Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Peyar D.G. Karthik
En Peyar D.G. Karthik
En Peyar D.G. Karthik
Ebook162 pages1 hour

En Peyar D.G. Karthik

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சொந்தபந்தங்களை பிரிந்து, வாழ்க்கையைத் தொலைத்து, வெளிநாட்டிற்குச் சென்ற சகுந்தலா தன் மகன் கார்த்திக்குடன் தாய்நாட்டிற்கு திரும்புகிறாள். எட்டு வருடங்களுக்கு முன் அவள் இழந்த வாழ்க்கை திரும்ப கிடைத்ததா? மகனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் உன்னதமான ஒரு தாயாக திகழும் சகுந்தலாவின் வாழ்க்கையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580155608808
En Peyar D.G. Karthik

Read more from Lakshmi

Related to En Peyar D.G. Karthik

Related ebooks

Reviews for En Peyar D.G. Karthik

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Peyar D.G. Karthik - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என் பெயர் டி.ஜி.கார்த்திக்

    En Peyar D.G. Karthik

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ஏர் மடகாஸ்க்கர் தனது பெரிய இறக்கைகளை அசைத்துக்கொண்டு மாலை நாலு மணியளவிலே பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே மெல்ல இறங்கத் தொடங்கியது.

    பயணிகள் அனைவர் முகத்திலும் பரபரப்பு.

    வழக்கம்போல் விமானப் பணிப்பெண்ணின் இனிய குரல் விமானம் இறங்கப் போவதை எச்சரித்துக் கொண்டிருந்தது.

    சடக் சடக்கென்று எல்லோரும் ஆசனத்திலிருந்த பெல்ட்டை மாட்டிக்கொள்ளும் சப்தம்.

    மூக்கும் முகமும் சிவந்து கண்கள் மலர கார்த்திக் ஆவலின் உருவாக அம்மாவின் அருகில் இருந்தபடி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். பசிய கரும்புத் தோட்டங்களுக்கும் நீல நீர்ப்பரப்பிற்கும் ஜாலம் காட்டிக்கொண்டு விமானம் மெல்ல அசைந்து சுற்றிப் பறந்தது.

    இறங்கப் போகிறதாம்மா?... இப்போ நாம் மொரேஷியஸ் வந்துவிட்டோம் இல்லையா? தாயின் காதுகளிலே கிசுகிசுத்தான் கார்த்திக். தொலைதூரத்திலே கடல் நீர்ப் பரப்பிற்கும், பசிய கரும்புத் தோட்டங்களுக்குமிடையே கோடுபோல் தென்பட்ட விமானம் இறங்கும் பாதையை வியப்புடன் பார்த்தபடி இருந்த சகுந்தலா, மகன் பக்கம் திரும்பினாள்.

    ஆமாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கி விடுவோம்.

    அப்போ எனக்கு ஒரு கோக் வாங்கித் தருவியாம்மா... ரொம்ப தாகமா இருக்கு.

    தரேண்டா கண்ணு. இரையாமல் உட்கார்ந்திரு.

    சரியம்மா...

    ரொம்ப நல்ல குழந்தை, கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டிருக்கிறான். அருகில் உட்கார்ந்த அந்த வெள்ளைக்காரப் பயணி நற்சான்று வழங்கினார். சகுந்தலாவின் மூக்கும் முகமும் செவேலென்று மாறின.

    கார்த்திக்கை யாரேனும் புகழ்ந்து விட்டால்... அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாது. உண்மை. அந்த மகனின் இனிய முகத்தைப் பார்த்துத்தானே அவள் சிறுவயதிலேயே ஏற்பட்ட அத்தனை பெரியதொரு துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருந்தாள்? கார்த்திக்கின் மீது அவளுக்கு உயிர்.

    விமானம் இறங்கி ஓடி நின்றது. பயணிகள் அவரவர்கள் சாமான்களைத் தூக்கிக்கொண்டு கிளம்பினர்.

    மொரேஷியஸ் தீவிற்குப் போகிறவர்கள் நிலையக் கட்டிடத்தின் வேறு ஒரு வழியே உள்ளே சென்றனர். சில மணி நேரம் நிலையத்தில் தங்கிவிட்டு, தொடர்ந்து பம்பாய் செல்லவிருக்கும் பயணிகள் அனைவரையும் அங்கு வேலை பார்த்த பெண்மணி ஒருத்தி கட்டிடத்தின் வேறு ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.

    இமிகிரேஷன், ஹெல்த், செக்யூரிடி இத்யாதிகளுக்கு க்யூவில் நின்று அடுத்த பயணத்தைத் தொடங்கப் பயணிகள் உட்காரும் ஹாலுக்கு வந்து ஒரு ஆசனத்தில் அமர்வதற்குள் மணி ஐந்தரையாகிவிட்டது.

