Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thagappan Sami
Thagappan Sami
Thagappan Sami
Ebook116 pages1 hour

Thagappan Sami

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803315
Thagappan Sami

Read more from Sivasankari

Related to Thagappan Sami

Related ebooks

Reviews for Thagappan Sami

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thagappan Sami - Sivasankari

    http://www.pustaka.co.in

    தகப்பன்சாமி

    Thagappan Sami

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    அம்மா

    ...

    அ..ம்ம்...மா...

    என்ன டா?

    அ..ம்மா...

    என்ன சொல்லணுமோ அதை மளமளனு சொல்லிட்டு அய்யால போ, சிவா... வேலையாயிருக்கறப்போ தொந்தரவு பாம்பன்ணாத...

    காசு வேணும்மா.

    காசா? எதுக்கு?

    பட்டம் வாங்க...

    கனகம் அரிசியில் கல் அரிப்பதை நிறுத்தினாள். நெற்றியில் பார்த்த வேர்வைத்துளிகளை, வலக்கையை உயரத் தூக்கிரவிக்கையில் துடைத்துக்கொண்டாள்.

    அம்மா...

    சும்மா தொணதொணன்னாமே போ, சிவா... வேலையா இருக்கறது தெரியுதில்லே?

    காசும்மா...

    என்னண்ட இல்லே.

    முப்பது காசுதாம்மா... அதிகமாவா கேக்கறேன்?

    முப்பது காசு மட்டும் தோட்டத்துல சும்மாவா விளையுது! என்னடா விவரங்கெட்டத்தனமா பேசற?

    தெருப் பசங்க எல்லாம் பெரிசு பெரிசா, கலர் கலரா, பட்டம்விடறாங்கம்மா...

    அவங்களுக்குக் கொடுப்பினை இருக்கு, விடறாங்க... நீ வாடிக்கை பாரு போ... குமாரி எங்க? அவளையும் கூட அழைச்சி கிட்டுப் போய் பத்திரமா பாத்துக்க...

    செந்தில் இம்...மாம் பெரிய பட்டம் விட்டுக்கிட்டு இருக்கான்ம்மா... 'என்ன மாதிரி யாருமே பட்டம் விடமுடியாது'னு பெருமையா பேசினான்... 'ஏண்டா முடியாது? நா விட்டுக்காட்றேன். அத்தோட 'டீல்' விட்டு உன்னைத் தோற்கடிக்கறேன், பாருனு சவால் விட்டுட்டு வந்திருக்கேன். எனக்கு அவனுது மாதிரி பெரிசா ஒரு ரூபா சைஸ் வேணாம்... சின்னது, முப்பது காசு சாதா பட்டம் போதும்மா.. ப்ளீஸ்ம்மா..

    செந்தில்கிட்ட பந்தயம் போடப்போறியா? வேற வினையே வேணாம். பெரியப்பாவுக்குத் தெரிஞ்சா முதுகுத்தோலை உரிக்கப் போறாரு! நீ சும்மா ஒருபக்கமா நின்னு வேடிக்கை பாரு, போதும்.

    அப்படிச் சொல்லிட்டா எப்படிம்மா? பத்து பசங்க நடுவுலே சவால் விட்டிருக்கேன். இப்ப வரலைனா 'டே, தோத்தாங்குளி'னு கேலி காட்டுவாங்கம்மா... -

    கனகம் பாத்திரத்துடன் எழுந்து ஆட்டுக்கல்லிடம் சென்றாள்.

    உரலை நீர் விட்டுத் தேய்த்து அலம்பி குழியில் தேங்கி நின்ற தண்ணீரை வாரியிறைத்தாள்.

    உளுந்து, அரிசி ஊறவைத்திருந்த பாத்திரங்களை உரல் அருகில் கொணர்ந்து வைத்தாள்.

    ஓரமாய் சாற்றியிருந்த மணையை உரலுக்கு முன் போட்டாள்.

    சொம்பில் நீர் பிடித்துக்கொண்டு, புடவைக் கொசுவம் தண்ணீரில் விழுந்து விடாமல் லேசாகத் தூக்கினபடி, மணையில் உட்கார்ந்து, ஊறிவிட்ட அரிசியை உரலில் இட்டாள்.

    அம்மாவின் செய்கைகளை மௌனமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த சிவா, பட்டத்தை மறந்தவனாய் நாலடி வைத்து கிட்டத்தில் வந்து, குந்தி அமர்ந்தான்.

    தோசைக்காம்மா மாவாட்டுறீங்க?

    இல்லே... இட்லி.

    சிவா தரையில் கிடந்த நீர்த் திவலையை விரல் நுனியில் பிடித்து இழுத்து கோடு போட்டான்.

