Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devanthi
Devanthi
Devanthi
Ebook286 pages1 hour

Devanthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவந்தி தொகுப்பில் உள்ள கதைகள்…, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மனித வாழ்க்கையின் பல்வேறு முகங்களை அக்கறையுடன் கேள்விக்குள்ளாக்கி அவற்றின் ஒப்பனைகளைக் கலைத்து எறிகின்ற முயற்சிகள். இவை வாழ்வின் அனுபவ உளிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள். படைப்புலகப் பயணத்தில் பதித்துச் செல்லும் தடங்களையும்,பன்முகப்பார்வைகளையும் நேர்மையான அணுகுமுறையோடும், விமரிசனங்களுக்கு அஞ்சாத நெஞ்சுரத்தோடும் பதிவு செய்திருப்பவை. பல்வேறுகால கட்டங்களில் , வேறுபட்ட வார மாத இதழ்களில் வெளிவந்த பல சிறுகதைகளின் தொகுப்பே ‘தேவந்தி’.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580161509504
Devanthi

Related to Devanthi

Related ebooks

Related categories

Reviews for Devanthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devanthi - M.A. Susila

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தேவந்தி

    Devanthi

    Author:

    எம்.ஏ. சுசீலா

    M.A. Susila

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ma-susila

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தேவந்தி

    2. காசு

    3. பொம்பளை வண்டி..

    4. இரு வேறுலகம் இதுவென்றால்…

    5. ஊர்மிளை

    6. ரோக்ஸானாவுடன் ஒரு மாலை…

    7. ‘விட்டு விடுதலையாகி...’

    8. நேரமில்லை

    9. ஓர் உயிர் விலைபோகிறது..!

    10. சங்கிலி

    11. கண் திறந்திட வேண்டும்…!

    12. தரிசனம்

    13. விரிசல்

    14. புதிய பிரவேசங்கள்

    15. ஒரு கணம் ஒரு யுகமாக…

    16. உயிர்த்தெழல்...

    17. முகமூடி

    18. மானிடவர்க்கென்று பேச்சுப்படில்…

    19. வெயில் உகந்தாள்

    20. தடை ஓட்டங்கள்

    21. சாத்திரம் அன்று சதி

    1. தேவந்தி

    நுழைவதற்கு முன்…

    தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு

    சிலப்பதிகாரக் காப்பியத்தில், தலைவி கண்ணகியின் உற்ற தோழி தேவந்தி. மதுரையில் கண்ணகிக்கு நிகழப் போகும் தீமை பற்றித் தனக்கு முன்னறிவிப்பாக ஏற்பட்ட கனவைக் கண்ணகி பகிர்ந்து கொள்வது தேவந்தியோடுதான்.

    தேவந்தியும் கண்ணகியைப் போலவே கணவனைப் பிரிந்திருப்பவள்தான்.

    பூம்புகார் நகரிலுள்ள சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய நீர்த் துறைகளில் மூழ்கிக் காம வேள் கோட்டத்தைக் கை தொழுதால் பிரிந்த கணவன் திரும்பி வருவான் என்று தேவந்தி கூறக் கண்ணகி அதை மறுத்து விடுகிறாள்.

    தேவந்தி இடம்பெறும் ‘கனாத் திறம் உரைத்த காதை’ என்ற இந்தக் காட்சியில், தேவந்தியின் கிளைக் கதையைச் சற்று விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோ.

    அந்தணக் குலத்தில் பிறந்த தேவந்தியின் மாமனாருக்கு இரு மனைவிகள்.அவர்களில் மாலதி என்பவளுக்கு மட்டும் குழந்தைகள் இல்லை.மற்றவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

    குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் மாலதி, மாற்றாளின் குழந்தைக்குப் பாலூட்டப் பால் விக்கி அது இறந்து விடுகிறது. அஞ்சி நடுங்கிய மாலதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புகார் நகரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் ஓடுகிறாள்.அங்கேயே ‘பாடு’ (தவம்)கிடக்கிறாள்.

    ஒரு கட்டத்தில் பிணங்களைத் தின்னும் இடாகினி என்னும் பேய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறைந்து விடுகிறது.

    செய்வதறியாமல் மயங்கும் மாலதியின் மனதிற்குள் பாசண்டச் சாத்தன் என்ற தெய்வ உருவம் தோன்றி ஆறுதல் அளிக்கிறது. தானே குழந்தையாக வந்து அவளது துயரைத் தீர்ப்பதாகக் கூறும் அது அவ்வாறே அவள் முன் ஒரு குழந்தை வடிவில் கிடக்கிறது.அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் செல்லும் மாலதி அவனைத் தங்கள் மகனாக எண்ணியே வளர்க்கிறாள்.

