Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எல்லைக் கோடுகள்
எல்லைக் கோடுகள்
எல்லைக் கோடுகள்
Ebook117 pages43 minutes

எல்லைக் கோடுகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹாய்...' என்றபடியே உரசுவதைப் போல் தன் யமஹாவை நிறுத்தினான் கெளதம்.
 மாயா பக்கவாட்டில் திரும்பிப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
 "நீங்களா?" என்றாள்.
 "அதென்ன நீங்களா? இப்படி வண்டியில் வந்து 'ஹாய்' சொல்ற அளவுக்கு நிறையப் பேர் இருக்காங்களா?" சிரித்த முகத்தைச் சற்றே கோபமாக்கிக் கொண்டு கேட்ட கெளதம் அழகாயிருந்தான். வாலிப வசீகரம் முகத்திலும் உடம்பிலும் இருந்தது.
 "ஏன் இல்லை? அக்க்ஷை, அபிராம், ஸ்ரீராம்..."
 "போதும். இத்தனை பேரா உன் பின்னாடி ஜொள்ளு விட்டுக்கிட்டு அலையறாங்க?"
 "உங்க புத்தி உங்களை விட்டுப் போகுமா? ஜொள்ளு, சைட்டுன்னுக்கிட்டு... அவங்கள்லாம் என்னோட ஃப்ரண்ட்ஸ்"
 "வயித்துல பாலை வார்த்தே, தாயே... சரி வண்டியில ஏறு."
 "எங்கே? என்னை வீட்ல கொண்டு விடப் போறீங்களா?"
 "ஆசைதான். நீதான் வீடு எங்கன்னே சொல்ல மாட்டேங்கறே! வீடு எனக்குத் தெரிஞ்சுட்டா வீட்டுப் பக்கம் வந்துட்டா நம்ம காதல் அம்பலமாகிடும்னு நினைக்கறே! நிஜம்தானே?"
 "நிஜம்தான். அத்துக்கும் ஒரு நேரம் வேண்டாமா?"
 "சரி. இப்போ வண்டியில ஏறு. எங்காவது போவோம்."
 "எங்கே?""இதென்ன கேள்வி? காதலர்கள் எங்க போவாங்க? பூங்கா, பூம்புனல், புகழ் பெற்ற கோவில்கள் இதெல்லாம் யாருக்காக? காதலர்களாகிய நாம் என்ஜாய் பண்ணத்தானே?"
 "ம்... கையில என்னயிருக்கு தெரியுமா?"
 "என்ன நீ, செருப்பைக் கழற்றிக் கையில வச்சுக்கிட்டுக் கேட்கற கேள்வியையெல்லாம் பையில காய்கறியை வச்சுக்கிட்டு நிக்குறே?"
 "எங்கம்மா காய்கறி வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்பினாங்க. எதிர்பார்த்துக்கிட்டிருப்பாங்க."
 "அதெல்லாம் என் அத்தை சமர்த்து. இருக்கறதை வச்சு இனிதாகச் சமையலை முடிக்கற இல்லத்தரசி. ஒரு ரசமோ, சுட்ட அப்பளமோ செய்து வச்சிட மாட்டாங்களா? நீ வா, டார்லிங். ஜாலியா கொஞ்ச நாழி பேசலாம்."
 "என்ன நீங்க? வாரத்துல ஒவ்வொரு நாளும் நாம பார்த்துக்கறோம். பேசிக்கறோம். இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. இன்னைக்கு ஒரு நாள் கூடப் பார்க்காம பேசாம உங்களால இருக்க முடியாதா? அடக்கம் வேணும். மன அடக்கம் வேணும். அப்பத்தான் ஒரு இளைஞனால முன்னேற முடியும். இப்படி மனசை அலைய விட்டா முன்னேற முடியாது."
 "இப்ப நான் என்ன முன்னேறலை? வேலை வெட்டி இல்லாம பொண்ணுங்க பின்னாடி சுத்தற மாதிரியில்ல பேசறே! ஒழுங்கா படிச்சு முடிச்சு ஒரு வேலையைத் தேடிக்கிட்டு கை நிறையச் சம்பாதிக்கறேன். காதலிக்க எல்லாத் தகுதியும் இருக்கு என்கிட்ட"
 "முன்னேற்றத்துக்கு முற்றுப் புள்ளி வைக்காதீங்க. லீவு நாள்ல வேற வேலை ஏதாவது செய்ங்க. சைடு பிசினஸ்."
 "அடிப் பாவி! பேயைக் கட்டினாலும் கட்டிக்கலாம். பேராசைக்காரியைக் கட்டிக்கக் கூடாது."
 "அடுத்தவன் பொருள் மேல ஆசைப்படறதுதான் பேராசை. அதிகமா உழைச்சு அதிகமா சம்பாதிக்கணும்ன்னு நினைக்கிறதுக்குப் பேரு பேராசையில்லை."

