Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennal Mattume Mudiyum
Pennal Mattume Mudiyum
Pennal Mattume Mudiyum
Ebook136 pages52 minutes

Pennal Mattume Mudiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது பெண் குலத்திற்காக எழுதிய நாவல். மாதவி ஒரு நேர்மையான நர்ஸ் அவளின் நேர்மைக்கு பரிசாக அவளுக்கு கேன்சர் பிரிவின் முழுப்பொறுப்பு அவள் கையில் கொடுக்கப்படுகிறது. கணவனை இழந்து மன பிரச்சனைகளில் தவிக்கும் அக்காவை இவள் எப்படி கையாளுகிறாள். பணக்கார மாணவர்களிடம் சிக்கி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட தங்கையை எப்படி மாற்றப் போகிறாள்? அந்த மாணவர்களுக்கு இவளால் தண்டனை வாங்கி கொடுக்க முடிந்ததா? இவளுக்குப் பிடித்த நேர்மையோடும் உண்மையோடும் இறுதிவரை போராடுகிறாளா? அவள் தன்னம்பிக்கை வெற்றி பெறுகிறதா?

ஒரு பெண் சமூகத்தில் காலெடுத்து வைக்கும் போது அவளுக்கான எதிர்ப்புகள் நிறைய வரும். இன்னும் இந்த சமுதாயம் அவளை ஒரு உடல் ரீதியாகத்தான் பார்க்கிறது ஆனால் அவள் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருந்து தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கையுடன் எதிர்த்து நின்றால் வெற்றி நிச்சயம்.

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580101008380
Pennal Mattume Mudiyum

Read more from Ga Prabha

Related to Pennal Mattume Mudiyum

Related ebooks

Reviews for Pennal Mattume Mudiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennal Mattume Mudiyum - GA Prabha

    http://www.pustaka.co.in

    பெண்ணால் மட்டுமே முடியும்

    Pennal Mattume Mudiyum

    Author :

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல்

    அருளினாலொரு கன்னிகை யாகியே

    தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்.

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    மென்மையான குரல் அனைவரையும் உற்சாகப் படுத்தியது. மனம் மகிழ்ச்சியுற, முகம் முழுவதும் புன்னகையுடன் எழுந்து சுறுசுறுப்பானது அந்தப் பொது வார்டு.

    காலை வணக்கம் மாதவி- ஆளாளுக்குச் சொல்ல தலையசைத்து, புன்னகையுடன், ஒவ்வொரு கட்டிலையும் கடந்து சென்றாள் மாதவி. மெல்லிய தென்றலாய், நறுமணம் சுமந்த பூங்கொத்தாய், அனைவரது இதயத்தையும் மலரச் செய்தது அவளின் மலர்ந்த முகம்.

    கனிவைச் சுரக்கும் கண்கள், புன்னகை உறைந்த உதடு, இனிமையான குரலில் அன்பான விசாரிப்பு என்று அந்த வார்டு முழுவதையும் ஒரு நிமிஷத்தில் கட்டிப் போட்டது மாதவியின் வருகை.

    என்ன பாலம்மா, ராத்திரி மாத்திரை சாப்பிட மாட்டேன்னு பிடிவாதமாம்?

    கசக்குது கண்ணு.

    அதுசரி. ரெண்டு நாள் கசப்பா சாப்பிடுங்க. வாழ்நாள் முழுக்க இனிப்பா வாழலாம்.

    மாத்திரையை கடிச்சு திங்குது மாதவி.- சக நர்ஸ்.

    இருங்க, நாலஞ்சு மாத்திரை, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி தரச் சொல்றேன். பொரியல் மாதிரி சாப்பிடுங்க.

    போ கண்ணு- பாலம்மா என்ற கிழவி வெட்கப்பட்டது. மாதவி சிரித்தபடி அவளைக் கடந்து சென்றாள்.

    மாதவி சிஸ்டர் இவிடே வரு. எதிர்க் கட்டிலில் ஒரு வயதானவர்.

