Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugam Thediya Mugavarigal
Mugam Thediya Mugavarigal
Mugam Thediya Mugavarigal
Ebook286 pages1 hour

Mugam Thediya Mugavarigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணங்கள் அறிவை வளர்க்கின்றன. 'அறிவு தேடல்' பயணங்கள் அறிவை கூராக்கின்றன. அத்தகு பயணங்களின் பதிவுகள் பல இந்நூலை சீராக்குகின்றன. கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றிய பதிவு அதனை விரைந்து சென்று பார்வையிட நம்மை விரைவுபடுத்துகின்றது. 'முகம் தேடிய முகவரிகள்' நூல், கற்றல் சூழல்கள், விண்வெளி ஆய்வுகள், பயணங்கள், கருத்தரங்குகள், வாழ்வியல் அனுபவங்கள், சமூக செயல்பாடுகள், வரலாற்று படிமங்கள், எதிர்கால நோக்குகள் என பரந்த பரப்பில் பயணிக்கின்றது. பல ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், நூல் ஆய்வுகளும் இடம்பெற்று இருக்கிறது. நூலாசிரியரின் இளம் விஞ்ஞானிகள் செயல்பாடுகளும், அனுபவங்களும், பயணங்களும் இந்நூலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. வாசகனுக்கு இது வாழ்வியல் வழிகாட்டுதல்களையும் அறிவுத்தெம்பையும் வரி வழங்குகின்றது

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580173210614
Mugam Thediya Mugavarigal

Related to Mugam Thediya Mugavarigal

Related ebooks

Reviews for Mugam Thediya Mugavarigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugam Thediya Mugavarigal - Mullanchery M. Velaian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகம் தேடிய முகவரிகள்

    Mugam Thediya Mugavarigal

    Author:

    முள்ளஞ்சேரி மு. வேலையன்

    Mullanchery M. Velaian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mullanchery-m-velaian

    பொருளடக்கம்

    அறிவு முக்கோணத்தின் முகவரிகள்

    புது புது முகங்களோடு

    முகம் தேடிய முகவரிகள்

    1. பயணத்தில் பெற்ற ஞானம்

    2. சந்திப்பின் மகிழ்ச்சி

    3. கற்றல் கொண்டாட்டம்

    4. மனதைவாட்டியது

    5. ஆண்டுமலர்

    6. குமரி விஞ்ஞானி

    7. பிரமாண்டமான கொண்டாட்டம்

    8. மலைக்குள் எழிலரசி

    9. தொல்காப்பியம்

    10. கைப்பக்குவம்

    11. பாராட்டுவிழா

    12. கூர்ந்து கவனிக்கும் ஆர்த்தி

    13. பனைஓலை நாவல்

    14. காகிதப்புறா

    15. மதிப்புமிகு மாமனிதர்

    16. அலைகடல் ஓரத்திலே

    17. வட்டக்கோட்டை கடல்பயணம்

    18. வாசிப்பை நேசிப்போம்

    19. மாண்டு போன அவலம்.

    20. சுருதி மறக்கவில்லை

    21. இலக்கியமும் மொழியும்

    22. நல்ல நட்பு வட்டம்

    23. மறக்க முடியுமா?

    24. சந்திப்புகள் உறவுகளை வலுவாக்குகிறது.

    25. செவ்வியல் அறிஞர்

    26. பயணங்கள் தொடரட்டும்

    27. அறிவு சமூகம் உருவாக்குவோம்...

    28. புதிய சிந்தனையை உருவாக்கும் நுட்பம்

    29. பெற்றோர் ஆசிரியருடன்

    30. இலக்கை நோக்கி

    31. திரை சிந்தனைகள்

    32. பதியப்பட வேண்டிய பக்கங்கள்

    33. அனஷ்வரா பவுண்டேசன்

    34. புத்தகக் கண்காட்சி

    35. புள்ளிகளும் கோலங்களும்

    36. சாதித்து வாழ்ந்தவர்கள்

    37. பணி நிறைவு பெற்றவர்கள்

    38. மொழி ஆளுமை

    39. அறிவுத்தேடல் பயணம்

    40. பயணம் இளையோர்

    41. இளம் ஆளுமை

    42. புத்தகங்களை ஆய்வு செய்தல்

    43. அப்பாவுக்கு...

