Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொர்க்கம் பக்கத்தில்
சொர்க்கம் பக்கத்தில்
சொர்க்கம் பக்கத்தில்
Ebook83 pages29 minutes

சொர்க்கம் பக்கத்தில்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோசியரின் எதிரே இருந்தார் அப்பா...
 சற்று தள்ளி அம்மா.
 அப்பா மேல் துண்டால் வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.
 "நீங்க சொன்ன ஜோசியம் பலிக்குமா?" நடுங்கும் குரலால் கேட்டார்.
 "நான் சொல்லலை. அவளோட ஜாதகம் சொல்லுது. இன்னும் மூணு நாள்ள நடக்கப்போற கிரகப் பெயர்ச்சி அதைத்தான் சொல்லுது கிரகங்களோட அசைவை மனுஷனால மாத்த முடியுமோ? ஆனானப்பட்ட அந்த அம்பாளைக் கூட அரை நாழிகை சனி விட்டு. வெக்கலைனு புராணம் உண்டு. படிச்சிருப்பேளே!"
 "இ.. இப்ப என்ன செய்யலாம்?"
 "இந்த மூணுவாரமா நீங்க முனைஞ்சு தேடியும் ஏன் ஒரு வரன் கூட அகப்படலை? அதான் பிராப்தம். அவனுக்கு அவள்னு அந்த ஆகாயத்துல எழுதி வச்சிருக்கு. மாற்ற முடியுமா?"
 உள்ளே உஷா நின்று கொண்டிருந்தாள்.
 "ஆனாலும் இத்தனை அழகான கிளியை கரடிக்குக் கட்டிக் கொடுக்க முடியுமா?" அம்மா அழுதாள் ஏறத்தாழ. "அம்மா வேலியில்லாத பயிர் வெள்ளாமை வரைக்கும் தாங்காது பெண் அது மாதிரித்தான். உங்க பொண்ணு சர்க்கரைக் கட்டிதான். ஆலயத்துல விக்ரகம் கறுப்பா இருக்கு. இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படி படைக்க முடியும்னு நீங்க தயங்கினா, விக்ரகத்துக்கு நஷ்டமில்லை. ஆனா சர்க்கரையை எறும்புகள் மொய்க்கத் தொடங்கிட்டா, யாருக்கு லாபம்?"
 உஷா வெளியே வந்தாள்.
 "வாம்மா நீ என்ன சொல்ற?!""நீங்க சொல்லி முடிச்சிருங்க மாமா. அப்புறமா நான் பேசறேன்!"
 "ஆணுக்கு அழகு வேண்டாம்மா. இதுவே வராகன் இடத்துல ஒரு பெண் இருந்திருந்தா, நிச்சயம் வேதனைப்படணும், அவளுக்கு எப்ப விடியும்னு வெந்து சாகணும். அழகு பெண்ணுக்குத்தாம்மா அவசியம். அப்புறம் உங்க எல்லார் விருப்பமும். நான் வரட்டா?"
 "இருங்க மாமா!"
 "என்னம்மா?"
 "இந்த மூணு நாள்ள, முகூர்த்த நாள் இருக்கா?",
 "இந்த மூணு நாளுமே அம்சமான முகூர்த்த நாள் தாம்மா. ஏன் கேக்கற?"
 "வராகனை நான் கல்யாணம் செஞ்சுகறேன்!"
 "உஷா!" அம்மா அலறினாள்.
 "ஜோசியத்துக்கு பயந்து கிணத்துல விழாதேடீ உஷா. இந்த பந்தத்தை நீ நினைச்சாலும் ரத்து செய்ய முடியாது..."
 "அம்மா... வராகனை அன்னிக்கே எனக்குப் பிடிச்சாச்சு. உறவுகளை மனசு ஏத்துகிட்டா, மத்ததெல்லாம் பெரிசாத் தெரியாதம்மா. ஜோசியர் மாமா சொன்ன மாதிரி இந்த சர்க்கரை எறும்புகளுக்குத் தீனியாக வேண்டாம்... தெய்வத்துக்கு நைவேத்தியமாகட்டும். அப்பா உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்க!"
 அப்பா உஷாவை நெருங்கி, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.
 மள மளவென ஏற்பாடுகள் துரிதகதியில் நடக்க மூன்றாம் நாளே. உஷாவின் வீட்டில் வைத்து, வீட்டு மனிதர்கள் பத்துப்பதினைந்து பேருடன் எளிமையாக நடந்தது அந்தத் திருமணம்.
 முதலிரவுக்கும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டது.
 அம்மா, உஷாவிடம் எதுவுமே பேசவில்லை.
 உஷாவும் அதைப் பொருட்படுத்தவில்லைதனியறைக்குள் விடப்பட்டாள்.
 "வா உஷா, என் இல்லத் தலைவிக்கு நான் தரக்கூடிய முதல் மரியாதை!" கை கூப்பி வணங்கினான்.
 "அய்யோ என்ன இது? நான் உங்க மனைவி!"
 "அதனாலதான் இந்த மரியாதை. மனைவி தான் இல்லத்தை நிர்வகிக்கற மந்திரி. மரியாதைக்குரிய மகாலக்ஷ்மி. மகனையும், மகளையும் பெற்றுத் தரப் போற மாதா. வணங்க வேண்டாமா?"
 அவனை பரசவத்துடன் பார்த்தாள்.
 அவளை அணைத்து நடத்திக்கொண்டு போய் மஞ்சத்தில் உட்கார வைத்தான்.
 "உஷா!"
 "என்னங்க?"
 "முழு மனசோடதானே என்னை ஒப்புக்கிட்டே நீ?"
 "அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?"
 "இல்லைமா. உன்னை நான் சந்தேகப்படலை. என்னை, என் நிறத்தை. என் அழகில்லாத உருவத்தை நான் சந்தேகப்படறேன். ஒரு சமயம் இல்லைனா ஒரு சமயம், ஒரு சின்ன நெருடலோ, ஆயாசமோ மனசுல ஏற்பட்டாலும் போதும்... வாழ்க்கைல நிம்மதி போயிரும், அதனாலதான் கேட்டேன்?"
 "உங்க குணம் தான் என் கண்களுக்குத் தென்பட்ட அழகு!"
 "உன்னைப்போல உன் மனசும் வெளிச்சம்!"
 "ராத்திரி நேரத்துல வர்றதுனாலதான் நிலாவுக்கு மரியாதை, பகல்ல அது எடுபடாது. நானும் அது மாதிரித்தான் போகட்டும். உங்களுக்கு என்னல்லாம் பிடிக்கும்?"
 "உன்னைப் பிடிக்கும்"
 "சரி. அப்புறம்?""உன்னைப் பிடிக்கும்!"
 மறுபடியும் சொன்னான், மலர்ந்து சிரித்தாள் கலகலவென.
 "உன் சிரிப்பு காதுல ஒலிக்குது... உஷா. அதனால விளக்கு வேண்டாம்னு நினைக்கிறேன். அணைக்கட்டுமா விளக்கை?"
 "ய்யோ... நானில்லை விளக்கு. அணைக்கவேண்டியது அங்கே!"
 "இங்கேயும்தான்!"
 அவளது சிரிப்பு மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே...! வந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 21, 2023
ISBN9798223420118
சொர்க்கம் பக்கத்தில்