    டர்பனிலிருந்து அவளது பக்கத்து ஆசனத்துப் பயணியாக விமானத்தில் வந்த அந்த வெள்ளைக்காரர் அவளைப் பார்த்து புன்னகை செய்தார்.

    உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் உங்கள் டிக்கெட்டுகளைக் கொடுங்கள். போர்டிங் கார்டுகள் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றார்.

    சகுந்தலாவுக்குப் பிரயாணக் களைப்பு. தொடர்ந்து எல்லாவற்றிற்கும் க்யூவில் நின்ற அலுப்பு. தாய்நாட்டிற்குப் பாதி தொலைவில் வந்துவிட்டோம் என்ற நினைவில் இன்பமும் துன்பமும் கலந்த எதிர்பார்ப்பில்... ஏகப்பட்ட எண்ணக் குவியல்களிடையே மனம் புதைந்து கிடந்தது.

    தாங்க்யூ டிக்கெட்டுகளை அவரிடம் கொடுத்துவிட்டு பெருமூச்செறிந்தாள். சிறிது பொழுதில் அவர் போர்டிங் கார்டுகளை அவளிடம் கொண்டுவந்து கொடுத்தார்.

    முன்பின் தெரியாதவர். இங்கிலாந்திலிருந்து ஆப்பிரிக்காவைச் சுற்றிப் பார்க்க வந்தவர். பம்பாயில் சில தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் ஆஸ்திரேலியா போவதாக அவர் தீர்மானம்.

    அவள் தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் சில வருஷங்களாக வசிக்கிறாள். தன் மகனுடன் எட்டு வருஷங்களுக்குப் பின்னர் சென்னைக்குப் போய்க் கொண்டிருக்கிறாள்.

    இருவரும் பிரயாண ஆரம்பத்தில் பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட விஷயங்கள் ரயிலில் ஏற்படும் சிநேகிதம் போல் இது விமானப் பயணத்து நட்பு.

    குளிர்பானங்களை வாங்கிப் பயணிகள் பலர் அருந்திக் கொண்டிருந்தனர். அந்த வெள்ளைக்கார நண்பர் கோகோ கோலா புட்டி ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு அவள் அருகில் வந்தார்.

    நீங்கள் தாகத்திற்கு ஒரு கோக் சாப்பிடுங்கள். உபசரித்தபடி பாட்டிலை அருகிலிருந்த மேஜை மீது வைத்தார்.

    தாங்க்யூ! அவள் கையில் எடுத்துக்கொண்டாள். மிகவும் பழகினவன் போல் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் உரையாடியபடி கார்த்திக் பானங்கள் விற்கும் பகுதிக்கு விரைந்தான். இருவரும் எதிர்எதிரே ஒரு வட்டமான மேஜையருகே உட்கார்ந்து குளிர்பானத்தை உறிஞ்சி குடிக்கத் தொடங்கினர்.

    அவர் ஏதோ வேடிக்கையாகச் சொல்லிவிட்டிருக்க வேண்டும். பானத்தைப் பருகுவதை நிறுத்திவிட்டு... தன் அரிசிப் பற்கள் தெரியக் குலுங்கக் குலுங்கக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தான். கண்கள் பளபளக்க, முகம் சிவக்க அவன் சிரித்த அழகைத் தாய் சற்று தூரத்திலிருந்தபடியே பார்த்தாள். அவள் கண்கள் லேசாகக் கலங்கின. நெஞ்சைத் துன்ப உணர்வு அடைத்தது.

    தாயின் பரிவு - தந்தையின் கடமை இரண்டையும் அவள் ஒருத்தியே பூர்த்தி செய்து பாடுபட்டு அவனை ஏழு வயது வளர்த்து விட்டிருந்தாள். எனினும் தந்தை கொடுக்கக்கூடிய அந்த நட்பை அவளால் கொடுக்க இயலுமா...? அடிக்கடி மனத்தில் ஓர் ஏக்கம். இப்போது யாரோ வேற்று மனிதனுடன் மகன் மனம்விட்டுச் சிரித்து மகிழும் அந்த கதியைக் கண்டபோது நினைவுகள் எல்லாம் எங்கோ ஓட அவள் ஒரு கணம் நிலை குலைந்து போனாள்.

    டர்பனில் அப்போது குளிர்காலம். மொரேஷியஸிலும் லேசாகக் குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அத்துடன் வெளியே சன்னமாக மழை தூறிக் கொண்டிருந்தது.

