Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இறைவன் கொடுத்த வரம்!
இறைவன் கொடுத்த வரம்!
இறைவன் கொடுத்த வரம்!
Ebook147 pages53 minutes

இறைவன் கொடுத்த வரம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நீ பார்க்கிற மாப்பிள்ளைக்கு பூம்பூம் மாடு மாதிரி தலையாட்ட நான் ஒண்ணும் நளாயினி இல்லை! ஞாபகம் இருக்கட்டும்! ரமணி, வாடி போலாம்" என்றவாறு தங்களது பைகளைத் தூக்கிக்கொண்டு உள்ளறைக்குள் சென்றுவிட பூர்ணகலா விக்கித்துப் போய் நின்றாள். இளையமகள் உமா மட்டும் சற்று மிரட்சியோடு தாயைப் பார்த்துக் கொண்டு நின்றாள். 

நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பது போல் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் நளாயினி சிறு சிறு கிண்ணங்களில் இருந்த முத்துக்களும் கண்ணாடி மணிகளும் அவன் மடியிலிருந்த உடையில் பூவாய் இலையாய் மாறிக்கொண்டிருக்க பூர்ணகலாவிற்கு மனம் வேசாய் வலித்தது. 

'தாயையும் தந்தையையும் இழந்து தனியாய் நின்ற பிள்ளையை அழைத்து வந்தது தவறோ? இத்தனை இடி சொற்களையும் கேட்டுக்கொண்டு இந்தப் பின்ளை என் குடும்பத்திற்காக உழைத்துக் கொட்டிக் கொண்டே இருக்கிறதே! இவளுக்கென்று ஒரு வாழ்க்கைட குடும்பம் என்று அமைய வேண்டும் என்றுதானே இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தேன் தானாய் தேடிவந்த வரன் பத்து பைா செல்வின்றி திருமணம் நடத்துவது சாதாரண விஷயமா என்ன? ஆனால்... இந்தத் திருமணத்தில் இவளுக்கு சம்மதம்தானா?' 

"நளாயினி!" 

"என்ன பெரியம்மா?" 

"உனக்கு... இந்தக் கல்யாணத்தில விருப்பம்தானே?" சற்று திணறலாய்க் கேட்ட பெரிய அன்னையை நிதானமாய் ஏறிட்டுப் பார்த்தாள் நளாயினி.

"நளாயினி! உன் பெரியம்மா படிக்காதவ. ரொம்ப அறிவாளியும் கிடையாது. எனக்கு... இப்படி முகத்தைப் பார்த்து எதையும் கண்டுபிடிக்கத் தெரியாதுடி. எதுவாய் இருந்தாலும் தெளிவாய் சொல்லிடு! உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்தானே?" ஆர்வமும் நம்பிக்கையுமாய்க் கேட்டவளிடம் விரக்தியாய் புன்னகைத்தாள் நளாயினி. 

'இந்தக் கேள்வியை எப்போது என்னிடம் கேட்டிருக்க வேண்டும்? முட்டாள்த்தனமாய் தன் மகனுக்கு பெண் கேட்டாளே அந்த அம்மாள், அன்றல்லவா என்னிடம் கேட்டிருக்க வேண்டும்? தாய் தகப்பன் இல்லாத பெண்! ஏன் என்று கேட்க ஆளில்லாத அநாதை! உங்கள் மாமியார் வார்த்தைப்படி, நானொரு தரித்திரம்! இந்த தரித்திரம் உங்களைவிட்டு விலகட்டும் என்றுதானே சம்மதித்தீர்கள்? இப்போதென்ன புதிதாய் அக்கறை?' 

தங்கை மகளின் பார்வையை உணரமுடியாமல் மீண்டும் கேட்டாள் பூர்ணகலா.

"சொல்லுடி! பெரியம்மா எது செய்தாலும் உன் நன்மைக்குத்தான் செய்வேன்னு தெரியுமில்ல?" 

'உன் பிள்ளைக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பாயா பெரியம்மா? நாவின் நுனி வரை வந்து விட்ட கேள்வியை வெகு சிரமப்பட்டு விழுங்கினாள் நளாயினி. அதற்கு மேல் அவளை சிரமப்பட விடாமல், கோமளவல்லி குரல் கொடுக்க, "வர்றேன்! வர்றேன்!" என்றவாறே சமையலறையை நோக்கி நடந்தாள் பூர்ணகலா. 

ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டவாறே மீண்டும் குனிந்து நீளமான ஊசியில் கண்ணாடி மணிகளைக் கோர்த்தபோது, அவளையும் மீறி விழிகளில் நீர் திரண்டு பார்வையை மறைத்தது. 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223960836
இறைவன் கொடுத்த வரம்!

