Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal Part - 15
Ariviyal Thuligal Part - 15
Ariviyal Thuligal Part - 15
Ebook165 pages1 hour

Ariviyal Thuligal Part - 15

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்யா வார இதழில் எட்டு வருடங்களுக்கும் மேலாக வெளியாகிய அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிடப்படுகிறது.

இந்த நூல் - பதினைந்தாம் பாகம் – 366 முதல் 391 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்த பதினைந்தாம் பாகத்தில் அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள், அட்லாண்டிஸ் மகா மர்மம், கண் திருஷ்டியும் அறிவியலும், இகிகை, செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் உள்ளிட்டவை பற்றிய பல சுவையான செய்திகளைப் படித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateMay 31, 2022
ISBN6580151008516
Ariviyal Thuligal Part - 15

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal Part - 15

Related ebooks

Reviews for Ariviyal Thuligal Part - 15

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal Part - 15 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் பாகம் – 15

    Ariviyal Thuligal Part – 15

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    366. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! - 1

    367. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2

    368. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3

    369. அட்லாண்டிஸ் மகா மர்மம் - அதிசயத் தகவல்கள்! – 1

    370. அட்லாண்டிஸ் மகா மர்மம் - அதிசயத் தகவல்கள்! – 2

    371. அட்லாண்டிஸ் மகா மர்மம் - அதிசயத் தகவல்கள்! – 3

    372. விண்வெளி டிராமா - சீனாவின் ஸ்கை லேப் பூமியில் விழப் போகிறது!

    373.மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!– 1

    374.மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி – 2

    375. இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!

    376. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1

    377. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2

    378. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3

    379. காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 1

    380. காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 2

    381.காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 3

    382. இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1

    383. இகிகை - நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2

    384. செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1

    385. செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2

    386. வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1

    387. வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 2

    388. விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1

    389.விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் - 2

    390. எழுதினால் மனோவியாதி போகும்!

    391. ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் கேட்கலாம்!

    முடிவுரை

    என்னுரை

    இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

    ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

    இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

    எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

    அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

    4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

    இந்த நூல் - பதினைந்தாம் பாகம் – எட்டாம் ஆண்டில் முதல் 26 வாரங்கள் வெளியான 366 முதல் 391 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..

    ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

    அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

    நன்றி

    14-5-2022

    பங்களூர் ச.நாகராஜன்

    366. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! - 1

    1961இல் மனிதன் விண்ணில் பறந்து 56 வருடங்கள் உருண்டோடி விட்டன. என்னென்ன வியத்தகு சாதனைகளை மனிதன் சாதித்து விட்டான்! அறிவியல் ஆர்வமுடையோருக்காக ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ரிபோர்ட்

    - அனைத்து சாதனைகளும் ஒரே இடத்தில்!

    யூரி ககாரின்

    1961,ஏப்ரல்,12. ரஷிய வீரரான யூரி ககாரின் 108 நிமிட விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து உலகை வியக்க வைத்துச் சாதனை படைத்தார்!

    விண்வெளியில் முதல் வீரர்கள்

    ககாரினை அடுத்து ஆலன் ஷெப்பர்ட் என்னும் அமெரிக்கர் 1961, மே,5ஆம் தேதி விண்வெளிக்கு ஏகினார்.

    ரஷிய வீ ராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா 1963,ஜூன் மாதம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு விண்வெளி ஏகிய முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார்; பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தார்! அவருடன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா அப்போது அவருடன் பறக்க முடியவில்லை. காத்திருந்தார். 1982ஆம் ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்பு வந்தது.

    விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி ஸாலி ரைட். ஸ்பேஸ் ஷட்டில் மிஷன் STS 7இன் ஒரு பகுதியாக 1983, ஜுன்18இல் அவர் விண்வெளியை அடைந்து சாதனை படைத்தார்.

