Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Buddhanin Viral Pattriya Nagaram
Buddhanin Viral Pattriya Nagaram
Buddhanin Viral Pattriya Nagaram
Ebook497 pages1 hour

Buddhanin Viral Pattriya Nagaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதை நூல். இதில் கவிஞனின் உணர்வுகள் கவித்துவம் நிரம்பியதாய் பதிவாகியிருக்கின்றன. வாழும் காலத்தில் இயற்கையையும் வாழ்வையும் கொண்டாடும் கவிஞன்.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580165309767
Buddhanin Viral Pattriya Nagaram

Read more from Iyyappa Madhavan

Related to Buddhanin Viral Pattriya Nagaram

Related ebooks

Reviews for Buddhanin Viral Pattriya Nagaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Buddhanin Viral Pattriya Nagaram - Iyyappa Madhavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புத்தனின் விரல் பற்றிய நகரம்

    Buddhanin Viral Pattriya Nagaram

    Author:

    அய்யப்ப மாதவன்

    Iyyappan Madhavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/iyyappan-madhavan

    பொருளடக்கம்

    ஏழெட்டுப் பெண்கள்

    பகலைச் சொல்ல ஒரு இரவு

    பிம்பங்களின் ஆட்டம்

    பெனீட்டா என்பது ஒரு ஓவியத்தின் தலைப்பு

    ஆளற்ற தொலைபேசி

    சரீரமணம்

    உருகும் இரவுகள்

    நெய் - பந்தம்

    மாயாவிக்கண்கள்

    காதலின் தாளம்

    விந்து நதி

    ஆரம்ப வெளி

    குடிகாரனும் - தெருக்காகிதங்களும்

    நிழலின் உருவம்

    ஜடசித்தம்

    பூட்டப்பட்ட அறை

    நடிக்கும் இன்றுகள்

    பிறகொரு நாள் கோடை

    செத்த எலிகளின் பயணம்

    இன்று

    புல்வெளிக் கூடாரங்கள்

    துரு ஏறிய கூண்டு

    சியர்ஸ்

    அடங்காமை

    மெய் உடல்

    பெயர்

    உதிரும் மனுக்கள்

    இருட்டின் உருவம்

    தலைத்தொப்பி

    கடவுளின் கை

    அவன்

    காலம் ஒரு உயிர்க்கொல்லி

    வேறு வேறு

    இரைகளுக்கான தூண்டில்

    என்ன ஆயிற்று

    அரக்கு நிற கண்கள்

    பீர்போத்தல் - கடல்

    ஃபாசிசம்

    புலி இனம்

    மொழியற்ற உடல்

    பெருநகரத்தில் அபாயம்

    கருங்கல் பழக்கங்கள்

    யாரவன்?

