Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vinnil Suzhalum Vinthaigal
Vinnil Suzhalum Vinthaigal
Vinnil Suzhalum Vinthaigal
Ebook88 pages24 minutes

Vinnil Suzhalum Vinthaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவர்களுக்கும் புரியும் விதமாக விண்வெளியின் அதிசயங்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். 'விண்ணில் சுழலும் விந்தைகள்' என்கிற இந்தச் சிறுநூல் உருவானது.

இப்போதைய குழந்தைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிற அளவு சூழ்நிலை இருக்கிறது. தொலைக்காட்சியில் 'டிஸ்கவரி', 'நேஷனல் ஜியாக்ரஃபிக்' அலைவரிசைகளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிற குழந்தைகளை நான் அறிவேன்.

அவர்களுக்காகவும், அவர்களைப் போல் மற்ற துறுதுறுப்பான குழந்தைகளுக்காகவும் நிறையப் படங்களோடு இந்த நூல் உருவாகியுள்ளது. பெரும் அளவில் அமெரிக்க ‘நாஸா' விண்வெளிக் கலங்கள் எடுத்த படங்களும், அவர்கள் அனுப்புகிற புதிது புதிதான செய்திகளும் இந்த நூலில் பயன்பட்டிருக்கின்றன. அந்த அமைப்பு என் நன்றிக்கு உரியது.

மிக்க அன்புடன்
சுப்ர.பாலன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580127904634
Vinnil Suzhalum Vinthaigal

Read more from Subra Balan

Related to Vinnil Suzhalum Vinthaigal

Related ebooks

Reviews for Vinnil Suzhalum Vinthaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vinnil Suzhalum Vinthaigal - Subra Balan

    http://www.pustaka.co.in

    விண்ணில் சுழலும் விந்தைகள்

    Vinnil Suzhalum Vinthaigal

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நம்மைச் சுற்றி இருப்பவை

    2. வாரத்தின் ஏழு நாட்கள் வந்த வகை

    3. சூரியக்குடும்பம்

    4. குறுங்கோள் படலம்

    5. சீறிப்பாயும் சிறு கற்கள்

    6. கோள்களும் விண்மீன்களும்

    7. நிலவுகள் எத்தனை நிலவுகள்!

    8. வால்நட்சத்திரங்கள்

    9. நட்சத்திரக் கூட்டங்கள்

    10. நம்முடைய சூரியன்

    என்னுரை

    சிறுவர்களுக்கும் புரியும் விதமாக விண்வெளியின் அதிசயங்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். 'விண்ணில் சுழலும் விந்தைகள்' என்கிற இந்தச் சிறுநூல் உருவானது.

    இப்போதைய குழந்தைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிற அளவு சூழ்நிலை இருக்கிறது. தொலைக்காட்சியில் 'டிஸ்கவரி', 'நேஷனல் ஜியாக்ரஃபிக்' அலைவரிசைகளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிற குழந்தைகளை நான் அறிவேன்.

    அவர்களுக்காகவும், அவர்களைப் போல் மற்ற துறுதுறுப்பான குழந்தைகளுக்காகவும் நிறையப் படங்களோடு இந்த நூல் உருவாகியுள்ளது. பெரும் அளவில் அமெரிக்க ‘நாஸா' விண்வெளிக் கலங்கள் எடுத்த படங்களும், அவர்கள் அனுப்புகிற புதிது புதிதான செய்திகளும் இந்த நூலில் பயன்பட்டிருக்கின்றன. அந்த அமைப்பு என் நன்றிக்கு உரியது.

    மிக்க அன்புடன்

    சுப்ர.பாலன்

    *****

    1. நம்மைச் சுற்றி இருப்பவை

    நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

    எதன் மீது என்று கேட்டால், 'தரையின் மேல்' என்று சொல்வீர்கள். அது உண்மைதான்.

    தரை என்பது என்ன? பூமி உருண்டையின் மேல் பகுதிதான் தரை. இந்தத் தரை என்பது ஆரஞ்சுப் பழத்தின் தோலைப் போன்றது. அப்படியானால் 'பழம்' 'சுளை' எல்லாம் எங்கே என்று கேட்பீர்களே!

    கணக்கு என்றால் பயப்பட மாட்டீர்களே? கணக்குத் தெரியாமல் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. அது 'பாடம்' என்றால் தான் சிலர் பயப்படுகிறார்கள். இதோ ஒரு கணக்கு.

    பூமி உருண்டையை ஓர் ஆரஞ்சுப் பழமாக நினைத்துக் கொள்ளுங்கள். அதனுடைய குறுக்கு அளவு - அதாவது விட்டம் எவ்வளவு தெரியுமோ? ஏறக்குறைய பதின்மூன்றாயிரம்

    விண்வெளியில் 35,520 கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட நீலநிறமான நம் பூமியின் படம்.

    கிலோமீட்டர்கள். பூமி உருண்டையின் நடுப்பகுதியில் 6,400 கி.மீ. விட்டத்துக்கு நெருப்புக் குழம்பு. நிஜமாகவே தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கிற நெருப்புக் குழம்பு. இதை ஆங்கிலத்தில் 'மாக்மா' என்று சொல்கிறார்கள். ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் எரிமலைகள் உண்டல்லவா? சில நேரங்களில், அந்த எரிமலைகளின் வாய் திறந்து அதன் வழியே இந்த நெருப்புக் குழம்பு ஆறாக ஓடி வரும். இந்த நெருப்புக் குழம்புதான் பூமிப்பழ உருண்டையின் சுளைப்பகுதி. நெருப்புச் சுளைக்கு மேலே 'ஆலிவைன்' என்கிற ஒரு மிகத் தடிமனான பாறைப் படலம் மூடியிருக்கிறது. அதற்கு மேலே உள்ள பொருக்குப் பகுதியின் மேல்தான் நாம் நிற்கிறோம். நடக்கிறோம், கட்டடங்கள் கட்டுகிறோம். ஆழமான ஏரிகள், குளங்கள், கடல்கள் எல்லாம் இருப்பது இந்தப் பொருக்குப் பகுதியில்தான்.

    இது ஒன்றும் ஒரே

    Enjoying the preview?
    Page 1 of 1