Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yen? Eppadi? Ariviyal Puthumaigal!
Yen? Eppadi? Ariviyal Puthumaigal!
Yen? Eppadi? Ariviyal Puthumaigal!
Ebook113 pages41 minutes

Yen? Eppadi? Ariviyal Puthumaigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் விஞ்ஞானப் புதுமைகள் நம்மை வியக்க வைக்கின்றன! ஒரு சின்ன கைபேசியில், அடக்கமாகி விட்ட காலத்தை பழைய கால டயல் செய்யும் தொலைபேசியுடன் ஒப்பிட்டால் எத்தகைய பிரமிப்பு ஏற்படுகிறது!

வாட்ஸ் ஆப் மூலம் உடனடியாக நேரடியாகப் பேசும் புதிய முறை எத்துணை பெரிய தகவல் புரட்சியைச் செய்து விட்டது. இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மாறுதல்கள் ஏராளம்! மிக மிக முக்கியமான பொருள் பொதிந்த உரை இது தான்: “இன்றைய நவீன யுகப் போரை நேற்றைய ஆயுதங்களை வைத்துப் போரிடாதே” - Don’t fight today’s war with yesterday’s weapons இந்தப் புது மொழிக்கு இணங்க அனைத்து புதிய தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டு அவற்றை நமது முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

இப்படிப்பட்ட விஞ்ஞானப் புதுமைகள் செய்யும் பிரமிக்க வைக்கும் மாற்றங்கள் பற்றி ஆல் இந்தியா ரேடியோவின் திருச்சி, மதுரை, சென்னை நிலையங்கள் மூலமாக வழங்கப்பட்ட உரைகளின் தொகுப்பு இந்த நூல்.

நூலில் உள்ள சில அத்தியாயங்கள்:

வானத்தை வசமாக்கும் புதிய பயணங்கள்!

விண்வெளிக் குப்பை!!

உலகை மாற்றிய தாவரங்கள்!

வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்!

என்றுமே இளமையாக இருப்பது பற்றிய அறிவியல் ஆய்வு!

நவீன ரொபாட்!

நீடித்த மகிழ்ச்சிக்கு அறிவியல் காட்டும் வழி

முகபாவமே அனைத்தும் சொல்லும்!

தகவல் புரட்சி ஏற்படுத்தவிருக்கும் மாற்றம்!

செயற்கை அறிவும் ரொபாடிக்ஸும்

உலகை ரொபாட்டே ஆளப் போகிறது!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151010912
Yen? Eppadi? Ariviyal Puthumaigal!

Read more from S. Nagarajan

Related to Yen? Eppadi? Ariviyal Puthumaigal!

Related ebooks

Reviews for Yen? Eppadi? Ariviyal Puthumaigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yen? Eppadi? Ariviyal Puthumaigal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்!

    Yen? Eppadi? Ariviyal Puthumaigal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1.வானத்தை வசமாக்கும் புதிய பயணங்கள்!

    2. பூமியின் வெப்பம் அதிகமாகிறது!

    3. கவா... கவா!

    4. விண்வெளிக் குப்பை!

    5. விலங்குகளின் மீது வியப்பூட்டும் அறிவியல் சோதனைகள்!

    6. உலகை மாற்றிய தாவரங்கள்!

    7. புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

    8. நீலத் திமிங்கிலங்களின் தகவல் பரிமாற்ற முறை!

    9. தேவை புத்துணர்ச்சி தரும் தூக்கம்!

    10. சிகரெட்டும் அபாயகரமான போதைப் பொருளே!

    11. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்!

    12. அதிக வயதானாலும் மூளையை இளமையுடன் வைத்திருக்க முடியும்!

    13. சாடலைட் கண்டுபிடித்த பழைய நகரம்!

    14. வயர்லெஸ் பல்ப் எரிய விட்ரிசிடி!

    15. அருகி வரும் அரிய விலங்கு வகைகள்!

    16. என்றுமே இளமையாக இருப்பது பற்றிய அறிவியல் ஆய்வு!

    17. நவீன ரொபாட்!

    18. நீடித்த மகிழ்ச்சிக்கு அறிவியல் காட்டும் வழி!

    19. மீன்வளம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

    20. சும்மா இருக்குமா மூளை?

    21. முகபாவமே அனைத்தும் சொல்லும்!

    22. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!

    23. மாறப் போகும் தொழிலகங்கள்!

    24. புதிய தொழில் முறை!

    25. தகவல் புரட்சி ஏற்படுத்தவிருக்கும் மாற்றம்

    26. சிந்தனை ஆற்றல்!

    27. செயற்கை அறிவும் ரொபாடிக்ஸும்

    28. மருத்துவப் புரட்சி

    29. ஸ்பெஸிபிகேஷன் பேபியும் இதர மாறுதல்களும்!

    30. சந்திர மண்டலப் பயணம்

    31. உலகை ரொபாட்டே ஆளப் போகிறது!