"ஒரு நாள் மனுஷன் ஓய்வாயிருக்கறது தப்பா? மனுஷனும் ஒரு மெஷின் மாதிரிதான். மெஷினுக்கு ஓய்வு கொடுத்தாத்தான் நல்லா உழைக்கும். ரொம்ப நாள் வரும்."
 "மனுஷனை ஏன் மெஷினோட ஒப்பிடறீங்க அவன் இயற்கையால் படைக்கப்பட்டவன். இயற்கையோடதான் ஒப்பிடணும். ஒன்றனும். வீசற காத்து ஓய்வெடுக்குதா? ஓயாம இயங்கிக்கிட்டிருக்கே! அலைகள் ஓய்வெடுக்குதா?"
 கெளதம் சிரித்தான்.
 "டார்லிங்! இயற்கை எப்பவுமே ஓய்வுல இருக்கறதாலதான் நாம் நிம்மதியா வாழ முடியுது. காற்றோட ஓய்வுதான் தென்றல். அது தினமும் புயலா மாறினா நாம என்னாவோம்? இதமான இரைச்சல்தான் அலைகளோட ஓய்வு. தினமும் அது கொந்தளிச்சா நீயும் நானும் கடற்கரையில் உட்கார்ந்துக்கிட்டு காதல் மொழி பேச முடியுமா?"
 "நல்லாவே மடக்கறிங்க? இப்ப என்ன பண்ணணும்? அதைச் சொல்லுங்க."
 "ஒரு பொண்ணு இப்படி ஒரு வார்த்தை சொன்னா ஒரு இளைஞன் எதையெதையோ கேட்பான். ஆனா... நான் அப்படிப்பட்ட கெட்ட பையன் இல்லை. எங்காவது போய் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து பேசிட்டு வீட்டுக்குப் போகலாம்."
 "சரி..." என அவனுடைய யமஹாவின் பின்பக்கம் ஏறி அமர்ந்தாள் மாயா. நிமிடத்தில் அந்த இடத்திலிருந்து இருவரும் மாயமாக மறைந்தனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223167570
எல்லைக் கோடுகள்

Read more from R.Sumathi

Related to எல்லைக் கோடுகள்

Related ebooks

Reviews for எல்லைக் கோடுகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எல்லைக் கோடுகள் - R.Sumathi

    1

    "வெங்காயம் கிலோ என்ன விலைப்பா?" வனிதா வெங்காயத்தைக் கையில் அள்ளியபடி கேட்டாள்.

    தராசை உயர்த்திப் பிடித்தபடி, எல்லாம் கம்மி விலைதாம்மா எவ்வளவு போட? ஒரு கிலோவா? ரெண்டு கிலோவா? என்றான் கடைக்காரன்.

    ப்ச்! முதல்ல விலையைச் சொல்லுப்பா.

    கிலோ பதின்மூன்று ரூபாம்மா.

    சரி. ஒரு கிலோ போடு! என வெங்காயத்தை அள்ளித் தராசுத் தட்டில் போட்டாள்.

    அவன் அளந்து நீட்டிய வெங்காயத்திற்காகக் கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை விரித்தாள்.

    அதே சமயம் பின்னால் குரல் கேட்டது.

    ஹலோ... கொஞ்சம் இருங்க. இனிய குரல் சற்றே அமைதியாகக் காதில் வந்து மோத, வனிதா திரும்பினாள்.

    அழகான இளம் பெண் ஒருத்தி இவளைப் போலவே கையில் பிளாஸ்டிக் கூடையுடனும் அதில் நிரம்பி வழியும் காய்கறிகளுடனும் நின்றிருந்தாள்.

    இளமஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்து துப்பட்டாவை மார்பை மறைத்துப் போட்டிருந்தாள். தளரப் பின்னிய சடை. அதில் சரம் சரமாகப் பரவிய முல்லை மலர்கள் அவளுக்குத் தனியழகைக் கொடுப்பதைப் போலிருந்தது.

