Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kaadhalai Meettum Isai Neeye!
En Kaadhalai Meettum Isai Neeye!
En Kaadhalai Meettum Isai Neeye!
Ebook234 pages2 hours

En Kaadhalai Meettum Isai Neeye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“விக்ரமும் அவன் நண்பன் மனோவும் சேர்ந்து கொண்டு, “வாத்தி கம்மிங்” என்ற பாட்டிற்கு தலை தெறிக்க ஆடிக் கொண்டிருக்க,

கோபமாக விக்ரமின் அறைக்குள் நுழைந்த தேன்மொழி, ஹே! என்ன இப்படி குடிச்சிட்டு ஆடிட்டு இருக்கீங்க? உங்க அப்பா கீழே தானே தூங்குறாங்க? அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்காது? என்று கத்திக் கேட்டாள் தேன்மொழி. ஏனென்றால் பாட்டுச் சத்தம் தான் காதை பிளக்கிறதே!

தேன்மொழி பேசுவதை இன்று தான் கவனிக்கின்றான் விக்ரம். அவள் பேசும் கொஞ்சும் தமிழ் தேனாக இருந்தாலும், அவள் எப்படி தன் அறைக்கே வந்து தன்னை கேள்வி கேட்கலாம் என அவனுக்கு கோபம் தலைக்கு ஏற, சட்டென ஆடுவதை நிறுத்திய விக்ரம்,

ஹோ மேடம் நீங்களா? வாங்க வாங்க! என்ன, உங்களுக்கு பேச கூட வருமா? நான் என்னவோ உங்களை ஊமைனுல நினைச்சேன்! என்று அவளைப் பார்த்து நக்கலடித்தான்.

ஏனோ விக்ரமிற்கு தேன்மொழியைக் கண்டாலே பிடிக்கவில்லை. ராகவன் இவளை கல்யாணம் செய்ய சொல்லி கேட்டதிலிருந்து இவளை கண்டாலே விக்ரமிற்கு ஏதோ செய்கிறது.

தேன்மொழி ஏதும் பதில் பேசாமல் விக்ரமை முறைத்துக் கொண்டே நிற்க,

சரி, இதுக்கு பதில் சொல்லு? என்னோட அப்பா உன்கிட்ட வந்து கம்ப்ளேன்ட் செஞ்சாங்களா? ரொம்ப சத்தமா இருக்குனு? என்று விக்ரமும் அவளை முறைக்க,

நீ ஏன்மா தேவை இல்லாம என் விஷயத்தில் மூக்கை நுழைக்கிற? என்று விக்ரமும் கத்த தொடங்கி விட்டான்.

ஹே! எதுக்கு இப்போ கத்துற? உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லையா? என்று தேன்மொழியும் எகிற,

டேய் மனோ! இங்கே பாருடா கதையை?? எனக்கு மேனர்ஸ் இல்லையாம்!! என்றவன் தேன்மொழியின் அருகில் இன்னும் நெருங்கி நின்று,

ஹலோ! யாருக்கு மேனர்ஸ் இல்ல? உனக்கா இல்லை எனக்கா? எப்போ பார்த்தாலும் ரூம்ல ஒருத்தனோட ஆட்டம் போட்டுட்டு இருக்க? இப்போ பெரிய இவளாட்டம் என்னை கேள்வி கேட்க வந்துட்ட? என்றான் விக்ரம் உக்கிரமாய்!

ஹே! கம் அகென், கம் அகென்! என்ன பேசுற நீ? நான் ஆட்டம் போடுறதை நீ வந்து பார்த்தியா? என்றாள் கண்களில் கனலுடன்!!

அன்னைக்கும் என்கிட்ட எத்தனை பாய் ஃப்ரெண்ட்ஸ்னு கேட்ட? இன்னைக்கும் இப்படி அநாகரீகமா பேசுற? ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசணும்னு கூட உனக்கு தெரியலை!