Read more from Kalaivani Chokkalingam

Related to இறைவன் கொடுத்த வரம்!

Related ebooks

Reviews for இறைவன் கொடுத்த வரம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இறைவன் கொடுத்த வரம்! - Kalaivani Chokkalingam

    1

    சற்றே பழையதாய் தெரிந்த அந்தக் காசுமாலையையும் பிச்சிப்பூ ஆரத்தையும் ஆவலாய் வருடிப் பார்த்தாள் பூர்ணகலா. கூடவே இருந்த வெள்ளைக் கற்கள் பதித்த அட்டியலை இப்படியும் அப்படியுமாய் திருப்பிப் பார்த்துவிட்டு, தங்கை மகள் தன்னைக் கவனிக்கிறாளா என எட்டிப் பார்த்தாள். தன் முன் விரித்து வைக்கப்பட்டிருந்த ஜாக்கெட் துணியில் நுண்ணிய கைவேலைபாட்டில் ஆழ்ந்திருந்த மகளின் கவனம் தன்னிடம் திரும்பவில்லை என்றதும் அந்தப் அட்டியலை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துப் பார்த்தாள்.

    எதிரே நின்றிருந்த பீரோவின் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைக் கண்டு வெகுவாய் ரசித்தாள். ‘நான் எவ்வளவு அழகா இருக்கேன்? இந்த அட்டிகை என் கழுத்துக்கு எத்தனை பொருத்தமாய் இருக்கிறது? ஹும்! அழகாய் பொருத்தமாய் இருந்து என்ன? உரிமையாய் போட்டுக் கொள்ள முடியுமா?’ - பெருமூச்சோடு அதைக் கழற்றி மற்ற நகைகளோடு வைத்தாள் பூர்ணகலா

    ஆனாலும் நீ ரொம்ப கொடுத்து வெச்சவ நளாயினி. கல்யாணத்துக்கு முன்னாலயே இம்புட்டு நகையை தந்துவிட்டிருக்காங்களே! அப்போ கல்யாணம் முடிஞ்சபிறகு என்னென்ன தருவாங்க? - பெரியம்மாளின் குரலில் இழையோடிய பொறாமையை உணர்ந்தும், தன் பணியிலிருந்து கவனத்தைத் திருப்பவில்லை நளாயினி.

    இந்த வேலையை முடித்து பிளவுஸை நாளைக்குள் தைத்துக் கொடுத்தாக வேண்டும். அதிலும் கை பகுதிக்கு நிறைய வேலைப்பாடு இருக்கவேண்டும் என்று அடுத்த வீட்டு ஷைலஜா பலமுறை சொல்லிவிட்டுப் போயிருந்தாள். இன்னும் இருபது நாளில் அவளுக்குத் திருமணம். அதற்காக புத்தம் புதிதாய் பதினைந்து சட்டைத் துணிகள் தந்திருக்கிறாள். அனைத்திலும் புதுவகையான ஆரிவொர்க் செய்து, கனகச்சிதமாக அவளுக்கு தைத்துக் கொடுத்தாக வேண்டும்.

    வேலை முடிவதற்குள் அதற்கான மொத்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டாள், பெரியம்மாவின் மூத்த மகள் அஸ்வினி. இந்நேரம் தன் உழைப்பிற்கான ஊதியம் கடைத்தெருவில் கரைந்து போயிருக்கும். கூலியை வாங்கியாயிற்று. வேலையில் தாமதமானால் ஷைலஜா கத்துவாள் என உணவு உண்பதற்குக் கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்ததால், பெரிய அன்னையிடம் பதிலுரைக்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. ஆனால், பூர்ணகலா விடுவதாய் இல்லை.

    இந்த பிச்சிப்பூ ஆரத்தைப் பார்த்தியா? எவ்வளவு கனம்? எப்படியும் ஏழெட்டு சவரன் இருக்கும். ஹும். அந்தக் காலத்தில் இந்த பிச்சிப்பூ ஆரம் காசுமாலை எல்லாம் பெரிய பெரிய பணக்காரங்க வீட்ல உள்ளவங்க கழுத்திலதான் பார்க்க முடியும்... பூர்ணகலா ஆதங்கப்பட்டுக் கொள்ள, பார்வையை திருப்பாமலே குரல் கொடுத்தாள் நளாயினி.

    அதற்கென்ன பெரியம்மா? இப்பத்தான் உங்க கையிலயே இருக்கே! தாராளமாய் போட்டுக்கங்க.