    பாதாளப் பேரழகி

    மோகனின் மஞ்சள் சட்டை

    குள்ள சைக்கிள் மீதான பொறாமை

    ஆஷ்ட்ரேயின் குரல்

    மிக அருகில் குழந்தைகள்

    சுமை தூக்குபவன்

    பனி இளவரசி

    துரு

    அணில்

    நகரும் அறை

    சூறையாடல்

    குன்றுகளிடையே மறையும் வயலின்

    பூந்தொட்டி உடையும் இரவு

    புகையும் சாவி

    வீடு

    மழையின் பாடல்

    கடலுக்குள் ததும்பும் இருள்

    நீயற்ற கடற்கரை

    லட்சுமியின் பிராந்திவாடை

    திருவிளையாடல்

    பேய்கள் ஒளிந்துள்ள மோனிகாவின் மரம்

    வர்ணப் புலிகள்

    காட்டின் ரூபம்

    வாசனை

    ஒரு வான்கோழியின் ஊரில்

    புகை பரவும் பூட்டிய வீடு

    நசுங்கிய குவளைகள்

    திரள்திரளாய் இருட்டு

    உயிர்க்கொல்லி

    அரிக்கேன் படகு

    மோனிகாவின் சிங்கம்

    வெகுதூரத்தில் நகரம்

    ஆரஞ்சு

    ஒரு ஜோடி குதிரைகளைப் போன்ற ஷூக்கள்

    ஜன்னலிருக்கும் அம்மாவின் மச்சு வீடு

    தப்பி ஒரு கொய்யா

    புதிரான புலியின் வால்

    பொம்மை உலகு

    மாயக்கதவின் அறை

    நீராலான கடவுள்

    வெவ்வேறான முத்தங்கள்

    விரல்களால் சுடுகிறாள்

    அரக்கு நிற நீள் வட்டங்கள்

    தும்பிகளின் தாவரக்காடு

    மறையும் பழங்கள்

    நிலையற்ற தலை

    திருட்டுக் கொய்யா

    என்னிடம் எதுவுமில்லை

    கடற்கரை

    கடலுக்குள் ததும்பும் இருள்

    கண்களாகும் வார்த்தைகள்

    பறந்துவிட்ட குரங்கு

    வண்ணத்திற்கு ஒரு பெண்

    பழுதாகும் கடிகாரம்

    கடல் பொம்மை

    இளவரசியுடன் போதை நாள்

    கூர்மை நிறைந்த ஒரு பாடல்

    சாபமிடும் ஒரு கவிதை

    இதயமில்லாத மழை

    எஸ் புல்லட்

    கவண்

    கடலானவள்

    மேனியின் புகை

    கீறல் விழுந்த வெளி

    36வது மாடி

    பனிப்பெண்

    சேவல் முட்டை

    மூவர் கதை

    மின்மினி வீடு

    சுய இன்பம்

    துன்பமற்றவன்

    எலும்புகள் உடையும் ஜாமம்

    தூண்டில்காரன்

    மைனஸ் குளிர்காலம்

    மறுஜென்மம்

    அணுகுண்டுகள்

    இரவல் பனிக்கட்டி

    இரவு நடுக்கம்

    மதுரசத்தின் பூனைகள்

    கடற்பயணம்

    நொடி மாயம்

    அணைக்கட்டுப் புலி

    சொல்கொப்பரை

    கொட்டடி

    புதுப்பாடல்

    நகரத்தில் நரகம்

    அகாலம்

    காண்டாமிருகம்

    கடல் விளிம்பு வான்

    குட்டிமீன்கள்

    பாயும் பசி

    பூனைகளுடன் உரையாடல்

    3366 க்வாலிஸ்

    வாத்தாகிய நான்

    விழுதுகள்

    50மிலி பெட்ரோல்

    மூன்று ஐம்பது ரூபாய்

    முனகல்

    ஆட்டுமவள்

    ஃபுல்லா சும்மா

    நிலப்பாய்ச்சல்

    உயிர் மர்மம்

    இப்படியும் ஒரு குடில்

    புணர் வாழ்வு

    மலைப் பெண்

    அவள் ஒரு ஊதா நிறம்

    ஒளிரும் விபத்து

    வழுக்கை தலை மைதானம்

    VIBGYOR

    திருவல்லிக்கேணி பழைய தெரு

    ஒலிக்கும் வலி

    பருவம் மூடிய பெண்

    சுவரேறும் இச்சை

    ரூபாய். 600 லாபம்

    குருதி ஓயாத ஆம்புலன்ஸ் குரல்

    நீர் மூடிய மடை

    பைத்திய கடல்வெளி

    மென்விரல் திறவுகோல்

    அப்சலூட் வோட்கா நீர்ச்சுழிகள்

    காவலில் உறங்கும் முதலாளி

    புழுதி பறக்கும் புத்தகம்

    மாயத் தலை உடல்

    அம்சா அக்கா மல்லிகா மோகன்

    உயிர் விடும் பிரம்மை

