Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உரிமை கொண்டாடு உயிரே..!
உரிமை கொண்டாடு உயிரே..!
உரிமை கொண்டாடு உயிரே..!
Ebook116 pages40 minutes

உரிமை கொண்டாடு உயிரே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுதான் சரிவுக்குக் காரணம்! வெளியில சொல்லி பாக்கியம் புலம்பி பல முறை அழுதது உண்டு. ஆனால், கணவர் வாய்விட்டு அழமாட்டார். உள்ளே உடைந்து அழுதது மனைவிக்கு தெரியாது.
 இது அவரது உடல் நிலையை கடுமையாக பாதித்துவிட்டது.
 மகனைப் பற்றிய தகவல்களை பாக்கியம் அறியாமல் ரகசியமாக சேகரித்தார்.
 அவன் ஊர் சுற்றி அலைந்து- குடித்து- உருண்டு சீரழிவதை, அவமானப்படுவதை தெரிந்துகொண்டார்.
 அவனை ஆதரிப்பது தவறு என்று மவுனமாக பற்களை கடித்துக்கொண்டு இருந்துவிட்டார்.
 வீடு - மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ளது.
 'பேங்க் பேலன்ஸ்' கிட்டத்தட்ட அறுபது லட்சம்.
 மாசம் 'பென்ஷன்' நாப்பதாயிரம் ரூபாய் வரும்.
 தவிர... தங்கம், வெள்ளி என வீட்டில் சகலத்துக்கும் ஒரு குறையும் இல்லை. ஆனால், நிம்மதி சுத்தமா இல்லை.
 அது சாய்ந்துவிட்டது.
 அடிக்கடி ஆஸ்பத்திரி- மருத்துவச் செலவு.
 இதோ உச்சக்கட்டம்!
 உள்ளே திணறிக்கொண்டிருக்கிறார்.
 இரவு எட்டரை மணிக்கு கிரிஜா மட்டும் வந்தாள். குழந்தைகளைவிட்டு அவள் கணவரால் வர முடியவில்லை.
 மகளைப் பார்த்ததும் அழுதாள் பாக்கியம்கிரிஜா, டாக்டரைப் பார்த்தாள்.
 "நுரையீரல்கள் ரெண்டும் பழுதாகிடுச்சும்மா! 'ஆபரேஷனை' உடம்பு தாங்காது. இனி நம்பிக்கை இல்லைம்மா. எந்த நேரமும் நீங்க முடிவை எதிர்பார்க்கலாம்."
 டாக்டர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.
 காலை ஏழு மணிக்கு விமானத்தில் தனுஜா வந்துவிட்டாள். அவள் கணவரும் வந்தார்.
 டாக்டர் வெளிப்பட்டார்.
 "நினைவு திரும்புது. அவர் பேச நினைக்கிறார். யாராவது ஒருத்தர் போங்க..."
 பாக்கியம் உள்ளே வந்தாள்.
 அழுகை பீறிட்டது.
 "உங்களுக்கு ஏன் இந்த நிலை? குடும்பத்துக்காக எப்படியெல்லாம் உழைச்சீங்க? கடைசிக் காலத்துல நிம்மதியா ஏன் உங்களை அந்தத் தெய்வம் வாழ விடல?"
 "பாக்கியம்! நான் பிழைக்கமாட்டேன்."
 "அப்படி சொல்லாதீங்க. டாக்டர்கள் போராடுறாங்க."
 "பலிக்காது பாக்கியம். நான் முடிவை நெருங்கிட்டேன்னு என் உள்ளுணர்வு சொல்லுது."
 "வேண்டாங்க."
 "மரணத்தைத் தள்ளிப் போடலாம்! ஆனா, தடுத்து நிறுத்த முடியாது."
 அவள் விசும்பினாள்.
 "நான் செத்துட்டா எனக்குக் கொள்ளி போடுறது யாரு பாக்கியம்?"
 "அப்படியெல்லாம் பேசாதீங்க."ம்... 'பிளீஸ்' பாக்கியம். 'சென்டிமென்டை' விட்டுட்டு எதார்த்த வாழ்க்கைக்கு வா. பேச முடியாம போயிட்டா, நீ வேதனைப்படுவே! என்னிக்கா இருந்தாலும் இது நடந்துதானே ஆகணும்!"
 பாக்கியம் நிமிர்ந்தாள்.
 "நீங்க சொன்ன அந்த உரிமை ஒருத்தனுக்குத்தான் உண்டு."
 "யாரைச் சொல்றே?"
 "நம்மப் பிள்ளை சுபாஷ்தான்."
 "சரி. அவன் இப்ப எங்கே இருக்கான்?"
 "ம்... 'போன்'ல பேசுறேன். பேச வேண்டிய நேரம் வந்தாச்சு. நான் வரவழைக்கிறேன். உங்க அனுமதி வேணும் எனக்கு."
 "இதை மறுக்க எனக்கே உரிமை இல்லை பாக்கியம்."
 "நான் இப்பவே பேசுறேன்."
 "ஆனா, கிரிஜா ரகளை பண்ணுவா பாக்கியம்."
 "அவ யாரு...? என் பிள்ளையை நான் கூப்பிடுறதைத் தடுக்க கடவுளுக்குக்கூட உரிமை இல்லை. உங்க அனுமதி மட்டுமே வேணும்."
 "கூப்பிடு பாக்கியம்."
 "ரொம்ப சந்தோஷம்."
 வெளியே வந்தாள் பாக்கியம்.
 "அப்பா பேசினாரா... என்னம்மா சொல்றார்?"
 பாக்கியம் எதுவும் பேசாமல் இந்தப் பக்கம் வந்தாள்.
 தன் 'செல்போனை' எடுத்து எண்களை அழுத்தினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798215710265
உரிமை கொண்டாடு உயிரே..!