சை! உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு! என்னை சொல்லணும், என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள், அங்கிருந்த ரிமோட்டை எடுத்து பாட்டை பட்டென நிறுத்தி விட்டு, வேகமாக வெளியே சென்று விட்டாள்.

மனோ, நீ பார்த்தல? பார்த்தல? எப்படி பேசுறாள்னு? ஒன்னு வாயை திறந்து பேசவே மாட்டா இல்ல இப்படி பேசிட்டு இருக்கும் போதே போயிடுறாடா! இவளுக்கு என்னைப் பத்தி முழுசா தெரியலை!! நான் யாருனு இவளுக்கு காட்டுறேன் பாரு!! என்று பேசிக் கொண்டே மனோவின் தோளிலே சரிந்தான் விக்ரம்.

நீ என்னத்தடா காட்டுற விக்கி? அவ தான் உன்னை நல்லா கட்டம் கட்டி காட்டுறா!! என்று நண்பனை கலாய்த்தபடி மனோவும் சோஃபாவில் சரிந்தான்..”

பகலினில் வேலை இரவினில் ஆட்டம் என வாழ்க்கையை ஆர்ப்பாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகன் விக்ரமிற்கு, ஒரு இக்கட்டான சூழலில், தேன்மொழியை திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகும் பொழுது என்ன செய்வான்? அதுவும் அவனுக்கு திருமணம் என்ற வார்த்தையே வேப்பங்காயாய் கசக்கும் பொழுது?

தேன்மொழியை பத்தோடு பதினொன்றாக நினைத்து தவிர்த்து விடுவானா இல்லை அவளை திருமணம் செய்து தான் பார்ப்போமே என்று அவனுக்கு தோன்றுமோ??

பிறகு தேன்மொழியின் நிலை!! தாய், தந்தை, சுற்றம் மற்றும் நட்பு என அனைத்தையும் பறிகொடுத்து விட்டு தன்னந்தனியாக இந்தியா வந்தவளுக்கு, வாழ்க்கை என்ன செய்ய காத்திருக்கிறதோ? புது இடத்தையும் சூழலையும் ஏற்றுக் கொண்டாளா? வாழ்க்கை அவளுக்கு முள்ளா மலரா?

இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள கதையை படியுங்கள்!!

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580142107371
En Kaadhalai Meettum Isai Neeye!

Read more from Silambarasi Rakesh

Related to En Kaadhalai Meettum Isai Neeye!

Related ebooks

Reviews for En Kaadhalai Meettum Isai Neeye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  Book preview

  En Kaadhalai Meettum Isai Neeye! - Silambarasi Rakesh

  https://www.pustaka.co.in

  என் காதலை மீட்டும் இசை நீயே!

  En Kaadhalai Meettum Isai Neeye!

  Author:

  சிலம்பரசி ராக்கேஷ்

  Silambarasi Rakesh

  For more books

  https://www.pustaka.co.in/home/author/silambarasi-rakesh

  Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

  All other copyright © by Author.

  All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

  பொருளடக்கம்

  அத்தியாயம் 1

  அத்தியாயம் 2

  அத்தியாயம் 3

  அத்தியாயம் 4

  அத்தியாயம் 5

  அத்தியாயம் 6

  அத்தியாயம் 7

  அத்தியாயம் 8

  அத்தியாயம் 9

  அத்தியாயம் 10

  அத்தியாயம் 11

  அத்தியாயம் 12

  அத்தியாயம் 13

  அத்தியாயம் 14

  அத்தியாயம் 15

  அத்தியாயம் 1

  அந்த ஐந்து நட்சத்திர விடுதி இரவு பஃபேவிற்காக (buffet) மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு சைவ உணவுகளும், அசைவ உணவுகளும், ஸ்டார்ட்டர்ஸ் மற்றும் இனிப்பு வகைகளும் மிகவும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

  எல்லா வகைகளிலும் சற்று வித்தியாசமாக செய்யப்பட்டிருக்கும் உணவை மட்டும் கொஞ்சமாக எடுத்து ருசி பார்த்து திருப்தியுற்ற தலைமை மேலாளர், தனக்கு கீழ் வேலை செய்யும் சிப்பந்திகள் அனைவரும் விருந்தினர் வருகைக்காக தயாராக இருக்கிறார்களா என்று ஒரு முறை அனைவரையும் நோட்டம் விட்டு விட்டு, தனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்து ஆசுவாசமாக அமர்ந்தார்.