    32. மாமல்லபுரக் கண்டுபிடிப்பு!

    33. பூமியின் மீது குறுங்கோள்கள் மோதுமா?

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் விஞ்ஞானப் புதுமைகள் நம்மை வியக்க வைக்கின்றன!

    பழைய காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து புதிய மாறுதலை ஏற்று அதிசயிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

    எல்லம் உள்ளங்கையில், ஒரு சின்ன கைபேசியில், அடக்கமாகி விட்ட காலத்தை பழைய கால டயல் செய்யும் தொலைபேசியுடன் ஒப்பிட்டால் எத்தகைய பிரமிப்பு ஏற்படுகிறது!

    வாட்ஸ் ஆப் மூலம் உடனடியாக நேரடியாகப் பேசும் புதிய முறை எத்துணை பெரிய தகவல் புரட்சியைச் செய்து விட்டது.

    இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மாறுதல்கள் எத்தனை, எத்தனை!

    இப்படிப்பட்ட விஞ்ஞானப் புதுமைகள் செய்யும் பிரமிக்க வைக்கும் மாற்றங்களை எல்லாம் அவ்வப்பொழுது ஆல் இந்தியா ரேடியோவின் திருச்சி, மதுரை, சென்னை நிலையங்கள் மூலமாக உரைகளாக வழங்கி வந்தேன்.

    மாறுதலுக்குத் தயாராக இருக்குமாறு பாக்யா, இதயம் பேசுகிறது உள்ளிட்ட பத்திரிகைகள் வாயிலாக வலியுறுத்தி வந்தேன்.

    இவற்றில் பல நிறைவேறி விட்டன. இன்னும் பல நிறைவேறப் போகின்றன.

    மிக மிக முக்கியமான பொருள் பொதிந்த உரை இது தான்:

    இன்றைய நவீன யுகப் போரை நேற்றைய ஆயுதங்களை வைத்துப் போரிடாதே - Don’t fight today’s war with yesterday’s weapons –

    இந்தப் புது மொழிக்கு இணங்க அனைத்து புதிய தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டு அவற்றை நமது முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

    வானொலி உரைகளையும், பத்திரிகையில் வெளியான கட்டுரைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்ட போது நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இப்போது இளைய தலைமுறையினருக்காக இது இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகிறது. இந்தப் பதிப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதோடு, கூடுதலாக கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த உரைகளை அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஒலி பரப்பினர். நிலைய அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக. பத்திரிகை ஆசிரியர்கள் இந்தக் கட்டுரைகளை வரவேற்றுப் பிரசுரித்தனர். பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே. பாக்யராஜ் உள்ளிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகத்தான ஆதரவைத் தரும் அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    9-3-2024

    1.வானத்தை வசமாக்கும் புதிய பயணங்கள்!

    பாட்க்ளெட்னாவ் (PODKLETNOV) என்ற ரஷிய விஞ்ஞானி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செல்லும் ஆன்டி க்ராவிடி விமானம் ஒன்றை உருவாக்கும் புதிய தொழில் நுட்பத்தை அறிந்திருப்பதாகச் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து விஞ்ஞான உலகம் பெரிதும் பரபரப்படைந்துள்ளது.

    இதைப் பற்றிய முழு விவரங்களும் கிடைக்காத சூழ் நிலையில் ஒவ்வொரு நாடும் தனக்குரிய வகையில் வேகமாகப் பயணம் செய்யப் புதிய முறைகளைக் கண்டு பிடித்து வருகிறது.

    இந்த வகையில் ஸ்க்ராம் ஜெட் என்ற புதிய அதி வேகப் பயணத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா சோதனை செய்து பார்த்து விட்டது.

    ஒலியின் வேகத்தை விட 9.6 மடங்கு அதிக வேகத்துடன் இது பறந்து புதிய சாதனையைப் படைத்து விட்டது. ஒலியின் வேகம் கடல் மட்டத்தில் மணிக்கு 760 மைல். இந்த ஸ்க்ராம் ஜெட்டோ மணிக்கு 7062 மைல் வேகத்தில் தென் கலிபோர்னியா அருகே பசிபிக் கடல் மேலே பறந்தது.

    இனி எதிர்காலத்தில் பூமியின் எந்த ஒரு பகுதியையும் சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று அடைவதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

    காலையில் சென்னையில் காலை உணவை அருந்தி விட்டு நியூயார்க் சென்று பகல் முழுதும் இருந்து வேலையை முடித்து விட்டு இரவு உணவுக்கு மீண்டும் சென்னைக்கு வந்து விடலாம். நம்ப முடியாததாக இருந்த ஒரு பயணம், இனி நடக்கக் கூடியதாக அறிவியல் முன்னேற்றத்தால் சாத்தியமாகி விட்டது.

    இந்த ஹைபர்சானிக் விமானம் செலவைக் குறைக்கும் வழியிலான

    எரிபொருள் மூலம்

    Enjoying the preview?
    Page 1 of 1