Read more from Devibala

Related to உரிமை கொண்டாடு உயிரே..!

Related ebooks

Reviews for உரிமை கொண்டாடு உயிரே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உரிமை கொண்டாடு உயிரே..! - Devibala

    1

    அம்மா பாக்கியம் பதற்றமாக இருந்தாள். இரவு முழுக்க உறங்காத அவள் கணவர் வேலாயுதம் அதிகாலை நேரத்தில் மூச்சுவிட முடியாமல் தவிக்க ஆரம்பித்தார்.

    ஏற்கெனவே அவருக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா தொல்லை நிறையவே உண்டு.

    இருப்பிடம் கோவை!

    பருத்தியின் தூசு... பார்த்தீனியம் செடியின் தாக்கம்... ஊட்டியின் குளிர்காற்று- மூன்றும் சேர... பல நேரம் ஆஸ்துமா உச்சக்கட்டத்தை எட்டிவிடும்.

    உடனே ஆஸ்பத்திரிக்கு சென்றாக வேண்டும்.

    அறுபத்தி இரண்டு வயசு. வேலாயுதம் வாழ்வதே மருந்தில்தான்!

    இதோ மூச்சுத் திணறல்.

    இந்த முறை அதிகமாக இருப்பதாகப்பட்டது!

    பாக்கியம் உடனே ‘போன்’ செய்ய, அவளுக்குத் தெரிந்த ஒரு கார் டிரைவர் உண்டு.

    சீக்கிரம் வாங்க தம்பி. அப்பாவுக்கு முடியல. உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.

    பத்தே நிமிடங்களில் கார் வந்துவிட்டது.

    அதற்குள் தானும் தயார் செய்துகொண்டு, அவரையும் தாங்கிப் பிடித்தபடி பாக்கியம் வர... டிரைவர் கண்ணன் உதவி செய்ய... கதவைப் பூட்டிக்கொண்டு காரில் ஏறினார்கள்.

    அரை மணியில் ஆஸ்பத்திரி!

    டாக்டர் பரிசோதித்தார்.

    அவருக்கு ரொம்ப அதிகமா இருக்கு. ‘அட்மிட்’ பண்ணிருங்கம்மா. நிறைய ‘டெஸ்டு’ எடுக்கணும்!

