Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal Part - 14
Ariviyal Thuligal Part - 14
Ariviyal Thuligal Part - 14
Ebook190 pages1 hour

Ariviyal Thuligal Part - 14

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்யா வார இதழில் எட்டு வருடங்களுக்கும் மேலாக வெளியாகிய அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிடப்படுகிறது.

இந்த நூல் - பதினான்காம் பாகம் – 339 முதல் உள்ள 27 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்த பதினான்காம் பாகத்தில் தங்கத்தை ஈயமாக்கும் வித்தை, இரஸவாதக் கலை நிபுணர்கள், கோஹீனூர் வைரம், விண்வெளி உள்ளிட்டவை பற்றிய பல சுவையான செய்திகளைப் படித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580151008504
Ariviyal Thuligal Part - 14

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal Part - 14

Related ebooks

Reviews for Ariviyal Thuligal Part - 14

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal Part - 14 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் பாகம் – 14

    Ariviyal Thuligal Part – 14

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    339. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 1

    340. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 2

    341. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 3

    342. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 4

    343. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 5

    344. இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1

    345. இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2

    346. இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3

    347. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

    348. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2

    349. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

    350. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 4

    351. ஸூனிஷ்! உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!

    352. கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை!

    353. டார்வினை எதிர்த்த பெண்மணி!

    354. உலகின் முதல் விண்வெளி தேசம்!

    355. மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

    356. ஜிமிக்கி கம்மலின் பிரபலம்! ..... ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?

    357. நலம். நலம் அறிய ஆவல்! உங்கள் நண்பன் ரொபாட்டின் கடிதம்!

    358. கடலிடம் கற்போம்!

    359. கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத கபெகண்கமகணிகககள்!

    360 பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!

    361. மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

    362. ‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76!

    363. நிலவில் நடந்த முதல் மனிதன்: சுவாரசியமான தகவல்கள்!

    364. மனிதன் கடவுளாகும் காலம்! - ஷோங் ஷோங்!, ஹுவா ஹுவா!!

    365. 2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!

    முடிவுரை

    என்னுரை

    இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும்

    அறிவோம்; உணர்வோம்.

    ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும். இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

    அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன். 4-3-2011 இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

    இந்த நூல் - பதினான்காம் பாகம் – 339 முதல் உள்ள 27 அத்தியாயங்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு

    எனது நன்றி உரித்தாகுக. தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

    அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

    நன்றி

    பங்களூர்

    7-5-2022

    ச.நாகராஜன்

    339. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 1

    "இரஸவாதம் பற்றிச் சொன்னவர்களுடைய கொள்கை இரசாயனத்தின் அடிப்படையிலான ஒரு அதீத கற்பனை அல்ல என்பதை எனது ஆரம்ப கால் ஆராய்ச்சிகளில் நான் தெரிந்து கொண்டேன். அது உலகத்திற்கும் மூலக்கூறுகளுக்கும் ஏன் மனிதனுக்கே கூடப் பொருந்தும் ஒரு தத்துவம் என்பதைக் கண்டு கொண்டேன்:

    - இரஸவாதம் பற்றி டபிள்யூ.பி. யேட்ஸ்

    இரஸவாதம் என்றும் அல்கெமி (Alchemy) என்றும் அனைவரும் அறிந்திருக்கும் வார்த்தையின் அர்த்தம் ஈயத்தை எப்படித் தங்கம் ஆக்குவது என்பதற்கான வழியைக் கூறும் வித்தையாகும்!

    பல சித்தர்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாகும் இரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பதாக வழிவழியாக கர்ண பரம்பரைக் கதைகள் பல உண்டு.

    மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் கூட ஈயத்தைத் தங்கமாக்கும் முயற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டதுண்டு. சிலர் வெற்றியையும் பெற்றிருப்பதாக சில நூல்கள் கூறுகின்றன.

