Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal - Part 5
Ariviyal Thuligal - Part 5
Ariviyal Thuligal - Part 5
Ebook177 pages1 hour

Ariviyal Thuligal - Part 5

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்யா வார இதழில் வெளி வந்த அறிவியல் துளிகள் தொடர் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அறிவியல் பொக்கிஷம். இந்தத் தொடர் பதினெட்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் பாகத்தில் பை(π) பற்றிய அதிசயச் செய்திகளையும், விஞ்ஞானிகளே வியக்கும் எண்ணான 137 பற்றிய சுவையான செய்திகளையும் காணலாம். ஐ.க்யூவை அதிகரிக்க முடியும் என்பதோடு ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம் என்னும் ஊக்கமூட்டும் செய்தியையும் இதில் காணலாம். நூலில் உள்ள இன்னும் சில தலைப்புகள்: மன அழுத்தம் போக எளிய, செலவில்லாத வழிகள்!, ஹாலிவுட் படங்களின் வெற்றிக்கான சூத்திரத்தைக் கண்ட கணித மேதை! விண்வெளியில் செக்ஸ் உறவு!, கடவுளை ஆராயும் விஞ்ஞானி கண்டுபிடித்தது என்ன!?, ஆயுளை அதிகரிக்க விஞ்ஞானம் பரிந்துரைக்கும் எளிய வழிகள்!, மர்லின் மன்ரோ மரண மர்மம், விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்கிறார்களா? - ஐன்ஸ்டீனிடம் சிறுமி கேட்ட அதிரடிக் கேள்வி!

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580151009670
Ariviyal Thuligal - Part 5

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal - Part 5

Related ebooks

Reviews for Ariviyal Thuligal - Part 5

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal - Part 5 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் - பாகம் 5

    Ariviyal Thuligal - Part 5

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    105. திருடப்பட்ட கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகளின் மோதல்!

    106. மார்ச் 14ஆம் தேதி - உலக பை (π) தினம்!

    107. ஐ.க்யூவில் ஐன்ஸ்டீனை விஞ்சிய அதிசய சிறுமி!

    108. ஐ.க்யூவை அதிகரிக்க முடியுமா?

    109. பல்வகை அறிவு: ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம்!

    110. மன அழுத்தம் தரும் மாற்றங்கள்!

    111. மன அழுத்தம் போக எளிய, செலவில்லாத வழிகள்!

    112. ஹாலிவுட் படங்களின் வெற்றிக்கான சூத்திரத்தைக் கண்ட கணித மேதை!

    113. ஹாலிவுட் படங்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானிகள்!

    114. அறிவியலுக்காக உயிரை தியாகம் செய்த விஞ்ஞானி!

    115. விண்வெளியில் செக்ஸ் உறவு!

    116. கடவுளை ஆராயும் விஞ்ஞானி கண்டுபிடித்தது என்ன!? - 1

    117. கடவுளை ஆராயும் விஞ்ஞானி கண்டுபிடித்தது என்ன!? - 2

    118. 15 டன் எடை கொண்ட முதல் கணினி!

    119. கண்டுபிடிப்புகளைப் பற்றிய அறிவியல் உண்மைகள்!

    120. உயிர் கொடுக்கும் செயற்கை இதயமும், இதய பேஸ்மேக்கரும்!

    121. வையத்தைச் சுருக்கிய டபிள்யூடபிள்யூடபிள்யூ!

    122. விஞ்ஞானம் வியக்கும் அதிசய எண் 137! - 1

    123. விஞ்ஞானம் வியக்கும் அதிசய எண் 137! - 2

    124. ஆயுளை அதிகரிக்க விஞ்ஞானம் பரிந்துரைக்கும் எளிய வழிகள்! - 1

    125. ஆயுளை அதிகரிக்க விஞ்ஞானம் பரிந்துரைக்கும் எளிய வழிகள்! - 2

    126. மர்லின் மன்ரோ மரண மர்மம் – 1

    127. மர்லின் மன்ரோ மரண மர்மம் - 2

    128. மர்லின் மன்ரோ மரண மர்மம் - 3

    129. விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்கிறார்களா – ஐன்ஸ்டீனிடம் சிறுமி கேட்ட அதிரடிக் கேள்வி!

    130. பழைய தலைதானே, போனால் போகட்டும் போடா!

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    அறிவியலில் ஆர்வம் காட்டும் அன்பர்கள் தொடர்ந்து அறிவியல் துளிகள் தொடருக்குக்கொடுத்த ஆதரவிற்கு எனது உளமார்ந்த நன்றி.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் ஐந்தாம் பாகத்தை மறுபதிப்பாகக் கொண்டு வர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதுவரை இந்த அறிவியல் துளிகள் தொடரானது பதினெட்டு பாகங்களாக வெளிவந்துள்ள ஒன்றே அறிவியலில் அனைவரும் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கான சிறந்த சான்று.