    அடிக்கடி நினைச்சபோது மழை கொட்டுவதால்தான் இந்தத் தீவு இப்படி பச்சை பசேலென்று செழிப்பாக இருக்கிறது. யாரோ ஒரு பயணி உரத்துச் சொன்னது கேட்டது.

    கார்த்திக் அந்த வெள்ளைக்காரருடன் அங்கிருந்த கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளிக் கம்பிகள் போல் விழுந்து கொண்டிருந்த மழையை வெறித்துப் பார்த்தபடி அவள் வெகுநேரம் உட்கார்ந்திருந்தாள்.

    நேரம் நகர்ந்து இரவு ஏழு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. விளக்குகள் பளிச்சென்று எரிந்துகொண்டிருந்தன. ஹாலின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு விமான ஓட்டி தமது குழுவினருடன் வெளியேறினார். பயணிகளிடையே ஒரு சிறு சலசலப்பு. இன்னும் சிறிதுபொழுதில் கிளம்பப் போகிறோம் என்ற நம்பிக்கையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மௌனமாகப் புன்னகைத்துக் கொண்டனர்.

    எதிர்பார்த்தபடியே சிறிதுபொழுதில் ஒலிபெருக்கி உத்தரவு முழங்கியது. ஏர் இந்தியா ஃப்ளைட் நம்பர்...ல் பம்பாய் செல்லும் பயணிகள் தயவு செய்து விமானத்தில் ஏறிக்கொள்ள கிளம்பிச் செல்லவும்.

    க்யூ வரிசையில் அவர்கள் தங்கள் தோள் பை - கைப்பை மழைக் கோட்டுடன் பரபரப்புடன் நின்றனர்.

    வெளியே சில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. மழை நின்றுவிட்டிருந்தது. கார்த்திக்கின் கம்பளிச் சட்டையின் கழுத்தை இழுத்துச் சரிப்படுத்தினாள் சகுந்தலா. கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தனது கம்பளிக் கோட்டை அவசரமாக அணிந்து கொண்டாள். தோள் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு க்யூவில் வந்து நின்றாள்.

    வெகுதொலைவு பயணம். தோள் அழுந்த நீ கனமாக பையைத் தூக்க வேண்டாம். அதிகப்படியாக எடை இருந்தால் அதற்குக் கட்டணம் கட்டிவிடு. வீணாக நெஞ்சு உடைய எதையும் தூக்காதே... டர்பன் விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த சிநேகிதி நிம்மி சொல்லியது நினைவுக்கு வந்தது. தனக்குள்ளேயே அவள் சிரித்துக்கொண்டாள்.

    ‘நிம்மி மட்டும் அவளுக்கு உற்ற துணையாக இருந்திராவிடில்’... க்யூவில் அவள் நகர்ந்துகொண்டு போனாள்.

    மீண்டும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம். மறுபடியும் அவள் ஜன்னல் ஓரத்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். பக்கத்தில் கார்த்திக், அதற்கு அடுத்தபடியான ஆசனம் காலி அந்த வெள்ளைக்கார நண்பர் பின்னால் எங்கேயோ தனியாக ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

    விமானம் அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது. இரவு உணவும், தொடர்ந்து காப்பியும் பயணிகளுக்குப் பரிமாறப்பட்டன. விமானப் பணிப்பெண்கள் காலியான தட்டுக்களை எடுத்துச் சென்றதும் எல்லோரும் களைப்புடன் ஆசனத்தில் சாயத் தொடங்கினர். தூக்கம் வருதம்மா அவளது கன்னங்களை வருடினான் கார்த்திக். இரண்டு ஆசனங்களுக்கு இடையே தடுப்பாக இருந்த கை போன்ற பகுதியை மேலே தள்ளிவிட்டு, குழந்தையை அதில் நீட்டிப் படுக்க வைத்து கம்பளியால் போர்த்திவிட்டு விளக்கை அணைத்துவிட்டுப் போனாள் விமானப் பணிப்பெண். முன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தவர் புத்தகமொன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவர் தலைக்கு மேல் எரிந்த விளக்கின் ஒளி தாயின் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் லேசாக வீசியது.

    தூங்கும் மகனை உற்றுப் பார்த்தாள் தாய். அந்தச் சுருண்ட முடி, கூர் மூக்கு, பிடிவாதமாக உயர்ந்து நின்ற மோவாய், மென்மையான உதடுகள், கன்னக் கதுப்புகள் எல்லாம் அவனை நினைவுபடுத்தவே வேதனைப் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

    விமானம் மேலும் மேலும் பறந்து கொண்டேயிருந்தது. அவளது சிந்தனைகளும் பல திக்கிலும் விரைந்து கொண்டிருந்தன. டர்பனில் தான் வசித்த வீட்டைப் பற்றி

    Enjoying the preview?
    Page 1 of 1