Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal Part - 12
Ariviyal Thuligal Part - 12
Ariviyal Thuligal Part - 12
Ebook166 pages1 hour

Ariviyal Thuligal Part - 12

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூல் - பனிரெண்டாம் பாகம் – 287 முதல் 312 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 19/8/2016 முதல் 10/2/2017 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580151008370
Ariviyal Thuligal Part - 12

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal Part - 12

Related ebooks

Reviews for Ariviyal Thuligal Part - 12

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal Part - 12 - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் பாகம் – 12

    Ariviyal Thuligal Part – 12

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    287. எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

    288. விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

    289. விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!

    290. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! - 1

    291. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! - 2

    292. ப்ளாக் ஹோல் மர்மம்!

    293.உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!

    294. விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!

    295. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 1

    296. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! - 2

    297. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! - 3

    298. அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்’!

    299. சிறந்த படைப்பாளியாக ஒரு அருமையான கண்டுபிடிப்பு!

    300. அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

    301. ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

    302. கடைசியில் என்ன சொன்னார்கள்?!

    303.விண்வெளியில் ‘மூழ்க’ இருந்த வீரர்!

    304. 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

    305. மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை!

    306. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் - 1

    307.புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் - 2

    308. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் - 3

    309. மர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி!

    310 சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

    311. ஜப்பானில் கற்கலாம்! வா!

    312. கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

    முடிவுரை

    என்னுரை

    இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

    ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

    இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

    எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

    அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

    4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

    இந்த நூல் - பனிரெண்டாம் பாகம் – 287 முதல் 312 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 19/8/2016 முதல் 10/2/2017 முடிய வாரா வாரம் வெளியானவை.

    ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    தொடராக வந்தபோது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

    அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

    நன்றி

    பங்களூர் ச.நாகராஜன்

    31-3—2022

    287. எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

    "மேலை நாட்டினரின் மலையேறும் நோக்கமும் நமது மலையேறும்

    நோக்கமும் முற்றிலும் மாறுபட்டது"

    –ஜம்லிங் டென்சிங் (எவரெஸ்டை வெற்றி கொண்ட டென்சிங்கின் மகன்)

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்ட முதல் மனிதர் டென்சிங் நார்கே. (தோற்றம் 29-5-1914 மறைவு 9-5-1986) இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குள்ள போற்றப்படும் நூறு பேர்களில் அவரையும் சேர்த்துக் கொண்டாடியது டைம் பத்திரிகை.

    1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் சர் எட்மண்ட் ஹிலாரியுடன் அவர் ஏறினார்.

    மேலை நாட்டினருக்கு மலை ஏறுவது என்பது ஒரு விளையாட்டான பொழுது போக்கு. ஆனால் இந்தியா, திபத் மற்றும் நேபாளத்தில் உள்ள ஷெர்பாக்களுக்கோ அது ஒரு வழிபாடு போல. எவரெஸ்ட் அருகில் உள்ள இடத்தை அவர்கள் புனிதத் தாய் என்று போற்றி வழிபட்டு வருகின்றனர்.

    எவரெஸ்ட் வெற்றியைப் பற்றி டென்சிங் கூறுகையில், நான் முயன்றேன். ஏழு முறை முயன்றேன். தாயின் மீது தவழத் துடிக்கும் சேயைப் போல. முடிவாக அவள் வெற்றியை அருளினாள் என்று கூறினார்.

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று பலியானோர் எண்ணிலடங்காத பேர்கள்.

    1996ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பனிப்புயலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். கோரமான விபத்து என்ற பெயரை இது பெற்றது. எவரெஸ்ட் மீது ஏறுவதில் வருடா வருடம் பலர் உயிரிழப்பது வழக்கமாக ஆனது

    1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த மலையேறும் வீரர்களான ஜார்ஜ் மல்லாரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரத்தில் உள்ள முகாமிற்குச் சென்று தங்கினர்.

    நான்கு நாட்கள் கழித்த பின்னர் அவர்கள் வடகிழக்கே சிகரத்தின் கீழ் செங்குத்தாக 800 அடிக்குக் கீழாக இருப்பதைக் கண்டதாக சிலர் பின்னர் கூறினர். ஆனால் அப்போது பிரம்மாண்டமான மேகக் கூட்டம் அவர்களை மூடியது.