  வார இறுதி என்பதால், விருந்தினர் நடமாட்டம் சற்று கணிசமாகவே இருக்க, பார்க்கிங்கில் வண்டிகள் வந்த வண்ணமே இருந்தது.

  அந்த பளபளப்பான ஏழு மாடி விடுதியின் ஒவ்வொரு அசைவையும் தனது கூர்மையான விழிகளால் தனது அறையில் அமர்ந்தபடியே நேரடி சிசிடிவி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

  கிட்சனில் மட்டும் அதீத பரபரப்பாக இருக்க, அந்த காணொளியை மட்டும் பெரிது படுத்தி பார்த்தவன், அங்கே தலைமை சமையல்காரர் எதையோ ரசனையுடன் பொறித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டு விக்ரமின் இதழில் மெல்லிய புன்னகை.

  அனைத்து வேலைகளும் க்ரீஸ் தடவிய சக்கரம் போல் தங்கு தடை இன்றி சுழல, தனது சீட்டில் பின்னுக்கு சாய்ந்தவன், ஒவ்வொரு பிரிவும் அவனுக்கு அனுப்பிய தினசரி அறிக்கையை வேகமாக அலசினான்.

  பிறகு தனது செயலாளரிடம் திரும்பியவன், ரகு! ஆல்மோஸ்ட் எவ்ரித்திங் இஸ் ஓகே! இன்றைக்கு வெள்ளிக்கிழமைல? கொஞ்சம் கவனமா இருங்க. பப் (pub) பக்கத்தில் நம்ம பவுன்சர்ஸ்ஸை ஃபுல் நைட்டும் நிற்க சொல்லுங்க. ஏதாவது எமெர்ஜென்ஸி என்றால் மட்டும் எனக்கு ஃபோன் பண்ணுங்க ரகு! என்ற விக்ரமின் குரல் அவனின் தோற்றத்தை போல் சாந்தமாகத் தான் இருந்தது.

  டன் பாஸ்! நான் பார்த்துக்குறேன், என்ற ரகு, அங்கு மேஜையிலிருந்த கோப்புகள் அனைத்தையும் கவனமாக கையில் திரட்டிக் கொண்டு வெளியில் கிளம்ப,

  விக்ரமும் தனது சீட்டின் பின்னால் மாட்டியிருந்த பார்ட்டி ப்ளேசரை கையில் எடுத்துக் கொண்டு, விறுவிறுவென தன் விடுதியிலிருந்து வெளியேறி, காரில் ஏறினான்.

  இந்த வேலை பளு அவனுக்கு சற்று புதிது தான். இந்த இரண்டு வருடமாகத் தான் தன் தந்தையிடமிருந்து எந்த ஒரு உதவியோ ஆலோசனையோ எதுவும் பெறாமல் திறம்பட விருப்பதுடனேயே செய்கின்றான். ஆனால், என்ன செய்தும் அவன் மனம் திருப்தி அடைவேனா என்று முரண்டு பிடிக்க, அவனது சிந்தனைகள் எங்கோ பறக்க துடித்தது. ப்ச்.. என்று தலையை சிலுப்பியவன், ப்ளூடூத்தில் தனது நண்பன் மனோவிற்கு அழைத்தான்.