    44. பெண்குழந்தைகளைக் காப்பாற்றுவோம்

    45. காலை உணவு

    46. சுற்றுச்சூழல் வித்தகரோடு

    47. ஆதிச்சநல்லூர்

    48. மந்திரச் சொல்...

    49. இயற்கையைச் சீண்டினால்

    50. மொபைலில் மகிழ்ச்சி

    51. பள்ளிகளில் விண்வெளி அறிவியல்

    52. பூமியிலிருந்து விண்வெளி

    53. எம் ஆசான்

    54. படைத்திருக்கிறோம் என்ற பெருமிதம்

    அறிவு முக்கோணத்தின் முகவரிகள்

    நெல்லை சு. முத்து

    அறிவியல் எழுத்தாளர், விஞ்ஞானி

    ‘அசஞ்சர் மென்பொருள் நிறுவன’த்தில் சீனியர் மென்பொருள் பொறியாளர் இளம் விஞ்ஞானி சுருதி, உலகளாவிய பாடத்திட்டத்தில் உள்ள கல்விமுறையில் பத்தாவது வகுப்பு தேர்வில் 97.4% மதிப்பெண் பெற்ற இளம் விஞ்ஞானி ஆர்த்தி, மாநில அளவில் நான்காவது இடம் பிடித்த காஞ்சிநகர் ஸ்ரீகிருஷ்ணா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணபிரியா, இளம் விஞ்ஞானி சிவானி ஆகியோரின் பண்புநலன்களையும் அன்புடன் பதிவிடும் நூலாசிரியர், குடும்பத்தில் முதியோர்களைப் பேணும் அக்கறையில், தினசரி இரண்டு வேளை நடக்க வையுங்கள்... தொலைக்காட்சி பார்க்க வையுங்கள்... செய்தித்தாள் படிக்க வையுங்கள்... மகள் பெயரக் குழந்தைகளை உரையாடல் செய்ய வையுங்கள்... மருத்து கொடுப்பதும் உணவு கொடுப்பதும் மட்டும் போதாது... முதுமைக்கு அருமருந்து உரையாடல் நடத்துவது... பெயரக் குழந்தைகளை நிச்சயமாக அவ்வாறு பழக்கியிருக்க மாட்டார்; ஏன் என்றால் இன்டர்நேசனல் சிலபஸில் இடம்பெறாத விசயம் என்று கூறுவது உள்ளார்ந்த ஒவ்வோர் இல்லத்தின் பெற்றோர்க்கும் உரிய அறிவுரை தானே?

    சமூக ஆர்வலரும், விண்வெளித்துறை நிபுணருமான திரு. முள்ளஞ்சேரி மு. வேலையன் அவர்கள் எழுதியுள்ள ‘முகம் தேடிய முகவரிகள்’ என்னும் இந்நூல், ‘கற்றறிவு-கேட்டறிவு-பட்டறிவு’ ஆகிய ‘அறிவு முக்கோண’த்தின் முகவரிகள் தாங்கியது என்றால் மிகையாகாது.

    இந்நூலினைப் படித்தவுடன், நாட்டில் இன்னும் மனித நேயம் கெட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த விழைகிறேன்.

    உட்கார்ந்த இடம் விட்டு நகராமல் சம்மணம் இட்டு, உபதேசம் செய்பவர்கள் பெருகி வரும் காலகட்டத்தில், அரசுப்பணி ஒய்வு பெற்றாலும், மக்கள் பணி ஓயாமல் ஊர் ஊராகச் சென்று, அதிலும் இல்லத் துணைவியார் திருமதி விமலா வேலையன் அவர்களையும் உடன் அழைத்துச் சென்று, மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்திப்பதே தம் வாழ்வில் புனிதப் பயணமாக்கிக் கொண்ட நண்பர் முள்ளஞ்சேரி மு. வேலையனின் நற்பணியினைப் பாராட்டுகிறேன்.

