Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Thuligal Part - 11
Ariviyal Thuligal Part - 11
Ariviyal Thuligal Part - 11
Ebook177 pages1 hour

Ariviyal Thuligal Part - 11

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூல் - பதினொன்றாம் பாகம் – 261 முதல் 286 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 19/2/2016 முதல் 12/8/2016 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

Languageதமிழ்
Release dateApr 23, 2022
ISBN6580151008346
Ariviyal Thuligal Part - 11

Read more from S. Nagarajan

Related to Ariviyal Thuligal Part - 11

Related ebooks

Reviews for Ariviyal Thuligal Part - 11

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Thuligal Part - 11 - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    அறிவியல் துளிகள் பாகம் – 11

    Ariviyal Thuligal Part – 11

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    261. பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

    262. செவ்வாய் குடியிருப்பு வேண்டாம்; கிண்டலான பரபரப்புக் கட்டுரை!

    263. உருகும் பனிப்பாறைகள்; உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

    264. இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்!

    265. வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

    266. சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்!

    267. சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

    268. சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்!

    269. இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?

    270. 2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த மூளை அறுவை சிகிச்சை!

    271. 103வது இந்திய அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்!

    272. மன்னிக்க வேண்டுகிறேன்!

    273. சந்திரனில் ஒரு கிராமம்!

    274. அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! - 1

    275. அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! - 2

    276. அதிசய பாட்ச் மலர் மருந்துகள்!

    277. விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!

    278. விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

    279. உலகின் புரட்சிகரமான மாத்திரை!

    280. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

    281. ஆட்டம் போடும் சீனாவின் விண்கலம் விழப்போகும் விபரீதம்!

    282. குழந்தைகள் விளையாடும் வீடியோ மூளை விளையாட்டு ஆபத்தானதா?

    283. உப்பு நீரால் ஓடும் கார்!

    284. உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

    285. டர்பாவின் அதிசய ஆய்வுகள்!

    286. டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!

    முடிவுரை

    என்னுரை

    இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

    ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

    இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

    எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

    அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

    4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

    இந்த நூல் - பதினொன்றாம் பாகம் – 261 முதல் 286 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 19/2/2016 முதல் 12/8/2016 முடிய வாரா வாரம் வெளியானவை.

    ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

    அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

    நன்றி

    பங்களூர் ச.நாகராஜன்

    23-3-2022

    261. பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டர்!

    சந்தேகப் பேர்வழிகள் ஏன் சந்தேகப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கவில்லையே அதனால் தான்! - ஜேஸன் ஹாஸ்

    சாதாரணமாக இயற்பியல், இரசாயனம், உயிரியல், மருத்துவம் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்திய விஞ்ஞானிகளைப் பற்றி உலகம் நன்கு அறியும். ஆனால் பேய்கள், ஆவிகள் உலகம் போன்றவற்றை ஆராயும் விஞ்ஞானிகளுக்கு விளம்பரமும் கிடைக்காது, பரிசுகளும் கிடைக்காது. இது நிதர்சனமான உண்மை. என்றாலும் பல விஞ்ஞானிகள் தங்கள் ஆர்வம் காரணமாக இப்படிப்பட்டவற்றை ஆராய்வது உண்டு.

    அப்படிப்பட்டவர்களுள் பேயை முறைப்படி ஆராய்ந்து ஏராளமான ஆவணங்களை உருவாக்கிய ஒரே விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுபவர் ஹான்ஸ் பெண்டர் (Hans Bender) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். (பிறப்பு 5-2-1907 மறைவு 7-5-1991). ஜோதிடத்திலும் இவருக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. அவரது நண்பரான தாமஸ் ரிங்குடன் ஜோதிடம் கேட்காமல் இவர் எந்த விஞ்ஞான மற்றும் சொந்தக் காரியங்களில் ஈடுபடுவதில்லை.

    இவர் ஆராய்ந்த பேய் கேஸ்களில் உலகப் புகழ் பெற்ற ஒரு கேஸுக்கு ரோஸென்ஹெய்ம் கேஸ் என்று பெயர்.

    ans Bender

    பவேரியாவின் தெற்குப் பகுதியில் ரோஸென்ஹெய்ம் என்ற நகரில் சிக்மண்ட் ஆடம் என்ற ஒரு வக்கீல் வாழ்ந்து வந்தார். அவர் அலுவலகத்தில் 1967ஆம் ஆண்டு திடீரென்று அமானுஷ்யமான பல காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

    அரண்டு போன அவர் விஞ்ஞானி ஹான்ஸ் பெண்டரை நாடினார்.

    அலுவலகம் வந்த பெண்டர் என்ன நடக்கிறது என்று கேட்டார்.

