Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal - Part 1
Ariviyal Thuligal - Part 1
Ariviyal Thuligal - Part 1
Ebook146 pages55 minutes

Ariviyal Thuligal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்யா வார இதழில் வெளி வந்த அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அறிவியல் பொக்கிஷம். இந்தத் தொடர் பதினெட்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதல் பாகத்தில் சுவையான விஷயங்கள் அடங்கியுள்ள 26 கட்டுரைகள் உள்ளன.

சைபர்னெடிக்ஸ் என்றால் என்ன, வடிவேலு-பார்த்திபன் காமடியில் உள்ள சைபர்னெடிக்ஸ்,
சந்திரனில் செக்ஸ்,, பகல் கனவில் பல கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல அரிய செய்திகள்

கட்டுரைகளில் தரப்பட்டுள்ளன. நூலில் உள்ள இன்னும் சில தலைப்புகள் :

ஹிப்நாடிஸம் பற்றிய ஆய்வு

கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்
“ககாரின், விண்ணில் கடவுளைப் பார்த்தீர்களா?”
ஐ லவ் யூ-வில் சைபர்னெடிக்ஸ்
ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாட்லைட்டுகள்!
18. விபத்தில்லாத கார்!
பெண்களின் எண்ணிக்கையை உலகில் குறைய வைத்த
அல்ட்ராசானிக் சோதனை
6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை
நாம் எல்லோருமே ரஜினிகாந்த் தான்!
சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம்
100 ஆண்டுகள் வாழ ஒரு அதிசய மாத்திரை

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580151009267
Ariviyal Thuligal - Part 1

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal - Part 1

Related ebooks

Reviews for Ariviyal Thuligal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal - Part 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் - பாகம் 1

    Ariviyal Thuligal - Part 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முதல் பதிப்பின் முன்னுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்

    2. ஹெலனின் தியாகம்!

    3. நம்பிக்கை இழக்காதீர்கள்! மனம் தளராதீர்கள்!

    4. சந்திரனில் குகைப் பள்ளங்கள்!

    5. உயிர் தரும் ஆக்ஸிஜன் சுழற்சி!

    6. ஹிப்நாடிஸம் பற்றிய ஆய்வு

    7. பிரபல விஞ்ஞானிகள் பற்றிய அதிசய உண்மை

    8. யுரேகா கண்டுபிடிப்புகள்!

    9. பகல் கனவில் பல கண்டுபிடிப்புகள்!

    10. சாவுக்கடல் சாகிறதா?

    11. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்

    12. ககாரின், விண்ணில் கடவுளைப் பார்த்தீர்களா?

    13. சைபர்னெடிக்ஸ்!

    14. காமடியில் சைபர்னெடிக்ஸ்!

    15. ‘ஐ லவ் யூ’-வில் சைபர்னெடிக்ஸ்

    16. பிரச்சனைகளைத் தீர்க்கும் நவீன சாதனங்கள்

    17. ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாட்லைட்டுகள்!

    18. விபத்தில்லாத கார்!

    19. அறிவியல் கட்டுரைகளின் நல்ல முன்னேற்றம்

    20. பெண்களின் எண்ணிக்கையை உலகில் குறைய வைத்த அல்ட்ராசானிக் சோதனை

    21. மூளையே இனி போர்க்களம்

    22. 6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை

    23. நாம் எல்லோருமே ரஜினிகாந்த் தான்!

    24. சந்தோஷத்தை விலக்கு வாங்கலாம்

    25. சந்திரனில் செக்ஸ்!

    26. 100 ஆண்டுகள் வாழ ஒரு அதிசய மாத்திரை

    அணிந்துரை

    அற்புதத் துளிகள்

    தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால் தலை தப்பியது என்று ஆறுதல் கொள்வது இயற்கை. அதுவே நம்மில் பெரும்பாலோரின் பிரதிக்கிரியை. ஆனால் ஆயிரத்தில் ஒருவர் - ஐசாக் நியூட்டன் போன்றவர் - தேங்காய் ஏன் தரையை நோக்கி விழுந்தது, வானத்தை பார்த்து ஏன் பறக்கவில்லை என்று அண்ணாந்து பார்த்து அதிசயிப்பார். அந்த அற்புதத்தின் காரணத்தை அறிய முயற்சிப்பார். இரவும் பகலும் தன் அறிவின் திறத்தினால் இயற்கை ரகசியத்தின் மேல் கூட்டை உடைத்து உள்ளிருக்கும் பொருளை எல்லோருக்கும் தெரியுமாறு வெளியில் கொணர வெறி கொண்டவர் போல் உழைப்பார். சிறிய வெற்றி அடைந்தாலும் அதையே முதல் படியாகக் கொண்டு அடுத்த கேள்விக்கு விடை தேடத் தொடங்குவார். காற்று வெளியில் நடக்கும் இந்த விந்தை கடலுக்கு அடியிலும் நடக்குமா என்று வினவுவார். அவருடைய தேடுதலில் தோல்விகளும் வெற்றிகளே.

    இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்து அறிவதற்கு உண்டாகும் கொலை வெறி சில பேருக்கு மட்டுமே உண்டாகிறதா? அதற்கு மூல காரணம் என்ன? இயற்கையை அன்றாட வாழ்வுத் தேவைகளுக்குப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையா? அல்லது நம்மை சூழ்ந்திருக்கும் உலகைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்னும் பேராவலா? மூளைக் கிளர்ச்சியா? இரண்டும் தான். கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் முன்னேற்றங்கள் இவ்விரண்டு காரணங்களாலும் உந்தப்பட்டவையே. இந்த அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் - அளவிட முடியாத முறையில் - மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியப்பு தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.

    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத் திகழ்கிறது. உரேகா தருணம் என்பதென்ன? மனிதனின் மூளைதான் வருங்கால போர்க்களம் என்கிறார்களே - எப்படி? சந்திரன் சீனாவுக்கு சொந்தமாகப் போகிறதா? உலகையே மாற்றி அமைக்கபோகும் 10 பிரம்மாண்டமான கண்டுப்புகள் எவையாக இருக்கும்? இவை போன்ற நூற்றுக்கணக்கான அறிவியல் துளிகளை அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும் தமிழுக்கும் நாகராஜன் செய்திருக்கும் பாராட்டுக்குரிய பெரும் சேவை இது.

    மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்: நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன. அதே கருத்தை கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

    K.G.Narayanan

    28-8-2012

    Bangalore

    முதல் பதிப்பின் முன்னுரை

    நாம் வாழும் இன்றைய யுகம் அறிவுப் புரட்சி யுகம் என்று அழைக்கப்படுகிறது... அறிவியலில் முன்னேறியுள்ள மேலை உலகத்தில் இன்று அமெரிக்காவில் மட்டும் வருடந்தோறும் சுமார் 50000 புத்தகங்கள் புதிதாக வெளியிடப்படுகின்றன. உலகெங்கும் சுமார் நான்கு லட்சம் பத்திரிக்கைகள் வெளியிடப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பதினோரு கோடியே முப்பது லட்சம் விஷயங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 20000 புதிய விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. இது இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இருந்த நிலை.

    கணினியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து வந்த இன்டர்நெட்டின் வரவு லட்சக்கணக்கான வலைத் தளங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விட்டது. அவற்றில் கோடிக் கணக்கில் அனைத்து விஷயங்கள் பற்றியும் கோப்புகள் குவிகின்றன.

    தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டாலோ ஒரு வாரத்திற்கு உள்ள 168 மணி நேரத்தில் பல்லாயிரம் மணித்துளிகள் நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் அளிக்கின்றன. எதைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்று திகைக்க வேண்டியதாக இருக்கிறது!

    தகவல்கள் குவிந்து விட்ட நிலையில் தேவையற்ற தகவல்களும் ஏராளமாக இருப்பதால் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் பெரும் சுமை நம் மீது விழுந்து விட்டது - வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போல!

    மிக அழகாக கவிஞர் டி.எஸ்.எலியட் கூறியது தான் நம் நினைவுக்கு வருகிறது:-

    Where is the life we have lost in living?

    Where is the wisdom we have lost in knowledge?

    Where is the knowledge we have lost in information?

    தகவல் புரட்சியில் அற்புதமான அறிவுத் துளிகளைத் தேடிப் படித்தால் நல்லறிவு வளரும். அது ஆக்கபூர்வமான நன்மைகளை நல்கும்.

    இது ஒருபுறம் இருக்க, மேலை உலகில் அதிவேகமாக அறிவியல் வளரும் இன்றைய சூழ்நிலையில் நல்ல விஷயங்களைத் தமிழ் உலகிற்குத் தர வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.

    மிக அருமையாக பாரதியார்,

    "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

    இறவாத புகழுடைய புது நூல்கள்

    தமிழ் மொழியிற் இயற்றல் வேண்டும்"

    என்று நமக்கு உள்ள கடமையைச் சுட்டிக் காட்டினார்.

    நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் உலகில் மிக முக்கியமான சுவையான விஷயங்களைத் தொகுத்துத் தந்து அறிவியல் துளிகளைச் அறிமுகப்படுத்தும் பணியில்

    எனது நண்பரும் சிறந்த கதாசிரியர், இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் என்னை ஊக்குவித்தார். அதனால் வாரம் தோறும் பாக்யா வார இதழில் மலர்ந்தது அறிவியல் துளிகள்!

    அறிவியல் சம்பந்தமான சுவையான விஷயங்களுடன் விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் வாரம் தோறும் தரலானேன். வாசகர்கள் ஆதரவோடு தொடர் இன்றும் தொடர்கிறது.

    இந்த அறிவியல் துளிகளுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1