Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விண்வெளிப் பயணங்களின் வரலாறு
விண்வெளிப் பயணங்களின் வரலாறு
விண்வெளிப் பயணங்களின் வரலாறு
Ebook246 pages1 hour

விண்வெளிப் பயணங்களின் வரலாறு

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விண்வெளிக்கு முதன் முதலில் போன உயிரினம் எது தெரியுமா? நிலவுக்கு   பயணித்த பிற உயிரினங்கள் எவை எவை தெரியுமா?  நிலவில்  அமெரிக்கா நட்ட   கொடிகளின் தற்போதைய நிலை எவ்வாறு இருக்கிறது தெரியுமா?

சோவியத் யூனியன் உடைந்த போது விண்வெளியில் தவிக்க விடப்பட்ட வீரரின் கதை தெரியுமா?
மிகவும் சூடான வெள்ளி கிரகத்தில் தரையிறங்கிய விண்கலம் எது தெரியுமா?


இது போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதில் எழுதப்பட்டுள்ளது "விண்வெளிப் பயணங்களின் வரலாறு" என்னும் எமது நூலில்.  இந்நூலின் வாயிலாகப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் விதமாகவும், அனைவருக்கும் விண்வெளி ஆர்வம் ஊட்டும் விதமாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateJun 11, 2023
ISBN9798223976851
விண்வெளிப் பயணங்களின் வரலாறு

Related to விண்வெளிப் பயணங்களின் வரலாறு

Related ebooks

Reviews for விண்வெளிப் பயணங்களின் வரலாறு

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விண்வெளிப் பயணங்களின் வரலாறு - Natarajan Shriethar

    விண்வெளிப் பயணங்களின் வரலாறு

    நடராஜன் ஸ்ரீதர்

    நாகேஸ்வரன் ராஜேந்திரன்

    PhyFron வெளியீடு

    பொருளடக்கம்

    ––––––––

    முன்னுரை

    எம்முரை

    விண்வெளி நோக்கி

    ராக்கெட் வரலாறு

    அமெரிக்க விண்வெளிப் பயணங்கள்

    நிலவை நோக்கிப் பயனீர் விண்கலம்

    ஆபரேஷன் பேப்பர் கிளிப்

    வெர்னர் வான் பிரவுன்

    ரஷ்யாவும் விண்வெளிப் பயணமும்

    ரஷ்யாவின் விண்வெளி மைல்கற்களில் சில :

    செர்கெய்  கொரோலெவ்

    சில அடிப்படைத் தகவல்கள்

    விடுபடு திசைவேகம்

    விண்வெளி நடை (ஸ்பேஸ்வாக்)

    கர்மன் கோடு

    கடினத் தரையிறக்கல்

    மென் தரையிறக்கல்

    கோல்டன் ரெகார்டு

    நிலவுப்பயணங்கள்

    லூனா 1 விண்வெளித் திட்டம் :