    விஞ்ஞானிகளும் இந்த இரஸவாத வித்தைக்கு விலக்கல்ல. உலகின் மிகப் பிரபல விஞ்ஞானியும் பேரறிஞருமான சர் ஐஸக் நியூட்டன் விஞ்ஞானத்தில் பல விதிகளைக் கண்டு உருவாக்கியவர். இது அவரது ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு பக்கத்தில் அவர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி; அத்துடன் மட்டுமல்லாமல் இரஸவாதத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்டு பல்லாண்டுக் காலம் தன் கவனத்தையும் ஆராய்ச்சியையும் அதில் செலுத்தியவர்.

    அவரது விஞ்ஞான விதிகள் பிரசுரிக்கப்பட்டாலும், அவரது இரஸவாத ஆராய்ச்சிக் குறிப்புகள் பெரிய அளவில் வெளி உலகிற்குத் தெரியவில்லை; அந்தக் குறிப்புகள் பிரசுரிக்கப்படவும் இல்லை.

    இரஸவாதக் கல்லைத் (Philosopher’s Stone) தேடி அவர் அலைந்தார். இந்தக் கல்லை சிந்தாமணி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஸ்பரிசவேதி - அதாவது தொட்டதெல்லாம் தங்கமாக்கும் கல் என்றும் சொல்வர்.

    தனக்கு முன்னால் இது பற்றி ஆராய்ச்சி செய்த அனைவரது ஆய்வையும் நியூட்டன் சேகரித்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் சங்கேதமாகக் குறிப்பிட்ட குறிப்புகளிலிருந்து இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் முயன்றார்.

    தமிழில் சித்தர் பாடல்களில் ‘இரு குரங்கின் கை’ என்று மூலிகையின் பெயரைச் சங்கேதமாகச் சொல்வர். அது உண்மையில் ‘முசுமுசுக்கை’யைக் குறிப்பிடுவதாகும். இதே போல ஆங்கிலத்திலும் சங்கேத வார்த்தைகள் இருந்தன.

    ‘அது வெள்ளி அல்ல; டயானா டவ்ஸ்’,(Not silver but Diana’s Doves) ‘இழிவான வேசியின் மாதவிலக்கு உதிரம்’ (Menstrual blood of the sordid whore) போன்ற இரகசிய வார்த்தைகள் அவரைக் குழப்பின. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு குறியீட்டு பாஷையில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். இவற்றை ஆராய்ந்த நியூட்டன் தனது குறிப்புகளைத் தனியே எழுதலானார்.

    நியூட்டனின் குறிப்புகளை வைத்து இந்தியானா பல்கலைக்கழகத்தினர் அதை சரளமான இன்றைய ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய முயன்றனர். சாடர்ன் (சனி கிரகம்) என்ற வார்த்தை காரீயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நியூட்டனின் ஆதாரமான உலோகம் ஸ்டிப்னைட் (Stibnite) என்பதாகும். பிரகாசிக்கும் ல்யூனா (Luna) பற்றியும் க்ரீன் லியான் (Green Lyon – stibnite) பற்றியும் அவர் விளக்கமாக எழுதியுள்ளார். சுமார் 30 ஆண்டுக் காலம் அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

    1669ஆம் ஆண்டிலிருந்து 1693 முடிய அவர் செய்த ஆராய்ச்சிகளும் அதைப் பற்றிய குறிப்புகளும் கைப்பிரதியில் எழுதப்பட்டு இருந்த, 348 பழுப்பேறிய காகிதங்கள் அப்படியே பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேறியிருந்தாலும் அவர் ஈயத்தைத் தங்கமாக்குவதில் வெற்றி அடையவில்லை.

    ஆரம்ப காலத்தில் அறிவியல் அறிஞர்கள் எந்த உலோகத்தையும் தங்கமாக்குவது சாத்தியம் இல்லை என்றே கருதினர். என்றாலும் கூட இப்படி ‘மாற்றும் வித்தை’ இரசாயனத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தத் துறையில் இருந்தவர்கள் அதில் அதிகம் ஈடுபாடு காட்டினர்.

