Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saalaiyora Sathigal...
Saalaiyora Sathigal...
Saalaiyora Sathigal...
Ebook96 pages30 minutes

Saalaiyora Sathigal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பத்தை பிரிந்து, அபுதாபிக்கு செல்லும் விபின். அவன் சென்றபின் அவன் குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்க காத்திருக்கும் திருடர்கள் யார்? ரவியின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி செயல்படும் ராபர்ட். கூடா நட்பு கேடாய் விளையும் என்பது போலவே நட்பு அவனை எவ்வித பாதகமான செயலுக்கு இழுத்துச் சென்றது என்று சாலையோர சதிகளை வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580100607833
Saalaiyora Sathigal...

Read more from Devibala

Related to Saalaiyora Sathigal...

Related ebooks

Reviews for Saalaiyora Sathigal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saalaiyora Sathigal... - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாலையோர சதிகள்...

    Saalaiyora Sathigal...

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    பேங்க் மானேஜர் அழைப்பதாக ப்யூன் வந்து சொல்ல, கைகளை உயர்த்தி ஒருமுறை சோம்பல் முறித்தான் ரவி. கரண்ட் அக்கவுண்ட் லெட்ஜரை மூடி வைத்துவிட்டு, நிதானமாக எழுந்து பாத்ரூம் பக்கம் நடந்தான். ஐந்து நிமிடம் கழித்து அங்கிருந்து வெளிபட்டான். கூலரை அணுகி கண்ணாடி டம்ளர் நிறைய குளிர்ந்த நீரை நிரப்பி, மடக்மடக்கென்று குடித்தான்.

    மெள்ள மானேஜரின் அறைக்குள் நுழைந்தான்.

    ‘ரவி, நான் உங்களை அழைச்சு பத்து நிமிஷத்துக்கும் மேல ஆச்சு!’ மானேஜரின் குரலில் உஷ்ணம் இருந்தது.

    ஸோ வாட்? கேட்டவன், நாற்காலியை இழுத்துப் போட்டபடி நிதானமாக உட்கார்த்தான்.

    இது உங்க வீடு இல்ல ரவி. பொறுப்புள்ள அரசாங்க ஊழியருக்கு இத்தன மெத்தனம் கூடாது.

    என்னை கூப்பிட்டதுக்கான காரணத்தை இன்னும் நீங்க சொல்லலை சார்!

    எத்தனை வருஷ சர்வீஸ் உங்களுக்கு?

    எட்டு வருஷம்?

    ஒரு ட்ரையல் பேலன்சை சரியாச் செய்ய முடியலை. S.B. லெட்ஜர்ல ஃபிகர் டேலி ஆகல. கேஷ்ல உட்கார்ந்து முன்னூறு ரூபா அதிகம் குடுத்திட்டங்க கஸ்டமருக்கு. வாட் ஹேப்பன்ட் டு யூ ஐஸே?

    அந்த முன்னூரை என் சம்பளத்துல பிடிச்சுகிட்டது மறந்து போச்சா உங்களுக்கு?

    அதனால? தவறு இல்லைனு ஆயிருமா? இத்தனை கவனக்குறைவும், ஸ்லக்கிஷீமா இருக்கற உங்களை இன்றும் பல வருஷங்கள் இந்த வங்கி தாங்குமா மிஸ்டர் ரவி?

    நான் என்ன செய்யணும்?

    செய்ய வேண்டியது நீங்க இல்லை. மாசத்துள பாதி நாள் லீவு. அடிக்கடி பர்மிஷன் தப்பும் தவறுமா செய்யற வேலைகள். ஏன்? ஏன் இதெல்லாம்? ஐ திங்க் ஆறு மாசம் முன்னால கூட ரொம்ப பர்ஃபெக்டா, நேர்த்தியா இருந்த இளைஞராச்சே நீங்க! என்ன பிரச்சனை உங்களுக்கு?