  டேய் மனோ! எங்கே இருக்க? ம்ம்ம்.. நானும் அங்கே தான் வந்திட்டு இருக்கேன். சரிடா போன வாரம் ஒரு பொண்ணு வந்தாளே? பேரு கூட மோனாவோ சோனாவோ? அவளையும் இன்னைக்கு பார்ட்டிக்கு வர சொல்லிடு மனோ! என்றான்.

  என்னடா மச்சான்! அவ பேரு கூட சரியா தெரியாம தான் போன வாரம் அவளோட அந்த ஆட்டம் போட்டியா? என்று வாயை பிளந்த மனோ, சரி சரி விடு, அந்த பொண்ணு சோனா, அவளே ஃபோன் செய்தா! இங்கே தான் வந்திட்டு இருக்காளாம்! நீயும் சீக்கிரம் வந்திடு, என்றான் சிரிப்புடன்.

  சரிடா.. சரிடா.. இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன், என்று விக்ரம் அழைப்பை துண்டிக்க, மறு நிமிடமே அவனது அலைபேசி அலறியது அவனது தந்தையிடமிருந்து!!

  விக்ரம் வியப்புடனே அவனது மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான். இந்த இரண்டு வருடமாக அவனுக்கும் அவன் தந்தைக்கும் இடையே பெரிதாக எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. அதுவும் இந்த ஆறு மாதமாக விக்ரமின் இரவு நேர ஆட்டத்தை எல்லாம் பார்த்து பார்த்து, அவனது தந்தை ராகவனுக்கு மனதே வெறுத்து விட்டது.

  இப்படி இருக்க, அவரே இப்போது விக்ரமை அழைக்கிறார் என்றால்? என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கையிலேயே, அவனது மொபைல் முழுவதுமாக ஒரு முறை அலறி நின்றது.

  அப்பாவிற்கு என்ன? என்று மனதில் சற்று பதறியவன், சட்டென அவன் தந்தைக்கு திரும்ப அழைத்தான்,

  அப்பா! என்னாச்சு? ஆர் யு ஓகே?

  தம்பி, நீ எங்கே இருக்க? நான் இப்போவே மலேசியா கிளம்பணும். ஏர்போர்ட் போயிட்டு இருக்கேன். இன்னும் டூ ஹவர்ஸ்ல ஃப்லைட். என்னோட ஃப்ரெண்ட் விநாயகம் இருக்கான்ல? அவனுக்கு ஆக்சிடென்ட்னு இப்போ தான் தகவல் வந்தது. நான் கிளம்புறேன். நீ இங்கே வேலை எல்லாம் பார்த்துக்கோப்பா, என்றார் ராகவன் படபடப்புடன்.

  அப்பா, கூல், கூல்! என்ன இப்படி டென்ஷனா பேசுறீங்க? நானும் உங்களோட வரவா? அங்கிள் ஃபேமிலி சேஃப் தானே?

  தெரியலைப்பா, அங்கே போய் தான் பார்க்கணும். நீயும் வந்திட்டா இங்கே வேலை எல்லாம் யார் பார்க்குறது? நீ இங்கே ரெண்டு ஹோட்டலையும் கவனமா பார்த்துக்கோ விக்ரம். நான் திரும்பி வர கொஞ்ச நாட்கள் ஆகலாம். டேக் கேர் தம்பி! என்று சொல்லி ஃபோனை வைத்தவர், தன் உயிர் நண்பனுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறிக் கொண்டே மலேசியா பயணித்தார் ராகவன்.

  ஹ்ம்ம்ம்.. அப்பா இந்த வயசுலேயும் அவர் ஃப்ரெண்டுக்காக எப்படி துடிக்கிறார்! என்று அவன் தந்தையை நினைத்து பெருமிதப்பட்டுக் கொண்டே அந்த இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வந்து சேர்ந்தான் விக்ரம்.

  விநாயகம் மலேசியாவில் உள்ள ஒரு அதி நவீன மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார். அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு. இன்னும் இரண்டு மணி நேரம் தான் அவருக்கு இந்த உலகமென்று மருத்துவர் கெடு விதித்து விட்டார்.

