Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நன்றி கொன்றவனே!
நன்றி கொன்றவனே!
நன்றி கொன்றவனே!
Ebook104 pages43 minutes

நன்றி கொன்றவனே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை அலுவலகம் வந்ததும் அவசரமாக டெலிபோனை அணுகி, டயல் செய்தாள். 


“யாரு சுரேஷா? உடனே உன்னை நான் பாக்கணும் சுரேஷ். நேத்து நாலு தடவை போன் பண்ணினேன். எங்கே போய்த் தொலைஞ்சே?” ஆத்திரத்துடன் படபடத்தாள் கங்கா. 


“……”


“நான் லீவு போட்டுட்டு வர்றன். நீயும் உடனே வா சுரேஷ். விஷயம் ரொம்ப முக்கியம். அவசரமும்கூட. அடையாறு காந்தி மண்டபத்துக்கு வந்துரு. சரியா?” 


அவன் பதிலை எதிர்பாராமலே ரிசீவரை வைத்துவிட்டு, லீவு எழுதிக் கொடுத்தாள். உடனே புறப்பட்டு விட்டாள். வாசலில் வந்து அவசரமாக ஆட்டோவை அழைத்தாள். 


அவள் காந்தி மண்டபத்தை அடைந்து பதினைந்து  நிமிடங்களில் சுரேஷ் வந்து விட்டான். 


“என்ன கங்கா இத்தனை அவசரமா?” 


“உன்னை வெட்டிப் போடணும் அப்படியே!” 


“அரிவாள் கொண்டு வந்திருக்கியா?” 


“சிரிக்காதே சுரேஷ். எரியுது எனக்கு.” 


“எங்கே?” 


“பி சீரியஸ்! நிலைமை புரியாம விளையாடக் கூடாது தெரியுதா?” 


“சொல்லு.” 


“நேத்து நாலு தடவை போன் போட்டேன் உனக்கு.”


“நான் ஒரு கலெக்ஷனுக்காக வெளியே போயிருந்தேன் கங்கா. விஷயத்தைச் சொல்லு.” 


“அப்பா அவசரமா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணத் தொடங்கிட்டார்.” 


சுரேஷ் சட்டென முகம் மாறினான். 


“மேல சொல்லு.” 


“கதை கேக்கறியா சுரேஷ்? தவிச்சுகிட்டு இருக்கேன் நான்.” 


தொடர்ந்து சகலமும் சொல்லி முடித்தாள். 


“கங்கா, நீ ஒண்ணு செய்.” 


“உங்கப்பா பார்க்கற வெங்கடேசனைக் கட்டிக்கனு சொல்ல வர்றியா சுரேஷ்?” 


“பின்னே? பதினஞ்சு நாள்ள எல்லாம் முடியணும்னு அவசரப்பட்டா எப்படி கங்கா?” 


“சுரேஷ் உனக்கு வெக்கமால்லை?” 


கீழே குனிந்து பார்த்துக் கொண்டான் சுரேஷ்


“ஏன், ஜிப்பெல்லாம் போட்டுத்தானே இருக்கு?”


“விளையாட்டுக்கு ஒரு அளவு இருக்கு சுரேஷ். இப்ப நீ  என்னதான் சொல்றே?” 


சுரேஷ் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். அதன் முனைபோல அவன் முகமும் லேசாகச் சிவக்கத் தொடங்கியது. 


“நான் விளையாடலை கங்கா. என் நிலைமை உனக்கு நல்லாத் தெரியும். உன்னை மாதிரி ஒரே மகள், எந்தப் பொறுப்பும், சுமையும் இல்லாம இருந்தா, நாளைக்கென்ன, இப்பக்கூட நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல முடியும்.” 


“சுரேஷ்!” 


“அப்பா இல்லை எனக்கு. அம்மாவோ விதவை. ஊனமான ஒரே தங்கை. அவளைக் கரை சேர்க்காம நான் எப்படி கங்கா உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடியும்?” 


“அப்ப நீ காதலிச்சிருக்கக் கூடாது சுரேஷ்!” 


“ஷட்டப்!” அவன் போட்ட அதட்டலில் கங்கா மிரண்டு விட்டாள். படு சீரியஸான சுரேஷை அவள் இப்போதுதான் பார்க்கிறாள். 


“சுரேஷ்!” 


“ஐயாம் ஸாரி! உன்கூட மனசு விட்டுப் பழகிட்டேன். நான் காதலிச்சிருக்கக் கூடாதுதான்!” 


