Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Brahmaastram Oru Anu Aayuthamaa?
Brahmaastram Oru Anu Aayuthamaa?
Brahmaastram Oru Anu Aayuthamaa?
Ebook112 pages42 minutes

Brahmaastram Oru Anu Aayuthamaa?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? என்ற தலைப்புடன் வரும் இந்த நூலில் இந்துக்களின் அதிபயங்கர ஆயுதம் பற்றிய கட்டுரையுடன் வேறு பல விஷயங்களும் வருகின்றன. மஹாபாரதத்தில் உள்ள குழந்தை பிறப்பு சம்பந்தமான அதிசய மருத்துவ உண்மைகள், அதிநவீன டெக்னிக்குகள் மற்றும் நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு, தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்குத் தமிழர்கள் கையாண்ட உத்திகள், கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதையிலும், தீபாவளி கொண்டாடுவதிலும் உள்ள விஞ்ஞான உண்மைகள் என்று பல்வேறு தலைப்புகளில் அதிசய விஷயங்கள் அடுக்கடுக்காக வருவதைக் காண்பீர்கள்.

ஒவ்வொரு காலத்திலும் சிலர், சில விஷயங்களை எழுதத் துவங்கியவுடன் மேலும் பலர் அதைத் துருவி ஆராய்கின்றனர் என்பது உண்மையே. இது எல்லாம் காலத்தின் கோலம். ரஜினிகாந்த் மூலம் ராகவேந்திர சுவாமிகள் பிரபலமானார்; எம்.ஜி.ஆர் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் பிரசித்தமானது. நடிகர் நம்பியார் மூலம் சபரி மலை ஐயப்பன் தமிழ்நாட்டில் பிரபலமானார் என்று மேம்போக்காகத் தெரிந்தாலும் எல்லாம் முன்னரே நிச்சயிக்கப்பட்ட விஷயமே. என் கட்டுரைகளையும் அதே நோக்கில் காண்க.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580153508745
Brahmaastram Oru Anu Aayuthamaa?

Read more from London Swaminathan

Related to Brahmaastram Oru Anu Aayuthamaa?

Related ebooks

Reviews for Brahmaastram Oru Anu Aayuthamaa?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Brahmaastram Oru Anu Aayuthamaa? - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

    Brahmaastram Oru Anu Aayuthamaa?

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1. இந்துக்களின் அதி நவீன, அதி பயங்கர ஆயுதங்கள்!

    2. ஐன்ஸ்டீன் ‘காப்பி’ அடித்தாரா?

    3. இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

    4. நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு - Part 1

    5. நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள் - Part 2

    6. விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்?

    7. உலகின் முதல் ரோபாட் – இந்துக்கள் கண்டுபிடிப்பு!

    8. உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?

    9.தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

    10. ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது உண்மைதான்!

    11. மனதின் அபார சக்தி

    12. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது! - பகுதி 1

    13. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது! - பகுதி 2

    14. மஹாபாரதம் உண்மையே; ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும்

    15. க்ளோனிங் cloning - அதிசய ஹிந்து விஞ்ஞானம்!

    16. ஆணுக்குப் பிறந்த குழந்தை!

    17. பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    18. பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

    19. தீபாவளிப் பண்டிகையில் விஞ்ஞான உண்மைகள்

    20. கடலுக்குள் முனிவர்கள்? கம்பன் சொல்லும் அதிசய செய்தி

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஓய்வுபெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் 25 புஸ்தகங்களையும், 7000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும், பிளாக் விவரங்களும் பின்வருமாறு:

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER - 07951 370697

    Two Blogs:

    tamilandvedas.com

    swamiindology.blogspot.com

    முன்னுரை

    பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? என்ற தலைப்புடன் வரும் இந்த நூலில் இந்துக்களின் அதி பயங்கர ஆயுதம் பற்றிய கட்டுரையுடன் வேறு பல விஷயங்களும் வருகின்றன. மஹாபாரதத்தில் உள்ள குழந்தை பிறப்பு சம்பந்தமான அதிசய மருத்துவ உண்மைகள், அதி நவீன டெக்னிக்குகள் மற்றும் நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு, தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்குத் தமிழர்கள் கையாண்ட உத்திகள், கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதையிலும், தீபாவளி கொண்டாடுவதிலும் உள்ள விஞ்ஞான உண்மைகள் என்று பல்வேறு தலைப்புகளில் அதிசய விஷயங்கள் அடுக்கடுக்காக வருவதைக் காண்பீர்கள்.

    2004-ம் ஆண்டில் லண்டனிலிலுள்ள சவுத் இந்தியன் சொசைட்டி தீபாவளி மலரில், ‘பிரம்மாஸ்திரம் அணு ஆயுதமா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். பின்னர் 2011ம் ஆண்டில் துவங்கிய என்னுடைய இரண்டு பிளாக்குகளில் இரண்டு தமிழ் பெரியோரின் காலப்பயணம் (Time Travel by Two Tamil Saints) என்ற தலைப்பில் கட்டுரை எழுதி சம்பந்தரும், சுந்தரரும் எப்படிக் காலத்தில் பயணம் செய்து, முன்னர் இறந்துபோன இருவரை பல ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டு வந்தனர் என்று எழுதினேன்.

    இதே பாணியில், என்னைத் தொடர்ந்து, பிரம்மாஸ்திர ஆயுதம், காலப்பயணம் பற்றி நிறைய பேர் எழுதத் துவங்கினர். மஹாபாரதத்தில் காந்தாரி பெற்றெடுத்த 100 பெரும் டெஸ்ட் ட்யூப் பேபிகள் (Test Tube Babies in Mahabharata) என்ற கருத்தை பி.பி.சி தமிழ் ஓசை ஒலிபரப்பில் (1987 - 1991) ஒரு டாக்டரிடம் சொல்லிக் கருத்துக் கேட்டேன். இதுவும் பின்னர் பெரிதானது. ஒவ்வொரு காலத்திலும் சிலர், சில விஷயங்களை எழுதத் துவங்கியவுடன் மேலும் பலர் அதைத் துருவி ஆராய்கின்றனர் என்பது உண்மையே… இது எல்லாம் காலத்தின் கோலம்.

    ரஜினிகாந்த் மூலம் ராகவேந்திர சுவாமிகள் பிரபலமானார்; எம்.ஜி.ஆர் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் பிரசித்தமானது. நடிகர் நம்பியார் மூலம் சபரிமலை ஐயப்பன் தமிழ்நாட்டில் பிரபலமானார் என்று மேம்போக்காகத் தெரிந்தாலும் எல்லாம் முன்னரே நிச்சயிக்கப்பட்ட விஷயமே.

    என் கட்டுரைகளையும்

    Enjoying the preview?
    Page 1 of 1