    குமரி மாவட்டத்தின் மண்ணும், மக்களும் குருதியும் சதையுமாகப் பிரிக்க முடியாத உயிர்ப்புடன் இவரது படைப்புகளில் துடிப்புடன் வாழ்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

    பயணத்தில் பெற்ற ஞானம் என்ற முதல் கட்டுரையில் தொடங்கி, நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் இணைபேராசிரியர் பா. மலர் எழுதிய ‘அப்பாவுக்கு...’, தமிழ்நாடு அரசு தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் குமரி ஆதவன் எழுதிய ‘புள்ளிகளும் கோலங்களும்’, மதிப்புமிகு மாமனிதர் பைங்குளம் இரா.சிகாமணி அவர்களால் எழுதப்பட்ட ‘குமரியின் உதயமும் வளர்ச்சியும்’, நண்பர் ஆன்றனி கிளமண்ட் எழுதிய ‘காகிதப்புறா’, ஐரேணிபுரம் பால்ராசய்யா எழுதிய ‘பனை ஓலை’ நாவல் என அண்மைக்காலங்களில் தாம் வாசித்த நூல்கள் குறித்த மதிப்பீடுகளையும்;

    ஸ்ரீராமகிருஷ்ணா இன்டர்நேசனல் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வும் அதன் பயன்களும் கருத்தரங்கம், ஆற்றூர் என். வி. கே. எஸ் சீனியர் செக்கண்டரி பள்ளியில் ‘பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’ விழிப்புணர்வு முகாம், ஆற்றூர் என். வி. கே. எஸ். டி பள்ளியில் புதிய சிந்தனையை உருவாக்கும் நுட்பம் குறித்த பட்டறை, காப்புக்காட்டில் தொல்காப்பியர் 2734-வது பிறந்த விழா, குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மருத்துவக் கல்லூரி பகுதியில் அமைந்துள்ள இயற்கை மருத்துவக் கல்லூரியில் நிகழ்வு, கன்னியாகுமரி மாவட்ட வணிகவரித்துறை பணி நிறைவு பெற்றவர்கள் நலச்சங்கம் கூட்டம், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக (2023-2024 கல்வி ஆண்டு) முதல் கூட்டம், மார்த்தாண்டம் ‘விபுரோ டெக்னாலஜி’யில் புதிய சிந்தனையை உருவாக்கும் நுட்பம் குறித்த பட்டறை, மஞ்சாலுமூடு சித்தார்த்தா கல்வியியல் கல்லூரியில் நூலக வார விழாவில் ‘வாசிப்போம் நேசிப்போம்’ என்னும் நிகழ்வு, தக்கலை தேவி மெட்ரிக் பள்ளியில் கோலாகலமான 34வது ஆண்டு விழா, முள்ளஞ்சேரி மு.வேலையன் அவர்களின் அலைகடல் ஓரத்திலே, கைப்பக்குவம், மலைக்குள் எழிலரசி (மாஞ்சோலைப் பயணநூல்) ஆகிய நூல்களின் பல்வேறு வெளியீட்டு விழா நிகழ்வுகள் - என்றவாறு துடிப்புடன் பள்ளி, கல்லூரி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் மத்தியில் சமுதாய அக்கறையுடன் அறிவியல் சிந்தனையை விதைக்கும் வகையில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளையும்;

    சமூகநீதியை விதைத்த மகான்கள்- வைகுண்டர் அய்யா, நாராயண குரு, வடலூர் வள்ளலார் போன்றோருடன், 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த திருக்குறள், நாலடி நானூறு போன்ற நூல் சுவடிகளை அச்சிட்டு வெளியிட்ட எல்லிஸ் என்ற ஆங்கில ஆட்சியர், அயோத்திதாசப் பண்டிதர், ‘பத்ம பூசண்’ விருது பெற்ற ஆர். ஆர். டேனியல் என்று அறியப்படும் ரஞ்சன் ராய் டேனியல்- எனத் தம்மை வசப்படுத்திய மனித நலத்தொண்டர்கள், இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானி ஜே. சுதர்சன், ஆமை வழித் தடத்தை பயன்படுத்திக் கடல் வழிகளை வரைபடமாக்கிய தொல்லாய்வியல் அறிஞர் ஒரிசா பாலு, இந்தியாவின் இளம் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர் அஸ்வதா பிஜு போன்ற விஞ்ஞானிகள், பௌதிக பேராசிரியாக இருந்து பின்னர் ஆன்மீக கல்வி கற்ற எல். எட்வின்சாம், தலைமையாசிரியர் கே. பி. செல்லசாமி எனத் தம்மோடு அன்பில் நெருக்கமான பேராசிரியர்கள் பலரையும் தேடித் தேடிச் சென்று சந்தித்த கருத்துப் பகிர்வுகளையும்;