அவள் நெருங்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
நன்றி கொன்றவனே!

Read more from தேவிபாலா

Related to நன்றி கொன்றவனே!

Related ebooks

Reviews for நன்றி கொன்றவனே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நன்றி கொன்றவனே! - தேவிபாலா

    1

    "அப்பா நான் ஆபீஸ் போயிட்டு வர்றேம்பா."

    ஒரு நிமிஷம் இரும்மா.

    கங்கா நின்றாள் பொறுமையில்லாமல்.

    என்னப்பா?

    உங்கூடக் கொஞ்சம் பேசணும் நான்.

    இப்ப எனக்கு நேரமாச்சுப்பா. இந்த பஸ்ஸை நான் விட்டுட்டேன்னா, அரை மணி நேரத்துக்கு வேற வண்டி இல்லை எனக்கு.

    கங்கா டிபன் பாக்ஸை மறந்துட்டுப் போறே நீ. அம்மா வெளியே வந்தாள்.

    வேணாம். ஆபீஸ்ல பார்ட்டி இன்னிக்கு. சீக்கிரம் சொல்லுங்கப்பா. என்ன விஷயம்?

    உனக்கொரு பையனைப் பார்த்திருக்கேன் நான்.

    அதுக்கெல்லாம் இப்ப அவசரமில்லை. அப்புறம் பேசிக்கலாம், நான் வர்றேன்.

    சரேலென வெளிப்பட்டு சாலையை அடைந்தாள்.

    என்னடீ பொண்ணு இவ?

    பின்ன? அவளுக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. நீங்க இந்த நேரத்துல கல்யாணம் பத்திப் பேசினா?

    பின்ன எப்பப் பேசறது? நான், நைட் ட்யூட்டி முடிஞ்சு இப்பத்தான் வந்தேன். சாயங்காலம் அவ வர்றதுக்குள்ள நான் புறப்பட்டிருவேன்.

    விஷயத்தை எங்கிட்டச் சொல்லிட்டுப் போங்க. நான் அவகிட்டப் பேசிக்கறேன்.

    எங்க ஆபீஸ்ல ஒருத்தர்கிட்ட கங்கா ஜாதகத்தைக் கொடுத்து வச்சிருந்தேன். அது பல கைகள் மாறி, ஒரு இடத்துக்குப் போயிருக்கு. ஒரு பையன் ஜாதகத்தோட அம்சமாப் பொருந்தியிருக்கு.

    சரி, விஷயத்துக்கு வாங்க. எனக்கு உள்ளே நிறைய வேலை இருக்கு.

    பையனோட உறவுக்காரங்க திருச்சில இருக்காங்க. பெத்தவங்க உயிரோட இல்லையாம். அவன் அமெரிக்கால சிகாகோல உத்யோகம் பாக்கறானாம். பதினஞ்சு நாள்ல ஊருக்கு வருவானாம். எல்லாம் சரியா இருந்து பொண்ணு பிடிச்சிருந்தா, உடனே கல்யாணத்தைப் பண்ணிக் கூட்டிட்டுப் போயிருவானாம். சம்பளம், மாசம் பதினஞ்சாயிரம் ரூபாயாம்.

    அம்மா அறை நொடி செத்தாள்.

    அவன் ஜாதகம்தான் நம்ம கங்காவுக்கு அம்சமா பொருந்தியிருக்கு.

    எப்பப் பையன் வர்றானாம்?

    எல்லாம் ரெண்டு நாள்ள தெரியும்.

    சரிங்க. இதை நாம பாக்கலாம். கங்காகிட்ட நான் சொல்லிக்கறேன். ஆமா, உடனடிக் கல்யாணம்னா நம்மால முடியுமா?

    கங்காவுக்கு நகை, பாத்திரங்கள் எல்லாம் இருக்கே. துணிமணி எடுத்து கல்யாணச் செலவையும் செஞ்சிர வேண்டியதுதான். நான் சொசைட்டி லோன் போட்டாச்சு. இருக்கற சேமிப்பை வச்சு சமாளிச்சிரலாம். சரிதானா?

    சரிங்க.

    நீ உன் பொண்ணைச் சமாளி முதல்ல.

    அவளுக்கென்ன? சொன்னா; சரின்னு சொல்லிட்டுப்போறா. நல்ல வாழ்க்கை வாசலைத் தேடி வரும்போது மறுக்கவா போறா?

    சரி. வென்னீர் ரெடி பண்ணு. குளிச்சு சாப்டுட்டு நான் வெளில போகணும்.

    மகாதேவன் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டார்.

