Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neethane Andha Kuyil
Neethane Andha Kuyil
Neethane Andha Kuyil
Ebook152 pages1 hour

Neethane Andha Kuyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580115705210
Neethane Andha Kuyil

Read more from Lakshmi Rajarathnam

Related to Neethane Andha Kuyil

Related ebooks

Reviews for Neethane Andha Kuyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neethane Andha Kuyil - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நீதானே அந்தக் குயில்

    Neethane Andha Kuyil

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே கிளம்பி விட்டான் ஹரி. தன் டூவீலரை எடுக்கும் சமயம் பன்னீர் தூவலாக மழைத்துளிகள் வர்ஷித்தது. சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு ரசித்தான். மழையை யார்தான் ரசிக்க மாட்டார்கள். இந்த பூந்தூறல் ரம்மியமாக இருந்தது.

    ஹரி, இதென்ன சின்னப் பிள்ளையாட்டம் தூறல்ல நிக்கறே? கேட்டபடி அருகில் நின்றான் அருண்.

    மழைனா ரொம்பப் பிடிக்கும் அருண்

    வீட்டுக்குக் கிளம்பிட்டியா?

    அவசரமா செய்யற வேலை இல்லை. சரினு கிளம்பிட்டேன்.

    கச்சேரி ஒண்ணு இருக்குது. போறியா?

    நீ போகல்லயா?

    என் தங்கையோட நாத்தனாரைப் பெண் பார்க்க வராங்க. போயாகணும்.

    எங்கே கச்சேரி?

    அவன் சபாவின் பெயரைச் சொன்னான்.

    தாம்பரம் பக்கத்துல இல்ல இருக்குது?

    நல்ல கச்சேரி கேட்கணும்னா எங்க வேணாலும் போகணும் ஹரி. கச்சேரியை விட மனசு இல்ல. என் தங்கை வீட்டுக்குப் போகலேன்னா என்னைப் பிச்சு எடுத்துடுவா. இந்தப் பாடகி இளம்பெண் தான். குரல் குயில் தான். அதே போல் ஆளும் குயில் ரூபம் தான்.

    என்ன சொல்றே அருண்... புரியல்ல

    அவளும் சிவப்பா அழகா இருக்க மாட்டாடா

    சீ... போடா. பெண் பார்க்கவா போறோம். பாட்டு நல்லா இருந்தா போதும். காம்போதியும், கல்யாணியும் கருப்பா சிவப்பானு யாருக்குத் தெரியும்?

    சரி... கச்சேரிக்குப் போடா... நாளைக்கு வந்து என்னென்ன பாடினானு சொல்லு... போ

    அருண் தந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான் ஹரி.

    அப்பாடா பல்லாவரம் தாம்பரம் எல்லாம் கிட்டத்திலா இருக்கிறது?

    ஆனால் மழைக் காற்று இதமாக இருந்தது. இரவு பலத்த மழை வருமோ? கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து ரமணன் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?

    ஹரிக்கு சங்கீதம் என்றால் உயிர் மூச்சு. அதனால்தான் மழையைக் கூடப் பொருட்படுத்தாமல் கிளம்பி விட்டான்.

    அவன் சபாவைக் கண்டுபிடித்து உள்ளே நுழையும் சமயம் கச்சேரி ஆரம்பமாகி விட்டிருந்தது. வாசலில் வைத்திருந்த போர்டிலிருந்த பாடகியின் பெயர் வர்ஷினி என்று தெரிந்து கொண்டிருந்தான்.

    வர்ஷினி வேகமாக முன்னுக்கு வரும் பாடகிதான். பிரபல சங்கீத வித்வானிடம் பெற்ற சிட்சையும், குரல் வளமும் அவளை வேகமாக முன்னுக்குக் கொண்டு வந்திருந்தன. தனித்தனி கச்சேரிகள் நிறையவே புக்காகிக் கொண்டு வந்தன.

    ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி கொண்டு வந்தாள். அவள் கச்சேரிக்கு கூட்டம் வந்தது. ஆனால் இன்றைக்கு மழையை முன்னிட்டு சற்று கூட்டம் குறைச்சலாக இருந்தது. அதனால் ஆங்காங்கு நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. இரண்டாம் வரிசையில் காலியாகக் கிடந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

    தீட்சதரின் வாதாபி கணபதி பஜேயை ஜம்மென்று ஹம்ஸத்வனியில் முடித்தாள் வர்ஷினி. கைதட்டல் பலத்தது. ஹரியும் அவள் குரலில் வசப்பட்டான். நவரச கன்னடா ராகம் சபையைக் கட்டிப் போட்டது. மோகனம் வசப்படுத்தியது. இப்படி ஒரு குரல் ஜாலம் இருக்கமுடியுமா? வைத்த விழியை எடுக்காமல் அவளையே பார்த்தான் ஹரி.

    அருண் கூறியது போல் அவள் குரலில் மட்டும் இல்லாமல் உருவத்திலும் குயில் தான். எண்ணத்தின் போக்கில் சற்று அயர்ந்து போனவன் 'ராராமா இன்டிதா' என்னும் அஸாவேரி ராக கீர்த்தனையில் கலைந்து நிமிர்ந்தான்.

    ஐயோ.... ஐயோ.... என்ன அருமையான கீர்த்தனை. தியாகைய்யர் பூஜை செய்த ஸ்ரீராம விக்கிரகத்தை அவர் அண்ணா தாக்கிக் கொண்டு போய் காவேரியில் போட்டு விடுகிறார். பூஜா விக்கிரகத்தைக் காணாமல் தியாகைய்யர் உண்ணாமல் உறங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவரை ராமன் தவிக்க விடுவானா? இரவில் கனவில் வந்து, தான் காவிரியில் கிடக்கும் இடத்தைக் காட்டுகிறான்.

    அவ்வளவுதான்! தியாகைய்யா ஓடிப் போய் ராமரைத் தேடி எடுத்து வருகிறார். 'ராராமா இண்டிதா' - என் வீட்டுக்கு வா ராமா என்று பாடியும் ஆடியும் எடுத்துக் கொண்டு வருகிறார். இது ராமனின் கருணைக்கு எடுத்துக்காட்டல்லவா? அஸாவேரியில் உருகினாள் வர்ஷினி.

    'காவா வா கந்தா வா - என்னை காவா வேலவா' என்று வராளியில் பாபநாச சிவனின் பாடலில் உருக வைத்தாள்.

    கண்ணனைத் தாயாகப் பெற 'என்ன தவம் செய்தனை' என்று யசோதையை காபி ராகத்தில் கேட்டாள்.

    அமிர்கல்யாணியில் ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய' என்று ஆண்டாளாக பாடி ஆயர்பாடி சிறுமியை எழுப்பினாள்.

    'குறையொன்றுமில்லை' என்று பாடி திருமலையானை தரிசனம் செய்ய வைத்தாள்.

    'குயிலே, உனக்கனந்த கோடி நமஸ்காரம் - குமரன் வரக் கூவுவாய்' என்று கரகரப்ரியா ராகத்தில் தூது விட்டாள்.

    ஏறுமயிலேறி விளையாடும் முருகனின் ஆறுமுகத் தத்துவத்தை திருப்புகழில் பாடினாள்.

    தேவாரம், அபிராமி அந்தாதி, பிள்ளைத் தமிழ்ப்பிரபந்தம் என்று மூச்சு விடாமல் பாடி முடித்து மங்களம் பாடினாள்.

    சபையினர் துளி அசைய வேண்டுமே? பாடி முடிந்த பின்னரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள். பக்கவாத்தியக்காரர்கள் நிறுத்தி விட்டுக் கிளம்பியதும்தான் சபை ஆரவாரப்பட்டது.

    ஹரிக்கு அவளிடம் இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று தோன்றியது. இந்த அறிமுகம் தேவைதானா என்று அவன் யோசிக்கவில்லை.