    ஆதிச்சநல்லூர், பத்மநாபபுரம் அருகேவுள்ள உதயகிரி கோட்டை, கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமத்தில் சமண மதத்தின் தொன்மைமிக்க கோவிலாகவும் கருதப்படுகிற திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக காந்திய மியூசியம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், குமரி மாவட்டத்தின் விவேகானந்தர் அருங்காட்சியகம், காந்தி மண்டபம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டவர், கர்மவீரரின் மண்டபம் கலையிழந்துப் போய்விட்டது; நூலகமும் செயலிழந்து போய்விட்டது; அவர் ஆண்ட காலத் திட்டங்களை பணிகளை ஒரு அரை மணி நேர காட்சிப் படமாகப் போட்டு மக்கள் நினைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு நபரை வைத்து அவரின் சாதனைகளைச் சொல்லவேனும் வைத்திருக்கலா கிரானைட் தரையில் சிலர் இளைப்பாறும் கூடமாக மாற்றிவிட்டார்கள் என்று அரசுக்கு ஓர் கோரிக்கையும் வைக்கிறார்.

    மாணவர்களுடன் அறிவியல் சுற்றுலா, இலக்கியப் பெருவிழாக்கள், இயற்கைச் செழிப்பு மிக்க கடல், மலை, காடு, என அக்கம்பக்கத்திலுள்ள ஐந்திணைப் பகுதிகளுக்கும் சென்று தம்மனதில் பதிந்தவற்றின் எழுத்துப் படிவங்களையும் ‘முகம் தேடிய முகவரிகள்’ நூலில் 59 அத்தியாயங்களில் அவருக்கே உரித்தான இவரது எதார்த்தமான குமரி மாவட்ட எழுத்து நடையுடன் விவரிக்கும் போது, அவருடன் நாமும் பயணிக்கும் முழு அனுபவத்தை இந்நூல் வழங்குகிறது.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு, இடமலயாறு, செறுதோணிப்புழா, முல்லையாறு, முதிரப்புழா, பெரிஞ்சான்குட்டி ஆறு, பாரதப் புழா, தூதப் புழா, காயத்ரிப் புழா, கல்பாத்திப் புழா, கண்ணாடிப் புழா, பம்பா ஆறு, சாலியாறு, சாலக்குடிப் புழா, கடலுண்டிப் புழா, அச்சன் கோவிலாறு, கல்லடா ஆறு, மூவாற்றுப் புழாயாறு, வளப்பட்டணம் ஆறு, சந்திரகிரி புழா, மணிமலையாறு, வாமனபுரம் ஆறு, குப்பம் ஆறு, மீனச்சிலாறு - என்று நீளும் 41 ஆறுகள் கேரளக் காயல்களிலும் அரபிக்கடலிலும் சேருகின்றன, என்றெல்லாம் திரு.முள்ளஞ்சேரி வேலையன் அந்ததந்த நதிகளின் படகோட்டியாக அதில் நம்மையும் ஏற்றிச் செல்வதை நாமும் உணரலாம். நூலின் நடையொழுக்கும் அவ்விதமே அமைந்து விட்டது.

    மொபைலில் வரும் கார்ட்டூன் காட்சிகளைக் காட்டி மருத்துவர் வலியில்லாமல் குழந்தைகளுக்கு ஊசி போடும் காலகட்டம் வந்துவிட்டது. குழந்தைகளும் அழுகையில்லாமல் ஏற்கிறது. தாயும் முகமலர்ச்சியோடு நகர்ந்து செல்கிறார். தொழில்நுட்பம் மகிழ்ச்சியானச் சூழலை உருவாக்கியது. சோறு ஊட்டும் தாய் நிலவைக் காட்டுவதில்லை; மொபைலில் வரும் ஆட்டத்தைக் காட்டி சோற்றுப் பருக்கைகளை உள்ளே செலுத்துகிறார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சமூக தளங்களில் உள்ள குத்துக் களியாட்டங்களை ரசிக்கும் காலமாக மாறிவிட்டது. வீட்டில் தட்டு முட்டு சாமான்கள் தூக்கி எறியப்படுவதும், பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் விலையுயர்ந்த ஆன்ராய்டு மொபைல் வாங்கித் தருவதற்காகத் தான் நடந்து கொண்டிருக்கிறது (‘மொபைலில் மகிழ்ச்சி’) என்கிற நவீனகால நடைமுறையின் அவலங்களைப் பதிவிடும் அதே வேளையில்- வெளியூர்களுக்கு சென்று வரும்போது மனநெருக்கங்களைக் குறைக்கலாம்; பூங்கா அல்லது தோட்டத்தில் உலா வருவது புத்துணர்ச்சியையும், தெம்பையும் தரும். தெளிவான மற்றும் அமைதியான மனதைப் பெறுவதற்காக, தேர்வுகளின் போது தினசரி சுத்தமான காற்றோட்டமான பகுதிகளில் அளவளாவுங்கள்; பரீட்சைகள் குழந்தைகளின் திறன்களின் இறுதி தீர்ப்பு அல்ல என்பதை உணர வைக்க வேண்டும்; குழந்தைகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருப்பது அவசியம். அதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிற வெகு நியாயமான ஆலோசனையையும், எளிய தீர்வாக முன்வைக்கிறார் நூலாசிரியர். ‘பெற்றோர் ஆசிரியருடன்’ என்ற தலைப்பில் தனிக்கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