    இந்தாப்பா... வெங்காயம் கிலோ என்ன விலைன்னு சொன்னே, இவங்ககிட்டே? - சற்றே அதிகாரமாகவும், மிடுக்காகவும் அவள் கேட்க, கடைக்காரனின் கண்களில் திடுக்கிடல் தெரிந்தது. அந்தப் பெண்ணைக் கண்டதுமே லேசாக மிரண்டான்.

    இந்தாம்மா... நீதான் என் கடையில் எதுவும் வாங்கறதில்லையே! அப்புறமெதுக்கு விலையெல்லாம் கேட்கறே? கடைக்காரன் கோபப்பட்டான்.

    வாங்கல்லைன்னா என்னய்யா? விலை என்னன்னு தெரிஞ்சுக்கக் கூடாதா?

    ஏம்மா... பதின்மூன்று ரூபாய்ன்னு சொன்னார்! என்றாள் வனிதா.

    இந்தாளுக்கு இதே வேலைதான். ஆளுக்குத் தகுந்த மாதிரி விற்கறது. இப்பத்தான் ஒருத்தர்கிட்ட கிலோ பத்து ரூபான்னு இதே வெங்காயத்தைக் கொடுத்தாரும்மா. உங்ககிட்டே பதின்மூன்று ரூபாய்ன்னு சொல்றார்.

    இந்தாம்மா... இப்படி வியாபாரத்தைக் கெடுக்கறியே இது உனக்கே நல்லாயிருக்கா?

    நான் உன் வியாபாரத்தைக் கெடுக்கிறேனா? நீயே கெடுத்துக்கறே! இப்படி பண்ணினா யானை தன் தலையிலே தானே மண்ணையள்ளிப் போட்டுக்கிட்ட கதையா உன் வியாபாரம் படுத்துடும். மத்தவங்களை ஏமாத்திப் பிழைக்கணும்ன்னு நீ நினைச்சா நீ உன்னையே ஏமாத்திப்பே. ஒண்ணுமில்லாம போய்டுவே. நீங்க வாங்க, நான் உங்களுக்கு வேற கடையைக் காட்டறேன். சொன்னதோடுயில்லாமல் வனிதாவின் கையை உரிமையுடன் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள்.

    கடைக்காரன் பின்னால் சாபம் விட்டுக் கொண்டிருந்தான்.

    அந்தப் பெண் சொன்னதோடல்லாமல் வேறு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றாள். கிலோ பத்து ரூபாயென்று வெங்காயம் வாங்கிக் கொடுத்தாள். வேண்டிய காய்கறிகளையும் வனிதா வாங்கிக் கொண்டாள்.

    ரொம்ப தேங்க்ஸ்...

    எதுக்கு?

    மூன்று ரூபாயை மிச்சம் பிடித்துத் தந்ததுக்கு.

    "இன்னைக்கு ஒரு நாள் மிச்சம் பிடிச்சுக் கொடுத்துட்டா போதுமா? ஒவ்வொரு தரமும் நீங்கதான் உஷாராயிருக்கணும். இல்லாட்டி இந்த உலகத்துல ஒண்ணுந் தெரியாதவங்க கூட நம்மை ஏமாத்திடுவாங்க. அடிமையாக்கிடுவாங்க. எதிர்த்து நின்னோம்னு வச்சுக்கங்க... பின் தொடர்ந்து வந்த குரங்குக் கூட்டம் ஓடின மாதிரி இந்தக் குரங்கு பிடிச்ச மனுஷங்களும் ஓடிடுவாங்க...

    இப்படித்தான். இதே மார்க்கெட்ல ஒருத்தன் நான் வரும்போதும் போகும்போதும் தெரியாம இடிக்கிற மாதிரி தினம் தினம் இடிச்சுக்கிட்டேயிருந்தான். ஒரு நாள் பிடிச்சு லெப்ட் அன்ட் ரைட் வாங்கினேன் பாருங்க, அதிலேர்ந்து ஆள் போன இடமே தெரியலை. பொம்பளைங்க நாம் பயந்த மாதிரி காட்டிக்கிட்டா எல்லாரும் தலையில மொளகா அரைச்சுடுவாங்க. மனசுல உண்மையிலேயே பயம் இருந்தாலும் வெளியிலே ரொம்ப தைரியமா காட்டிக்கணும். ஆனா... நான் உண்மையிலேயே தைரியமான பொண்ணுதான். எனக்கு மத்தவங்களுக்குப் பயப்படறது அடிமையா இருக்கறது இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காது. என் மனசுக்குத் தப்புன்னு பட்டுச்சுன்னா அது யாராயிருந்தாலும் தட்டிக் கேட்பேன். அவள் படபடவெனப் பேசிக் கொண்டே போனாள்.