    மெக்டோவல் மற்றும் தோட்டம் சேகர்

    ஒரு மகிமை

    பெண்துளி வெளியேறும் ஒரு கிளாஸ்

    வௌவால்கள் தின்ற சிலை

    குவளையிரவு

    8 millions ways to die

    நீர் உள்ளிறங்கும்

    சாமி புராணம்

    பழுதாகுமவள்

    சொல்ல முடியா நாள்

    செயற்கைவிரல் குழந்தை காயத்திரி

    சிவப்பு காதல்

    பித்தக்கொடி

    சாயா உலகம்

    சுழல்நாற்காலி சிந்தியா

    பச்சை ஓணான்

    இரவின் இருபது கண்கள்

    காற்றுத்தாவணி

    ஒன்றே ஒன்று

    உதட்டில் சாமம்

    பெரிதான புரவிகள்

    கோரவரிப் பெண்

    விரியும் அபின்

    வியியியாவு

    முத்தக் குளம்படிகள்

    உடலுக்குள் இறகாகும் மனம்

    தலைவெடிக்கும் பருத்தி

    சொற்களைப் பிரியாதவன்

    பனி மெழுகிய மரங்கொத்தி

    கூதிர் பருவம்

    நீர்சாகசம்

    அகால நிசப்தம்

    பாயும் காலம்

    தக்கை போன்ற மையல்

    மரம்போன்று அவனுதிர்க்கம் மஞ்சளிலைகள்

    அப்பழுக்கற்ற பர்வதம்

    கிழித்தனர் சிக்குண்டிருப்பதை

    உறங்கா யாழ்நகரம்

    சன்னல் முறித்தவள்

    இருளாகிய பரிதியில் நிலவு

    பாழ் வெளி யுவதிகள்

    இறந்த கல்

    சாம்பல் பறவை

    ஸ்பேட் ரம் விஸ்கி

    அவனைப் போலில்லாதவர்கள்

    மிருகம் மெல்லும் சொற்கள்

    மஞ்சள் நிற ஓவியன்

    பனிக்கட்டிப் பெண்பூனை

    புலனுறையும் சத்தங்கள்

    கண்ணாடிக்குள் தொடர்ந்த கடந்த காலம்

    கண்ணாடி ஆப்பிள்

    முழுச்சுவராகிப் போனவன்

    சிலுவையில் மரணம்

    இறந்தவனின் வீடு

    ஒரு ரூபாய் சிறு ஊறுகாய் பைகள்

    நிழலாடும் தனிமை

    புல்லாங்குழலாய் மாறியபொழுது

    நாற்பதில் பன்னிரெண்டு வயது

    சிரங்காகிக்கிடந்தேன் வைத்தியம் பார்த்தாள்

    கொலைப்பணி

    ஏக்ரான் நதிக்கரையின் மஞ்சள் பூக்கள்

    குறிப்பு

    பனிக்கால நினைவு

    அவள் சொர்க்கத்திற்குச் சென்றிருப்பாள்

    கிடாய்

    விரல்நுனி ஒரு கணம்

    நிலம் மீட்க திரும்புவான்

    அந்தியில் ஒரு பறவை இசை

    கல் உறக்கம்

    வெண்ணெய்யால் ஆன நிலவு

    மீண்டுமொரு முறை இறப்பதற்கு

    மாதுளை மீது சிவந்த காபூல் நகரம்

    கலவியும் யுவதிகளும்

    கால்வயிற்றிரவுகள்

    பிழைப்பின் வானவில்

    தாழப் பறந்த முகில்கள்

    மரித்த என் மொழி

    கடந்த வாழ்வு

    இரவெனும் சூன்யம்

    நிலம் வந்த நட்சத்திரங்கள்

    யாழ் இனிது

    மெடூசா

    கானல் குவளை

    நத்தை போன்றதொரு மெல்லிய காதல்

    கடல் தந்த யாழ்

    ஊனம் நீக்குகிறாள்

    வெற்றுத் தூண்டில்

    ஜாமம் தாண்டிய தூக்கம்

    நகங்களை அவன் மீது தெளித்தாள்

    மஞ்சளழிகில் கடந்துபோகிறாள்

    நான் சுருங்கிய ஆலமரம்

    கவிழ்ந்த நித்திரை

    நீயாகுதல்

    மாமிசம்

    காற்றின் மீதே உறங்குகின்றனர்

    ஆறாம் அறிவற்ற பறவை

    பச்சையம்

    புநுஆஐழிஐ டீசுஐனுபுநு

    முன் வாசல்வரை வந்திருந்தவர்கள்

    அபூர்வங்கள் அற்புதங்கள் அதிசயங்கள்

    நதியோடிய கவிதாவின் முகம்

    சருகின் கனத்தில் பறக்கிறேன்

    நகரும் இரவு

    வால் குழந்தை

    இளங்கொழுந்து தொடுவுணர்வு

    மரவுடல் அத்துமீறல்

    ஒரு தனிமரம்

    ஒரு விதை ஓர் ஆரண்யம்

    தீப்பாடல்