Read more from Devibala

Related to சொர்க்கம் பக்கத்தில்

Related ebooks

Related categories

Reviews for சொர்க்கம் பக்கத்தில்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொர்க்கம் பக்கத்தில் - Devibala

    1

    "என்னங்க இவனா பையன்?"

    கையிலிருந்த போட்டோவை அழுகிப்போன தக்காளியைப் பார்ப்பது போலப் பார்த்தாள் அம்மா.

    ஏன் இவனுக்கு என்ன?

    கறுப்பா, இருட்டுக்கு மை பூசின மாதிரி நிறத்துல இருக்கான். இதுதான் இவன் நிறமா? இல்லை போட்டோ அப்படி இருக்கா?

    தபாரு விமலா... நாளைக்கு நம்ம உஷாவைப் பெண் பார்க்க வரப்போறான் இந்தப் பையன். அப்ப நேர்ல பார்த்துக்கலாமே.

    என்னங்க நம்ம உஷா, ‘ஊட்டி ரோஜா மாதிரி, பால்ல போட்ட குங்குமப்பூ மாதிரி நிகுநிகுனு உடம்பும், நிறமுமா அம்சமான அழகு. நம்ம குழந்தைக்கு இந்தக் கரிக்கட்டை வேணாம். என் மனசு ஒப்பலை.

    அம்மா நான் ஆபீசுக்குப் புறப்படறேன்!

    உஷா நாளைக்கு லீவு போட்ரு!

    எதுக்கப்பா?

    உன்னை பெண் பார்க்க வர்றாங்க.

    வேலையை நான் விட வேண்டி வருமா டாடி?

    தபாருடா. மாப்பிள்ளை யாருனு, கேக்கலை. அவ, வேலையை அதைவிட முக்கியமா நினைக்கறா பாரு!

    அம்மா, கல்யாணம்கூட சுலபமா நடந்துரும். வேலை கிடைக்கறது அத்தனை கஷ்டம். நான் வர்றேன்.

    பத்தரை மணிக்கு அவர்கள் குடும்ப. ஜோசியர் பஞ்சாட்சரம் கட்டுக் குடுமி, பஞ்சகச்சம், வாய் நிறைய தாம்பூலம் என்று அமர்க்களமாக வந்தார்.

    (இவரைப் பற்றி மிக முக்கியமாக வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும், ஒரு வகையில் இந்தக் கதையின் நாயகனே ஜோசியர்தான்)

    அப்பாவும், அம்மாவும் பவ்பமாக எழுந்து நின்றார்கள்.