    சும்மா போட்டுப் பார்த்தால் அது என் நகை ஆயிடுமா?

    சும்மா போட்டுப் பார்க்க சொல்லல பெரியம்மா- நீங்களே போட்டுக்கங்க

    அடியாத்தீ! இது உனக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அனுப்பியது. இதை நான் வெச்சிக்கிட்டா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? சற்றே ஏக்கத்தோடு பூர்ணகலா கேட்டுக் கொண்டிருந்தபோது, அவளது பிள்ளைகள் மூவரும் ஜவுளிக்கடைப் பைகளோடு ஆர்ப்பாட்டமாய் வந்து சேர்ந்தனர்.

    ஹைய்! இதென்ன இவ்ளோ நகைங்க? ம்மா! எங்களுக்கு தெரியாம இவ்ளோ சேர்த்து வெச்சிருந்தியா? - மூத்தவள் அஸ்வினி, கையிலிருந்த பைகளைக் கட்டிலில் போட்டுவிட்டு நகைகளைக் கையிலெடுத்துக் கொண்டே கேட்க, பூர்ணகலா நொடித்தாள்.

    ஆமா! உங்கப்பா சம்பாத்தியத்தை வெச்சு நான் நகையை சேர்க்க வேண்டியதுதான். நல்லதா நாலு துணிமணி எடுத்துத் தந்திருப்பாரா அந்த மனுஷன்?

    ஏன், எம்புள்ள என்ன குறை வெச்சான்? நீ பெத்துப் போட்டதுக்கு மட்டுமில்ல, ஊர்ல அநாதையா கிடந்ததை எல்லாத்தையும் கூட்டிட்டு வருவ. அதுக்கும் சேர்த்து உழைச்சுப் போட்டே இளைச்சுப் போனான் எம்புள்ள. உனக்குத்தான் எவ்வளவு தந்தாலும் போதாதே? என்ற மாமியாரின் குரலைக் கேட்டதும் பம்மிக் கொண்டாள் பூர்ணகலா.

    அப்போ ஏது பாட்டி இவ்ளோ நகை?

    இது ராமசந்திரன் வீட்ல இருந்து வந்திருக்கு. இதெல்லாம் அவன் பொண்டாட்டியோட நகைங்க.

    ஓ! என்றவாறே கையிலிருந்த நகைகளை அலட்சியமாய் கட்டிலில் போட்டாள் அஸ்வினி.

    வீட்டுக்கு வரப்போறவ வெறுங்கழுத்தோட வந்தா அவுகளுக்கு மரியாதையா இருக்காதாம். அதான் அவன் ஆத்தா வந்து கொடுத்திட்டு போறா. நீங்களும் நல்லா சாமியக் கும்பிடுங்க. உங்களுக்கும் இந்த மாதிரி அதிர்ஷ்டமான மாப்பிள்ளைக கிடைக்கட்டும் என்ற கோமளவல்லியிடம் முகம் சுளித்தாள், இரண்டாவது பேத்தி ரமணி.

    எங்களுக்கு இந்த மாதிரி யோகமும் வேண்டாம். மாப்பிள்ளையும் வேண்டாம்.

    யெஸ்! எங்களுக்கு ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளைங்க வருவாங்க.

    ஆமாமா! உங்கம்மா கிலோ கணக்கில நகை நட்டு சேர்த்து வெச்சிருக்கா. நீங்க கேட்கிற மாதிரி ராசகுமாரனுங்க வந்து பல்லக்கில தூக்கிட்டு போவானுங்க. கனவு கண்டுட்டு இருங்க.

    நாங்க ஏன் கனவு காணக் கூடாது? நாங்க அழகா இருக்கோம். படிச்சிருக்கோம். அக்கா வேலைக்குக் கூட போறா. நானும் நெக்ஸ்ட் இயர் வேலைக்குப் போயிடுவேன். எங்களுக்கு ஏத்த ராஜகுமாரன்களை நாங்களே தேடிக்க மாட்டோமா?

    அடி செருப்பால! என்னடி, நாலு எழுத்து படிக்க வெச்சதும் எல்லாத்தையும் நீங்களே தேடிக்குவீங்களோ? சங்கை அறுத்திடுவேன், ஜாக்கிரதை! பூர்ணகலா சீற, அலட்சியமாய் ‘உச்’ கொட்டினாள் அஸ்வினி.

    இப்ப ஏம்மா கத்துற? உன்னால எங்களுக்கு எத்த மாதிரி மாப்பிள்ளை பார்க்க முடியுமா?