    ரவி முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். கண்களின் விளிம்பில் கோடிட்ட கண்ணீரை மிகவும் சிரமப்பட்டு உள்ளே தள்ளினான்.

    நத்திங் டு ஸே!

    "ஸாரி ரவி. இந்த முறையும் அன்பாவே சொல்றேன். இனிமே கடுமையா எச்சரிக்க வேண்டி வரும். உங்க எட்டு வருஷ சர்வீஸ் உங்களை காப்பாற்ற முடியாமல் போகலாம்.

    பணப் புழக்கமுள்ள நகரத்தின் முக்கிய வங்கிகள்ள இதுவும் ஒண்ணு. சரியான ஊழியரைத் தான் இந்த நிறுவனம் சகிச்சுக்க முடியும். யூ மே கோ நெள!"

    ரவி வெளியே வந்தான்.

    லெட்ஜரைப் பிரித்து வைத்துக்கொண்டான். எதிரே வித் ட்ராயல் செக்குகள், பாஸ் புத்தகத்திலிருந்து தலை நீட்டியபடி அவனை எதிர்பார்த்தன.

    எதுவும் செய்ய முடியாது என்பது போலத் தோன்றியது.

    லீவ் அப்ளிகேஷன் சேகரித்து மளமளவென நிரப்பி, கையெழுத்திட்டு, மானேஜரின் அறைக்குள் நுழைந்தான்.

    நோ ஐ கான்ட் சாங்ஷன்!

    ஸாரி ஸார், நான் போயே ஆகணும். உங்களால முடிஞ்ச நடவடிக்கையை நீங்க எடுத்துக்கலாம்! அதை அவர் மேசையில் இருத்திவிட்டு, அவரது பதிலுக்குக் காத்திராமல் சரேலென வெளியேறினான்.

    சட்டைப் பையைத் தடவிப் பார்த்தான்.

    பத்துரூபாய் நோட்டும், சில்லறைகளும் பல்லவன் கூட்டமில்லாமல் வந்து நிற்க, தொத்திக் கொண்டான்.

    சாலையோரம் இருந்த அவனது வங்கியைக் கடந்து பல்லவன் ஓடத் தொடங்கியது. கண்களை மூடி சாய்ந்து கொண்டான் ரவி.

    அண்ணா! ஒரு ஜோடி வளையலே ரெண்டு மாசத்துல போடறதா நீ சொன்ன கெடு நாளையோட முடியுது. அதை வாங்கிட்டு வரச்சொல்லி, அவர் என்னை அனுப்பியிருக்கிறார்!

    என்னடா ரவி செய்ய போற? அம்மா கவலையோடு அவளைப் பார்த்தான்.

    ‘ஒரு ஜோடி வளையல்?’ ‘மூன்று?’ சவரன்

    'எட்டாயிரம் ரூபாய்க்கு எங்கே போவது?’

    ‘ஏற்கனவே மதுரா கல்யாணத்துக்காக வாங்கிய ஏராளமான கடனுக்கு வட்டி கட்டவே சம்பளம் போதவில்லை. இதில் வீட்டு நிர்வாகம் வேறு. புதுப்புது செலவுகள். என்னதான் செய்ய முடியும்?’

    ரவியின் தகப்பனார் அவனுக்கு விட்டுப்போன சொத்துக்கள் அவரது மூன்று மகள்கள்.

    ‘ஒரு அக்கா. இரண்டு தங்கை!’

    ரவி வங்கியில் சேர்ந்த மறு வருடமே தகப்பனார் காலமாகிவிட்டார். அவர் போகும்போது ஆறாயிரம் ரூபாயும், விதவைத் தாயாரும், மூன்று கன்னிப்பெண்களும் ரவியின் பொறுப்பில் இருந்தார்கள்.

    முதல் இரண்டு வருடத்தில் அங்குமிங்குமாகப் புரட்டி, பேங்கில்

    Enjoying the preview?
    Page 1 of 1