    மகத்தான ஆதரவைத் தரும் அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூரு

    24-2-2023

    105. திருடப்பட்ட கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகளின் மோதல்!

    அறிவியல் உலகில் எப்போதும் விஞ்ஞானிகள் ஜாக்கிரதையாகவே இருப்பர். தமது ஆராய்ச்சிகளை முற்றிலும் முடித்த பின்னரே வெளியுலகிற்கு அறிவிப்பர். ஏனெனில் இதை அறிந்த யார் வேண்டுமானாலும் அதைத் தனது கண்டுபிடிப்பு என்று அறிவித்து விடுவார்கள் என்ற பயம்தான். சில விஞ்ஞானிகளோ தங்கள் உதவியாளர்களின் கண்டுபிடிப்புகளைத் தங்கள் பெயரில் ஆய்வுப் பேப்பராக வெளியிட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நோபல் பரிசு பெறும்போது பொங்கி எழுந்தவர்களுள் ஒரு பெண்மணி உள்ளிட்ட பலர் உண்டு.

    இப்படிப்பட்ட மோதல்களில் சுவையான ஒரு மோதல் அராகோ என்ற விஞ்ஞானிக்கும், பியாட் என்ற விஞ்ஞானிக்கும் ஏற்பட்டதுதான்!

    டி.எஃப்.ஜே. அராகோ (1786-1853) என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி. அவருக்கு பியாட் என்ற நண்பர் நெருக்கமானவர். அராகோ தனது புத்திசாலித்தனத்தாலும், ஆராய்ச்சியாலும் மிகவும் பிரபலமாகி வருவது அவருக்குச் சற்று பிடிக்காமல் இருந்தது.

    ஒரு நாள் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அன்று புதன்கிழமை. அப்போது அராகோ தான் செய்து வரும் போட்டோமீட்டர் பற்றிய ஆராய்ச்சியை விவரித்துச் சொல்ல ஆரம்பித்தார். போட்டோமீட்டர் கருவி ஒளிச் செறிவைத் (light intensity) துல்லியமாக அளக்க உதவும் ஒரு கருவி.

    பேசிக்கொண்டே வருகையில் அவர்கள் இருவரும் செயிண்ட் ஜாக்கஸ்-டு-ஹாட்-பாஸ் என்ற தேவாலயம் அருகில் வந்தனர். சுவாரசியமாக தனது கண்டுபிடிப்பு பற்றிக் கூறிக்கொண்டிருந்த அராகோ அதை விளக்குவதற்காக தன் பையில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து ஒரு சாவியால் சர்ச்சில் இருந்த தூணில் கீறி ஒரு படத்தை வரைந்து விவரித்தார்.

    அடுத்து வந்த திங்கள்கிழமை அன்று ஒரு விஞ்ஞானிகள் கூட்டத்தில் பியாட் பேச ஆரம்பித்தார். அவர் பேச்சைக் கேட்டு அராகோ அசந்துபோய் விட்டார். கடந்த புதன்கிழமை அன்று, தான் விவரித்த போட்டோமீட்டரைத் தனது கண்டுபிடிப்பாக சரளமாக விவரித்து பியாட் பேசிக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அராகோ ஒரு கட்டத்தில் இடையிட்டுப் பேச முயன்றார். அவரைக் கையமர்த்திய பியாட், போர்டில் அராகோ வரைந்து காண்பித்த அதே படத்தை வரையலானார். இதற்குமேல் அராகோவினால் பொறுக்க முடியவில்லை.

    இது ஐந்து தினங்களுக்கு முன்னர் நான் உங்களுக்கு வரைந்து காண்பித்த படம் அல்லவா! உங்களுடையது போலப் பேசலாமா? என்று கத்தினார். அப்படி ஒரு பேச்சு நடந்ததாகவே தனக்கு ஞாபகம் இல்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார் பியாட். உடனே அராகோ தான் வரைந்த படம் உள்ள சர்ச் தூணைக் குறிப்பிட்டு அங்கே சிலர் உடனே சென்று பார்க்கலாம் என்றும், தனது மேஜை டிராயரில் முழு விவரம் அடங்கிய போட்டோமீட்டர் பற்றிய ஆய்வுப் பேப்பர் உள்ளது என்றும், அதையும் உடனே எடுத்து வரலாம் என்றும் கூறினார்.