    அமெரிக்க நிலவுத் திட்டங்கள்

    அப்பல்லோ மிஷன்கள்

    அப்பல்லோ 7

    அப்பல்லோ 8

    அப்பல்லோ 9

    அப்பல்லோ 10

    அப்பல்லோ 11

    அப்பல்லோ  குழுவுக்கு சுங்கச்  சோதனை

    அப்பல்லோ 13 - நிலவில் தரையிறங்காத நிலவுப்பயணம்

    அப்பல்லோ 14

    அப்பல்லோ 15

    அப்பல்லோ 16

    அப்பல்லோ 17

    நிலவுப்பயணங்கள் - சில முக்கியத்துளிகள்

    நிலவும் கொடிகளும்

    ராக்கெட் பாகங்கள்

    கட்டமைப்பு அமைப்பு

    பேலோட் (payload) அமைப்பு

    வழிகாட்டுதல் அமைப்பு

    உந்துவிசை அமைப்பு

    விண்ணுக்குச் சென்ற மனிதர்கள்

    விண்வெளி நிலையம்

    சல்யுட் விண்வெளி நிலையம்

    ஸ்கைலேப் - 1973-1974

    மிர் விண்வெளி நிலையம் - 1986-2001

    விண்வெளியில் மீட்க ஆளில்லாமல்  தவித்த விண்வெளி வீரர்

    அப்போல்லோ சோயுஸ் இணைவுத் திட்டம்

    சில குறிப்புகள்

    சர்வதேச விண்வெளி நிலையம் - சில குறிப்புகள்

    செவ்வாயினை நோக்கி

    பிற கிரகங்களை நோக்கி

    வெள்ளிக் கிரகத்தினை  நோக்கி

    புதன் கிரகத்தினை  நோக்கி

    சூரியனை நோக்கி

    வியாழனை நோக்கி

    சனியை நோக்கி

    யுரேனஸின் ஆய்வு

    நெப்டியூனை நோக்கி

    புளூட்டோ

    வாயேஜர்

    பேல் ப்ளூ டாட்

    எதிர்காலத்தில்

    சில சோக நிகழ்வுகள்

    அப்பல்லோ தீவிபத்து

    சோயுஸ் 1 தரையிறக்கத்தில் சோகம்

    சோகமான சோயுஸ் 11

    மிர் விபத்து

    தண்ணீரால் சிக்கல்

    சேலஞ்சர் விபத்து

    கொலம்பியா விண்வெளி ஓடம் விபத்து

    முடிவுரை

    உசாத்துணைகள்

    ஆசிரியர்களைப் பற்றி

    முன்னுரை

    உங்கள் கையில் மொபைல் இருந்தால் அதை ஒரு நிமிடம் கீழே வையுங்கள். புத்தகம் இருந்தால் அதை ஒரு நிமிடம் மூடி யோசியுங்கள். மொபைல், புத்தகங்கள், கிரிக்கெட், டிவி என்று ஒரு பொழுதுபோக்கும் இல்லாத காலத்தில், இரவில், மனிதனின் ஒரு பொழுதுபோக்காக வானத்தைப் பார்ப்பதாகவே இருந்திருக்கும். அந்த வானத்தில் தெரியும் ஒளி விளக்குகள் என்ன என்று அவன் யோசித்திருக்கக் கூடும். சூரியன் சுட்டெரிக்கும் என்று அவன் உணர்ந்திருக்கக் கூடும். நிலவிற்கு நாம் செல்ல முடியுமா என்று கூட அவன் யோசித்திருக்கலாம். அன்று தொட்டே, மனிதனின் எண்ணங்கள் விரிந்திருந்தாலும், அறிவியலோ, தொழில் நுட்பமோ வளர்ந்திருக்கவில்லை. ஆனால், இருபதாம் நூற்றாண்டிலும், அதற்கு முந்தைய சில நூற்றாண்டுகளிலும் அறிவியல் கண்ட வளர்ச்சி, மனிதனை நிலவுக்குச் செல்ல முடியும் என்று நம்ப வைத்தது. காலடி எடுத்து நிலவில் நடக்க வைத்தும் காட்டியது. விண்வெளிப்பயணங்கள் எனும் இந்த நூலில், நூலாசிரியர் முனைவர் திரு. நடராஜன்,மற்றும் முனைவர் நாகேஸ்வரன் இத்தகைய சாதனைகள் பலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளனர். 

    விண்வெளிப் பயணத்துக்கு அதிவேகத்தில் பயணிக்கும் ராக்கெட்டுகள் தேவை என்பதால், ராக்கெட்களின் வரலாற்றில் புத்தகத்தைத் தொடங்குகிறார் ஆசிரியர். பிறகு, நிலவில் காலடி எடுத்து சாதனை படைத்த அமெரிக்காவின் விண்வெளிப்பயணங்கள், அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்த ரஷ்யாவின் விண்வெளிப்பயணங்கள்  போன்றவற்றை விவரமாக வழங்குகிறார். விண்ணுக்குச் செல்லும் அறிவியல், அதன் பின் இருந்த மேதைகள், நிலவுப் பயணங்கள், விண்வெளி நடை, விண்வெளி நிலையம் என்று நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் பல விஷயங்களையும் தெளிவாகப் பேசுகிறார் ஆசிரியர். மனிதன் தோல்வியில் இருந்தே பாடம் கற்றுக்கொள்கிறான். தோல்விகள் நம்மை ஒரு படி மேலே உயர்த்துகின்றன என்பதால், விண்வெளிப்பயணங்களில் ஏற்பட்ட சில தோல்விகள், விபத்துகள் பற்றியும் பேசுகிறார் ஆசிரியர். 

