Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திரும்பி வா, தென்றலே!
திரும்பி வா, தென்றலே!
திரும்பி வா, தென்றலே!
Ebook126 pages44 minutes

திரும்பி வா, தென்றலே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு கணம் முகத்தை உற்றுப் பார்த்த மோகனா அவனுடைய கண்கள் சிவந்துவிட்டதையும் சோக உணர்வுகள் பரவுவதையும் கவனித்தாள்.
 ''வசந்த்... என்ன சொல்றீங்க?"
 "உண்மைதான் மோகனா. நான் ஒரு அநாதை. எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது!'' கிசுகிசுப்பான குரலில் சொன்னான். கலங்கும் விழிகளை அவளுடைய முகத்திலிருந்து எடுத்து எங்கோ போட்டான்.
 ''வசந்த்! உங்க அம்மா அப்பா கிராமத்தில் இருக்கிறதா நீங்க சொல்லி இருக்கீங்க!''
 "ஆமாம்! அது நீயும் நானும் நண்பர்களாக இருந்தபோது, நான் சொன்ன பொய்."
 "ஏன் அப்படிப் பொய் சொல்லணும்?"
 "மனுசனோட தன்னம்பிக்கையை அழிக்கிற பெரிய சக்தி எது தெரியுமா? அனுதாபப் பார்வை! அநாதைன்னு சொல்லிப்பிறரோட அனுதாபப் பார்வையை நான் சம்பாதிக்க விரும்பலை. அதனால அப்படிச் சொன்னேன். ஆனா... இப்போ நாம் காதலர்கள். நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை நடத்தப்போறவங்க. நமக்குள் எந்த ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது.
 "ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையாக இருக்கணும் அதனால் உண்மையை உன்கிட்ட சொன்னேன். எனக்குன்னு கிடைக்கப் போகிற ஒரே உறவு, சொந்தம், பந்தம் எல்லாம்.. நீதான்!" என அவளுடைய கையை இழுத்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன், உணர்வுகளைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டான்.
 "வசந்த்...'' மோகனாவும் உணர்ச்சிவசப்பட்டவளாக, அவன் கைக்குள் இருந்த தன் வலக் கையை இடக் கையால் பற்றிக் கொண்டாள்"மோகனா... நீ மட்டும்தான் எனக்கு! நீதான் நான் உணராத அம்மா, அப்பா, சகோதர பாசம் எல்லாத்தையும் எனக்குச் சேர்த்துத் தரணும். தருவியா?" இனம்புரியாத உணர்வுகளுக்கு ஆட்பட்ட அவன், தன் மனநிலையை உணர்த்தினான். அவனுடைய கைகளை எடுத்துத் தன் உதடுகளில் பொருத்தி முத்த மிட்டாள், மோகனா. அந்த முத்தம் தந்த மயக்கத்தில் அது வரை வேதனையில் துளிர்த்த கண்ணீர், ஆனந்தக் கண்ணீராக மாறி வழிந்தது.
 "வசந்த்... இந்த உலகத்துல தாய் அன்பு, சகோதர அன்பு, காதல் எல்லாத்தையும் சேர்த்து மனைவிங்கிற ஒரே உறவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அந்த அன்பை முழுமையா என்னால் தர முடியும்!'' என்றாள்.
 அவன் உணர்ச்சிப் பெருக்கில் அவளை அப்படியே இழுத்துத் தன் நெஞ்சில் பதித்துக் கொண்டான். இனம் புரியாத ஒரு தவிப்பு நிறைவடைந்ததைப் போல் இருந்தது.
 சில நிமிடங்கள் அவனுடைய நெஞ்சில் தலை வைத்திருந்த மோகனா நிமிர்ந்தாள். அவனுடைய முகத்தைப் பார்த்து ஆழ்ந்த அன்பை உள்ளடக்கிய புன்னகை சிந்தினாள். அந்தச் கரிப்பு தந்த தெம்பில், அவளுடைய கையைப் பற்றி, மறுபடியும் தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.
 "வசந்த்... உங்க அம்மா அப்பாவை நீங்க எப்போ இழந்திங்க? உங்களுக்கு வேறு சொந்தக்காரங்களே இல்லையா?"
 இதைக் கேட்டதும் வசந்தின் உதடுகளில் விரக்தியான புன்னகை விரிந்தது. அவளுடைய விரலில் கிடந்த மோதிரத்தைப் பிடித்து முன்னும் பின்னும் நகர்த்தியவாறே சொன்னான்.
 "மோகனா... என்னோட அம்மாவை... அம்மாவை...'' பேச முடியாமல் திணறினான். குப்பென வியர்த்தான். அவனுடைய குரல் லேசாக நடுங்கியது.
 "வசந்த்...'' அவனுடைய தடுமாற்றத்தைக் கண்டு அதிகமாய் அனுதாபப்பட்டாள்.
 "மோகனா... எங்கம்மா சின்ன வயசிலேயே என்னை விட்டுப் போயிட்டாங்க."
 "வசந்த்..."எங்க அம்மா போனதும் எங்க அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டார். சித்தியாக வந்தவளுக்கு நல்ல புத்தி கிடையாது. அத்தனையும் கெட்ட புத்தி. என்னை அவளுக்குப் பிடிக்கலை. அவளுக்குப் பிறந்தது ரெண்டு பொண்ணு. இருக்கிற கொஞ்ச சொத்தும் ஆண் வாரிசான எனக்குப் போயிடும்ன்னு எதிர்காலப் பயம். என்னைக் கொடுமை படுத்தினார். சினிமாவில் காட்டுகிற மாதிரி நிறையக் கொடுமை அவமானம் அலட்சியம்.
 "பிளஸ் 2 படிக்கிறவரைக்கும் ரொம்ப பொறுமையா இருந்தேன். அப்புறம் என் வயசுக்கே உரிய வேகம் வந்துட்டது என்னை வீட்டை விட்டு வெளியேற வச்சுட்டது. கொஞ்சம் பணத்தை அப்பாவோட சட்டைப் பையிலேருந்து எடுத்துக் கிட்டு சென்னை வந்துட்டேன். கிடைச்ச வேலையைச் செய்தேன். பணம் சேர்த்தேன். அஞ்சல் வழியில் படிச்சேன் எம்.ஏ. முடிச்சேன். இப்போ சொந்தத் தொழில் தொடங்கி என் காலிலேயே நிற்கிறேன்.''
 அவனை ஆச்சரியம் நிரம்பிய விழிகளுடன் பார்த்தாள், மோகனா.

