Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayiram Aandugalil Aranganum Arangamum
Aayiram Aandugalil Aranganum Arangamum
Aayiram Aandugalil Aranganum Arangamum
Ebook84 pages26 minutes

Aayiram Aandugalil Aranganum Arangamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் திருவரங்கத் திருப்பதியில் சென்ற ஆயிரம் ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்று, சமூக, சமய நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பெற்றது. அத்துடன், வைணவத்தின் பாசறையாக அப்பதி விளங்கிய பான்மையும், பிற்காலத்தில் அம்மேன்மை நிலை சீர்குலைந்து பிற்போக்குக் கொள்கைகள் வேரூன்றிய தன்மையும், ஆங்கிலேயர் வருகையினால் நிகழ்ந்த மாற்றங்களும் விரித்துரைக்கப்படுகின்றன.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580160910693
Aayiram Aandugalil Aranganum Arangamum

Related to Aayiram Aandugalil Aranganum Arangamum

Related ebooks

Reviews for Aayiram Aandugalil Aranganum Arangamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayiram Aandugalil Aranganum Arangamum - Prof G. Rangarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆயிரம் ஆண்டுகளில் அரங்கனும் அரங்கமும்

    Aayiram Aandugalil Aranganum Arangamum

    Author:

    கோ. ரங்கராஜன்

    Prof G. Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/prof-g-rangarajan

    பொருளடக்கம்

    பகுதி 1

    பகுதி 2

    பகுதி 3

    பகுதி 4

    இந்நூலை என் அன்புத் துணைவி விசயலக்குமிக்கு உரிமையாக்குகிறேன்.

    பகுதி 1

    வரலாற்றில் திருவரங்கம்

    1.1 முன்னுரை

    திருவரங்கத்தின் மற்றச் சிறப்புக்களுடன் அதன் வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் சேர்த்தெண்ணப்பட வேண்டியவை. ‘அரங்கனும் அரங்கமும்’ பங்கு பெற்ற வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்து ஆய்வதே இப்பகுதியின் நோக்கமாகும்.

    1.2 சிலப்பதிகாரத்தில் திருவரங்கம்

    காவிரி, கொள்ளிடம் என்ற இரு ஆறுகளுக்கிடைப்பட்ட நிலப்பரப்பில் அரவணையில் அறிதுயில் புரியும் அரங்கனைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் காடுகாண்காதையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:

    "நீலமேக நெடும் பொற் குன்றத்துப்

    பால் விரிந்தகலாது படிந்ததுபோல

    ஆயிரம் விரித்தெழுதலையுடை யருந்திறற்

    பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த

    விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தித்

    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்…"

    இதிலிருந்து சிலப்பதிகார காலத்தில் திருவரங்கத்தில் அரங்கன் பள்ளி கொண்டிருந்தமை உறுதி செய்யப்படுகிறது.

    அறிதுயிலில் அரங்கன்

    1.3 திருவரங்கக் கோயிலில் கல்வெட்டுக்கள்

    திருவரங்கக் கோயிலின் வரலாற்றினை அறிய உறுதுணையாக இருப்பவை இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களே. முதற் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கி. பி. 924ம் வருடத்திய கல்வெட்டு திருவரங்கக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தொன்மையானது. கி.பி.924 லிருந்து கி. பி. 948 ஈறான கல்வெட்டுக்களிலிருந்து இக்கோயிலுக்கு நந்தாவிளக்கு, கற்பூரம், திரி, முதலியவற்றுக்காகவும் திருமஞ்சனத்திற்காகவும் அளிக்கப்பட்ட பொற்காசுகள, வெள்ளிக் குத்துவிளக்குத் தண்டு, பங்குனி உத்திரத் திருநாளில் அமுது படைக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட நிலக்கொடை ஆகியவை பற்றி அறிகிறோம். சுந்தர சோழன் என வழங்கப் பட்ட இரண்டாம் பராந்தக சோழன் (கி. பி. 956 – கி. பி. 973) அரங்கனின் பால் அன்பு பூண்ட தனது மந்திரி அன்பில் அநிருத்தப் பிரமராயருக்கு வழங்கிய நிலக்கொடை மற்றொரு கல்வெட்டில் கூறப்படுகிறது.

    1.4 இராசமகேந்திரனின்திருப்பணிகள்

    சுந்தர சோழன், உத்தம சோழன், இராசராசன் இவர்களுக்குப் பின்வந்த சோழகுலத் தோன்றல்களுக்குள் இராசமகேந்திரன் என்னும் இரண்டாம் இராசேந்திரனின்பட்ட்த்து இளவரசன் (கி. பி. 1052- கி. பி. 1064) திருவரங்கக் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான் என அறிகிறோம். இவன் பெயரிலேயே இக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்று வழங்கப்படுகிறது. பட்டத்து இளவரசனான இவன் கி. பி.1063 வரை வாழ்ந்தான். ஆயின் தந்தைக்கு முன்பாகவே மரித்ததால் இவன் அரியணை ஏறவில்லை.

    ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழனுலாவில்

    "பாடரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்

    ஆடரவப் பாயலமைத்தோனும்"

    எனக் கூறப்படுபவன் இவ்விராச மகேந்திரனே. இவன் தந்தை சாளுக்கியர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்தபோது இவன் சோழநாட்டில் அரசுப் பணிகளை மேற்கொண்டு பட்டத்தரசன் என்ற முறையில் நாட்டைச் சிறப்பாகப் பாதுகாத்தமை கலிங்கத்துப் பரணியிலும் கல்வெட்டுக்களில் இவனைப் புகழ்ந்து எழுதப்பட்ட ‘பிரசஸ்தி’களிலும் காணக் கிடைக்கின்றது. காவிரியில் வெள்ளம் வரும்போது திருவரங்கக் கோயிலில் நீர்க்கசிவு ஏற்பட்டதைத் தடுக்கும் வண்ணம் கோயிலுக்குத் தளம் அமைத்தான் இவன் என்றும் கோயில்ஒழுகு கூறுகிறது.

    1.5 இராமானுசர் வருகை

    இராமானுசர்

    வைணவப் பெரியாரான இராமானுசர் திருவரங்கம் வந்தடைந்தது இக்காலப் பகுதியில்தான். ஆளவந்தாரின் மறைவுக்குப் பின் அவரது அந்திய கால விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இராமானுசர் காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து சேர்ந்தார். அப்பொழுது.

    Enjoying the preview?
    Page 1 of 1