    வேலாயுதம் மூச்சு விட முடியாமல் தவிக்க... கண்கள் ஒரு மாதிரி செறுகிக்கொள்ள...

    பாக்கியம் பயந்தாள்.

    பத்தே நிமிடங்களில் டாக்டர் வெளியே வந்தார்.

    நிலைமை சரியா இல்ல. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கிறேன்.

    அய்யோ... அவருக்கு ஆபத்தா?

    இப்ப எதுவும் சொல்ல முடியலைம்மா. பிள்ளை, பொண்ணு இருந்தா தகவல் குடுத்துடுறது நல்லது.

    பாக்கியம் மிரண்டு போனாள்.

    உடனே உள்ளூரில் இருக்கும் அவரது தம்பி மகனுக்கு ‘போன்’ செய்தாள்.

    பிரசாத், பெரியப்பாவை ஆஸ்பத்திரியில ‘அட்மிட்’ பண்ணியிருக்கேன். நிலைமை சரியா இல்லைடா... உடனே வா.

    இப்பவே வர்றேன் பெரியம்மா.

    அடுத்து சென்னைக்கு ‘போன்’ செய்தாள்.

    அவளது மூத்த மகள் கிரிஜா, குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறாள்.

    கிரிஜா... அப்பாவுக்கு நிலைமை மோசமா இருக்கு! உடனடியா புறப்பட்டு வாடி.

    வழக்கமான ஆஸ்துமாதானே?

    இந்த முறை நிலைமை சரியா இல்லை! ‘பையன், பொண்ணுக்கு தகவல் சொல்லிருங்க’ன்னு டாக்டர் சொல்றார்.

    சரிம்மா! நான் வர்றேன்.

    டெல்லியில் இருக்கும் இரண்டாவது மகள் தனுஷாவுக்கும் தகவல் தந்தாள்.

    படபடப்பாக இருந்தது.

    உள்ளூர் தம்பி மகன் பிரசாத், தன் மனைவி கவிதாவுடன் உடனே வந்துவிட்டான்.

    என்ன பெரியம்மா?

    பாக்கியம் அழத் தொடங்கினாள்.

    டாக்டர் சொல்றதைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்குடா பிரசாத்.

    பெரியப்பாவுக்கு வழக்கமா உள்ளதுதானே... சரியாயிடும். நீங்க கவலைப்படாதீங்க.

    டாக்டர் அப்படிச் சொல்லிட்டாரே...! அதான் கலக்கமா இருக்கு.

    அந்த நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார்.

    அவரிடம் விசாரித்தான்.

    நுரையீரல் ரெண்டும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. அதனால சுவாசப் பிரச்சினை அதிகமா இருக்கு. சிகிச்சை நடந்துட்டிருக்கு. அவர் வயசுக்கு தாக்குப்பிடிக்க முடியல. செயற்கை சுவாசம் கொடுத்திருக்கோம். முடிஞ்சவரைக்கும் பாக்கிறோம். இப்ப நினைவும் இல்லை.

    அவர் உள்ளே போய்விட்டார்.

    ஒரு ‘நர்ஸ்’ வந்து ஐம்பதாயிரம் முன்பணம் கட்டச் சொன்னாள்.

    பிரசாத்! நான் ‘செக்’ தர்றேன். ‘பேங்க்’ல போய் பணத்தை எடுத்துட்டு வந்துருப்பா.

    சரி பெரியம்மா!

    கவிதா அருகில் வந்தாள்.

    நான் உங்கக்கூடவே இருக்கேன்... கவலைப்படாதீங்க. உங்களுக்கு தேவையானதை வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வர்றேன் அத்தே.

    அவர் ‘ஐ.சி.யூ.’வில் இருந்ததால் தனி அறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. பாக்கியம் வெளியில் உட்கார்ந்துவிட்டாள்.

    வேலாயுதம் மத்திய அரசாங்கத்தில் உயர் அதிகாரி. பெரிய படிப்பாளி. பல முறை வெளிநாடு சென்று வந்தவர். புத்திசாலி. நல்ல மனிதர்.

    நன்றாக சம்பாதித்தவர்.