    எந்தா சேட்டனுக்கு என்ன வேணும்?

    நல்லா மணக்க, மணக்க ஒரு பிரியாணி.

    ஆ, எந்தா சேட்டனுக்கு இப்படி ஒரு வல்லிய ஆசை. திருப்பியும் பாத்ரூம்ல குடியிருக்க ஆசையோ?- மாதவி சிரித்தாள்.

    வயதானவர் முகத்தில் வெட்கம். ஒரு வாரமாக வயிற்றுப் போக்கு என்று அட்மிட் ஆகி, இப்போதுதான் சிறிது தேவலாம். அவரைக் கடந்து, பக்கத்து கட்டிலுக்கு வந்தாள் மாதவி.

    பக்கத்து கட்டிலில் ஒரு சிறுவன் கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.

    செல்லக் குட்டிக்கு என்ன கலக்கம்?

    அக்கா ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லை.

    ஏன் குட்டி?

    எங்கம்மாவைப் பாக்கணும் அக்கா.

    அவன் குரலில் சட்டென்று இறுகினாள் மாதவி. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அருகில் அமர்ந்து அனைத்துக் கொண்டாள்.

    நாளைக்கு வருவாங்க தங்கம்.

    பொய் சொல்லாதீங்க அக்கா. அவங்க வர மாட்டாங்க. என்னை வேண்டாம்னுதானே இங்க விட்டுட்டுப் போனாங்க.- அவன் குரல் தேம்பியது.

    அம்மாவுக்கு என்ன கஷ்டமோ? இங்க நீ நிம்மதியா இருக்கணும்னுதானே விட்டுட்டுப் போனாங்க.

    அம்மா இல்லாம எங்கக்கா நிம்மதி வரும்?

    அவன் கேள்வியில் மனம் உருகியது மாதவிக்கு. என்ன மனம் இது? தன் கஷ்டம் வேண்டாம் என்று தாயுள்ளம். அம்மாதான் வேண்டும் எனும் பிள்ளை மனம். யாருக்குப் பதில் சொல்வது.

    சிறுவனின் தாயாருக்குக் கணவன் இல்லை. கூலி வேலை. மகனைக் காப்பாற்ற முடியாமல், இங்குள்ள ஒரு அநாதை ஆசிரமத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டாள்.

    என் புள்ளைக்கு ரெண்டு வேளை சோறு போட்டு, படிக்க வச்சிடுங்க சாமி என்று கையெடுத்து கும்பிட்டுப் போனாள். பையனுக்கு டெங்கு. இந்த மருத்துவ மனையில் சேர்த்து நலமாகி பொது வார்டுக்கு வந்து விட்டான். ஐ.சி.யூ வில் யாரையும் தேடாத பையன் இப்போது அம்மாவைத் தேடுகிறான்.

    இல்லத்து நிர்வாகி ரமணன் தாயாருக்கு போன் செய்தால் எடுக்கவே இல்லை. வறுமை பெற்ற பாசத்தையும் துடைத்து விடுமா?

    ஆனால் மாதவி எந்த விஷயத்தையும் மறைக்க விரும்பவில்லை. மனத் திருப்திக்காக, சமாதானத்திற்காக ஒரு பொய் சொல்லப் போக அடுத்தடுத்து பல பொய்கள் சொல்ல வேண்டி இருக்கும் என்று நம்பினாள் அவள்.

    கண்ணா, ரமணன் சார் உங்கம்மாவுக்கு போன் செஞ்சார். ஆனா அவங்க எடுக்கவே இல்லை.

    அவங்க எடுக்க மாட்டாங்க அக்கா. என்கிட்டே அப்பவே சொன்னாங்க. நீ அங்க போனா என்னை மறந்துடணும். பாக்கணும்னு நினைக்கக் கூடாதுன்னு.

    அப்புறம் ஏன் கேட்கறே?