    ‘ஜோசியருக்கு அறுபத்தேழு வயது. ஜோசியரின் அப்பா, தாத்தா என்று பரம்பரையே ஜோசியப்பரம்பரை.

    அவர்கள் சொன்னால் நூலிழை பிசகாது. அதன்படிதான் நடக்கும். மாறியதாக சரித்திரமே இல்லை. அவரை ஆண்டவனைப்போல மதிப்பார்கள் உஷாவின் குடும்பத்தார்கள்.’

    உட்காருங்க!

    என்ன மகேந்திரன், நாளைக்கு அந்தப் பார்ட்டி உஷாவைப் பெண் பார்க்க வர்றாங்களா?

    வர்றாங்க ஜோசியரே.

    பையனோட போட்டோ பார்த்தாளா உஷா?

    இன்னும் பார்க்கலை!

    ஏன்?

    நாங்க காண்பிக்கலை!

    மெல்லிய குரலில் சொன்னாள் அம்மா,

    காரணம்?

    எ... எனக்குப் பிடிக்கலை. பையன் தொட்டா ஒட்டிக்கற கறுப்புனு தோணுது. நம்ம உஷா நல்ல சிகப்பு. அதனால.

    அதனால என்னம்மா? ஆணுக்கு அழகு முக்கியமாம்மா?

    ஆனாலும் அதுவும் கொஞ்சம் அவசியம்தானுங்களே!

    இந்தப் பையனோட படிப்பும், பதவியும், குணாதிசயங்களும் ரொம்ப உசத்திமா. இவனைப் பார்த்தாலே மத்தவங்க எழுந்து நிக்கிற அளவு ஒரு மரியாதையை சம்பாதிச்சு வச்சிருக்கான் கிடைக்குமா எல்லாருக்கும் மனசு சொக்கத் தங்கம். அது மட்டுமில்லாம...

    சொல்லுங்க ஜோசியரே!

    உஷாவோட ஜாதகப்படி குரு உச்சத்துக்கு வந்தாச்சு. கேது நாலாம் இடத்துல இருக்கு. இதை வச்சுப் பார்த்தா ஐப்பசி முடியறதுக்குள்ளே உஷாவுக்குக் கல்யாணம் நடந்தாகணும். அப்படி நடக்கலைனா, கல்யாணமே இனி நடக்காது.

    அய்யோ என்ன இது? ஐப்பசி முடிய இன்னும் மூணு வாரம்தானே இருக்கு. அப்பா அலறினார்.

    அதான் சொன்னேன். இந்தப் பையன் அளவு எந்த ஜாதகமும் இத்தனை அம்சமாக உங்க பொண்ணுக்கு இதுவரைக்கும் பொருந்தலை, முடிச்சிருங்க. இல்லைனா, காலம் முழுக்க அழ வேண்டி வரும்.

    ஜோசியர் புறப்பட்டு போய்விட்டார்.

    அம்மா அன்று இரவு முழுவதும் உறங்கவில்லை.

    மறுநாள் விடிந்துவிட்டது.

    காலை பத்தரைக்கு மேல் அவர்கள் வருவதாகத் தகவல் தந்திருந்தார்கள். அம்மா பலகாரம் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தாள்.

    உஷா தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்,

    பத்தரைக்கு சரியாக வாசலில் டாக்ஸி வந்து நின்றது. அவர்கள் இறங்கினார்கள்.

    இரண்டு பெண்கள்... ஒரு வயதான மனிதர், ஒரு குழந்தை கடைசியில் வராகன்.

    வாங்க, வாங்க!

    அப்பாவின் குரலில் பஜ்ஜியை அடுப்பில் விட்டு விட்டு அவசரமாக அம்மா ஓடி வந்தாள்.

    அதிர்ந்தாள்.

    உள்ளே நுழையும் வராகன் சற்று குள்ளமாக, குண்டாக நல்ல லீக்கோ கரியின் நிறத்தைப் பெற்றிருந்தான்.

    சிரித்தபோது, வாய்க்குள் பல்பு எரிந்ததைப் போல பற்கள் அந்த இருட்டுக்கு வெளிச்சம் போட்டது.

    டிபனை எடுத்துட்டு வா விமலா.

    இருக்கட்டும் சார். உங்க மகளை முதல்ல வரச் சொல்லுங்க, டிபனெல்லாம் அப்புறம். இவர் எங்க தாத்தா. இது எங்க அத்தை. இவங்க நண்பர் மனைவி.

    உங்க அப்பா, அம்மா?

    இல்லை. சின்ன வயசுல தவறிட்டாங்க

    விமலா, உஷாவை அழைச்சிட்டு வா.

    உள்ளே வந்தார் அப்பா.

    உஷா தன் காலை எடுத்து வைக்க –

    "நில்லும்மா. நீ

    Enjoying the preview?
    Page 1 of 1