Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Rojave...
Kaadhal Rojave...
Kaadhal Rojave...
Ebook244 pages2 hours

Kaadhal Rojave...

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

ஜெயவிதுரன்-தர்ஷினி..!

சஞ்சித்-ஆதர்ஷிகா.

தர்ஷினி, ஆதர்ஷிகா இருவரும் வெவ்வேறு வங்கியில் பணிபுரிபவர்கள்.

காதல் ரோஜாக்களை கையிலேந்தி தேவதைகளின் வருகைக்காகக் காத்திருக்கும் நாயகர்கள்.

அந்தத் தேவதைகளைத் தங்களிடம் வரவழைக்க, அவர்கள் செய்த தகிடுதத்தோம் வேலைகள் என்ன?

நட்பு, காதல், குடும்பம் என்று ரோஜாக்களின் வாசம் சற்றும் குறையாத காதல் கதை.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134505714
Kaadhal Rojave...

Read more from Hansika Suga

Related authors

Related to Kaadhal Rojave...

Related ebooks

Reviews for Kaadhal Rojave...

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Rojave... - Hansika Suga

    http://www.pustaka.co.in

    காதல் ரோஜாவே...

    Kaadhal Rojave...

    Author:

    ஹன்சிகா சுகா

    Hansika Suga

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hansika-suga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 1

    சென்னை மாநகரத்தின் ஜனத்திரளைச் சுமந்து கொண்டிருக்கும் பரபரப்பான சாலைகள். தன் அலுவலக அறையின் கண்ணாடித் திரை வழியே சாலையின் மீது பார்வையைப் பதித்திருந்தான் ஜெயவிதுரன்.

    குறிப்பிட்ட அந்த ரோஜா வண்ண இருசக்கர வாகனத்தை எதிர்நோக்கி அவன் கண்கள் தவமிருப்பதும், புதிதாய்ப் பூத்த மலராய் அவள் அந்த வாகனத்தில் வந்து இறங்குவதைக் கண்டதும் மனதில் இனம்புரியா ஆனந்தத்தோடு அவன் தன் பணியைத் தொடர்வதும் என்று சமீப காலமாகக் காட்சிகள் நகர்கின்றன.

    எத்தனையோ இளம் சிட்டுகளைச் சுமந்து செல்லும் சென்னையின் சாலைகளில் அவள் மட்டும் எப்படி அவன் கருத்தில் பதிந்தாள் என்பதுதான் புரியாத புதிர். அவனுடைய அலுவலகத்தில் இருந்து நான்காவது கட்டிடத்தில் இருக்கிறது அவள் பணி புரியும் இடம்.

    எதேச்சையாக ஒருநாள் தன் அறையிலிருந்து அவன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் தன் அலுவலகத்தின் முன் வண்டியிலிருந்து இறங்குவதும், அவளுடைய உயரமும், தோற்றமும், மாநிறமும், முதுகில் விரிந்து கிடந்த கூந்தலும் அவனுக்குள் ஒரு ரசயானக் கிளர்வை நிகழ்த்தி வைக்க, அன்றிலிருந்து அவனிடம் ஏதோ ஒரு மாற்றம்..!

    மறுநாளும் தேவிதரிசனம் கிடைக்குமா என்று ஆவலோடு காத்திருந்தவனுக்கு, தினமும் அது சாத்தியமே என்று தெரிந்ததும் உள்ளம் சிக்சர் அடித்த ப்ளேயர் போலத் துள்ளி அடங்கியது.

    நான்காவது கட்டிடத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியில் அவள் புதிதாய் வேலையில் அமர்ந்திருக்கிறாள் என்ற தகவலை மெல்லத் திரட்டிக்கொண்டான் விதுரன்.

    அன்றிலிருந்து வழக்கத்தை விட சீக்கிரமாகவே தன் அலுவலகம் வரத் தொடங்கிய ஜெயவிதுரன், நாள் தவறாமல் அந்தப் பெண்பூவைத் தன் கண்களிலும், இதயத்திலும் நிரப்பிக் கொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.

    வழக்கமா நம்ம எம்.டி. பத்தரை மணிக்கு மேலத்தான் ஆபீசுக்கு வருவாரு... இப்ப கொஞ்சநாளா மணியடிச்ச மாதிரி டாண்ணு ஒன்பதரைக்கே வந்து நிக்கறாரே... என்ற அங்கலாய்ப்பு விதுரனின் ஊழியர்களுக்கு மத்தியில் எழாமல் இல்லை.