Languageதமிழ்
Release dateJan 3, 2024
ISBN9798224531097
திரும்பி வா, தென்றலே!

Read more from R.Sumathi

Related to திரும்பி வா, தென்றலே!

Related ebooks

Related categories

Reviews for திரும்பி வா, தென்றலே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திரும்பி வா, தென்றலே! - R.Sumathi

    1

    கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வரும் பெண், அந்த கணமே அவனுடைய அன்பை உணர்ந்து மீண்டும் திரும்பி ஓடுவதைப் போலவே அலைகள் கரையைத் தொட்டுப் பார்த்த படி கடலுக்கே சென்றன.

    அலைகளைப் பார்க்கும்பொழுது தனக்குள் தோன்றும் கற்பனையை நினைத்துச் சிரித்தான், வசந்த்.

    மோகனாவிடம் இந்த உவமையைக் கூறினால், "அடடா நீங்க மட்டும் கவிதை எழுதத் தொடங்கினா பெரிய ஆளா வரலாம்!’ எனக் கிண்டல் செய்திருப்பாள். சிரித்திருப்பாள்

    அவள் வந்ததும் மறக்காமல் சொல்ல வேண்டும்! ‘சீக்கிரம் வந்துவிடு.. வந்துவிடு!’ என என்னிடம் சொல்லிவிட்டு இன்னும் வரவில்லை. நான் எப்போதாவது தாமதமா வந்தால் எப்படித் திட்டுகிறாள்... வரட்டும்!

    வசந்த்!

    முப்பதைத் தொடும் வயது. வசீகரத் தோற்றம். ஆண்மைக்கே உரிய கம்பீர அழகு. சொந்தமாக வியாபாரம்.

    நெருங்கிய நண்பனொருவனின் தங்கையின் சிநேகியாக அறிமுகமாகி, அதுவே நட்பாக வளர்ந்து காதலில் முடிந்து விட்டது.

    இப்போதெல்லாம் ஒரு நாள் பார்க்கா விட்டாலும் கண்களில் ஏக்கமும், மனதில் தவிப்பும் தகிக்கச் செய்கின்றன.

