Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal
Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal
Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal
Ebook216 pages1 hour

Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழந்தமிழ் நூல்களிலும் பழைய சம்ஸ்க்ருத நூல்களிலும் எண்ணற்ற அறிவியல் தகவல்கள் இருக்கின்றன. உலகம் உருண்டை என்பதை, நம் முன்னோர்கள், பல பாடல்களில் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டுப் போகிறார்கள். பெயரிலேயே கோளம் (பூகோளம்) என்ற சொல் இருக்கிறது அதிலிருந்துதான் Globe என்ற ஆங்கிலச் சொல்லே வந்தது. ஒரு விஷயத்தை வெளிநாட்டினர் கண்டுபிடித்த பின்னர், நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம் என்று நாம் சொல்லுவதே வழக்கமாகிவிட்டது.

இனி வரப்போகும் கண்டுபிடிப்புகள், புதுமைகள் பற்றி உங்கள் மத நூல்களில் இருந்தால் சொல்லுங்களேன் என்று பலரும் நமக்கு சவால் விடுகின்றனர். விஞ்ஞானிகள் அறியாத அல்லது அறிவிக்காத விஷயங்கள் இருக்கின்றனவா? என்று பலரும் கேட்கிறார்கள். இந்தப் புஸ்தகத்தில் அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லி இருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580153509273
Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal

Read more from London Swaminathan

Related to Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal

Related ebooks

Reviews for Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் அரிய அறிவியல் செய்திகள்

    Tamil, Samskirutha Noolgalil Ariya Ariviyal Seithigal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.வேத கால வானியல் அதிசயங்கள்

    2.இந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர் மீண்டும் கண்டுபிடித்த விநோதம்!!

    3.முப்பது கோடி உலகங்கள்: கம்பன் தரும் அதிசயத் தகவல்!

    (4).27 நட்சத்திரங்களில், எது முதல் நட்சத்திரம்? - 1

    5.அஸ்வினி முதல் நட்சத்திரம் இல்லை!

    (6).27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்? - Part 3

    7.ஜோதிடத்தைக் கண்டுபிடித்தது தமிழனா?

    8.சனியை விட செவ்வாய் கிரஹம் பொல்லாதது - பாபிலோனியர் ஜோதிடம்

    9.ரிக் வேதத்தில் பூகம்பம்

    10.உலகம் எப்படி அழியும்? எப்போது அழியும்? வள்ளுவன் தகவல்

    11.வேத, உபநிஷத்துகளில் கனவுகள்

    12.விநோதக் கனவுகள்; கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்

    13.உஷார்! கடவுள் கையில் நோட்டுப் புத்தகம்: 3 பேர் பார்த்துவிட்டனர்!

    14.எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும்

    15.இந்தியாவின் அதிசய பீரங்கிகள்

    16.இமயமலையில் புற்றுநோய்க்கு மருந்து

    17.அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல்

    18.ரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-Part 1 (Post No.4310)

    19.ரிக் வேதத்தின் அற்புத அமைப்பு-2

    20.எண்களை/ ‘நம்பர்’களை வணங்கும் வினோத இந்துக்கள்!

    21.உலகு இன்பக் கேணி! பாரதி சொன்னது உண்மையே!

    22.சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம்

    23.ஞானாநந்த தபோவன அதிசயம் - செவ்வாய் கிரஹ ஞானிகள்

    24.குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல்

    25.குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே...

    26.ஒரு கிலோ புதையல் விலை 75,000 பவுன்; சாப்பிடலாம்!!

    27.உள்ளம் உருகுதையா, முருகையா; துருவமும் உருகுதையா!

    28.அஸ்ஸாமிலிருந்து ஒரு அதிசயச் செய்தி

    29.மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

    30.நெல்லிக்காய், இலந்தைப் பழ மகிமை: மருத்துவப் பொன்மொழிகள்

    31.தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை அறிவு -1

    32.தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை அறிவு – Part 2

    33.கைகண்ட மருந்து/ மந்திரம்!

    34.எதிர்காலத்தை அறிய உதவும் அற்புத மூலிகை

    35.தீ எரிக்காது - இந்து மத அற்புதம் (3 pars)

    36.டாக்டர் எலி - நோய் கண்டுபிடிக்க உதவி!