  கடந்த இருபது வருடங்களாக சந்தோஷத்தை மட்டுமே கண்டவர், இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் இறக்க போகிறவரால், அப்படி எதை தான் செய்து விட முடியும்?

  அருகில் சடலமாக கிடக்கும் அவர் மனைவியை நினைத்து அழுவதா? இல்லை மகளை மட்டும் இவ்வுலகில் நிராதரவாக விட்டு செல்லப் போகிறோமே என்று நினைத்து அழுவதா? ஆனால், அவர் செல்ல மகள் மட்டும் பிழைத்துக் கொண்டாளே! அதுவே அவருக்கு பெருத்த நிம்மதி.

  எவ்வளவு அழகாக ஆரம்பித்த அவர்களது பத்து நாட்கள் சுற்றுப் பயணம்? இறுதியில் இப்படி அகோரமாகவா முடிய வேண்டும்?

  விமானத்தில் மனைவி மகளுடன் ஆனந்தமாக பேச்சும் சிரிப்புமாக இருந்த பொழுது கூட நினைத்து பார்க்கவில்லையே! விமானம் தரை இறங்குகையில் இப்படி சுக்குநூறாவோமென்று?

  எல்லாம் சீராகத் தான் சென்று கொண்டிருந்தது. விமானம் தரை இறங்குகையில்.. விமானம், ஓடுபாதையை (runway) விட்டு விலகி அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்து, ஏதோ ஒரு பாறையில் மோதி கொடூரமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

  விமானத்தின் முன் பாகம் முழுவதுமாக நொறுங்கி இருக்க, சம்பவ இடத்திலேயே விமானி மற்றும் துணை விமானி இறந்து விட, முன் பக்கம் அமர்ந்திருந்த பயணிகளின் நிலைமையும் கவலைக்கிடமே!

  விமானம் நொறுங்கிய சத்தத்தோடு, பயணிகளின் ஓலமும் அந்த இடத்தையே நிரப்ப, பார்ப்பவர்களின் குலையே நடுங்கும் போல் இருந்தது அந்த சூழல்.

  விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு விமானத்தின் உடைந்த பாகங்களை எல்லாம் அகற்றி, ஆசனப்பட்டி போட்டப்பட்டிருந்த நிலையிலேயே, எசகு பிசகாக அடிப்பட்டு ரெத்தம் வழிய இருந்த பயணிகள் எல்லோரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  இதில், விநாயகத்தின் மகள் தேன்மொழி, கையில் சற்று ஆழமான எலும்பு முறிவுடன் உயிர் தப்பி இருக்க, அதிர்ச்சியில் மயக்கத்திலே இருந்தாள். ஆனால், அவரது மனைவி ரஞ்சி மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்து விட, விநாயகத்தின் நிலையோ இப்போது கொடூரம்!!

  ஆனால், இதை எதையும் நினைத்து அழக் கூட விநாயகத்திற்கு நேரம் இல்லையே!! வேகமாக அங்கிருந்த செவிலியை அழைத்து, தனது ஃபோனை தேடி எடுத்து வரச் சொன்னவர், தானாகவே மூடிக் கொள்ளும் இமைகளையும், உயிரை ஊடுருவும் தேகத்தின் வலியையும் தனக்குள் புதைத்துக் கொண்டு, தனது மகளுக்கும் தனது நண்பன் ராகவனுக்கும் சேர்த்து ஒரு காணொளியை பதிவு செய்து, செவிலியை கொண்டு அவர்களுக்கு அனுப்ப செய்தார்.

  அத்தோடு அவர் கடமை முடிந்து விட்டது போல! தன் அன்பு மகளின் நிலை இனி என்ன? என மனதில் மருகிக் கொண்டே தனது மூச்சை மெல்ல மெல்ல நிறுத்திக் கொண்டார் விநாயகம்.