    விவாதம் சூடாகவே உடனடியாக சிலர் சர்ச்சுக்கும், சிலர் அராகோவின் அலுவலகத்திற்கும் அப்போதே அனுப்பப்பட்டனர். யார் சொல்வது உண்மை என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும் என்ற நிலையில், நிலைமை அபாயமாகப்போவதை உணர்ந்த பியாட் அவர்கள் திரும்பி வரும் வரை காத்திராமல் உடனடியாக அந்த இடத்தைவிட்டு அகன்றார். அதன் பின்னர் இரண்டு வருடம் அந்தப் பக்கமே அவர் வரவில்லை.

    அனைவருக்கும் அராகோ சொன்னதுதான் உண்மை என்பது புரிந்துவிட்டது. திருடப்பட்ட கண்டுபிடிப்பை உடனடியாக அம்பலத்திற்குக் கொண்டுவந்து விட்டார் அராகோ!

    இதேபோன்ற ஒரு விவாதத்தில் ஒளி ஒரு துகள் என்று அராகோ சொன்னார். பியாட்டோ ஒளி ஒரு அலை என்று வாதிட்டார். இருவரும் சற்று பொறுமையாகப் பேசி இருந்தார்களென்றால் தாங்கள் விவாதிக்கும் போலாரிமீட்டருக்கு அது சம்பந்தமில்லாத சிறு விஷயம் என்பது தெரிந்திருக்கும். ஆனால் வாதம் செய்து ஒருவரை ஒருவர் மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் வாதம் மற்றவர் தலையிட்டு நிறுத்தச் சொல்லும் வரை நீண்டுகொண்டே போனது. அராகோ சொன்னதுபோல ஒளியின் செறிவு, அதனால் ஏற்படும் வண்ணங்கள் ஆகியவை பின்னால் அனைவராலும் உணரப்பட்டது. அனைவரும் அராகோவைப் போற்றினர்.

    இதுபோன்ற நிஜமான பல வரலாற்றுச் சம்பவங்களைப் பார்த்த விஞ்ஞானிகள் பொதுவாகத் தங்கள் ஆய்வைப் பற்றியோ, புதிய கண்டுபிடிப்புகள் பற்றியோ மூச்சு விடுவதில்லை. முற்றிலும் தயாரான பின்னரே உரிய இடத்தில் அறிஞர்கள் மத்தியில் தங்களின் கண்டுபிடிப்பைக் கூறுவதை வழக்கமாக ஆக்கிக்கொண்டனர்.

    அறிவியல் அறிஞர் வாழ்வில்...

    புள்ளிவிவர இயல் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர் ரொனால்ட் ஏ. ஃபிஷர்.

    ஒரு நாள் தன்னைச் சந்தித்த பெண்மணியான டாக்டர் பிரிஸ்டல் என்பவருக்கு உபசரிப்பின் நிமித்தம் தேநீரைத் தந்தார். ஆனால் அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். காரணம், ஃபிஷர் டீயைப் பாலுடன் சேர்த்திருந்தது தான். டாக்டர் பிரிஸ்டல் பாலைத்தான் எப்போதும் டீயுடன் சேர்க்க வேண்டும் என்றார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஃபிஷர், இரண்டும் ஒன்றுதானே, எதோடு எதைக் கலந்தால் என்ன, வித்தியாசம் யாருக்குத் தெரியப்போகிறது? என்றார்.

    ஆனால் பிரிஸ்டலோ இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு, என்னால் கண்டுபிடிக்க முடியும் என்றார். ஆச்சரியப்பட்ட ஃபிஷர் பிரிஸ்டலைச் சோதித்தார். ஒவ்வொரு முறையும் பிரிஸ்டல் துல்லியமாக எதனுடன் எது சேர்க்கப்பட்டது என்பதைச் சொன்னார். தனது சோதனையை புள்ளிவிவரமாகக் குறித்த ஃபிஷர் இதனால் உத்வேகம் பெற்றார். அவருடைய மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்டாட்டிஸ்டிகல் மெதேட்ஸ் ஃபார் ரிஸர்ச் ஒர்கர்ஸ் (Statistical Methods for Reasearch Workers) என்ற புத்தகத்தை 1925-இல் எழுதி முடித்து உலகப் புகழ்பெற்றார்.

    புள்ளிவிவர இயலுக்கு அடிப்படையான காரணமாக இருந்தது பாலுடன் தேநீரைச் சேர்ப்பதா அல்லது தேநீருடன் பாலைச் சேர்ப்பதா, எது அதிகம் ருசி, எது சரியான முறை என்பது பற்றிய விவாதம் தான்!

    106. மார்ச்

    Enjoying the preview?
    Page 1 of 1