    எழுந்து நின்றவளிடம் போய் நின்றான். இரண்டொருவர் பேச முற்பட்டு வந்தார்கள். அதற்குள் ஹரி போய் நின்றான்

    வணக்கம்.... என் பெயர் ஹரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன், தான் வேலை செய்யும் தனியார் நிறுவனம் பற்றிக் கூறினான்.

    அவ்வளவு அருகில் இருந்து பார்க்கும் பொழுதுதான் அவளுடைய அழகின்மை தெரிந்த்து. ஆனால் இவளிடம் அந்தக் கலாவாணி எப்படித் தன்னருளைப் பொழிந்து மற்றவர்களை வசப்படுத்தி வைத்திருக்கிறாள் என்ற வியப்புத் தோன்றியது.

    உங்க பாட்டு அப்படியே மெய்மறக்க வச்சிருச்சு

    மிக்க நன்றி என்றாள் நாணம் கலந்த புன்னகையுடன்.

    பற்கள் வரிசையாக ஒளிர்ந்ததை கவனித்துக் கொண்டான்.

    வர்ஷும்மா, நான் கிளம்பறேன். மழை வரும் போல இருக்கும்மா..... நீயும் கிளம்பு... இன்னிக்கு அப்பாவும் வரல்ல. உங்கண்ணன் ரவியும் வரல்ல என்றபடி வயதான மிருதங்க வித்வான் மிருதங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

    ஒரு நிமிஷம் என்றதும் அவர் நின்றார். வர்ஷினி ஏதோ கண் ஜாடையில் கேட்க அவரும் ஜாடையில் பதில் சொல்லிக் கொண்டு போனார்.

    நான் வரட்டுமா? என்று ஹரியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் வர்ஷினி.

    2

    ஹரி சபாவை விட்டு வெளியே வந்த பொழுது மனசு சொல்லத் தெரியாத உணர்வில் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. எத்தனையோ பிரபல பாடகர்களின் பாடல்களைக் கேட்டதுண்டு. அவற்றை எல்லாம் விஞ்சிய ஒரு சந்தோஷத்தை மனசு அனுபவித்ததை ஸ்பெஷலாக உணர்ந்தான்.

    சுகமான ராகம், சுவையான பாடல் நோய் தீர்க்கும் மருந்தல்லவோ?

    சலிப்பு என்னும் நோய் தீர்க்கும் மருந்தல்லவா? சலியாத மனம் கூட ஆரோக்கியமான உணர்வுதான். அதற்கு இசைதான் மருந்தோ? அடிக்கடி வர்ஷினியின் கச்சேரிக்கு வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

    என்ன ஹரி கச்சேரிக்கா? என்று கேட்டவரை நிமிர்ந்து பார்த்தான்.

    அவன் தந்தை காலத்திலிருந்தே அறிமுகமான பெரியவர் அவர். இன்னொருவராக இருந்தால், இல்லையோ டிபன் சாப்பிட வந்தேன் என்று மூக்கை உடைத்திருப்பான்.

    நிறையப் பேர்களுக்கு இப்படிப்பட்ட அசட்டுத்தனம் இருந்திருக்கிறது. கோவிலில் இருந்து கொண்டே என்ன கோவிலுக்கா? என்பார்கள். சினிமாக் கொட்டகையில் இருந்து கொண்டே என்ன சினிமாவுக்கா? என்பார்கள்.

    இவையெல்லாம் தவிர்க்க முடியாத, சொல்லிப் புரிய வைக்க முடியாத நிர்ப்பந்தம் என்று உணர்ந்தவன் ஹரி.

    அம்மா, எப்படி இருக்கா?

    நல்லாவே இருக்காங்க

    பார்த்து ரொம்ப நாளாச்சு

    இப்படி வீட்டுப் பக்கம் ஒரு நாள் வரது என்று கூறியபடி வண்டியைக் கிளப்பினான்.

    "மழை புசுபுசுனு அப்பப்ப தூறல்

    Enjoying the preview?
    Page 1 of 1