    இப்பல்லாம் நீங்க அடிக்கடி தோசை சுடமாட்டேங்கறீங் கம்மா... இட்லிகூட எப்பனாச்சும் அதிசயமாதான் செய்யறீங்க... - முன்னே அப்பா கூட இருக்கறப்ப வாரம் தப்பாம பேப்பர் ரோஸ்ட் மாதிரி தோசை சுட்டு, வெங்காயச் சட்னி செஞ்சி தருவீங்களே, நினைப்பு இருக்கா? நானும் வாய் வலிக்கற அளவுக்கு கேட்டுட்டேன்... ஏனோ செய்யவே மாட்டேங்கறீங்க... முறுகலா தோசை சுட்டு, ஒரு பக்கம் வதக்கின வெங்காய சட்னி, இன்னொரு பக்கம் மொளகாத்தூளை நல்லெண்ணைல குழைச்சி வெச்சிகிட்டா.. ம்ம்ம்... பத்து தோசை சாப்பிட நா ரெடிம்மா.. ஏம்மா செய்யவே மாட்டேங்கறீங்க?

    குழவியைச் சுற்றிக்கொண்டே கனகம் பார்வையை நிமிர்த்தினாள்.

    பன்னிரண்டு வயசுப் பையனின் முகம் தோசையின் நினைவில் மலர்ந்து, கண்கள் ஆசையில் பளபளப்பது புரிந்தது.

    போன வாரம்கூட தோசை சுட்டுத் தந்தேனே... மறந்து போச்சா?

    ஐய... தோசையா அது? நொளுக்நொளுக்குனு பல் இல்லாத வங்க சாப்பிடறத்துக்காக சுட்ட மாதிரி, எண்ணையே இல்லாம அப்படி எனக்குப் பிடிக்கலை... நீங்க முன்ன சுடுவீங்களே, அது போல பேப்பர் ரோஸ்ட் வேணும்... முறுகலா... செஞ்சி தர்றீங்களா?

    கனகம் பதில் சொல்லாமல் குழவியை வேகமாய் சுற்ற, சிவா அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பேசினான்.

    அப்பறம்மா... ஆப்பம், தேங்காய்ப்பாலும் கூடப் பண்ணித் தாங்கம்மா... நேத்து ராம்ஜி வீட்டுக்குப் போனப்ப அவங்க அம்மா செஞ்சி அடுக்கியிருந்தாங்க... 'நீயும் எடுத்துக்கடா'னு சொல்லி ரெண்டு தட்டுல வெச்சித் தந்தாங்க... கொடுத்ததுதான் கொடுத் தாங்களே இன்னும் நாலு தந்தா குறைஞ்சா போயிருக்கும். வயிறு ரொம்பின மாதிரியே இல்லேம்மா... நீங்க, நம்ம வீட்டுலே நிறைய செஞ்சி எனக்குத் தர்றீங்களா?

    ம்ம்... பாப்பம்... சாப்பாட்டைப் பத்தியே பேசிட்டு இருக்காம நீ போய் விளையாடு... போ...

    சிவா இன்னும் முன்னால் சாய்ந்து உட்கார்ந்தான்.

    இந்த இட்லிமாவை ஊத்தப்பமா சுட்டுத் தருவீங்களே, நாளைக்கு அதையாவது செஞ்சித் தாங்கம்மா. வெங்காயம் நறுக்கிப் போட்டு நிறைய எண்ணெய் விட்டு குண்டா, ஓட்டை ஒட்டையா... யம்...யம்...யம்...

    சாப்பிடும் பாவனையுடன் சிவா சப்புக்கொட்ட கனகம் கண் களில் சின்னதாக ஆயாசம் வெளிச்சம் போட மகனை ஏறிட்டாள்.

    இப்ப நீ இந்த இடத்தைவிட்டுப் போகப்போறியா, இல்லியா? உருப்படியா எந்த வேலையும் பண்ணாம, என்னையும் தொணதொணத்துக்கிட்டு... சரியான சாப்பாட்டுராமன்டா நீ! எழுந்திரு... போய் புஸ்தகத்தை வெச்சிக்கிட்டு படிக்கிற வழியப்பாரு. நேத்து கூடப் பெரியப்பா உன்னைத் திட்டிக்கிட்டு இருந்தாரு, படிக்கறதே இல்லே... சதா ஊர் சுத்தறேனிட்டு! போய் கொஞ்ச நாழி படிடா.

    சிவா எழுந்து தூணை அணைத்துக்கொண்டு நின்றான்.

    படி... படி... படி... யப்பா... எப்பப் பாரு இதே ஜபம்தானா? இப்ப பள்ளிக்கூடமா இருக்குது! பெரிய லீவு நடக்குதும்மா... யார் வீட்டுலேயும் பிள்ளைகளைப் படிக்கச் சொல்றதில்லே, தெரியுமா? ஏன், பெரியப்பா பிள்ளைங்க மட்டும் படிக்கறாங்களோ? சதா என்னைத் திட்டிக்கிட்டே இருக்கறதுதான் அவருக்கு வேலை... போய்ப் பாருங்க... தெருக்கோடி மைதானத்துலே பத்து இருவது பசங்களா சேர்ந்துகிட்டு சடுகுடு விளையாடறதையும், பட்டம் விடறதையும்... சும்மா என்னை வெரட்டிக்கிட்டு இருந்தா ஆச்சா?

    கனகம் துளி நீர் எடுத்து அரைபட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1