    குரங்காட்டி நகரம்

    ரம்மியாடும் நிழல்

    சரிந்தன சொல்லடுக்குகள்

    மழைச்சிறுமி

    இயற்கை சிறகசைப்பு

    காலம் காண்பிக்கிற சித்திரப்பெண்

    ருதுவின் காலம்

    மொசார்ட்டின் கதவிசைக் காதல்

    கதவுகள் விற்பனைக்கு

    கால்கள் கைகள் ஒரு தலை

    இளமை மீட்க முப்பது ரூபாய்

    ஆப்பிளுக்குள் ஓடுகிற ரயில்

    முதுகிற்குப் பின் கடல்

    மரபுத்தன்

    நாளென்பது சூன்யத்தின் பெருவெளியில்

    கூந்தலிரவு

    நீர்க்குமிழிப் பருவங்கள்

    ப்ரித்தியின் அருகில் உட்காரும் வாய்ப்பு

    கனிகளிருக்கும் மறுக்கப்பட்ட பாதைகள்

    நிர்வாணத்திராட்சைகள்

    மழை விரும்பும் நிலம்

    பெரிய மலர் நான்

    குரல் நடனம்

    ஆழமற்ற கடலில் ஒன்றுமே இல்லை

    வெப்பம் மிகுந்த ஞாபகம்

    சுரங்கப்பாதை நகரம்

    ஒளிக்கனா

    வெண்பனிக்காலை விடிகின்றபொழுதில்

    போதிமர இரவுகள்

    தயங்கிவிழும் சில்லறைகள்

    வெண்மணல் சாலை

    புத்தனின் விரல் பற்றிய நகரம்

    பாலை மழை

    பகடி

    புனையும் இரவு

    விசுவநாதன் கணேசன்

    மழை முடிய மறைந்தபெண்

    கணங்களைக் கடக்கும் ரயில்

    அகல்விளக்கு இரவுமழை

    நாமெல்லாம் அடிமுட்டாள்கள்

    அவனின்றி வேறில்லை...

    ஜென்னில் கரைதல்

    அவனுக்கு மேலே நீலவானம்

    குரல்வளையில் இறங்கும் ஆறு

    வில்வத்தில் அவள்

    யாரும் நினைவிலில்லை

    கவிதையுச்சாடனம்

    கவிஞனாகிய அற்புதம்

    மழைச்சிறுவன்

    ராத்திரி தேநீர்க்கடை

    விழாமல் கொல்லும் பாதாளம்

    பூப்பதை நிறுத்தாத பூஞ்செடிகள்

    நாளை நோக்கிய விடியல்கள்

    தலைகீழ கடல்

    அவள் பொழுதாகும் என பொழுதுக

    வீடு மோதும் காற்று

    சித்திர வியாபாரியிடம் சிக்கிய சித்தார்த்தன்

    நிலவுகள் மேலெழுந்தன

    கப்பல் பிராயம்

    பசிப்பாடல்கள்

    இரவுக்கேகூட வெட்கம்

    கரியமலராக விடிந்த காலை

    தாரா தந்தப் படகுச் சவாரி

    சுழலும் பூமி சுழலும் பூ

    இருளின் அடர்த்தியில்

    காணமுடியவில்லை மரங்களை

    மோதிக்கொண்ட கிளைகளின்

    சப்தங்களிலிருந்து உணர முடிந்தது

    மவுனமென்பது

    காற்று கண்மூடுகிறபோது

    நிதானமாக உறங்கியது பனி

    விடிவிளக்கென நிலா

    பறவைக்கூடுகளில் படிந்திருந்தது

    இலைகளின் நிழல்

    சிறகுகளின் ஓசையில்

    மொழியுண்டானது

    இலைகள் கீழ் விழுந்தபோது

    பனித்துளிகளை உதிர்ந்தது

    கண்ணீரென.

    புறவெளியில் பறந்தது

    சோகம் கலந்த என் புகை

    வேதனைப்பட்டது

    அதைக் கவ்வியிருந்த ஆகாயம்

    கண்ணீராய்க் கசிந்தது மழைத்துளி

    புற்களின் இதயங்களோடு

    வீழ்ந்து துடித்தது பூமியில்

    புற்களுக்கும் புரிந்தது என் துயரம்

    தொக்கி நின்றது என்னாயுள்

    பாதி சிகரெட்டில்

    சிகரெட் துகள்கள் மேம்படுத்தின

    புற்று நோயை

    எதிர்கொண்டழைத்தது மரணத்தை

    மிகையானது சந்தோஷம்

    வாழ்க்கையென்பது முடிகின்ற நுனியிலா?

    கை வெறுமையானபோது

    நழுவியது சாவு.

    வட்டமாய் அடங்கிய நீரில்

    மௌனத்தில் அழகு காத்துக்கிடந்தது

    உள் நோக்கியதும் நான் வரையப்பட்டேன்

    மெல்லிய நீர்த்தகட்டில் சாய்வாய்ப் படிந்திருந்த

    நான்...