    பாசண்டச் சாத்தனும் மனித உருவில் வளர்ந்து ஆளாகித் தன் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் – நீர்க்கடன் கழிப்பது வரை செம்மையாகச் செய்து முடிக்கிறான்.

    தனது உலகியல் கடமைகளில் ஒரு பகுதியாகத் தேவந்தியை மணந்து எட்டு ஆண்டுக் காலம் அவளோடு வாழ்கிறான்.

    (சாத்தன் தீவலம் செய்து தேவந்தியை மணமுடித்து அவளோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் அவர்கள் கணவன் மனைவி உறவுடன் வாழவில்லை – தேவந்தியும் சாத்தனும் உடல் உறு கூட்டம் இல்லாத் தெய்வக் கற்புக் காதலர் என அறிஞர் தெ. பொ.மீஅவர்கள் குறிப்பிடுவார்)

    எட்டு ஆண்டுகள் முடிந்தபின்,(தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்ததும்) தான் கடவுள் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு அவளோடு இணைந்து வாழாமல்- தன் கோட்டத்திற்குள்(கோயில்)சென்று – அவள் தன்னைக் காண வேண்டுமென்றால் இனிமேல் அங்கேதான் வந்தாக வேண்டுமெனக் கூறிவிட்டு மறைந்து போகிறான்.

    உண்மையை ஊராரிடம் உள்ளபடி கூற முடியாத தேவந்தி, தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும்,அவன் விரைவில் வர வேண்டுமென்பதற்காகவே தான் கோயில் குளங்களைச் சுற்றி வருவதாகவும் கூறி நாட்களை நகர்த்துகிறாள்.

    இறுதியாகக் காப்பியம் முடியும்போது, சேரன் கண்ணகிக்காக எடுத்த கோயிலுக்கு வந்து தன் தோழியை எண்ணிப் புலம்புகிறாள்.அவள் மீது ஆவேசிக்கும் (தெய்வம் ஏறிய நிலை) சாத்தன் வழியாகவே கோவலனின் தாய், கண்ணகியின் தாய், மாதரி முதலியோரின் பழம் பிறப்புக்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணகி கோயில் பூசனைக்கும் தேவந்தியையே பொறுப்பாக்குகிறான் சேரன் செங்குட்டுவன்.

    தேவந்தி கதையின் இந்த அடிப்படை, கீழ்க் காணும் என் சிறுகதைப் படைப்பில் பெண்ணிய நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    இனி……சிறுகதை…

    ***

    தேவந்தி

    அந்தப்புர மேன் மாடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த சிலைகளோடு தானும் ஒருசிலையாய்ச்சமைந்து போய் அசைவற்று நின்று கொண்டிருந்தாள் கண்ணகி.

    இரு நிதிக் கிழவனான அவள் தந்தை மாநாய்கன், தன் செல்வப் புதல்விக்குச் சீதனமாய்த் தந்திருந்த எழுநிலை மாடங்கள் கொண்ட பிரம்மாண்டமான அந்த மாளிகையின் தனிமை …அவள் முகத்தில் அறைந்தது.அதிலும் கோவனோடு பல நாட்கள் ஒன்றாகக் கூடியிருந்து நிலவின் பயனை இருவருமாய்த் துய்த்திருந்த அந்த முத்து மாடம்…. அவளது அந்தரங்கக் கதைகளை ஒவ்வொன்றாகக் காதுக்குள் ஓதியபடி, அந்த வெறுமையின் அவலத்தை மேலும் விசிறி விட்டுக் கொண்டிருந்தது. நினைவு நதி கிளர்த்திவிட்ட எண்ண அலைகளின் ஓங்காரச் சுழலுக்குள் சிக்கிச் சுழன்றபடி அவள் போராடிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில்…. அருகே நிழல் தட்டியது.

    கண்ணகி! நீ இப்போது துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்த கோலம் எப்படி இருந்தது தெரியுமா? கோவலரை நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது போலத்தான் எனக்குத் தோன்றியது.

