில்லை.

    அத்தியாயம் - 2

    அதிகாலை நேரம் எங்கோ சேவல் கூவுகிற சத்தம் கேட்டது. மெல்லக் கண் விழித்தான் ரவீந்திரன். காலையிலே கண் விழிக்கும் பொழுதே மனதுக்குள் ஏதோ தென்றல் அடித்த மாதிரி இருந்தது.

    நேற்றில் இருந்தே மனம் ஒரு விதமாகத்தான் மயங்கிக் கொண்டிருந்தது. எதனால் என்று யோசித்துப் பார்த்தபொழுது மனம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்து போய் வண்டலூர் ஜுவிலே நின்றது.

    அங்கே வைத்துப் பார்த்த அந்தப் பெண்ணின் நினைவு ஏனோ அவனுக்கு மீண்டும் மீண்டும் வந்து போனது. இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது? எத்தனையோ பெண்களைப் பார்க்கிறோம். எவ்வளவோ அழகான பெண்களையெல்லாம் கூட அவன் தன்னுடைய தொழில் ரீதியாக சந்தித்து இருக்கிறான்.

    அவனுடைய தந்தை பொதுவுடைமை கருத்துக்களை வெகுவாக ஆதரிக்கிறவர். அதனால் அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்கிற ஒரு பக்குவத்தை உடையவராக இருந்தார்.அவனுடைய தாயும் அப்படித்தான் இருந்தாள். அன்புச்செல்வி என்று பெயர். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் அந்த அசம்பாவிதம் நேரும் வரை அவனுக்கும் அவருடைய கொள்கைகளில் உடன்பாடு இருந்தது. இப்போதும் அவர்களுடைய அந்தக் கொள்கையை அவன் மதித்தான். ஆனால், அவனைப் பொறுத்த வரை அது வாழ்க்கைக்கு உதவுமா? என்ற சிந்தன ரீதியிலே போய்விட்டான். அதனாலோ என்னமோ தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலே இருந்து வெளியே வந்துவிட்டான்.

    வளவன் ஏன் இந்த வேலைக்குப் போனாய் என்றும் கேட்டதில்லை. ஏன் இந்த வேலையை விட்டு வந்தாய் என்றும் கேட்டதில்லை. நீ ஒரு தனிமனிதன். உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய். உன்னுடைய வெற்றி, தோல்விகளுக்கு நீ பொறுப்பு எடுத்துக் கொள்கிற அளவுக்கு வந்துவிட்டாய். என்னுடைய கொள்கையின் படி சொத்து சேர்ப்பது இல்லை. அதனால் நான் உனக்கு சொத்தெல்லாம் சேர்த்து வைக்கவில்லை. படிக்க வைத்தேன். மூதாதையர் வழியாக வந்த இந்த வீடு இருக்கிறது. இதை அப்படியே பாதுகாத்து உனக்குக் கொடுத்து விடுவேன். ஏன் என்றால் அதில் கை வைக்கிற உரிமை எனக்கு இல்லை. மற்றபடி உன்னுடைய கொள்கைகளிலோ சித்தாந்தங்களிலோ நான் தலையிட மாட்டேன். என்று அவனுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து விட்டார்.

    அவருடைய கொள்கைகளில் அவனுக்கு முழுக்க முழுக்க உடன்பாடு இல்லையென்றாலும் கூட அவருடைய அந்த நேர்மை அவனுடைய ரத்தத்திலே கலந்துவிட்டது. அதனால் தான் எடுக்கிற தொழிலில் நேர்மை இருக்க வேண்டும் என்று பலவிதமாக யோசித்தான். தான் மூன்று நான்கு ஆண்டுகளாக வேலைசெய்து சம்பாதித்திருந்த பணத்தை அப்படியே சேமிப்பில் போட்டிருந்தான். ஒரு பெரிய கம்பெனியில் எச்.ஆராக இருந்தான். அதனால் லட்சக் கணக்கில் வருமானம் இருந்தது.

    அவனுடைய பெற்றோர்கள் அந்த வருமானத்தை வாங்கிக் கொள்ளவில்லை. இவனாக வற்புறுத்தி தந்தைக்கும், தாய்க்கும் தேவையான மாத்திரை மருந்துகளை மட்டும் வாங்கிக் கொடுத்தான். ஏனென்றால் தந்தைக்கு பைப்பாஸ் சர்ஜரி ஆகியிருந்தது. தாய்க்கும் கொஞ்சம் உடல்நலக் குறைவு உண்டு. அதனாலேயே அவர்களைப் பார்த்துக் கொண்டு அந்த வீட்டிலே இருக்க வேண்டியதாயிற்று. இந்த ஒரு பாக்கியத்தையாவது எனக்குக் கொடுங்கள் என்று சொல்லி அவன் அவர்களுக்க தேவையான மாத்திரை மருந்துகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவான்.

    Enjoying the preview?
    Page 1 of 1