    அவர் லேட்டா வர்றதை சாக்கா வெச்சு நீயும் ஓ.பி. அடிக்கலாம்-ன்னு நினைச்சயோ..?

    அட... ஓ.பி.ன்னு பெரிய வார்த்தையெல்லாம் எதுக்குங்கறேன்? அடிச்சிக்கோ புடிச்சிக்கோன்னு லோக்கல் ட்ரெயின் ஏறி வர்றவனுக்குத் தானே அவஸ்தை தெரியும். அவருக்கென்ன ஜாலியா கார்ல வந்து இறங்குவாறு... ஒன்பதரைக்கும் வரலாம்... பத்தரைக்கும் வரலாம்... அவுங்க இஷ்டம்... தனக்குக் கீழ வேலை பார்க்கறவன் சங்கதி முதலாளிக்கு எதுக்கு..?

    இத்தனை புலம்பல்களுக்கும் காரணம்... அவன் இதயத்தைக் களவாடிய அந்த மலரின் நேரம் தவறாமையே என்பதை யார் அறிவார்கள்?

    காலையில் அவள் தரிசனத்தைத் தவறவிட்டால் மீண்டும் மாலைவரை காத்திருக்க வேண்டும் என்று விதுரனுக்குத் தெரியாதா என்ன?

    தன் கண்ணுக்குள் நிலவாய் நின்றவளைத் தினமும் காண எண்ணி, கம்பெனி நடப்புக் கணக்கையும், சேமிப்புக் கணக்கையும் அவள் வேலை செய்யும் வங்கியில் துவக்கிவிடலாம் என்றுதான் விதுரன் நினைத்தான்.

    ஏற்கனவே மூணு பேங்க்ல பர்சனல் அக்கவுன்ட் வெச்சிருக்கே... நாம கரன்ட் அக்கவுன்ட் வெச்சிருக்கற வங்கி நம்ம பில்டிங்கோட கிரவுண்ட் ப்ளோர்ல இருக்கு... இப்ப எதுக்காக வேலை மெனக்கெட்டு வேற வங்கிக்கு அக்கவுன்ட் மாற்றணும்-ன்னு கேட்கறேன்? இருக்கறபடியே இருக்கட்டும். நம்ம வரவு செலவுக்கு இதுதான் ஈஸி...

    உடன்படித்தவனும், நண்பனும், அந்த அலுவலகத்திலேயே துணை எம்.டி மற்றும் மேலாளர் என்ற பதவியில் இருப்பவனுமான ஜகத்ரட்சகன் சொன்னபோது, குபீரென்று வந்த கோபத்தில் விதுரனுக்கு அவனை அடித்து நொறுக்கலாமா என்றிருந்தது.

    போகட்டும்... விதுரனின் உள்ளே என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது... எதற்காக அவன் மனம் நான்காம் கட்டிடத்தை நோக்கித் தாவுகிறது என்பதையெல்லாம் நண்பனுக்குச் சொல்லிப் புரியவைக்கும் அளவுக்கு இன்னமும் காலம் கனியவில்லையே..!

    அந்த ரோஜாவைப் பற்றிய வேறெந்தத் தகவலும் விதுரனால் திரட்டமுடியாத நிலையில்,

    அவள் இன்னமும் மிஸ் தர்ஷினி தான்... என்பதை மட்டுமாவது ரெகரிங் டெபாசிட் போடச் சென்றபோது அவனால் அறிந்துகொள்ள முடிந்தது.

    மேஜையின் டிராயரில் கிடந்த அந்த டெபாசிட் ரசீதைக் கண்டு அதிர்ந்து போனான் ரட்சகன்.