    அந்த அலுவலகத்தில் நான்கு போன்கள் உண்டு. திடீர் திடீரென போன் அழைப்புகள் ஒலிக்கும். ஆனால் போனை எடுத்தால் மறுமுனையில் பதிலே வராது. போனில் ஏதோ பழுது இருக்கிறதென்று நினைத்து ஆடம் எல்லா போன்களையும் புதிதாக மாற்றினார். ஆனால் மர்மமான போன் அழைப்புகள் தொடர்ந்தன. உடனே டெலிபோன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அங்கிருந்த எஞ்ஜினியர்கள் வந்து எல்லா வயர்களையும் ஆராய்ந்து அனைத்தும் சரியாகவே இருக்கின்றன என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

    ஜெர்மனியில் 0119 என்ற நம்பர் அனைத்து அழைப்புகளையும் துல்லியமாகக் குறித்து எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும், இதை டாக்கிங் க்ளாக் (TALING CLOCK) என்று அழைப்பர்.

    இந்த பேச்சைக் குறிக்கும் கடிகாரத்தின் படி ஆடம்ஸுக்கு பில் அனுப்பப்பட்டது. அவர் அரண்டு போனார். அதாவது ஒரு நிமிடத்திற்கு அவர் 6 ‘கால்’களைப் பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டது! யாராலும் செய்ய முடியாத ஒரு அரிய காரியம் இது! ஒரு எண்ணை டயல் செய்து அடுத்தவர் மறுமுனையில் எடுக்கும் காலத்தைச் சற்று கவனித்தாலே நிமிடத்திற்கு ஆறு கால்களை யாராலும் பேச முடியாது.

    1967 அக்டோபரில் கட்டிடத்தில் உள்ள பல்புகளும் பல்புகள் பொருத்தப்பட்டிருந்த அலங்காரக் கூடுகளும் ஆட ஆரம்பித்தன. திடீரென 90 டிகிரிகள் அவை திரும்பும்!

    உடனே மீண்டும் மின் இணைப்பு சரி பார்க்கப்பட்டது. ஒரு வோல்டேஜ் மீட்டரும் புதிதாக பொருத்தப்பட்டது. பெரிய அளவிலான வோல்டேஜ் மாறுதல்கள் ப்யூஸை போக்கி விடும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை! அங்கிருந்த போட்டோகாப்பி மெஷினிலிருந்து மின்சாரம் கசிய ஆரம்பிக்கவே மின் இணைப்பையே துண்டித்து விட்டு ஜெனரேட்டர் மூலமாக மின் சக்தி பெறப்பட்டது. ஆனால் அப்போதும் இவை தொடர்ந்தன.

    அனைத்தும் விசித்திரமாக இருந்தன. இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெண்டர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

    நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இவை நிகழ்வதை அவரது குறிப்பேடுகள் சுட்டிக் காட்டின. தற்செயல் ஒற்றுமை போல ஆன்னி மேரி என்ற இளம் பெண் அங்கிருக்கும் போது மட்டுமே இவை நிகழ்ந்தன.

    அவள் உள்ளே வந்தவுடன் இந்த அமானுஷ்ய செயல்கள் ஆரம்பிக்கும். அவள் சென்ற பின்னர் இவையும் நின்று விடும். ஆன்னியை விசாரிக்க ஆரம்பித்தார் பெண்டர். அவள் ஒரு உணர்ச்சிகரமான பெண் என்பதையும் தனது எஜமானனைக் கண்டால் அவளுக்கு அறவே பிடிக்காது என்பதையும் அறிந்தார் பெண்டர்.

    http://www.ghosttheory.com/wp-content/uploads/2008/12/anne-marie-225x300.jpg

    1967 டிசம்பர் மற்றும் 1968 ஜனவரியில் இந்த அமானுஷ்ய செயல்கள் தீவிரமாக அதிகரித்தன. சுவரில் தொங்கும் காலண்டரின் பக்கங்கள் தாமாக டர்ரென்று கிழிந்து விழுந்தன! சுவரிலே தொங்கும் வண்ண ஓவியங்கள் தாமாகவே திரும்பிக் கொண்டன. 400 பவுண்டு எடையுள்ள ஓக் மரத்திலான ஒரு அலமாரி - சாதாரணமாக யாராலும் அசைக்கக் கூட முடியாதது - சில அடிகள் தானாகவே நகர்ந்தது. ஆனால் கீழே பொருத்தப்பட்டிருந்த லினோலியம் சேதமடையாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது. மேஜை டிராயர்கள் தாமாகவே திறந்து கொண்டன. பின்னர் டப்பென்று சத்தத்துடன் மூடிக் கொண்டன!

    இதெயெல்லாம் படமாகவும் பிடித்தார் பெண்டர். அன்னி மேரி அந்த வேலையிலிருந்து நின்றவுடன் அனைத்து அமானுஷ்ய செயல்களும் நின்றன!

    தான் சேகரித்த ஏராளமான ஆவணங்கள் மூலமாக இந்த அமானுஷ்ய செயல்கள் அனைத்தும் மர்மமான ஒரு ஆவியின் வேலை தான் என்று பெண்டர் கூறினார். அன்னி மேரியின் வெறுப்பும் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் அவர் இருக்கும் போது அவர் மூலமாக இந்த சக்திகள்

    Enjoying the preview?
    Page 1 of 1