    என் நிலைமை …நீ கூடப் பழிக்கும்படி ஆகிவிட்டதல்லவா தேவந்தி? ஆனால் ஒரு வகையில் பார்த்தால் நீ சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஒரு வேளை …இன்று காலை நான் கண்ட கனவு மெய்ப்பட்டால்… அவர் விரைவில் என்னை நாடி வருவது உறுதி! அவர் வருவதில் மகிழ்ச்சிதானென்றாலும், அந்தக் கனவின் கோரமான மற்றொருபக்கம்தான் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது…

    முகம் தெரியாதஒரு பட்டினத்தில்…இனம் தெரியாத ஏதோ ஒருவகை ஆபத்து தங்களை எதிர்கொள்ளக் காத்திருப்பதாக அன்று அதிகாலையில் தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கொட்டித் தீர்த்தாள் கண்ணகி.

    இப்படி அந்தப்புரச் சிறையிலேயே அடைந்து கிடந்தால் …உனக்கு வேறு எந்த மாதிரியான கனவுகள்தான் வரக் கூடும் கண்ணகி …? உன்சீறடியை அலங்கரித்த சிலம்பைக் கழற்றி விட்டாய்! நெற்றியில் திலகம் அணிவதையும் நிறுத்தி விட்டாய்! மங்கலத் தாலி ஒன்றைத் தவிரப் பிற எல்லா அணிகலன்களையும் துறந்து விட்டாய்! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி அவரது வருகையை எதிர்நோக்கி இங்கேயே தவமிருக்கப் போகிறாய்? நானும் உன்னைப் போலக் கணவரைப் பிரிந்திருப்பவள்தான்! ஆனாலும் கோயில்…வழிபாடு ….நோன்பு என்று ஏதேதோ செய்து என் மனதை ஆற்றிக் கொள்ளவில்லையா ?..நீயும் வெளியே வா கண்ணகி! வெளிக் காற்றைச் சற்றே சுவாசி!

    தேவந்தி! போதும் நிறுத்திக் கொள்! உன்னை இன்னும் கொஞ்சம் பேச விட்டால் ..சோமகுண்டம், சூரிய குண்டம் என்று புகார் நரத்திலுள்ள புனிதக் குளங்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுவாய்! காமவேள் கோட்டத்தைத் தொழுவதற்குக் கூட என்னை அழைக்க ஆரம்பித்து விடுவாய்!

    அதில் தவறென்ன கண்ணகி?

    அது எனக்குப் பெருமையில்லை தேவந்தி! அது…பீடில்லாத செயல் என்று நினைப்பவள் நான். என் கணவர் என்னிடம் திரும்பி வருகிறார் என்றால்… அது என் அன்பின் வலிமையால்தான் சாத்தியப்பட வேண்டும்! அது எப்போது முடியவில்லையோ …அப்போது பிற புறக் காரணிகளுக்கு அங்கே வேலையில்லை.

    தேவந்தி அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தாள்.

    உன் அன்புக்கோ …அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி!

    அந்த வார்த்தைகள் கண்ணகியைச் சற்றே வியப்பில் ஆழ்த்தின.

    பிறகு நீ ஏன் இப்படிக்….

    கோயில் கோயிலாக வலம் வருகிறேன் என்றுதானே கேட்கப் போகிறாய்? தெரிந்துதான் செய்கிறேன் கண்ணகி! இதனாலெல்லாம் என் கணவர் நிச்சயம் வரப்போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் இப்படியெல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன்

    அப்ப்டியெல்லாம் பேசாதே தேவந்தி! மாதவியின் கலை மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் கோவலர் கூடக் கட்டாயம் திரும்பி வந்து விடுவார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கும்போது உனக்கு ஏன் இந்த விரக்தி ?

    இது விரக்தியில்லை கண்ணகி! நிஜம்! சுட்டெரிக்கும் நிஜம்!

    உன் கணவர் தீர்ர்த்தத் துறைகளில் படிந்து வரத்தானே போயிருக்கிறார்?

    அது …இந்த உலகின் கண் முன்னே அரங்கேறும் நாடகம்! ஆனால் உண்மை வேறெங்கோ பாதாளத்தில் பதுங்கிக் கொண்டு கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    என்னிடம் அதைப் பகிர்ந்து கொள்வதால் உனக்கு ஆறுதல் கிடைக்குமென்று நீ நினைத்தால்…

    கண்ணகி வார்த்தையை முடிப்பதற்கு முன் தேவந்தி வெடித்தாள்.

    "என்றாவது ஒரு நாள் உன்னிடம் மட்டுமே அதைச் சொல்லியாக வேண்டும் என்ற

    தாகத்துடன் …என் நெஞ்சக் கூட்டுக்குள் அடைகாத்து வருகிறேன் கண்ணகி!என் கதையின் மூல வேரை ..அதன் சரியான அர்த்தத்தில் உள் வாங்கிக் கொள்ள உன் ஒருத்தியால்தான் முடியும்!"