    அட்டைப்பட விளக்கம் (Pictures on the wrapper)

    E:\Priya\Book Generation\Tamil, Samskirutha\Ursa_Major_-_Ursa_Minor_-_Polaris-min.jpgE:\Priya\Book Generation\Tamil, Samskirutha\rohini arudra-min.jpgE:\Priya\Book Generation\Tamil, Samskirutha\a807a-alpha-min.jpg

    தென் இந்தியாவிலிருந்து எளிதில் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்கள்/ மண்டலங்கள் ஒரையன் (Orion Constellation) எனப்படும் திருவாதிரை, மிருகசீர்ஷ நட்சத்திரத் தொகுதியாகும். பீட்டல்ஜுஸ் (Betelgeuse) என்பது திருவாதிரை நட்சத்திரம். அதில் பெல்ட் (Belt) போல இருப்பது மிருகசீர்ஷம். இதைத் தமிழ் நூல்கள் மான் தலை (Deer Head) என்று அழைக்கும். அதற்கு மேலாகத் தோன்றும் ஆல்டிபேரன் (Aldebaran) என்பது ரோகிணி நட்சத்திரம். இதுவும் திருவாதிரையும் கொஞ்சம் சிவப்பு நிறத்தில் காட்சி தரும். அதற்கும் மேலாகத் தோன்றும் பிளெயடஸ் (The Pleiades) எனப்படும் 6 அல்லது 7 நட்சத்திரங்கள் அறுமீன் எனப்படும் கார்த்திகை நட்சத்திரத் தொகுதி.

    தெற்கு வானத்தில் சிலுவை (Southern Cross) வடிவத்தில் இருக்கும் நட்சத்திரத் தொகுதி திரிசங்கு நட்சத்திரம் ஆகும். அதன் அருகில் கோல் சாக் (The Coal sack Nebula) என்றுள்ள பகுதி நட்சத்திரங்கள் அற்ற இருண்ட / கரிப் பகுதி.

    வடக்கு வானத்தில் இந்துக்கள் எல்லோரும் வழிபடும் சப்தரிஷி மண்டலத்தை (Sapta Rishi or Ursa Major/ Great Bear Constellation) எளிதில் பார்க்கலாம். பட்டம் பறப்பது (Flying Kite) போல உள்ள ஏழு விண்மீன் கூட்டத்தில் வால் பகுதியில் கடைசி நட்சத்திரத்துக்கு முன்னர் உள்ளது வசிஷ்ட நட்சத்திரம். அந்த ஆறாவது நட்சத்திரத்தை உற்று நோக்கினால் தெரியும் நஷத்திரமே கற்புக்கரசி அருந்ததி; அம்மி மிதித்தல், அருந்ததி காணல் என்பது இந்துக்களின் முக்கிய திருமணச் சடங்கு... வானியலாளர் கணக்குப்படி இது ஒரு இரட்டை (Double Star) நட்சத்திரம் ஆகும்.

    முன்னுரை

    பழந் தமிழ் நூல்களிலும் பழைய சம்ஸ்க்ருத நூல்களிலும் எண்ணற்ற அறிவியல் தகவல்கள் இருக்கின்றன. உலகம் உருண்டை என்பதை, நம் முன்னோர்கள், பல பாடல்களில் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டுப் போகிறார்கள். பெயரிலேயே கோளம் (பூகோளம்) என்ற சொல் இருக்கிறது அதிலிருந்துதான் Globe என்ற ஆங்கிலச் சொல்லே வந்தது. ஒரு விஷயத்தை வெளிநாட்டினர் கண்டுபிடித்த பின்னர், நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம் என்று நாம் சொல்லுவதே வழக்கமாகிவிட்டது. எல்லோரும் கேட்கும் கேள்வி என்னவென்றால், அது சரி, உங்களை நம்புகிறோம்; இனி வரப்போகும் கண்டுபிடிப்புகள், புதுமைகள் பற்றி உங்கள் மத நூல்களில் இருந்தால் சொல்லுங்களேன் என்று பலரும் நமக்கு சவால் விடுகின்றனர். விஞ்ஞானிகள் அறியாத அல்லது அறிவிக்காத விஷயங்கள் இருக்கின்றனவா? என்று பலரும் கேட்கிறார்கள். இந்தப் புஸ்தகத்தில் அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லி இருக்கிறேன் நம்முடைய கனவுகள் (Dreams) பற்றிய நம்பிக்கைகளும், மேலை நாட்டிலிருந்து வேறுபட்டவை. அது பற்றியும் சில கட்டுரைகள் இந்த நூலில் அடக்கம். ஏற்கனவே நான் எழுதி வெளியிட நூல்களிலும் காலப்பயணம், அண்டம் விட்டு அண்டம் செல்லும் விண்வெளிப் பயணம் (Time Travel, Inter Galactic Travel) குறித்தும் சொல்லியிருக்கிறேன். அறிவியலையும் சமய நூல்களையும் ஒப்பிட்டு ஆராய்வோர் பல விஷயங்களைஅவர்களுடைய மனக்கண்கள் முன்னால் காண முடிகிறது. கல்கி அவதாரம் மட்டுமின்றி நாடி ஜோதிடம் வரை நாம் எல்லாவற்றையும் விஞ்ஞான நோக்கில் படித்தால் பல அற்புதங்கள் வெளியாகும்; நமக்கு நிறைய செல்வம் இருந்தால் அமெரிக்கா போல ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியே ஆராயலாம். இந்த சிந்தனை வளரவும் ஆராய்ச்சிகள் துவங்கவும் இந்த நூல் உந்துகோலாக இருக்கட்டும்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    நவம்பர் 2022