    அறிவும் தகவல்களும் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அறிவுச் சமூகம் நான்கு தூண்களின் மீது கட்டமைக்கப் பட வேண்டும்: கருத்துச் சுதந்திரம், தகவல் மற்றும் அறிவுக்கான உலகளாவிய அணுகல், கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மைக்கு மரியாதை மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி என்பதாக வகைப்படுத்தலாம் (‘அறிவு சமூகம் உருவாக்குவோம்’) என்பது 200 சதவீதம் அல்லவா?

    மக்களோடு மக்களாக முதலில் தாம் வாழும் பகுதியில் விதைநெல்களை உருவாக்கும் விதத்தில் இளம் தலைமுறையினரோடு அதீத மனித நேயத்துடன் இயங்கி வரும் முள்ளஞ்சேரி வேலையன் அவர்களின் அற்புதப் பணி கண்டு மனமாரப் பாராட்டுகிறேன்.

    புது புது முகங்களோடு

    குமரித்தோழன்

    எழுத்தாளர், தலைமை ஆசிரியர்

    முகம் என்பது தலையின் முன்புறம் இருக்கும் பகுதி. இந்த முகமே உயிர்களின் முதன்மைப் பகுதி. இம்முகத்தை வைத்தே வளர்ச்சி நிலைகளையும், பக்குவ நிலைகளையும் அறிந்து கொள்ள முடியும். ஒரு வீட்டின் முகம் என்பது அதன் வாயில். ஒரு பொருளின் முகம் என்பது அதன் வடிவம். ஓரிடத்தின் முகம் என்பது அதன் தொடக்கம். ஒரு நாடகத்தின் தொடக்க நிலை கூட முகமே. இத்தகு முகங்களை ஒரு சேர வெளிக்காட்டுவதில் எழுத்தாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அவர்கள் மகா கில்லாடி.

    முகவரிகளைத் தேடி முகங்கள் செல்வதுண்டு. முகங்களைத் தேடிய முகவரிகள் செல்வது ‘நீல நிலவு’ போன்ற நிகழ்வு. எழுத்தாளர் முள்ளஞ்சேரி வேலையனின் ‘முகம் தேடிய முகவரிகள்’ இத்தகு நிகழ்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்நூல் வடிவில் பெரிதும் சிறிதுமாய் உள்ள ஐம்பத்து நான்கு கட்டுரைகளின் உள்ளடக்கம்.

    ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது முதுமொழி. இம்முதுமொழியை மறப்போர் இவ்வுலகை துறப்போர். இவ்வுலக வாழ்வு என்ற மூலக்கூறுக்கு செல்வமும் ஒரு முக்கிய கூறு என்பதனை இது காட்டுகிறது. இதனை தன் வாழ்வில் உய்த்துணர்ந்த ஆசிரியர் கடலினக்கர போணோரே காணா பொன்னினு போணோரே என்ற மலையாள திரைப்பாடலோடு நூலைத் தொடங்குகின்றார். நீயெல்லாம் பனங்கம்பு எறுதற்குக் கூட லாயக்கு இல்லை சவமே; பள்ளிப் பருவத்தில் நூலாசிரியருக்கு வகுப்பு ஆசிரியர் கொடுத்த எடுத்துரைக் குறிப்பு. எனக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த தாமஸ் ஆல்வா எடிசன் நினைவுக்கு வருகிறார். இந்நூலாசிரியரும் இந்திய விண்வெளி துறையில் பணியில் உயர்ந்து நிறைவு பெற்றுள்ளார். ஆசிரியர்களின் ஆசிகள் பலிக்கிறதோ இல்லையோ, சாபங்கள் பலிப்பதில்லை என்பதற்கு இது ஓர் அற்புதச் சான்று.