    அதோ... அந்த அலைகளைப் போலவே சிரிப்பு பொங்கும் முகம், அவளுக்கு. அதே துள்ளல். அதே உற்சாகம். அதே அழகு. தனியே பிரிந்த அலை ஒன்று தாவி வருவதைப் போல் எதிரே வந்து கொண்டிருந்தாள், மோகனா.

    பறக்கும் கூந்தலை வாரி முன் பக்கம் போட்டவாறே, துப்பட்டாவை நெஞ்சுவரை இழுத்துவிட்டுக் கொண்டு வரும் அவளைப் பார்த்ததுமே வசந்தின் முகம் மலர்ந்தது.

    ‘‘ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா, வசந்த்?’’ என அருகே வந்தாள், மோகனா.

    "ஆமா! நான் தாமதமாக வந்தா மட்டும் அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வரும், உனக்கு! ஆனா.. நீ மட்டும் வேணுமின்னே என்னைக் காக்க வைப்பே...’’ லேசாகக் கோபப்பட்டான்.

    ‘‘சாரிடா கண்ணா! இந்தக் கோபம் எதுக்குன்னு எனக்குத் தெரியும்!’’ என்று அவனுடைய வலக்கையைப் பற்றிச் சட்டென்று தன் உதட்டில் வைத்து ‘ப்ப்’ என முத்தமிட்டாள்.

    அவளுடைய கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட வசந்த், அழகிய மையிட்ட காந்த விழிகளைத் தன் பார்வையில் ஊடுருவியவாறே, "நீ இப்படி வந்ததும் வராததுமா முத்தம் தர்றதா இருந்தா நான் விடியற்காலையிலயே வந்து உனக்காகக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கத் தயாரா இருக்கேன்!’’ என்றான்.

    மோகனா தனக்கே உரிய மோகனப் புன்னகையில் அவனை இன்னும் ஈர்த்தாள்.

    "விடியற் காலையிலேயே வந்து உட்கார்ந்திருந்தா நாம கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு இதே கடற்கரையில் பிச்சைதான் எடுக்கணும். உங்க தொழில் படுத்துடும்.’’

    ‘‘தொழில் படுத்தா என்ன? அதான் அதிருஷ்ட லெட்சுமியே என் மடியில் வலியவந்து விழுந்துவிட்டாளே - என்றவன், "பொன்மகள் வந்தாள்... பொருள் கோடி தந்தாள்னு பாட்டுப் பாடிக்கிட்டு, பணக்கார மாமனார் வீட்டுக்கு குடியேறிவிடுவேன்!’’ என்றான்.

    "ஆகா... ஆசை ஆசை! பத்துக் காசுகூடக் கொண்டு வர மாட்டேன்!’’ செல்லமாக அவனது மூக்கைத் திருகினாள்.

    இருவரும் ஆனந்தமாகக் கைகளைப் பற்றிக் கொண்டு கரையோர அலைகளில் நடந்தனர். காற்றில் பறந்து, முகத்தில் படர்ந்து மணம் பரப்பிய அவளது கூந்தலை ரசித்து விலக்கி வசந்த், அவளை இடையில் கைகொடுத்துத் தன்னுடன் இழுத்து கொண்டான்.

    ஆசையுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டபடியே நடந்த மோகனா, ‘வசந்த்! இந்த அலைகளைப் பாருங்களேன்... மனசுல நாம சோம்பேறித்தனமோ தளர்ச்சியோ அடைய கூடாதுன்னு உணர்த்துறதுக்காக இயற்கையா பார்த்து படைத்த அற்புதம் மாதிரி இல்லே? என்றாள்.

    அவள் அலைகளைப் பற்றிப் பேசியதும் அவளுக்காகக் காத்திருந்த போது தோன்றிய கற்பனை அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.

    மோகனா! இந்த அலைகளைப் பார்க்கும்போது எனக்கு எப்படித் தோணுது தெரியுமா?

    "ம்... சொல்லுங்க...’’

    புருஷன்கிட்ட கோபிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கும் போற பெண் உடனே கோபம் தணிந்து மறுபடி புருஷன் வீட்டுக்கே ஓடி வர்ற மாதிரி இருக்கு.

    இதைக் கேட்ட மோகனா, கலகலவெனச் சிரித்தாள்.