    பின்னர் அவர்கள் இருவரையும் யாரும் காணவே இல்லை.

    அவர்கள் என்ன ஆனார்கள்? புரியாத புதிராக இருந்தது.

    அறிவியல் ஆய்வாளர்கள் அந்த இருவரும் 29029 அடி உயரத்தில் மலை உச்சியை அடைந்து கீழே இறங்கி வரும் போது ஜூன் 9ஆம் தேதி இறந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்.

    1933ஆம் ஆண்டு இர்வினின் ஐஸ் கோடரி, 28907 அடியில் கண்டு பிடிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலாரியின் உடலை எவரெஸ்டின் வடக்குப் பகுதியில் ஒரு மலையேறும் குழு கண்டது. சில நாட்களில் அதே பகுதியில் இன்னொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது இர்வினா என்ற சந்தேகமும் எழுந்தது.

    ஆனால் அவர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனரா என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.

    எவரெஸ்டில் டென்சிங்கின் வெற்றியைக் கொண்டாட வெற்றி கண்ட 50ஆண்டு விழாவின் போது டென்சிங்கின் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த டென்சிங்கின் மகன், ஜம்லிங் டென்சிங் (Jamling Tenzing) எவரெஸ்ட் மீது ஏறினார். அவருக்குத் துணையாக சர் எட்மண்ட் ஹிலாரியின் மகனும் கூடச் சென்றார். தன்னை ஒரு நாளும் மலை ஏறுவதை தன் தந்தை ஊக்குவிக்கவில்லை என்று கூறிய ஜம்லிங், ஆனால் அவன் ஒரு நாள் நிச்சயம் எவரெஸ்ட் மீது ஏறி விடுவான் என்று மற்ற அனைவரிடமும் டென்சிங் தன்னைப் பற்றிக் கூறியதாகத் தெரிவித்தார்.

    டென்சிங் பற்றிய ‘எவரெஸ்ட்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இமேஜ் மேக்ஸிமம் என்பதன் சுருக்கமான ஐமேக்ஸ் உத்தியில் 1998ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரிக்க ஜம்லிங் எவரெஸ்ட் பெரிதும் உதவினார். அவருக்கு 25000 டாலர்கள் தரப்பட்டது. ‘பணம் பெரிதல்ல, ஷெர்பாக்களைப் பற்றி உலக மக்கள் அறிய அது உதவியதே, அதைத் தான் பெரிதாக நினைக்கிறேன்’, என்று கூறி மகிழ்ந்தார் ஜம்லிங்.

    45 நிமிடமே ஓடும் எவரெஸ்ட் படம் ஐமேக்ஸ் உத்தியில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிக வசூலை அள்ளிக் குவித்தது.

    ‘டச்சிங் மை ஃபாதர்ஸ் சோல்’ (Touching my Father’s Soul) என்ற புத்தகத்தை அவர் எழுதி 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டார். புத்தகம் அமோகமாக விற்பனையைக் கண்டது, 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜம்லிங் இப்போது மலையேறும் வீரர்களுக்கான பயிற்சியைத் தருவதற்கான ஒரு மையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.

    அத்துடன் உத்வேகம் ஊட்டும் சிறந்த மோடிவேஷனல் பேச்சாளராகவும் திகழ்கிறார்.

    தந்தைக்கு ஏற்ற பிள்ளை என்று உலகம் அவரை பாராட்டுகிறது.

    புனிதமான அன்னை எனக்கு வெற்றியை அருளினாள் என்று ஜம்லிங்கும் இமய மாதாவைத் தொழுது போற்றி வணங்குகிறார்!

    288. விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

    குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் - லெமனி ஸ்னிக்கட்

    விண்வெளியில் சுற்றுலாப் பயணம் என்பது நிச்சயமாகி விட்ட நிலையில் பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போதே கவலைப் படுகின்றனர் விண்வெளி ஆர்வலர்கள்.

    குறிப்பான ஒன்று விண்வெளிச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி!

    அறிவியல் புனைகதை என்றே வைத்துக் கொண்டாலும்கூட, விண்வெளியில் பறக்கும் போது விண்கலத்தில் இருக்கும் ஒருவர் பணத்திற்காகவோ

    Enjoying the preview?
    Page 1 of 1