    சாப்பாடு முடித்ததும் வெளியேறினார். மதியம் மூன்று மணிக்குத்தான் வீடு திரும்பினார்.

    யாரைப் பாக்கப் போனீங்க?

    அந்த வரன் விஷயமாத்தான். பையனோட ஒண்ணுவிட்ட மாமா ஒருத்தர் மெட்ராஸ்லதான் இருக்கார். அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னிக்கு என்ன, மார்ச் 10ம் தேதியா? மார்ச் 25ம் தேதி பையன் வரலாம்னு அபிப்ராயப்படறார். இன்னிக்கு சாயங்காலம் கங்காவைப் பார்க்க அவர் வரப்போறார். பார்த்துட்டு அபிப்ராயம் எழுதணுமாம் பையனுக்கு.

    சரிங்க.

    நல்லதா டிபன் ஏதாவது ரெடி பண்ணு.

    அம்மா மகிழ்ச்சியுடன் செயலில் இயங்கத் தொடங்கி விட்டாள்.

    ஐந்தரை மணிக்குக் கங்கா வீட்டுக்குள் நுழையும்போது முந்திரிப் பருப்பு நெய்யில் வறுபட்டுக் கொண்டிருந்தது.

    என்ன நம்ம வீட்ல விசேஷம் இன்னிக்கு? அப்பா வேற ட்யூட்டிக்குப் போகலை?’

    நீ போய் முகம் கழுவிட்டு வாம்மா. சொல்றேன்.

    கங்கா முகம் கழுவிவிட்டு வந்தாள்.

    மகாதேவன் சுருக்கமாக விவரத்தைச் சொல்லி விட்டார்.

    எரிச்சலுடன் அவரை ஏறிட்டாள் கங்கா.

    அப்பா... எனக்கு இந்த வரன் வேணாம்.

    என்னம்மா உளர்ற?

    பின்ன என்னப்பா? அப்படி அரக்கப் பரக்க ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊரை விட்டு ஓடணுமா? எனக்கு இந்த வரன் பிடிக்கலை.

    காரணம்?

    ஒண்ணு, எனக்கு வெளிநாட்டுக்குப் போக பிடிக்கலை. ரெண்டு, வேலையை விடமாட்டேன் நான். மூணு, இத்தனை அவசரமா தாலி கட்டிக்கப் பிடிக்கலை...

    துரிதமா முடிவெடுக்காதே கங்கா. நாளைக்கே எவன் தலையிலோ கட்டியா உன்னை அனுப்பப் போறேன். அவன் வரட்டும், பார்க்கட்டும். நமக்கும் – குறிப்பா உனக்கும்-பரிபூரண திருப்தி ஏற்பட்டாத்தான் நான் முடிவு செய்வேன். போம்மா. போய் நல்லதா ஒரு புடவையை மாத்திக்க. அந்த மாமாக்காரர் வர்றார் இல்லை?

    சீக்கிரம் போடீ. மசமசன்னு நிக்கறா. அம்மா வந்து அதட்ட, கங்கா சலிப்புடன் எழுந்து போனாள்.

    என்ன டிபன் ரெடியா?

    கொஞ்சம் ரவா கேசரி பண்ணி, போண்டாவும் போட்டேன். சேமியாக் கிச்சடியும் ரெடி.

    பலே! அட்டகாசம்.

    கங்கா தனக்குப் பிடிக்காத ஒரு பட்டுச் சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். ஏனோதானோ வென்று அலங்கரித்துக் கொண்டாள்.

    சொன்னபடி அந்தப் பெரியவர் ஆறு அடிக்கும்போது உள்ளே நுழைந்து விட்டார்.

    முதலில் பொதுவாக விசாரிப்புகள்.

    கங்கா! டிபனை எடுத்துட்டு வாம்மா.

    டிபன் எதுக்கு? ஜஸ்ட் உங்க பெண்ணைப் பார்க்கத்தானே வந்தேன்?

    கங்கா டிபன் பிளேட்டுகளுடன் வந்தாள்.

    நீயும் அப்படி உட்காரம்மா.

    உட்கார்ந்தாள்.

    "உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க வெங்கடேசனுக்கும் நிச்சயம் பிடிக்கும். அவன் ஏராளமா சம்பாதிக்கிறான். ஒரே பிள்ளை. சின்ன வயசுல பெத்தவங்களைப் பறிகொடுத்துட்டான். நாங்கள்ளாம் உறவுனு இருந்தாலும்,

    Enjoying the preview?
    Page 1 of 1