    புன்னகைத்தேன்

    கையசைத்தேன்

    எனக்கு இன்னுமொரு உயிர்

    அத்வான வெளியை விழுங்குவதாய்

    காட்சி கொடுத்த வாளி

    அகாத தளத்திற்கு நீண்டது

    பசியின் திணவில்

    பேரிடியில் கலங்கித் தெறித்தேன்

    என்னுருவம்

    உள் சுவர்களில் மோதி மாண்டது

    சிர் அள்ளிய வாளியில் பார்த்தேன்

    மற்றொரு நான்.

    கொடூரமாய்த் தாக்கியது

    பெயர் தெரியாதவனின் குரல்

    இரவைக் கிழித்தான்

    மிகுந்த சப்த அதிர்வில்

    நார்நாராய்ப் போனது இருட்டு

    அலங்கோலமாய் ஆனது

    மௌனத்தின் அற்புதம்.

    அம்மா

    காற்று எதிர்த்தும்

    அடுப்பு பற்றவைக்கிறாள்

    அவளுக்கு எதிர்ப்பது

    சகஜமானது

    இருக்கின்ற வரை

    வாழ்வோடு மோதுவாள்

    இதுவரையிலும்

    தயங்கவில்லை

    வாழ்வை எதிர்க்க

    எங்களுக்காக சமைப்பாள்

    சிரிப்பாள்

    அழுவாள்

    செத்தும் போவாள்

    ஓர் நாள்.

    ஒலிக்கிறது

    பயங்கரக் காட்டிற்குள்ளிருந்து

    வேதனை மிகுந்த அழுகைக்குரல்

    கண்ணீரின் தகிப்பில் கலங்குகிறது காடு

    வேரோடு சாய்கின்றன மரங்கள்

    முட்டி மோதிச் சாகின்றன பறவைகள்

    அதிவிரைவாய் பாய்ந்து மறைகின்றன

    மிருகங்கள்

    அரூபமாய் ஆகத் தொடங்குகிறது

    காட்டின் ரூபம்

    எதையாவது பற்றிக்கொள்ள

    நீள்கிறது

    அக்குரலின் கைகள்.

    தோண்டிக் கிடந்த பள்ளத்தில்

    சாய்ந்திறங்கியது உள் மண்

    இருள் மிதந்து மிதந்து

    சுகத்தில் திளைத்தது

    அவ்வெளியில்

    குழியென்றதும் எதாவது

    சேகரமாவது நிஜம்

    சிகரெட் துண்டு சிறு சிறு மரத்தினிலைகள்

    கிழிக்கப்பட்ட காகிதங்கள்

    அட்டைத்துகள்கள் மற்றும்

    கழிவு நீர் எல்லாமும்

    கலந்திருந்தது நேரிடையாய்

    ஐக்கியம் என்பது இப்படி இருத்தல்

    யாருக்கோ அவசியம்

    சமமாக விருந்த சாலையோர இடம்

    சேதாரமாவது

    அகால தளத்தில் கிடந்த மண்சுவர்

    உலவ வந்தது சமவெளிக்கு

    என்றைக்கு நிரப்பப்படும் என்ற

    அவதானிப்போடு அது

    அத்வான வெளிகளை வெறித்தது.

    மூன்று மாதக்குழந்தையின்

    வீறிடும் அழுகுரல்

    பாவம்! ஏன் இப்படி அழுகிறது

    நான் ஆரஞ்சு பழம் உறித்துத் தின்றேன்

    எனக்கோ தித்திப்பின் சுவை

    புத்தகங்கள் பிரித்துப் படிக்கிறேன்

    நல்ல நல்ல கவிதைகள்

    கடிதங்கள்

    வீட்டின் மாடிப்புறம்

    மறுபடி மறுபடி

    குழந்தை சப்தத்தில்

    அதிர்கிறது

    வேதனை தரும் சப்தம்

    எனக்கோ முக்கியம்

    ஆரஞ்சு பழம் தின்பதும்

    கவிதைகள்

    மௌனமாய் படிப்பதும்

    ஏன் இந்த அம்மாக்கள்

    இப்படி

    குழந்தைகளை கத்தவிடுகிறார்கள்

    தின்பதும் படிப்பதும்

    உன்னியல்பு

    அழுவது அதனியல்பு.