    1.வேத கால வானியல் அதிசயங்கள்

    வான சாஸ்திரத்தில் இந்துக்கள் அடைந்த முன்னேற்றம் வியப்பானது. தமிழ், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு, சீ ன, பாரஸீக, கிரேக்க, லத்தின் மொழிகளில் இலக்கியங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே இந்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் நட்சத்திர பட்டியல், கிரஹப் பட்டியலை எழுதி வைத்துவிட்டனர். மேற்கூறிய மொழிகள் பட்டியலில் தமிழ்தான் சின்னப்பையன். அதாவது கடைசியில் இலக்கியம் படைத்த குட்டித்தம்பி.

    பைபிளின் பழைய ஏற்பாடு OLD TESTAMENT OF BIBLE, பாரசீக செண்ட் அவஸ்தா ZEND AVESTA ஆகியன கி.மு 900 வாக்கில் உருவாயின. ஹோமர் கிரேக்க மொழியில் எழுதிய இலியட், ஆடிஸி /ஒடிஸி ILLIAD, ODYSSEY (இரண்டு உச்சரிப்புகளும் சரி) ஆகிய காவியங்கள் கி.மு 800-ல் உருவாயின. லத்தின் மொழி காவியங்கள் தமிழுக்கு கொஞ்ச்ம் முன்னால் தோன்றின. சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் உள்ள 30,000 வரிகளும் கி.பி.முதல் 3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தின் தேதி கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி 5-ம் நூற்றாண்டு வரை ஊசல் ஆடுகிறது. நிற்க.

    இவற்றுக்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ரிக் வேதத்தில் நட்சத்திரங்கள், கிரஹங்கள் பற்றிய குறிப்புகள் உள. ஆனால் முழுப் பட்டியல் யஜுர் வேதத்தில்தான் காணக்கிடக்கிறது.

    முதலில் வானத்தைப் பார்த்து அதிசயித்த ரிக் வேத கவிஞன் (1-24-7 ரிக் வேதம்) வியக்கிறான் –

    அஜீ கர்த்தனின் புதல்வன் ரிஷி சுநஸ் சேபன் பாடுகிறான்

    இந்த ஆகாயத்தின் ஆழம் மிகப்பெரியது. இதன் தரையைப் பார்க்க முடியாது இந்த அடி முடியற்ற ஆகாயத்தின் உச்சியில் தூய்மையான வருண பகவான் ஒரு ஒளிக்கற்றையை வைத்திருக்கிறான். அங்கிருந்து ஒளி கீழே பாய்கிறது .

    இந்தக் கவிதையில் ரிஷி பயன்படுத்தும் சொல் ‘வனஸ்ய ஸ்தூபம்’. இது ‘ஒளித் தூண்’, ‘ஒளி மரம்’ என்று சொல்லலாம். பிரபஞ்சத்தை ஒரு வட்ட வடிவத்தில் உள்ள கூடாரமாகக் கண்டு அதிலுள்ள நட்சத்திரங்களையும் பாடுகிறார் கவிஞர்…

    "உச்சத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் இரவிலே தெரிகின்றன. பகல் நேரத்தில் மறைந்து விடுகின்றன. இவை வருணனின் தடைப்படாத செயல்கள். அவனது ஆணையின் கீழ்

    சந்திரன் இரவில் பிரகாசித்துக் கொண்டு செல்கிறான்."1-24-10

    இதற்கு முந்தைய எட்டாவது மந்திரத்தில் பகலில் பிரகாசிக்கும் சூரியனையும் பாடுவதால் காலை முதல் இரவு வரை எல்லாம் வருணனின் நியதிப்படி நடப்பதைக் கண்டு வேத கால மக்கள் குறிப்பு எடுத்ததை அறிகிறோம்

    ஆழம் காண முடியாத, அடி முடியற்ற வானம் (BOTTOMLESS) என்பது சுவைத்துப் படிக்க வேண்டிய வரிகள்.