  ------------------------------------------------------------------------------------

  சுமார் நான்கரை மணி நேர விமான பயணத்திற்கு பிறகு, நள்ளிரவு இரண்டரை மணி போல் (இந்திய நேரப்படி நடுச்சாமம் பனிரெண்டு இருக்கும்) மலேசியா வந்திறங்கினார் ராகவன்.

  விமானத்தில் கொடுத்தது இந்திய உணவுகள் தான் என்றாலும், அவர் வயிற்றுக்கு அவ்வளவாக அது ஒற்றுக் கொள்ளாமல் இருக்க, இதில் ஜெட் லாகும் (jet lag) சேர்ந்து கொண்டு, விநாயகத்திற்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தோடே இருந்தவருக்கு தலை இப்போது வின் வின் என தெறித்தது.

  விமான நிலையம் அருகிலிருந்த ப்ரீ பெய்ட் சர்விசில் டாக்ஸியை புக் செய்து மருத்துவமனை நோக்கி பயணித்த ராகவனின் மனமோ கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

  விநாயகமும் ரஞ்சியும் கல்லூரியிலிருந்தே காதலர்கள் தான். இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வர, வசதியான ரஞ்சியின் குடும்பம், நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த விநாயகத்தை ஏற்றுக் கொள்ள சிறிதும் சம்மதிக்கவில்லை.

  விநாயகத்தின் குடும்பமும் ஜாதியை மட்டுமே பிடித்துக் கொண்டு, மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருக்க, இருவரும் அவசரப்படாமல் பெற்றவர்களின் சம்மதத்திற்காக பொறுமையாகவே மூன்று வருடங்கள் காத்திருக்கத் தான் செய்தனர்.

  ஆனால் ரஞ்சியின் குடும்பம், ரஞ்சிக்கு சட்டென ரகசிய திருமணம் செய்ய திட்டமிட, இவர்கள் காத்திருப்புக்கு எந்த மதிப்பும் இல்லை என்றான பின், இருவரும் நண்பர்களின் உதவியோடு பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

  அச்சமயம் விநாயகத்திற்கு அவரது நண்பன் ராகவனின் மூலம் மலேசியாவிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைக்க, சொந்தத்திற்கும் பந்தத்திற்கும் பெரிதாக முழுக்கு போட்டு விட்டு, இருவரும் வெளிநாட்டிற்கு கிளம்பியவர்கள் தான்!

  அதன் பின், மூன்று வருடங்கள் கழித்து ரஞ்சி நிறை மாதமாக இருக்கும் பொழுது தாய் நாட்டிற்கு திரும்பியவர்களை, அவர்களது பெற்றோர்கள் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கவுமில்லை, நிறை மாதமாக இருந்த ரஞ்சியிடம் எவரும் கரிசனமும் காட்டவில்லை.

  அப்போது இவர்களுக்கு ஆதரவாக இருந்தது ராகவனும் அவர் மனைவி அன்பரசியும் தான். பிள்ளைத்தாச்சி பெண்ணிற்கு வாயிற்கு ருசியாக சமைத்து போட்டு, ரஞ்சியை அன்பரசி பாசமாகவே கவனித்துக் கொண்டார்.

  நான்கு வயது விக்ரமும், ஆன்ட்டி வயிற்றில் பாப்பா இருக்கா? என்று ரஞ்சியின் வயிற்றை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

  ஒரு வாரம் ராகவனின் வீட்டில் தங்கி விட்டு, மலேசியா கிளம்பி விட்டனர் விநாயகமும் ரஞ்சியும். அதன் பின், விநாயகத்திற்கும் ராகவனுக்கும் அவரவர் வேலைகள் சுனாமியாய் சுருட்டிக் கொள்ள, நண்பர்களின் சந்திப்பு மிகவும் அரிதாகி விட்டது. எப்போதாவது அலைபேசியில் பேசுவதோடு சரி.