    விண்வெளியை ரஷியர்களும் அமெரிக்கர்களுமே சுமார் 20 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடின.இந்த இரு தேசங்களைத் தவிர முதலில் விண்வெளியில் நுழைந்தது செக்கோஸ்லோவேகியா. 1978இல் சோவியத் சோயுஸ் 28 மிஷனில் செக்கோஸ்லோவேகிய வீரர் விளாடிமிர் ரெமக் விண்வெளி ஏகினார். இதன் பின்னர் ஏராளமான நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு வீ ரர்களை அமெரிக்க, ரஷிய விண்கலங்களில் விண்ணுக்கு அனுப்பின.

    விண்வெளியில் அதிக வயதானவர்

    அமெரிக்க செனேட்டர் ஜான் க்ளென் தனது 77ஆம் வயதில் டிஸ்கவரி STS -95 மிஷனில் 1998 அக்டோபரில் விண்ணில் பறந்தார். இந்த மிஷனில் அவரது பயணம் இரண்டாவது பயணம். 1962 பிப்ரவரியில் அவரது முதல் பயணம் அமைந்தது. ஆக அவர் இன்னொரு அரிய சாதனையையும் நிகழ்த்தி விட்டார். மிக நீண்ட இடைவெளியான 36 வருடம் 8 மாதங்களில் பயணம் மேற்கொண்ட ஒரே வீரர் அவர் தான்!

    விண்வெளிக்குச் சென்ற அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெறுபவர் பெக்கி விட்ஸன். வயது 57. 2016-2017இல் எக்ஸ்பெடிஷன் 50, 51இல் அவர் பறந்தார்.

    விண்வெளியில் பறந்த இளைஞர்

    ரஷியரான ஜெர்மன் டிடோவ் சோவியத் விண்கலமான வோஸ்டாக் 2இல் ஆகஸ்ட் 1961இல் பறந்தார். அப்போது அவரது 26வது பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு மாதமே இருந்தது. 25 மணி நேர பயணத்தில் 17 லூப் பயணம் மேற்கொண்டு பூமியை வலம் வந்த இரண்டாவது வீரர் இவர்.

    டிடோவ் தான் முதலில் விண்வெளியில் தூங்கியவர் என்ற பெருமையைப் பெருகிறார். முதலில் ஸ்பேஸ் சிக்னெஸ் வியாதியால் அவஸ்தைப் பட்டவரும் அவரே. (இதை மோஷன் சிக்னெஸ் என்றும் சொல்வர்)

    தெரஷ்கோவா விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி மட்டுமல்ல; 26 வயதில் பறந்த மிகக் குறைந்த வயதுடைய மங்கை என்ற அரிய புகழையும் பெறுகிறார். அவரது ரிகார்டை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

    தொடர்ந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தோர்

    ரஷிய வீ ரரான வாலெரி போலியாகோவ் விண்வெளியில் தொடர்ந்து 438 நாட்கள் மிர் ஸ்டேஷனில் தங்கி இருந்து சாதனை படைத்தார். 1994 ஜனவரியிலிருந்து 1995 மார்ச் வரை இவர் அங்கு தங்கி இருந்தார்.

    அமெரிக்கரான ஸ்காட் கெல்லி தொடர்ந்து 340 நாட்கள் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் 2015-16இல் தங்கி சாதனை படைத்தார்

    அமெரிக்க விண்வெளி வீ ராங்கனை பெக்கி விட்ஸன் 289 நாட்கள் ஒரே பயணத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கி இருந்ததால் அந்தப் பெருமையைப் பெறுகிறார்.

    நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் 1961,மே, 5ஆம் தேதி தனது மெர்குரி விண்கலமான ஃப்ரீடம் 7இல் பறந்து சாதனை படைத்தார்.

    புல்லரிக்க வைக்கும் வெற்றிகள் - மகத்தான தியாகத்தால், உழைப்பால், அறிவுக் கூர்மையால், மனித குலத்தை உயர்த்தத் துடிக்கும் அர்ப்பணிப்பு மனோபாவத்தால்!

    அறிவியல் அறிஞர் வாழ்வில்

    1894இல் ஆல்பர்ட் மைக்கேல்ஸன் இயற்பியலில் கண்டுபிடிக்க இனி ஒன்றுமே

    Enjoying the preview?
    Page 1 of 1