    இப்போது நவீன அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் இப்படி ஈயத்தை தங்கமாக்குவது சாத்தியம் தான் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

    அமெரிக்காவில் பிலடெல்பியாவில் லாரன்ஸ் பிரின்ஸிப் (lawrence Principe) என்ற ஒரு விஞ்ஞானி கெமிகல் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் பழைய இரசாயன புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஆச்சரியகரமான ஒரு விஷயம் அவருக்குக் கிடைத்தது. ஆம், சர் ஐஸக் நியூட்டன் தன் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள் அவருக்குக் கிடைத்தது. இதை அனைவரும் மறந்தே விட்டார்கள்.

    இந்தக் கைப்பிரதி ‘தங்கத்திற்குச் சமானம்’ என்று அவர் ‘எடை போட்டார்’.

    உண்மை தான், எதையும் தங்கமாக ஆக்குவது எப்படி என்ற நியூட்டனின் குறிப்புகள் அல்லவா அது?! ‘தங்கமான’ நோட்ஸ் தானே! அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் (Johns Hopkins University) கெமிஸ்டாகவும் வரலாற்றாசிரியனாகவும் பணியாற்றுபவர்.

    தன் கையில் மஞ்சள் நிறமாக பழுப்பேறிக் கிடந்த பேப்பர்களை அதிசயமாக அவர் பார்த்தார். உலகின் தலை சிறந்த ரகசியம் தன் கையில் கிடைத்திருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.

    இரஸவாதக் கல் என்று உலகமெல்லாம அதிசயமாகப் பேசப்படும் கல்லை எப்படிச் செய்வது என்பதை அதில் நியூடன் எழுதியிருந்தார். அந்தக் கல் இரும்பு, ஈயம் போன்றவற்றைத் தங்கமாக மாற்றி விடும்!

    தனது ஆராய்ச்சியின் மீது நியூடனுக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது. நியூடனுக்கு இந்த இரஸவாதக் கல் பற்றிய நம்பிக்கை பிரபலமான பிரிட்டிஷ் கெமிஸ்டான ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவரால் வலுப்பட்டது. பாயிலும் இரஸவாதக் கலையில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் நியூட்டனின் சம காலத்தவர்.

    லாரன்ஸ் பிரின்ஸிப்புடன் இன்னொருவரும் இந்த அபூர்வ ஆய்வில் இணைந்தார். அவர் பெயர் வில்லியம் நியூமேன். (William Newman)

    இந்த இருவரும் இணைந்து யோசித்தனர்.இரு பெரும் விஞ்ஞானிகளான ஐஸக் நியூட்டனும் ராபர்ட் பாயிலும் மிகத் தீவிரமாக இரஸவாதத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்டனர் என்றால் அது நம்பக்கூடாத விஷயமல்ல; மிகவும் முக்கியமான விஷயம் என்று அவர்கள் தீர்மானித்தனர்.

    புதிய அல்லாய்கள் உருவாகி இருப்பது எதனால்? ஏராளமான அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுவதும், பிக்மெண்ட் எனப்படும் வண்ணமூட்டும் பொருளூம் உற்பத்தி செய்யப்படுவதும் புதிய அறிவியலினால் தானே! வடிகட்டல் எனப்படும் புதிய செய்முறை விஞ்ஞான முன்னேற்றத்தினால் அல்லவா ஏற்பட்டது. புதிய ஃபெர்ஃப்யூம்கள் உற்பத்தி செய்யப்படுவதும் அறிவியல் முன்னேற்றத்தினால் அல்லவா! ஆக இப்படி பல வித மாற்றங்களை ஏற்படுத்தும் செய்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டபோது ஈயத்தை தங்கமாக மாற்ற முடியாதா என்ன என்று அவர்கள் இருவரும் விவாதித்தனர்.

    ஆகவே திரும்பத் திரும்ப புது மாதிரியான முறைகளாலும் சோதனைகளினாலும் தங்கள் ஆய்வைத் தொடர்வது என்று தீர்மானித்தனர்.

    பழைய கால இரஸவாத புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து 15, 16, 17ஆம் நூற்றாண்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1