    இந்த புத்தகத்தில் பல்வேறு அரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வெள்ளி கிரகத்தின் தரைப்பகுதியில் இறங்கி ரஷ்ய விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படம், செவ்வாயின் நிலப்பரப்பின் மீதான புகைப்படம், நிலவில் தரையிறங்கிய ரோவரின் புகைப்படம், விபத்துக்குள்ளாகிய ரஷ்ய விண்கலத்தின் புகைப்படம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் புகைப்படம், பூமியை முதன் முதலில் விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படம், நிலவினை அதன் பின்பக்கத்தில் இருந்து முதன் முதலில் எடுத்த புகைப்படம், முதல் முதலில் பறக்க விடப்பட்ட ராக்கெட்டின் புகைப்படம் ஆகியவை தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இவை போன்ற பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்டு புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

    விண்வெளிப்பயணங்கள் பற்றிய பல விபரங்களை, எளிய எழில் மிகு தமிழில் அழகாகத் தொகுத்துத் தந்துள்ளனர் நூலாசிரியர் முனைவர் திரு. நடராஜன் மற்றும் முனைவர் நாகேஸ்வரன். பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கும், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்நூல் சரியான வழித்துணையாக இருக்கும். இந்நூலைப் படித்துப் பலரும் பயன்பெறுவர் என்று உறுதியாக நம்புகிறேன். 

    பிரமநாயகம் (ப்ரேம்)

    Associate Professor,

    Division of Physics & Applied Physics

    21, Nanyang Link, SPMS-PAP-05-05,

    Singapore 637371

    எம்முரை

    விண்வெளிப் பயணங்கள் என்னும் இப்புத்தகமானது விண்வெளிக்குச் செல்ல மனிதர்கள்  எடுத்த முயற்சிகளையும், அதைத் தொடர்ந்த பல்வேறு விண்வெளிப் பயணங்களையும் பற்றி  விளக்கியுள்ளது.

    மேலும் பிற கிரகங்களுக்குச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சிகளும், அதன் திட்டமிடுதல்களும் இந்த புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இப்புத்தகம்  பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நூலில் முழுவதும் SI அலகுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. விண்வெளித் தொழில்நுட்பங்கள் பற்றித்  தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்களுக்கு  இது தொடக்கப் புத்தகமாக அமையலாம்.

    குழந்தைகளுக்கு விண்வெளி பற்றிய ஆர்வம் புகட்டுவதற்கு தமிழில் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். நிலவுப் பயணங்களைப் பற்றி பல்வேறு கேள்விகள் நம்மிடையே உள்ளன. அவற்றிற்குப் பதில் அளிக்கும் வண்ணமாகவும் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது..

    இந்த நூல் தமிழில் அறிவியல் ஆய்வுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வரும், ஃபைப்ரோன்(PhyFron) குழுமத்தின் வெளியீடாக வெளிவருவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

    நடராஜன் மற்றும் நாகேஸ்வரன் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் வெளிவரும் இரண்டாவது நூல் இது ஆகும். (எமது முதல் நூல் காலப் பயணமும் கருந்துளைகளும் முன்னர் வெளியாகியுள்ளது.)

    இந்நூலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் பிரேம்  அவர்களுக்கு  எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த நூல் வெளிப்படுவதற்கு காரணமாக இருந்த ஃபைஃப்ரோன் (PhyFron) குழுவிற்கு எமது  நன்றிகளை நீட்டிக்கிறோம்.

    இந்த நூல் வெளிவருவதற்கு  பல்வேறு கருத்துகளை அளித்த  ஹிலால் ஆலம்,  பார்த்திபன், தென்னமலை, ராகவ், விவேக், ராமன், முகுந்தன், அருண், அரவிந்த்,  ஹேமப்ரியா, பரத், ஜாபர், சூர்யா, ஆனந்தி, சித்தார்த், ராஜ்குமார், வைரம் சார், அயலான் மற்றும் ஏனைய ஃபைஃப்ரோன் குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

    எப்போதும் எனது ஆய்வுகளுக்கு நிதி உதவி அளித்து வரும் ஸ்ரீதர் பாத்திரக்கடை,(தேவகோட்டை ) நிறுவனத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ––––––––