    கண நேரம் அமைதி காத்த தேவந்தி …தன் கதையைத் தொடங்கினாள்.

    என் கணவரின் தந்தைக்கு இரண்டு மனைவியர். மூத்தவளான மாலதிக்குக் குழந்தை இல்லாமல் போய் விட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் மணந்து கொண்டார். அவளுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையைப் பொறுப்போடும், கரிசனத்தோடும் சீராட்டி வளர்த்ததெல்லாம் மூத்த மனைவி மாலதிதான்

    ‘குறுகுறு நடந்து …சிறுகை நீட்டி ..இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்துமாய் ..அந்தப் பிஞ்சுக் குழந்தை தரும் பிள்ளை இன்பத்தில் தன்னை மறந்து லயித்துக் கிடந்தாள் மாலதி.மயங்க வைக்கும் அந்த மழலைச் செல்வத்திற்கு முன்னால் தன் கணவர் மறுமணம் செய்து கொண்ட துயரம் கூட அவளைப்பெரிதாகப் பாதிக்கவில்லை.

    அவள் மடியில் கிடந்த அந்த மகவு சிணுங்கியது; கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதது ;துணி விரிப்பில் அதைக் கிடத்தி விட்டுச் செம்பில் பாலும், வெள்ளிச் சங்கும் எடுத்து வந்த மாலதி குழந்தையை மடியில் கிடத்திச் சங்கில் பால்புகட்டத் தொடங்கினாள். அதன் தாயும், அவளதுகணவரும் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.

    ‘இந்தப் பாவியைக்குடல் விளக்கம் செய்ய ஒரு மகள் ஜனிக்காமல் போனால்தான் என்ன ?நான் தான் பத்துத் திங்கள் சுமக்காமல்…பிள்ளைவலி என்னவென்றே தெரியாமல் இந்தக் குழந்தைக்குத் தாயாகி விட்டேனே..? நல்ல வேளையாக …இவ்வாறு நான் குழந்தையைப் பார்த்துக் கொள்வதை அவள் தவறாக எண்ணவில்லை. ஒருக்கால் கணவரோடு கூடச் சேர்ந்து, நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களுக்குச் சென்றுவர இது வசதியாக இருப்பதாகக் கூட அவள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…சரி! அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதைப் பற்றி எனக்கென்ன வந்தது ?மடியை நிறைத்துக் கிடக்கும் இந்த மழலையைப் பார்த்தபடியே என் பொழுதை ஓட்டி விடலாமே..?"

    ஏதேதோ எண்ணங்களில் மிதந்தபடியே அவள் பாலைப் புகட்டிக் கொண்டிருந்தாள். திடீரென்று, சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் குழந்தையிடமிருந்து ஒரு செருமல்! புரையேறி மூச்சு அடைத்துக் கொண்டுவிட்டதைப் போல ஒரு திணறல்..! செய்வதறியாமல் அவள் திகைத்து நின்ற அந்த ஒரு நொடிக்குள் குழந்தையின் தலை துவண்டு சரிய, அது இறந்து விட்டதாகவே முடிவு கட்டிக் கொண்ட மாலதி…., பிரபஞ்ச சோகம் முழுவதையும் ஒன்றாக உள்ளடக்கி ஓலமிட்டாள்.

    குழந்தையை இழந்து விட்ட அவலம் ஒரு புறமும், மாற்றாளின் மகவைச் சாகடித்துவிட்ட பழிச் சொல் மறுபுறமுமாய்ப் பதை பதைத்து நடுங்கியது அவள் உள்ளம்! அண்டை அயலாரிடம் ஆலோசனை கேட்கப் போய்..அந்தச் செய்தி அனைவருக்கும் அஞ்சலாக்கப்படுவதிலும் அவளுக்குச் சம்மதமில்லை.

    சேலைக்கிழிசல் ஒன்றில் குழந்தையைப்பொதிந்து தோளில் கிடத்தியபடி…பூம்புகார் நகரத்திலுள்ள இந்திரக் கோட்டம் தொடங்கி, வேற்கோட்டம், நாகர் கோட்டம் என அங்குள்ள கோயில்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வலம் வரத் தொடங்கினாள் மாலதி. அங்கிருந்த தெய்வ சன்னிதிகளின் முன்னிலையில் குழந்தையக் கிடத்தி மனதுக்குள் கதறினாள். குழந்தை இன்னும் கூடப் பேச்சு மூச்சு இல்லாமல்தான் கிடந்தது.