    ‘‘எந்தக் காலத்துல இருக்கீங்க, வசந்த்? இப்பவெல்லாம் பொண்ணுங்க கோபிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போறதில்லை. நேரா கோர்ட்டுக்குப் போயிடுறாங்க.’’

    "நீ சொல்றது சரிதான். இப்பவெல்லாம் சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டுப் பிரிஞ்சிடுறாங்க. மோகனா...’’

    ‘‘ம்...’’

    கல்யாணத்துக்குப் பிறகு நீயும் என்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போவியா?

    எப்படி அம்மா வீட்டுக்குப் போக முடியும்? நீங்கதான் வீட்டோட மாப்பிள்ளையாகப் போறீங்களே. அப்புறம் எப்படி நான் அம்மா வீட்டுக்குப் போறது? வேணும்னா மாமியார் வீட்டுக்குத்தான் போகணும்.

    ஏய்... சும்மா நான் ஒரு விளையாட்டுக்குச் சொன்னா, உண்மையிலேயே மாமனார் வீட்டோட மாப்பிள்ளை ஆகிடுவேன்னு நினைக்கிறியா?

    ‘‘சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க வீட்டோட மாப்பிள்ளையாகத்தான் இருந்தாகணும். நான் எங்க அப்பா - அம்மாவுக்கு ஒரே பெண். அவங்களைக் கடைசி காலம் வரை கவனிக்க வேண்டியது என் பொறுப்புதானே!’’

    ‘‘கல்யாணமாகி உன் வீட்டோடு நான் தங்குறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உங்க அப்பா நம்ம காதலை ஏத்துப்பாரான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. நீ என்னடான்னா வீட்டோட மாப்பிள்ளை அது இதுன்னுகிட்டு...’’

    அதைக் கேட்டதும் குனிந்து அலைநீரைக் கைகளில் அள்ளி அவன் மீது கொட்டிச் சிரித்தாள், மோகனா.

    எங்க அப்பாவுக்கு நான் செல்லப் பெண். என்னோட ஆசைக்குக் கண்டிப்பா குறுக்கே நிற்க மாட்டார். எனக்கு உங்க அம்மா, அப்பாவை நினைச்சுதான் ரொம்ப கவலையா இருக்கு. கிராமத்து மனுசங்க. நம்ம காதலை ஏத்துப்பாங்களோ என்னவோ? ஆமா... இப்படியே தினம் தினம் சந்திப்பதும் பேசுவதும், பிரிவதுமா இருந்தா எப்படி? நீங்க உங்க அம்மா - அப்பாகிட்டே எப்போ நம்ம காதலைப்பத்தி பேசப் போறீங்க?

    அவள் இந்தக் கேள்வியைக் கேட்டதும் சட்டென்று அப்படியே நின்று விட்டான், வசந்த்.

    ஏதோ யோசனை வசப்பட்டவனாக அவன் முகம் மாறியது.

    "என்ன... நின்னுட்டிங்க?’’

    "ஒண்ணுமில்லை...’’ என நடந்தான்.

    ‘‘இல்லை... எப்ப இந்தக் கேள்வியைக் கேட்டாலும் உடனே முகம் மாறிடுறீங்க? பதிலே பேச மாட்டேங்கிறீங்க! ஏன்?"

    "ஒண்ணுமில்லை...’’ என்ற போது அவனுடைய குரலும் மாறியதைப் போலிருந்தது.

    ‘‘ஒண்ணுமில்லையா? இல்லை, இருக்கு. ஏதோ இருக்கு."

    "என்ன இருக்கு?’’

    "பயம் இருக்கு! உங்க மனசுல பயம் இருக்கு. அம்மா அப்பாவை நினைச்சுப் பயம் இருக்கு. நான் நினைக்கிறேன் உங்க அப்பா இந்த சினிமாவிலெல்லாம் வர்ற மாதிரி, கிராமமே கையெடுத்துக் கும்பிடுற மாதிரி எட்டுப் பட்டிக்கும் நாட்டாண்மையா இருப்பாரோ! அதான்... பயப்படுறீங்களோ...?’’

    மோகனாவின் குறும்புப் பேச்சு அவனுடைய முகத்தில் சிரிப்பை வரவழைக்கவில்லை.

    "உங்களுக்குப் பயமா

    Enjoying the preview?
    Page 1 of 1