    என்னடா ஆச்சு உனக்கு? கம்பெனி பார்ட்டிக்குச் செட்டில் பண்ண வெச்சிருந்த பணத்தைக் கொண்டு போய் ரெகரிங் டெபாசிட் போட்டுட்டு வந்திருக்கே. அதுவும் மாசம் பத்தாயிரம் கட்டற மாதிரியா? இப்ப ஆர்.டி போடற அளவுக்கு என்ன அவசியம் வந்தது? அந்தக் காசு இருந்தா கரண்ட் பில் கட்ட ஆகுமேடா? நாம வழக்கமா கணக்கு வெச்சிருக்கற பேங்க்ல பெரிய எப்.டி. ஒண்ணு போடுங்க சார்... ன்னு ஆயிரம் முறையாவது நம்மகிட்ட கெஞ்சியிருப்பான். ஆகட்டும் பார்க்கலாம் ன்னு மழுப்பிட்டு இப்ப எதுக்கு கனகாரியமா அங்க கொண்டு போய் கொட்டிட்டு வந்திருக்கே..?

    ரட்சகன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைத்த நாள் இன்றும் நீக்கமற நினைவிருக்கிறது.

    உன்னை இழுக்கற ஏதோ ஒரு காந்தம் அங்க இருக்குது மவனே... கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கறேன்... என்று ரட்சக சபதம் எடுக்கப்பட்ட நாளும் அந்நாளே...!

    விதுரனை அதிகநேரம் காத்திருப்பில் விடாமல் ரோஜா நிற வண்டிக்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஆரஞ்சு வண்ண உடையில் வந்து இறங்கினாள் அவன் தேவதை.

    தூரத்திலிருந்து பார்க்கும்போதே வசீகரிக்கும் வட்டமுகம். விதுரனின் மனதுக்குள் மாருதியின் ஓவியப்பெண்கள் வந்துபோயினர்.

    டெபாசிட் போடச் சென்ற அன்று, மிக அருகாமையில் அவளைப் பார்த்தபோது சொக்கித்தான் போனான்.

    பஞ்சாப் கோதுமையின் நிறம் என்னவென்பதை அவன் பாடத்தில் படித்ததில்லை. அவளைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டான்.

    கருவண்டு விழிகள் என்று புத்தகங்களில் படித்தபோது இதென்ன வருணனை என்று கிண்டலடித்த மனம்,

    அவள் விழிகளின் உயிரோட்டத்தில் பழைய கவிஞர்களையும், வருணனையாளர்களையும் தேடிப்பிடித்து மன்னிப்புக் கேட்டது.

    அவளுடைய ரோஜா இதழ்களைப் பற்றி அவன் மனத்தில் எழுந்த எல்லை தாண்டிய கற்பனையை இங்கு வெளியிட முடியுமா...!

    என்ன வங்கி இது? இந்த டெபாசிட் ஃபாரம் எல்லாம் ஏன் இவ்வளவு சிறியதாக அச்சடிக்கிறார்கள்?

    இன்னும் நான்கைந்து பக்கங்கள் சேர்த்து அடித்தால் அதை நிரப்புவதில் சந்தேகம் கேட்கும் சாக்கில் நீண்ட நேரம் அங்கேயே இருக்கலாமே?

    எதற்கும் ஆர்.பி.ஐ கவர்னருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று அவன் மனம் விபரீதமாகக் கற்பனை செய்ததை என்னவென்று சொல்வது?

    அவளைப் பார்த்தால் சென்னைவாசியைப் போலத் தெரியவில்லை என்பதை மட்டும் அவன் மனம் ஊர்ஜிதம் செய்தது.

    தமிழ் சரளமாகப் பேசினாலும் அதில் வடநாட்டு வாசனை அடிப்பதாகவே உணர்ந்தான் விதுரன்.

    அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள்? எங்கே தங்கியிருக்கிறாள்? அவளிடம் நெருங்கிப் பழகுவதற்கு என்ன வழி?

    அப்பப்பா... எத்தனை கேள்விகளுக்கு அவன் விடை தேட வேண்டியிருக்கிறது.

    உல்லாசப் பறவைகள் கூடுதிரும்பும் பொன்னந்தி மாலைப்பொழுது..!

    தன் அறையில் இன்னமும் மடித்து வைக்கப்படாமல் கிடந்த துணிமணிகளை புரட்டிப்போட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தாள் தர்ஷினி.

    தர்ஷு... என்ன தேடிட்டு இருக்கே?

    பற்களுக்கு இடையே சேஃப்ட்டி பின்னைக் கவ்வியபடி, புடவைக்கு ப்ளீட்ஸ் எடுத்த விரல்களோடு குரல் கொடுத்தாள் ஆதர்ஷிகா.

