Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum
Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum
Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum
Ebook129 pages1 hour

Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு தமிழ் பெரியோரின் காலப்பயணம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி சம்பந்தரும், சுந்தரரும் எப்படிக் காலத்தில் பயணம் செய்து, முன்னர் இறந்து போன இருவரை பல ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டு வந்தனர் என்று எழுதினேன். இதே பாணியில் ஆயுதம், காலப்பயணம் பற்றி நிறைய பேர் எழுதத்துவங்கினர். எனக்கு அஹங்காரம் மேலிட்டது. மஹா பாரதத்தில் காந்தாரி பெர்றேடுத்த 100 பெரும் டெஸ்ட் ட்யூப் பேபிகள் என்ற கருத்தை பிபிஸி தமிழ் ஓசை ஒலிபரப்பில் ஒரு டாக்டரிடம் சொல்லிக் கருத்துக் கேட்டேன். இதுவும் பின்னர் பெரிதானது.

காந்திஜிக்கு முன்னர், பல்லாயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தைக் காந்தித் தாத்தா பெற்றுக் கொடுத்தார் என்பது எவ்வளவு பொருந்தாதோ அதுபோலத்தான் எனது கட்டுரைகளும்.

ரஜினிகாந்த் மூலம் ராகவேந்திர சுவாமிகள் பிரபலமானார்; எம்.ஜி.ஆர் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் பிரசித்தமானது. நடிகர் நம்பியார் மூலம் சபரி மலை ஐயப்பன் தமிழ்நாட்டில் பிரபலமானார் என்று மேம்போக்காகத் தெரிந்தாலும் எல்லாம் முன்னரே நிச்சயிக்கப்பட்ட விஷயமே. என் கட்டுரைகளையும் அதே நோக்கில் காண்க.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580153508743
Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum

Read more from London Swaminathan

Related to Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum

Related ebooks

Reviews for Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum - London Swaminathan

    http://www.pustaka.co.in

    இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

    Hindu Madha Noolgalil Veli Ulaga Vaasigalum, Kaalappayanamum

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1. நாம் எல்லோரும் நட்சத்திரங்கள்!!

    2. ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு: நம்மாழ்வாரும் சொல்கிறார்!

    3. வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்!

    4. ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

    5. சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!! சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

    6. ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் சொன்னது 100% சரி

    7. வானத்தில் அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!! மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! - Part 2

    8. மாண்டவர் மீண்டுவந்த 3 அதிசய நிகழ்ச்சிகள்

    9. சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்?

    10. பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

    11. சூரியனைப் பற்றி 6 கண்டுபிடிப்புகள் வேதத்தில் உள்ளது!

    12. புறநானூற்றில் Drone ட்ரோன்; ரிக் வேதத்தில் மோட்டார் Car கார்!

    13. திருப்பாவை அதிசயம் - கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும்?

    14. அ(ம்)மாவாசை பெயர் அற்புதம்!

    15. தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல்? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்!

    16. முனிவர்கள் விஞ்ஞானிகளா? பூமியின் வேகம் எப்படித் தெரிந்தது?

    17. வடக்கே தலை வைக்காதே!

    18. நாடி ஜோதிட ரகசியங்கள்: ‘நாஸா’ விஞ்ஞானிகள் கவனிக்க!

    19. விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத அதிசய விஷயம்! இந்துக்கள் கண்டுபிடிப்பு!

    20. தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் - 2

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ. பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார். 2014 முதல் ஒய்வுபெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 25 புஸ்தகங்களையும், 6000 கட்டுரைகளையும் எழுதியள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும், பிளாக் விவரங்களும் பின்வருமாறு:

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER - 07951 370697

    முன்னுரை

    எனது இலங்கை நண்பர் டாக்டர் இந்திரகுமார், 1990 ஆண்டுகளில் லண்டனிலிருந்து மேகம் என்ற தமிழ் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். சுவாமிநாதன், பத்திரிக்கையை அச்சுக்கு அனுப்ப இன்னும் இரண்டு தினங்களே இருக்கின்றன. ஆனால் உங்கள் கட்டுரை இல்லாமல் அச்சேறாது என்று அன்பாக மிரட்டுவார். உடனே இரவோடு இரவாக கட்டுரையை ‘டைப்’ அடித்து அனுப்பிவிடுவேன். அவை அனைத்தும் தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற தலைப்பில் 2009ல் புஸ்தகமாக வெளிவந்தது. அதற்குப் பின்னர் அதே பாணியில் பல கட்டுரைகளும், புஸ்தகங்களும் வெளியே வந்தன. அட, 1990 வாக்கில் நான் போட்ட வித்து பல மரங்களாக, பழ மரங்களாக பரவிவிட்டனவே என்று சந்தோஷம். 2004-ம் ஆண்டில் லண்டனிலிலுள்ள சவுத் இந்தியன் சொசைட்டி தீபாவளி மலரில் பிரம்மாஸ்திரம் அணு ஆயுதமா என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். பின்னர் 2011ம் ஆண்டில் துவங்கிய என்னுடைய இரண்டு பிளாக்குகளில் இரண்டு தமிழ் பெரியோரின் காலப்பயணம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி சம்பந்தரும், சுந்தரரும் எப்படிக் காலத்தில் பயணம் செய்து, முன்னர் இறந்துபோன இருவரை பல ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டு வந்தனர் என்று எழுதினேன். இதே பாணியில் ஆயுதம், காலப்பயணம் பற்றி நிறைய பேர் எழுதத் துவங்கினர். எனக்கு அஹங்காரம் மேலிட்டது. மஹாபாரதத்தில் காந்தாரி பெற்றெடுத்த 100 பெரும் டெஸ்ட் ட்யூப் பேபிகள் என்ற கருத்தை பி.பி.சி. தமிழ் ஓசை ஒலிபரப்பில் ஒரு டாக்டரிடம் சொல்லிக் கருத்துக் கேட்டேன். இதுவும் பின்னர் பெரிதானது. அட, நான் சொன்னவுடன் எத்தனை பேர் என்னை பின்பற்றி எழுதுகின்றனர் என்று நினைத்தேன். ஆனால் அது தவறான எண்ணம் என்று பின்னர் புரிந்தது.

    என்னுடைய தம்பி மீனாட்சிசுந்தர், தினமணிப் பத்திரிகை உதவி ஆசிரியர் பதவியைத் திடீரென உதறிவிட்டு, ஜெம்மாலஜி GEMMOLOGY பத்திரிக்கையைத் துவங்கி, ரத்தினக் கற்கள் பற்றி ஜோதிட ரீதியில் பலன் சொல்லி விற்கும் கடை துவங்கினான். அதுவரை பெரிய நகைக்கடைகளில் பணக்காரர் இடையே மட்டும் வைரம் என்ற சொல் புழங்கியது உண்டு. பாமர மக்களுக்கு ஜெம் GEM என்றாலோ ரத்தினக் கற்கள் என்றாலோ தெரியாது; தெரியும் ஆர்வமும் கிடையாது. ஆனால் என் தம்பி கடை துவங்கியவுடன் தமிழ்நாடு எங்கிலும் ஜெம் என்பதற்கு ஒரு பிரிவு வைத்து, ஜோதிட ரீதியில் கற்களை விற்கவும் துவங்கினர்… எனக்கு ஒரே ஆச்சரியம். எப்படித் தோழான், துருத்தி கூட GEM ஜெம் பற்றிப் பேசத் துவங்கிவிட்டனர் என்று வியப்பு.

    ஒருநாள் அவனைச் சந்தித்தபோது தமிழகத்தில் ஒரு ஜெம் புரட்சியையே உண்டு பண்ணிவிட்டாயே! எப்படி தனி ஒருவனாக இதை சாதித்தாய்? என்றேன். அவன் பணிவுடன் பதில் சொன்னான் - தனி ஒருவனின் சாதனை அல்ல இது. சிற்சில காலங்களில் சிற்சில விஷயங்கள் மேலுக்கு வரும் என்பது இயற்கை விதி.

    Enjoying the preview?
    Page 1 of 1