    ஏன் முடியாது? எங்கத் தகுதிக்கு ஏத்த மாதிரி பார்க்கிறதை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துங்க. நாங்கள்லாம் நடத்தல?

    ம்மா! எங்களால எல்லாம் உன்னை மாதிரி குடிகார புருஷனோடு குடும்பம் நடத்த முடியாது!

    ஏய்! என்ன, சந்தடி சாக்குல எம்புள்ளையை குடிகாரன்றீங்க? எம்புள்ள தங்கம்டி.

    ஆமாமா! உங்கப் புள்ளைய நீங்கதான் மெச்சிக்கணும். சம்பாதிக்கிறதுல பாதிய குடிச்சே அழிச்சிடுறாரு. அந்த மனுஷனக் கட்டி என்னத்தக் கண்டேன் நான்!

    குடிக்காம என்ன பண்ணுவான்? வதவதன்னு பொட்டப்புள்ளைகளாப் பெத்துப் போட்டிருக்க. அது போதாதுன்னு உன் தொங்கச்சி மகளையும் கூட்டிட்டு வந்திட்ட எம்புள்ள என்ன மனுஷனா மாடா? அத்தனை பேருக்கும் சம்பாதிச்சிக் கொட்ட வேண்டாம்? நாளு பூரா மாடா உழைக்கிறான். உடம்பு நோவுன்னு கொஞ்சம் குடிக்கிறான்! அது ஒரு குத்தமா?

    அந்த மனுஷனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கினதே நீங்கதான். ஆரம்பத்திலயே அவரை தட்டி வெச்சிருக்கணும். நீங்களும் செய்யமாட்டீங்க. என்னையும் செய்ய விடல. இப்போ முழுநேரமும் குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடக்கிறாரு. இதுக்கெல்லாம் காரணம் நீங்கதானே? வருடக்கணக்காய் மனதிற்குள் மண்டிக்கிடந்த ஆத்திரமும் ஆற்றாமையும் வார்த்தைகளாய் வெளியேற, கோமளவல்லி சிலிர்த்துக் கொண்டாள்!

    என்னடி சொன்ன? யாரு, நானா காரணம்? அப்பனையும் ஆத்தாளையும் முழுங்கிட்டு நின்ன மூதேவியை என்னிக்கு இந்த வீட்டுக்குள்ள கூட்டியாந்தியோ அன்னிக்கே எம்புள்ளைக்கு தரித்திரம் ஆரம்பிச்சிடுச்சு!

    வாயைக் கழுவுங்க அத்தை! பாலைவனமாக் கிடந்த என் வயித்துவ புல்லு முளைச்சதே இந்தப் புள்ள வந்த பிறகுதான்! எங்களுக்கு இவதான் மூத்த மக உங்களுக்குத்தான் அவளைக் கண்டாலே ஆகாதே! அடுத்த வீட்டுல போய் வாழப்போற புள்ளய வாழ்த்தி அனுப்பலனாலும் பரவாயில்ல. இப்படி வசைபாடாதீங்க

    ஆமாண்டி! எனக்கு இதுதானே வேலை

    அய்யோ! போதும் நிறுத்துங்க வெடித்தாள் அஸ்வினி, சட்டென அமைதியாகிவிட, தாயைப் பார்த்து ஒற்றைவிரல் நீட்டி எச்சரித்தான்.

    இதோ பாரும்மா! நான் சொல்றதை தெளிவாய்க் கேட்டுக்க. அப்பா குடிக்கிறதோ நீங்க சண்டை போடுறதோ எங்களுக்கு புதுசில்ல. என் கல்யாண விஷயத்தை என்னைக் கேட்காமல் யாரும் முடிவு பண்ணக்கூடாது

    ஏய்.

    நீ பார்க்கிற மாப்பிள்ளைக்கு பூம்பூம் மாடு மாதிரி தலையாட்ட நான் ஒண்ணும் நளாயினி இல்லை! ஞாபகம் இருக்கட்டும்! ரமணி, வாடி போலாம் என்றவாறு தங்களது பைகளைத் தூக்கிக்கொண்டு உள்ளறைக்குள் சென்றுவிட பூர்ணகலா விக்கித்துப் போய் நின்றாள். இளையமகள் உமா மட்டும் சற்று மிரட்சியோடு தாயைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

    நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பது போல் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் நளாயினி சிறு சிறு கிண்ணங்களில் இருந்த முத்துக்களும் கண்ணாடி மணிகளும் அவன் மடியிலிருந்த உடையில் பூவாய் இலையாய் மாறிக்கொண்டிருக்க பூர்ணகலாவிற்கு மனம்

    Enjoying the preview?
    Page 1 of 1