    ராத்திரி இருமல் வந்திச்சா. அம்மா நினைப்பு வந்திருச்சி.

    சிறுவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் உன்னைப் பாத்தா என் அம்மா மாதிரியே இருக்கு அக்கா. நீ ஏன் ராத்திரியும் இங்க இருக்கக் கூடாது?

    பதில் சொல்லாமல் மனம் நெகிழ அமர்ந்திருந்தாள் மாதவி.

    இந்த அன்புக்கு என்ன செய்வது" நர்ஸ் தொழில் ஒரு உயர்ந்த புனிதமான, பவித்ரமானது, தன்னலம் இல்லாமல், அன்பும், கனிவும் நிறைந்து சேவை மனப்பான்மை ஒன்றையே சுவாசமாகக் கொண்டு செயல்பட வேண்டிய தொழில்.

    நாம் கொடுக்கற மருந்து ஒரு மனத் திருப்திக்குத்தான். நீங்க தரும் அந்த கனிவான சேவைதான் அவர்களை நோயிலிருந்து மீட்டெடுக்கும். என்பார் அவர்களின் செவிலியர் கல்லூரி முதல்வர். எவ்வளவு உண்மை.

    நோயுற்ற மனம் அன்பையும், அனுசரனையையும்தான் எதிர்பார்க்கும். அதுவும் ஏழு வயதுப் பையன். அந்தப் பிஞ்சு மனம் தாயை எதிர்பார்ப்பதில் அதிசயம் இல்லை. தாய்க்குப் பின்தானே தெய்வமும்.

    எதுவும் சொல்லாமல் மாதவி அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

    உங்க டூட்டி முடிஞ்சுதா?

    நைட் டூட்டி முடிஞ்சுது கண்ணா. வீட்டுக்குப் போய்ட்டு ஈவினிங் வருவேன்

    வீட்டுல யாருக்கா இருக்காங்க?

    என அம்மா, அக்கா, தங்கை

    பரவாயில்லை உங்களுக்கு அம்மா இருக்காங்க- சிறுவன் சொல்ல உதட்டைக் கடித்து நெகிழ்வை அடக்கினாள் மாதவி. ஒரு நர்ஸ் எந்தச் சூழ்நிலையிலும் நெகிழ்ந்து போகக் கூடாது. மனசு தைரியமாக இருக்க வேண்டும். நம் உற்சாகமும், மன தைரியமும்தான் எதிர்படும் சவால்களை சமாளிக்க உதவும்.

    மாதவியின் முன் நிற்கும் சவால்கள் ஏராளம். அவற்றை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த உள்ளங்களுக்காக ஓடி வருகிறாள். சுமைகளைச் சுமந்து கொண்டு ஓடாதே. அதை ஒரு கல்லின் மேல் இறக்கி வை. மனம் லேசாக இருக்கும் என்பார் சீஃப்.

    இறக்கி வைத்தால் அடுத்தது வந்து ஏறி உட்கார்ந்து விடுகிறது. மாதவி சிறுவனைப் பற்றி நினைத்துக் கொண்டே அடுத்தடுத்த கட்டில்களைக் கடந்தாள். வெளிச்சம் முழுதாக உள்ளே வந்திருந்தது. டிராலியில் பேஷண்டுகளுக்கான காபி, டீ, பால் வர, மாதவி அவற்றைச் சரி பார்த்து விட்டு வார்டை விட்டு வெளியில் வந்தாள்.

    நீள வராண்டா சில்லென்று குளிர் காற்றை வீசியது.பொது வார்டைக் கடந்தவுடன், செவிலியர்களின் ஓய்வறை. தன் சீருடையை மாற்றிக் கொண்டு மாதவி வெளியில் வர,

    கண்ணா லட்டு திங்க ஆசையா?- சக நர்ஸ் எதிரில் வந்தாள் .

    ஓசியில் கொடுத்தா நாலஞ்சே திங்கலாம்.

    "சீஃப் வரச் சொன்னார். அங்க ஒரு லட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1