    இந்த மாதிரி டேஞ்சரஸ் திங்க்ஸ் வாயில வெக்காதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் ஷிகா..! என்னோட அட்ரஸ் புக் எங்கடி? சென்னையில என்னோட பிரெண்ட் இருக்கான்னு உன்கிட்ட சொன்னேனே? அவளோட ப்ளாட் முகவரி அதுலதான் எழுதி வெச்சிருந்தேன். தமிழ்நாட்டுக்கு வந்ததுல இருந்து என் வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு... இந்த சன்டேவாவது வனிதியைப் போய்ப் பார்க்கணும்.

    ஓ... சாரிடி... நான்தான் ஏதோ ஞாபகத்துல அதை ப்ரிட்ஜ்[fridge] மேல வெச்சிட்டேன்... எடுத்துக்கோயேன் ப்ளீஸ்... நான் இப்ப அவசரமா கிளம்பிட்டு இருக்கேன்... ஸாரிப்பா.. தன் மேக்கப் சாமான்களைத் தேடி ஓடினாள் ஆதர்ஷி.

    ஆதர்ஷிகா, தர்ஷினி இருவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் என்றாலும், இருவருடைய தொழில்வர்க்கமும் வங்கித்துறை என்பதே...!

    ஆதர்ஷிகா கேரளாவிலிருந்து இங்கு மாற்றலாகி வந்திருக்க, தர்ஷினி மும்பையிலிருந்து இங்கு இடம்பெயர்ந்து வந்திருக்கிறாள். இருவரும் அடிப்படையில் தமிழ்க்குடும்பம் என்பதால் தனியாகப் பிளாட் எடுத்துத் தங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் போனது.

    ஆதியை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவள் உடன் வேலை செய்யும் விஷ்வந்தி.

    உன்னை மாதிரிதான் தர்ஷினி... ஷிகாவும் பேங்க் ஜாப்லதான் இருக்காங்க... லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கப் பிடிக்கலேன்னு சுதந்திரமா தனி பிளாட் எடுத்துத் தங்கியிருக்காங்க. இவங்ககூட ஸில்வியான்னு ஒரு கிறிஸ்டியன் லேடி தங்கியிருந்தாங்க. இப்ப அவங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிட்டதால பிளாட் ஷேர் பண்ண ஆள் தேடிட்டு இருக்காங்க...

    ஆதர்ஷிகா தங்கியிருந்த பிளாட்டை விஷ்வந்தி சுற்றிக் காண்பித்தபோது அந்த இடத்திலேயே அவளைப் கட்டிப்பிடித்துத் தட்டாமாலை சுற்றலாம் போல இருந்தது.

    சென்னையின் நெருக்கடி, ஹாஸ்டல்வாசம், கசகசப்பு, பாத்ரூம் க்யூ என்றெல்லாம் பயந்து கிடந்தவளுக்கு ஷிகாவின் பிளாட் சொர்க்கபுரியாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.

    தங்குமிடத்திற்கும், வேலை செய்யும் அலுவலகத்துக்கும் நீண்ட தூரமில்லை என்பதால் தர்ஷினிக்கு கூடுதல் வசதியாகவும் இருந்தது.

    வாடகை சற்றே அதிகம்தான் என்றாலும் வசதிகளுக்குக் குறைவில்லை என்ற வகையில் தர்ஷினி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. தன் வீட்டில் இருப்பது போல் சுத்தமாகச், சுகாதாரமாகத், சுதந்திரமாக இருக்கமுடிந்தாலே போதும் என்றுதானே அவளும் விரும்பினாள்.

    ***

    அத்தியாயம் - 2

    ஷிகாவும், தர்ஷினியும் சுபாவத்திலும் வெகுவாக ஒத்துப்போனார்கள். இருவராலும் இஸ்ரோவைப் பற்றியும் பேச முடிந்தது... இளங்கோவடிகளைப் பற்றியும் பேச முடிந்தது.

    கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள்? கோவலனும், அநீதி பாண்டியனும் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?.... என்றெல்லாம் ஆதர்ஷிகா கேட்கும்போது தர்ஷினிக்குச் சிரிப்புக் குமிழிடும்.