    வனிதா ஏதோ உலக அதிசயம் ஒன்றைப் பார்ப்பதைப் போல் அவளைப் பார்த்தாள்.

    ஏம்மா ... உன் பேர் என்ன?

    மாயா.

    முழுப் பேருமே இதானா?

    ஏன் அரைகுறையா தெரியுதா?

    இல்லே ... மாயாவதி, மாயாதேவி... இப்படி.

    ஏன் மாயமோகினி, மாயாபஜாரையெல்லாம் விட்டுட்டீங்க

    வனிதா தன்னையும் மீறிக் களுக்கெனச் சிரித்தாள்.

    அவளுடைய சிரிப்பு அவளுக்கே உறுத்த, சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.

    ஏன் சிரிப்பை நிறுத்தி விட்டீர்கள்? உங்கள் சிரிப்பென்னும் இன்பத்தில் குதித்து நீச்சலடிக்கலாமென நினைத்த என்னை ஏமாற்றி விட்டீர்களே...

    முன்பின் தெரியாத தன்னிடம் இப்படிப் பேசும் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டவள், அவளுடைய நாடகபாணி பேச்சைக் கேட்டு விட்டுச் சிரிப்பை மீண்டும் தொடர்ந்தாள்.

    ஆஹா! உங்க சிரிப்பு எப்படியிருக்கு, தெரியுமா? வானத்துல இருக்கற நட்சத்திரங்களையெல்லாம் அள்ளி இறைச்ச மாதிரியிருக்கு.

    ரொம்ப சினிமா பார்ப்பே போலிருக்கு!

    ஒரு காலத்துல பார்த்ததுதான். இப்ப வர்ற படத்துல வர்ற வசனங்களையெல்லாம் மனசுல வச்சுக்கவா முடியுது?

    எப்படி உன்னால இப்படி முன்ன பின்ன தெரியாதவங்ககிட்டே இவ்வளவு நெருக்கமா ஜாலியா பேச முடியுது?

    முன்ன பின்ன தெரியாதவங்களா? யாரு... நீங்களா? தினமும் உங்களை இந்த மார்க்கெட்ல நான் பார்க்கறேன்.

    நான் பார்த்ததில்லையே உன்னை.

    நான் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாட்டம் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமா நடக்கறதால என் கண்களுக்கு எதிர்ல வர்ற எல்லாரும் தெரியறாங்க. நீங்க அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அத்தனையையும் மூட்டைகட்டி முதுகுல சுமந்துக்கிட்டு கூன் விழுந்த மாதிரி குனிஞ்ச தலை நிமிராம வர்றீங்க. உங்க எதிர்ல பிரதமர் வந்தாக் கூட சாதாரணமாத்தான் போவீங்க.

    பரவாயில்லையே! என்னைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கே. கூன் விழுந்த மாதிரிதான் முதுகெலும்பு வளைஞ்சு கிடக்கேன். ஆனா கன்னிப் பொண்ணுக்குச் சொல்லப்பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதனால் இல்லே !

    பின்னே எதனால்...?

    தெரியலை, சொல்லத் தெரியலை. ஏதோ ஒண்ணு. சரி... அதை விடு... எனச் சட்டென தன்னை மீறி வெளிப்பட்டு விட்ட வார்த்தைகளை நிறுத்திக் கொண்டாள். ஒரு நிமிடம் மாயா வனிதாவை உற்றுப் பார்த்தாள். திருமணமான பெண். குழந்தைகளைப் பெற்ற பெண் எனத் தெரிந்தது.

    ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டதைத் தோண்டிக் கிளறாமல் சும்மாயிருந்தாள்.

    சில நிமிட மௌனங்களில் வனிதா வேதனையாக எதையோ நினைப்பதாகப் பட்டது. முகத்தில் படர்ந்த வேதனை ரேகைகள் அதை நிரூபித்தன.

    சட்டென்று தன்னை உணர்ந்தவளாக வனிதா சுய நினைவிற்கு வந்தாள்.

    ம்.... மாயா! என்ன படிக்கறே?

    "எம்.எஸ்ஸி. கடைசி வருஷம். வீடு பக்கத்துலதான்

    Enjoying the preview?
    Page 1 of 1