    மாலதியின் உள்ளுணர்வில் ..அவளது குலதெய்வமான பாசண்டச் சாத்தனின் உருவம் திடீரென்று மின்னலடிக்க …அங்கே சென்று பாடு கிடக்கலாம்… அந்தக் கடவுள் முன்பு பழியாய்க் கிடக்கலாம் என்று எண்ணியவளாய், அலறிப் புடைத்தபடி… அங்கமெல்லாம் அலுங்கிக் குலுங்கக் கோயிலை நோக்கி ஓட்டமும், நடையுமாய் அவள் செல்லத் தொடங்கினாள். நகரத்திற்கு வெளியே ..எங்கோ தொலைதூரக் காட்டுப் பகுதியில் இருந்த அந்தக் கோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்த அவள்,அதன் முற்றத்திலேயே குழந்தையோடு மயங்கிச் சரிந்தாள்.

    தன் நினைவு தவறிக் கிடந்த மாலதியின் ஆழ்மனதிற்குள் ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தான் பாசண்டச் சாத்தன். ஒரு நேரம் அவளுக்குள் விசுவ ரூபம் எடுத்து விண் முட்ட வளரும் அவன், அடுத்த கணத்திலேயே அழகுக் குழந்தையாகித் தவழ்ந்து தளர் நடையிட்டபடி ..அவள் மடி தேடி ஓடி வந்து விடுவான்.ஒரு நிமிடம் தெய்வமாக ஆசி வழங்கும் அவன், அடுத்த நிமிடத்திலேயே மண்ணளைந்த கையோடு …மிரண்டு போன பாலகனாக அஞ்சி வந்து அவள் முன்பு நின்று விடுவான். அவன் தெய்வமா…? இல்லை தெய்வக் குழந்தையா..?

    மயக்கம் முழுதுமாய்த் தெளிந்திராத மாலதி ..சாத்தனின் திரு உருவச் சிலைக்குமுன்னால் அரைகுறையாகக் கண் விழித்தாள்….

    ‘என்ன இது…சிலை வடிவத்தில் சாத்தனின் முகம் என் கண்ணுக்குத் தெரியவில்லையே ..?அங்கே எனக்குத் தட்டுப்படுவது …என் குழந்தையின் முகமல்லவா..?’

    எங்கிருந்தோ ஒரு குழந்தையின் முனகல் ஓசை …மெதுவாய்…மிக மெதுவாய்க் கேட்கச் சாத்தனின் முகத்திலிருந்து மெள்ளத் தன் பார்வையை மீட்டுக் கொண்டாள் மாலதி. கோயில் முற்றத்தில் அவள் கிடத்தியிருந்த குழந்தை…கை, கால்களை உதைத்தபடி, சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.அதை அள்ளி எடுத்துக்கொண்ட அவள் அதன் காதுகளில் ஓதினாள் ‘நீ….குழந்தை இல்லை..கண்ணே ..நீ என் தெய்வம்..’

    அந்தக் குழந்தைதான் என் கணவர்என்றபடி கதைக்குச் சற்று இடைவெளி விட்டாள் தேவந்தி.

    அப்படியென்றால் உன் கணவர் உருவில் உருவில் பாசண்டச் சாத்தனா…?

    "அப்படி யார் சொன்னது..?அது என் மாமியார் அவளாகவே ஏற்படுத்திக் கொண்ட மனப்பிரமை! அது அவள் கொண்ட மன மயக்கம்! குழந்தையைச் சாகடித்துவிட்ட பழி, தன் மீது விழுந்து விடுமோ என்ற பதட்டமான உணர்ச்சியின் பிடியில் அவள் சிக்கியிருந்த நேரத்தில், பால் விக்கியதால் பாலகன் சோர்ந்திருக்கிறானா …அல்லது உண்மையிலேயே அவன் மாண்டு விட்டானா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட அவளுக்குத் தோன்றாமல் போயிருக்க வேண்டும்! குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடிய ஓட்டத்திலும், அதைப் போட்டுக் குலுக்கி எடுத்ததிலும் அதற்கு ஏற்பட்ட விக்கலும் மூச்சுத் திணறலும் இயல்பாகவே சீராகி விட்டிருக்கிறது! அப்படித்தான் அது நடந்திருக்க வேண்டும்! ஆனால் இறுதி வரை அவள் அப்படி நினைக்கவே இல்லை .தான் உறுதியாக நம்பிய கடவுளின் அருளால்தான் மகன் பிழைத்தான் என்று பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல எண்ணக் கூட அவள் தயாராக இல்லை. குழந்தை முதலிலேயே இறந்து போய் விட்டது

    Enjoying the preview?
    Page 1 of 1