    நாலு பிள்ளைகள்!

    மூத்தவள் கிரிஜா- முப்பத்தி நாலு வயசு. இரண்டு குழந்தைகள். தனியார் நிறுவனத்தில் அதிகாரி. கணவர், சென்னையில் வங்கி அதிகாரி.

    பிடிவாதமான முன்கோபக்காரப் பெண் கிரிஜா.

    யாரையும் மதிக்கமாட்டாள்.

    வசதி படைத்த, புத்திசாலி வேலாயுதத்தின் மூத்த மகள் என்பதால் அகங்காரத்தின் உச்சியில் இருப்பாள்.

    அப்பாவின் செல்லப் பெண்.

    அப்பாவையே தூக்கி எறிவாள்.

    அம்மா பாக்கியத்துக்கு ஆரம்பம் முதலே மகளுடன் மோதல்தான்!

    ‘அவள் அப்படி இருக்கக்கூடாது’ என்று பல முறை போதித்தும் எடுபடவில்லை.

    நீங்க குடுக்கற செல்லத்துல குட்டிச் சுவராகியாச்சு. இது நல்லதில்ல என்று கணவருடன் வாதிடுவாள் தாய்.

    பிரபுவுடன் கிரிஜாவுக்கு கல்யாணம் நடந்தது.

    ஒரே ஆண்டில் கணவரின் உறவுகளை உடைத்து, ராட்சசி மாதிரி நடந்து, மாமனார்- மாமியார் இருவரும்... ‘விட்டால் போதும்!’ என்று மற்ற பிள்ளைகளிடம் ஓடிவிட்டார்கள்.

    பிரபு இவளிடம் போராட முடியாமல் சூழ்நிலை, குடும்ப கவுரவம், பிள்ளைகளின் மனநிலை எல்லாம் பார்த்து அடங்கிப் போய்விட்டார்.

    ‘பெண் துணிந்துவிட்டால், படைத்த பிரம்மனால்கூட கட்டுப்படுத்த முடியாது’ என்பது பழமொழி!

    அதன் வாழும் உதாரணம் கிரிஜா.

    வீட்டில் ஆட்சி அவள் கையில்...

    பிரபு அடங்கிப் போன புருஷன்.

    வேலாயுதத்தின் அடுத்த மகள் தனுஷா. முப்பத்தி ரெண்டு வயது. குடும்பத் தலைவி. கணவன் சுனில், டெல்லி அரசாங்கத்தில் முக்கிய பதவி. ஒரு பெண் குழந்தை.

    யார் வம்புக்கும் வரமாட்டாள்.

    கல்யாணம் ஆனது முதலே டெல்லி வாசம்தான்.

    ஆண்டுக்கு ஒரு முறை பெற்றவர்களைப் பார்க்க வருவாள்.

    நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு போய்விடுவாள்.

    அமைதியான பெண்.

    அக்கா கிரிஜாவுக்கு நேர் எதிர்!

    அக்காவின் மனப்போக்கு, நடத்தை, பேச்சு, செயல்பாடு எதுவும் சின்னவளுக்குப் பிடிக்காது. ஓரிருமுறை எடுத்துச் சொன்னபோது, கிரிஜா அவளை உலுக்கிவிட்டாள். துவைத்து காயப் போட்டுவிட்டாள்.

    அது முதல் தனுஷா அவளிடம் பேச்சே வைத்துக்கொள்வதில்லை. இரண்டு பெண்களுக்கும் ஆளுக்கு ஐம்பது சவரன் நகை போட்டு, பிரமாண்டமாக கல்யாணம் செய்து கொடுத்ததார் வேலாயுதம்.

    பிரசவம் வரை பார்த்து... பிறந்த வீட்டின் கடமைகளை நன்றாகவே நிறைவேற்றினர்.

    இந்த இருவருக்கும் பிறகு பிறந்த ஒரே மகன் சுபாஷ்.

    இப்போது இருபத்தி எட்டு வயது.

    அம்மா செல்லம்.

    ஒரே பிள்ளை என்பதால் பாக்கியத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1