    நன்றிகளுடன்

    முனைவர். நடராஜன் ஸ்ரீதர்

    ஆற்றல் அறிவியல் துறை

    அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி

    & க்யூபிடர் ஆய்வகம்

    natarajanarticles@gmail.com

    ––––––––

    முனைவர் நாகேஸ்வரன் ராஜேந்திரன்

    குவாண்டம் ஈர்ப்பியல் ஆய்வாளர்

    இங்கிலாந்து

    & க்யூபிடர் ஆய்வகம்

    eswar.quanta@gmail.com

    விண்வெளி நோக்கி

    மனிதர்களுக்கு வானம் என்பது என்பது எப்போதும் புதிர்களை அள்ளித் தரும் விஷயமாகவும், மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் இருந்துள்ளது. மனித வரலாற்றில் வானத்தைப் பார்த்துப் பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. கடற்பயணங்கள் கணிக்கப்பட்டுள்ளன. வானத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களை வரைபடமாகக் கொண்டு பூமியில் ஏற்படும்  பருவநிலை மாறுபாடுகள் ஆகியவை கூட கணிக்கப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சி அனைத்துத் துறைகளையும் புதிய ஒரு தளத்திற்கு நகர்த்தியது. அவற்றில் முக்கியமாக வேகமான என்ஜின்கள், எரிபொருட்கள் ஆகியவற்றின் பயன்பாடு, மின்சாரம், மின்னணுக்கருவிகளின் அறிமுகம் ஆகியவை மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சூழலைப் பெரிதும் முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்தன. இதன் மூலம் வேகமாய்ச் செல்லும் வாகனங்கள், வானூர்திகள் மற்றும் பிற தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டன.  கணினியின் அறிமுகம் மனிதர்கள் செயற்கரிய செயலை செய்வதற்கு ஏதுவானதாக இருந்தது. அங்கிருந்து செயலுக்கு வர ஆரம்பித்தது  மனிதர்கள் விண்வெளிக்குச் செல்லலாம் என்பதான முயற்சி. பல்வேறு காலங்களில் விண்வெளிக்குப் போவது குறித்த பல புனைக் கதைகள் எழுதப்பட்டாலும் 19 ஆம் நூற்றாண்டில் இவை அறிவியலாக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் அவை சாதனையாக்கப்பட்டது. இவற்றைப் பற்றியெல்லாம் மிக விரிவாகவும் மற்றும் சுவாரசியமாகவும் இப்புத்தகத்தில் படிக்கலாம். வாருங்கள்.

    ராக்கெட் வரலாறு

    விண்வெளிப் பயணங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் ராக்கெட்டுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

    ––––––––

    ராக்கெட்டுகள் நீண்ட கால வரலாறு கொண்டவை. ராக்கெட்டுகள் மனித இனத்தோடு பல நூறு ஆண்டு காலமாகத் தொடர்பில் இருந்துள்ளன. பத்தாம் நூற்றாண்டில் சீனாவில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி மேலே ஏவக்கூடிய அளவிலான ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    விண்வெளியில் ஏவப்படும் ராக்கெட்டுகளைப் பற்றிப் பேசுகையில், கடந்த நூற்றாண்டில் ராக்கெட்டுகளின் புரட்சிக்கு வித்திட்டவர் கோடார்டு என்றே சொல்லலாம். 1914 ஆம் ஆண்டு கோடார்டு அமெரிக்காவில் பல  நிலைகள் கொண்ட, திரவத்தால் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகளைச் சோதனை செய்தார்.

    படம் :  கோடார்டு

    ––––––––

    முதன் முதலில் பூமியை இருந்து விண்ணுக்குச் சென்ற ராக்கெட் வி2(v2) ராக்கெட் ஆகும். இது MW 18014 என அழைக்கப்படுகிறது. ஜூன் மாதம் 20ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு இந்த வி2 ராக்கெட் விண்ணிற்கு ஏவப்பட்டது.

    ––––––––

    படம்: வி2 ராக்கெட். Credit: Bundesarchiv, Bild 141-1880 / CC-BY-SA 3.0

    இந்த ராக்கெட்

    Enjoying the preview?
    Page 1 of 1