    ஒருநாள் மும்பையின் பாவ்பாஜி... தர்ஷினியின் கைப்பக்குவத்தில் தயாரானால், மற்றொரு நாள் கேரளப்புட்டு ஷிகாவின் சமையலாக உருவெடுக்கும். அலுப்பும் சலிப்புமாய் இருக்கும் நேரத்தில் இருவரும் வெளியே சென்று உணவருந்துவதை வாடிக்கையாகக் கொண்டார்கள்.

    எப்போதாவது ஒருமுறை நல்ல ஆங்கிலப்படத்தைத் தேடி இரண்டு மகாராணிகளும் தியேட்டர்களுக்கு படையெடுப்பதும் உண்டு.

    பர்மா பஜார்ல குவிச்சு வெச்சிருக்கான்... என்று சில திருட்டு வி.சி.டி.க்களை வாங்கி வந்து கொட்டுவாள் ஆதர்ஷி. அன்றைய இரவோ, தொடர்ந்து வரும் விடுமுறையிலோ தூக்கத்தைத் தொலைத்துவிட்டு இருவரும் படத்தில் ஆழ்ந்து போவார்கள்.

    வெகுநாட்களுக்கு முன்பிருந்தே சென்னையில் தங்கிவிட்டதாலோ என்னவோ, ஷிகாவுக்கு அலுவலக நட்பைத் தாண்டியும் சில நட்பு வட்டாரங்கள் பெருகியிருந்தன. அவர்கள் வீட்டு விசேஷங்களுக்குப் போகுமளவுக்கு தன் நட்பை உரமிட்டு வளர்த்திருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இன்றும் அப்படித்தான்..! வயலட் நிற காட்டன் புடவை மேனியை அலங்கரிக்க, எங்கேயோ உற்சாகமாக் கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.

    நான் சொன்னேன் இல்ல.... சங்கரன் அங்கிள்-ன்னு ஒரு கஸ்டமர், எங்க பேங்க்குக்கு ரெகுலரா வருவாருன்னு..! அவருடைய பொண்ணுக்கு பிரசவம் முடிஞ்சு மகன் பொறந்திருக்கானாம். நாலுநாள் முன்னால ஸ்வீட் கொடுத்துத் தகவல் சொன்னார். இன்னைக்குப் போய்ப் பார்த்துட்டு வரலாம்-ன்னு இருக்கேன். திரும்பி வர்றதுக்குள்ள எப்படியும் இருட்டிடும். வர்ற வழியில டின்னர் முடிச்சுக்கறேன். உனக்கு மட்டும் என்ன வேணுமோ சமைச்சிக்கோ தர்ஷு...

    தன் இருசக்கர வாகனத்தில் ஆரோகணித்து சிட்டாகப் பறந்துவிட்டாள் ஷிகா. டப்பாவில் கிடந்த வேஃபர் பிஸ்கட்டுகளைக் காலி செய்து, கிரீன் டீ தயாரித்து அருந்திவிட்டு அக்கடாவென்று அமர்ந்தாள் தர்ஷினி.

    வேலைக்காரி துவைத்துப் போட்டுவிட்டுப் போன அம்பாரத் துணிகள் எங்களை மடித்து வைக்கிறாயா?இல்லையா? என்று பயமுறுத்தின.

    உன்னையெல்லாம் வந்துதான் கவனிக்க வேண்டும்... நான் இப்போது ஊர் சுற்றும் மனநிலையில் இருக்கிறேன் என்று அவைகளுக்குக் காட்டமாய் பதில் சொல்லிவிட்டு முகம் கழுவி உடை மாற்றினாள் தர்ஷினி.

    அந்த இலகுரக குர்தி மேனியில் இருப்பது போலவே தெரியவில்லை. அதை உடுத்தும்போதே மென்மையான சிறகு போல உணர்ந்தாள் தர்ஷினி.

    மாலை நேரத்து மல்டிபிள் கலர் வானம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. சென்னையின் சில தெருக்கள் நன்கு பரிச்சியமாகி விட்டிருந்த நிலையில் தர்ஷினிக்கு வாகனத்தைச் செலுத்துவது அப்படியொன்றும் கஷ்டமான காரியமாக இல்லை. மும்பையின் நெருக்கடியான தெருக்களை விட சென்னை எவ்வளவோ தேவலாம் என்றே தோன்றியது.

    பிளாட்பாரத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த மாலை நேரக் கடைகள். பட்டன் மஷ்ரூமிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1