    "இரவுநேரத் திருடர்களைப் போலத் தோன்றி, பகல் வந்தால் ஓடி விடுகின்றன விண்மீன்கள் என்கிறார் அதர்வண வேதக் கவிஞர்.அப்போது சூரியன் உல கைப் பராமரிக்கிறான் என்கிறார் சூரியனை போலீசாகவும் நட்சத்திரங்களை திருடர்களாகவும் வருணிக்கிறார் என்றே தோன்றுகிறது — அதர்வண வேதம் 13-12-17; 20-47-14

    சந்திரனின் பாதையையும் சூரியனின் பாதையையும் திதிகள், சுக்ல, கிருஷண பக்ஷங்கள், தக்ஷிணாயணம் உத்தராயணம் என்றெல்லாம் காரணத்தோடு இந்துக்கள் பிரித்தனர். இதனால் அவர்கள் அறிவியல் பார்வையுடையோர் என்பது தெளிவாகிறது. இதை விட முக்கியமான விஷயம் கிரேக்க மக்கள் உலகில் எழுதத் துவங்குவதற்கு முன்னரே கிரஹங்கள் நட்சத்திரங்கள், ருதுக்கள் பட்டியலை இந்துக்கள் வெளியிட்டதாகும்.

    வான சாஸ்திர புஸ்தகம் எதையும் அவர்கள் எழுதவில்லை. இறைவனைத் துதி பாடியபோது, போகிற போக்கில் நட்சத்திரங்களைக் குறிப்பிடுகின்றனர்.

    கிரஹங்கள் இடம் விட்டு இடம் செல்வத்தையும் ஒளிராமல் இருப்பதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்தனர். ஆனால் நட்சத்திரங்கள் இருந்த இடத்திலேயே இருப்பதையும் கண் சிமிட்டுவதையும் TWINKLING கண்டு வேறுபடுத்தினர்.

    ‘ந சரதி இதி நக்ஷத்ரஹ’ – ‘எது நடப்பத்தில்லையோ அது நட்சத்திரம்’ என்று வியாசர் மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் விளக்குகிறார் (290-36, சாந்தி பர்வம்)

    தாரா என்ற சொல்லில் இருந்து STAR ஸ்டார், மாச என்ற சொல்லிலிருந்து மந்த் MONTH என்னும் ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் அறிவது பொருத்தம்

    மாச என்றால் நிலவு என்கிறது ரிக் வேதம்; அதாவது நிலவின் ஒரு சுற்று = 1 மாதம். இதையே தமிழர்களும் பின்பற்றி ‘திங்கள்’ என்றால் சந்திரன், ஒரு மாதம் என்று பொருள் கொண்டனர்.

    சந்திரன் செல்லும் பாதையில் உள்ள 27+1 நட்சத்திரங்களையும் இந்துக்கள் பட்டியலிட்டனர். பெளர்ணமி அன்று எந்த நட்சத்திரத்துக்கு அருகில் சந்திரன் நிற்கிறதோ அதை அந்த மாதத்துக்கு பெயராக சூட்டி, 12 பெரிய விழாக்களைக் கொண்டாடினர். திரு ஞான சம்பந்தர் இந்த பெளர்ணமி விழாக்களைத் தொகுத்து ஒரு பதிகமாகவே பாடிவிட்டார். காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் (1894-1994) 12 மாதங்களின் பெயர்களையும் விளக்கி அற்புதமான சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

    ரிக் வேதம் பாடும் நட்சத்திரங்கள்

    அகா /மகம், அர்ஜுனி — 10-85-13

    ரேவதி, புனர்வசு — 10-19-1

    ரேவதி – 5-11-14; 4-51-4

    திஷ்ய – 5-54-13; 10-64-8

    சித்ரா – – 4-51-2

    நக்ஷத்ரம் என்ற சொல்லையும் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறது

    ***

    கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரீய ஸம்ஹிதையில்

    Enjoying the preview?
    Page 1 of 1