    மக்களை நேசித்த மனோகரனின் மறைவு ஆசிரியரின் மனதை வாட்டியதைப் போன்று என்னையும் கவ்விக் கொண்டது. ‘நம்ம மார்த்தாண்டம்’ அழகாகத் தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் பேருந்து நிலையம் தூய்மையானதாக இல்லை; அழகான விமர்சனம். புதிய சிந்தனையை உருவாக்கும் நுட்பம் குறித்த பட்டறை தலைசிறந்த முன்னெடுப்பு. இதுபோன்ற ஏராள முன்னெடுப்புகள் நூலினுள் படையெடுப்பு. முற்போக்கு சிந்தனைகள் கொண்ட நல்ல திரைப்படங்கள் மனிதநேயம் கொண்ட மனிதர்களுள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ ‘மாமன்னன்’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த தேர்வு.

    பயணங்கள் அறிவை வளர்க்கின்றன. ‘அறிவுத் தேடல்’ பயணங்கள் அறிவை கூராக்கின்றன. அத்தகு பயணங்களின் பதிவுகள் பல இந்நூலை சீராக்குகின்றன. கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றிய பதிவு அதனை விரைந்து சென்று பார்வையிட நம்மை விரைவுபடுத்துகின்றது. ‘முகம் தேடிய முகவரிகள்’ நூல், கற்றல் சூழல்கள், பயணங்கள், கருத்தரங்குகள், வாழ்வியல் அனுபவங்கள், சமூக செயல்பாடுகள், வரலாற்று படிமங்கள், எதிர்கால நோக்குகள் என பரந்த பரப்பில் பயணிக்கின்றது. அய்யா வைகுண்டர், டேனியல், பைங்குளம் இ. சிகாமணி, ஞ. கோபாலன், திருவேங்கடம், சைலஜா ரவீந்திரன், எட்வின் சாம், ஒரிசா பாலு, ரேணுகாதேவி, ஏ. டி. சோபனராஜ், ஐரேனிபுரம் பால்ராசையா, குமரி ஆதவன், பேராசிரியர் மலர், ஆர்த்தி, சுருதி உட்பட பல ஆளுமைகள் பற்றி கட்டுரைகள் பேசுகின்றன.

    மலைக்குள் எழிலரசி, தொல்காப்பியம், கைப்பக்குவம், பனை ஓலை, காகிதப் புறா, அலை கடல் ஓரத்திலே, திருக்குறள், புள்ளிகளும் கோலங்களும், அப்பாவுக்கு உட்பட பல நூல்கள் பற்றி இந்நூல் கூறுகின்றது. இயற்கையைச் சீண்டாது வாழ்ந்து, பெண் குழந்தைகளைக் காப்பாற்றி பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணிப்போம் என்ற அழைப்போடு நூல் நம்மை விடுவிக்கிறது.

    நூலாசிரியரின் இளம் விஞ்ஞானிகள் செயல்பாடுகளும், அனுபவங்களும், பயணங்களும் இந்நூலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. வாசகனுக்கு இது வாழ்வியல் வழிகாட்டுதல்களையும், அறிவுத்தெம்பையும் வரி வழங்குகின்றது. எழுத்தாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் மேலும் பல நூல்களை மானிட பரப்பிற்கு தர வேண்டும்; தர வேண்டி வாழ்த்துகிறேன்.

    முகம் தேடிய முகவரிகள்

    முள்ளஞ்சேரி மு. வேலையன்

    மனிதச் சமூகத்தில் வாழ்கைப் பாதையில் கணக்கில்லாதவைகளைக் கடந்துச் செல்கிறோம். சில முகவரிகளில் சில முகங்களோடு சில முகங்களின் சந்திப்புகளில் மனதில் பதியக்கூடிய சந்திப்புக்கள் இதயத்தை விட்டு அகலாதவைகளாக இருக்கும். ஒவ்வொரு

    Enjoying the preview?
    Page 1 of 1