    பின்புற வாசலுக்கே அழகு சேர்க்கும்

    பச்சைப் பச்சையாகக் குறுகிய அகன்ற இலைகளும்

    குண்டு குண்டாக காய்களும் தாங்கிய நெல்லிக்காய் மரம்

    அண்ணாந்து பார்த்தால் கொத்துக் கொத்தாக

    சின்னதும் பெரியதுமாக இருக்கும்

    கிளைமடக்கி எட்டினாலும் கிட்டாது ஒன்று கூட

    மரம் ஏறிப் பிடுங்க பயம்

    இரவானால் போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக

    கட்டாந்தரையில் அடிவாங்கி ஒருபக்கம் சப்பையாகி

    மண்துகள்கள் படிந்து கிடக்கும்

    சத்தமில்லாமல் கழுவி வாயில் போடுகையில்

    புளிப்பு உடலெங்கும் பரவி அடங்கிவிடும்

    பாழாய்ப்போன ஆசை.

    நான்காவது மாடியின் குளிர் அறைக்குள் நடுங்கிக் கழிகிறது காலம்

    மனம் எதற்காக என்று தெரியாமல் துடித்து அடங்குகிறது

    தொலைவிலிருக்கும் மனைவியின் முகம் அந்தரத்தில் வந்து மறைகிறது

    வெள்ளைச்சுவர் தாங்கிய கண்ணாடியில்

    வெறுமையான உள்ளறை பிரதிபலிக்கிறது

    வேலை செய்யும் கூலிக்காரர்களின் குரல்களில் ஒலிக்கிறது பசி

    அறையின் வெளியே நீளும் பாதையின் ஓரத்துக்கதவுகளில்

    பளபளக்கிறது இருளின் முகம்

    மொட்டை மாடியிலிருந்து தெரியும் வெளிச்சங்கள்

    பெரிய நகரம் அலறுகிறது வாகனங்களின் இரைச்சலில்

    நிலவின் கூரிய பார்வைகளில் இருட்டு நிறைந்துகொண்டிருக்கிறது

    காற்று மரங்களைப் பிடுங்க முயற்சிக்கிறது

    வானம் வெடித்து இரவின் தோலைக்கிழிக்கிறது

    சப்தமே ஆன நகரம் அமைதிக்குள் உறைகிறது

    தூக்கம் தற்காலிமாக இறக்க வைக்கிறது

    நான்காவது மாடியின் குளிர் அறைக்குள் நடுங்கிக் கழிகிறதுகாலம்.

    பூங்காவில் ஒருத்தி புற்களை அறுக்கிறாள்

    அறுக்க அறுக்க இதயம் அறுபடுவதாகத் தோன்றியது

    சின்னஞ்சிறிய புற்களின் இதழ்களை

    அறுபட்ட பல்லிகளின் வால்களாகப் பார்த்தேன்

    அறுந்த வால்கள் தவ்வித் துடிப்பது போல் இருந்தது

    இனி இப்புல்வெளி காற்றுக்கு எப்படி சாமரம் வீசும்

    பனி சுமந்து எப்போது குளிரும்

    பூச்சிகளின் இருப்பிடமல்லவா பூண்டோடு அழிந்துவிட்டது.

    குளத்தில் நிலவை எப்படி எடுக்க

    அசையா நீர்த்தட்டில் பதிந்து விட்டதா

    மிக மெதுவாய் வட்டமாக வெட்டி

    உள்ளங்கையில் ஏந்தலாமா

    துல்லியமான வட்டத்தினழகு கெட்டுவிடும்

    குளிர்ந்த காற்றில் சின்னஞ்சிறிய அலைக்கோடுகள்

    நீரில் நெளிகின்றன

    ஊஞ்சலென ஆடுகிறது நிலா

    மேகமும் இருட்டாகி விழுகிறது சிறு தூறல்

    நீரெங்கும் புள்ளிகளில் சிக்குண்டு

    தவிக்கிறது பாவம் நிலா.

    நீயும் நானும் பேச வார்த்தைகளற்று

    அமர்ந்திருக்கிறோம்

    மழைச்சரால் தெறித்து விழுகிற சப்தம்

    நம்மிடையே எதிர்பார்த்து

    உடையக் காத்திருக்கிறது

    மௌனம்.

    வீட்டின் கூரையில்

    உடைந்த கண்ணாடி மின் விளக்கிற்குள்

    ஒரு குருவிக்கூடு

    கத்தும் ஓசையிலிருந்து

    குருவிகள் இருப்பதை உணரலாம்

    ஒருமுறை

    சிறகுகள் அரும்பாத குஞ்சொன்று

    நடைபாதையில்

    விழிகள் திறக்காது

    இதயம் துடிதுடிக்க இருக்குமிடம் அறியாது

    மல்லாக்கக் கிடந்தது

    Enjoying the preview?
    Page 1 of 1