  இப்படி இருக்க, இந்த இக்கட்டான நிலையிலும் நண்பன் தன்னையே நாடி இருக்கிறான் என்றால்? அவருக்கு விநாயகத்தின் நிலையை எண்ணி கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

  கார் நின்றதையும் கவனியாமல், தன் எண்ண போக்கிலேயே உழன்று கொண்டிருந்த ராகவனிடம், எக்ஸ்கியூஸ் மீ சார், யுவர் டெஸ்டினேஷன் இஸ் அரைவ்டு! என்று அந்த கார் டிரைவர் சொல்ல,

  ஓ! தேங்க்ஸ்! என்று விட்டு, வேகமாக வண்டியிலிருந்து இறங்கிய ராகவன் தனது வயதையும் பொருட்படுத்தாமல் ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் நுழைந்து, விநாயகத்தை பற்றி விசாரித்தார்.

  ஆனால், அவர் தலையில் இடி இறங்கியது போல், விநாயகம் ரஞ்சியின் பிரேதத்தை தான் கொடுத்தனர். தேன்மொழி இன்னும் மயக்கத்தில் இருந்தாள். அப்படியே தொப்பென்று அங்கிருந்த நாற்காலியில் விழுந்தவரின் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.

  டேய் விநாயகம்! அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்? என்னால் நம்ப முடியலையேடா!! உன்னை இப்படி பார்க்கவா நான் ஓடி வந்தேன்? உன் பொண்ணு கண்ணு முழிச்சு அப்பா எங்கேன்னு கேட்பாளேடா? நான் என்னடா பதில் சொல்றது விநாயகம்? என்று மனதில் புலம்பித் தவித்தவருக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்படியே பிரம்மை பிடித்தார் போல் அமர்ந்திருந்த ராகவனுக்கு, இரத்தக் கொதிப்பு அதிகமாகி, மயக்கம் வரும் போல் இருந்தது.

  அதற்குள் செவிலி, தேன்மொழி விழித்து விட்டாள் என்று கூற, ராகவன் அடித்து பிடித்துக் கொண்டு, தேன்மொழி இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

  தேன்மொழி அங்கிருந்த செவிலியின் கையை பிடித்துக் கொண்டு, வாட் ஹேஸ் ஹேப்பென்ட் டு மை பேரன்ஸ்? ஆர் தே சேஃப்? ப்ளீஸ் டெல் மீ! வாட் ஹேப்பென்ட்? என்று கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, அவளது கையில் பெரிதாக போடப்பட்டிருந்த மாவு கட்டையும் பொருட்படுத்தாமல், செவிலியின் கையே பிய்ந்து வந்து விடும் அளவிற்கு, அவரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தாள்.

  சட்டென தேன்மொழியின் அருகில் சென்ற ராகவன், தேனும்மா! தேனு! டென்ஷன் ஆகாதேடா தங்கம்! இங்கே பாரும்மா, அங்கிளை பாருடா! என்று ராகவன் தேன்மொழியின் தோளை பற்றி தன் பக்கம் திருப்ப,

  திடீரென்று யாரோ தமிழில் பேச, தேன்மொழிக்கு ஏதும் விளங்கவில்லை. அவர்கள் வீட்டில் மட்டும் தான் தமிழில் பேசுவது. இப்போது யார் பேசுவது என்று புரியாமல் ராகவனையே பார்த்தாள். அவளுக்கு இருந்த அதிர்ச்சியில் ராகவனைக் கூட அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை! மிரட்சியுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  தேன்மொழிக்கு தன்னை யாரென்று கூட தெரியவில்லையே!! ராகவனுக்கு அவளின் நிலையை கண்டு மிகவும் பரிதாபமாக இருக்க,

  தேனும்மா! நான் ராகவன். உன் அப்பாவுடைய ஃப்ரெண்ட். உனக்கு என்னை தெரியும் தானே? என்றார் அவரும் பரிதவிப்புடன்!

  Enjoying the preview?
  Page 1 of 1