Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மலிவு விலையில் ஒரு மரணம்
மலிவு விலையில் ஒரு மரணம்
மலிவு விலையில் ஒரு மரணம்
Ebook85 pages26 minutes

மலிவு விலையில் ஒரு மரணம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தோஷ அருவி தலைமேல் கொட்டியது ராஜாமணிக்கு. கலர் கலராய் - பூ மத்தாப்பூ தெரிந்தது. கண்களில் சட்டென்று ஒரு நீர்த்திரை விழுந்தது! தன்னையே கிள்ளிப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது!
 "நி... நிஜமாவா சொல்றீங்க?"
 "நிஜமாத்தான் சொல்றோம்."
 "என்ன வேலைங்க?"
 "சொல்றோம்...! சுலபமான வேலைதான். அதை நீ முடிச்சுக் குடுத்திட்டா... உனக்குக் கை நிறைய பணம் தர்றோம்!"
 "வேலை என்னான்னு சொல்லுங்க."
 "சொன்னாத்தான் செய்வியா?"
 "பரவால்லங்க... நான் செய்யறேன். என்ன செய்யணும்?"
 "உன்னைப் பார்த்தா பசியோடு இருக்கிற மாதிரி தெரியுது...! வா... மொதல்ல ஒரு நல்ல - ஹோட்டலுக்குப் போகலாம். வேண்டியதை சாப்பிடு! அப்புறமா, நீ என்ன வேலை செய்யணும்ங்கிறதைப் பத்தி பேசலாம்."
 தலையாட்டினான்.
 ஹோட்டல் என்ற பெயர் காதில் விழுந்ததுமே.... நாக்கில் நீர் சுள்ளென்று ஊறியது!
 "ரொம்ப... நன்றிங்க!"
 "உன்னோட நன்றியை நீ செய்யற வேலையில காட்டு போதும், உன்னோட பேரென்ன?"
 "ராஜாமணிங்க!"அந்த பெரிய ஹோட்டலுக்குள் அவனைக் - கூட்டிப் போனார்கள்.
 டபரா டம்ளர்களின் இரைச்சலோடு இருந்த ஹோட்டலில் ஒரு ஒதுக்கலான மேஜையைப் பிடித்து சூழ்ந்து உட்கார்ந்தார்கள்.
 ராஜாமணி எதிரே இருந்தவர்களைப் பரக்க பரக்கப் பார்த்துக் கொண்டு கையிலிருந்த தோல்பையை கெட்டியாகப் பிடித்திருந்தான்.
 "ராஜாமணி!"
 "ஸார்!"
 "உனக்கு எந்த ஊரு?"
 "புளியம்பட்டி ஸார்..."
 "அம்மா, அப்பா?"
 "அம்மா... ரொம்ப வருஷம் முன்னாடியே செத்துட்டாங்க. ஒரு வாரம் முன்னாடி அப்பாவும் போய்ட்டாரு! அவரு இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காதுங்க..."
 சிரித்தான் அவன்.
 "எத்தனை நாளைக்குத்தான் அப்பாவையே நம்பிட்டிருப்பே?"
 "இப்பதாங்க தெரியுது."
 பேரர் வந்து நின்றார்.
 "என்ன சாப்பிடறே?"
 ராஜாமணி லேசாய்த் தயங்கினான்.
 "எதுவோ ஒண்ணு. வயிறு நிறைஞ்சா சரிங்க."
 "கூச்சப்படாமே - உனக்கு எது வேணுமோ கேட்டு வாங்கி சாப்பிடு.அவர்கள் வற்புறுத்த –
 ராஜாமணியே சொன்னான்.
 "ரெண்டு புரோட்டாவும் குருமாவும் குடுங்க."
 பேரர் நகர்ந்தார்.
 "நான்... என்ன வேலைங்க செய்யணும்?" மறுபடியும் கேட்டான் ராஜாமணி.
 அவன் கையமர்த்தினான்.
 "முதல்ல நீ சாப்பிடு."
 இரண்டு நிமிஷங்களில் புரோட்டாவும், குருமாவும் வந்தது.
 ராஜாமணி அத்தனை நேரப் பசியின் வேகத்தில் புரோட்டாவை பிய்த்து பிய்த்து வாய்க்குள் திணித்தான்.
 அவனையே கொஞ்ச நேரம் பார்த்தவர்கள்...
 "ராஜாமணி... நீ சாப்பிட்டிட்டிரு. வேற எது வேண்ணாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடு. நாங்க அந்த கடைவாசல்ல நின்னு சிகரெட் பிடிச்சிட்டிருக்கோம்..." என்று சொல்ல, ராஜாமணி தலையாட்டினான்.
 அவர்கள் வெளியே வந்து - பக்கத்திலிருந்த பெட்டிக் கடையில் நின்று கொண்டார்கள்.
 சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டார்கள்.
 "ஜெகன்."
 "ம்?"
 "அந்த வேலைக்கு இவன்தான் சரியான ஆள்."
 "ஆள் டீஸண்டா இருக்கான். அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்தேகப்படமாட்டார்கள்."
 "நீ போய் அதை எடுத்துட்டு வந்துடு."
 "ம். கொண்டு வர்றேன். இதே ஹோட்டல் வாசல்ல நீங்க ரெண்டு பேரும் நில்லுங்க."சீக்கிரம் வரணும்."
 "சரி."
 "நீ இப்ப போய் அதை சீக்கிரமா கொண்டு வந்துடு."
 "பத்து நிமிஷத்தில் வந்துடறேன்."
 ஜெகன் நகர்ந்தான்.
 இன்னொருத்தன் கையிலிருந்த சிகரெட்டை வீசிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்து ராஜாமணியிடம் நெருங்கினான். அவன் புரோட்டாவை ஹதம் செய்து விட்டு ஒரு நீளமான ரோஸ்டில் இருந்தான். வாய் கொள்ளாத தோசையோடு கேட்டான்.
 "அவரு எங்கே போறாரு?"
 "இப்ப வந்துடுவார். இன்னும் ஏதாவது சாப்பிடறியா?"
 "போதுங்க. வயிறு ரொம்பிடுச்சு."
 "காஃபி?"
 "வேண்டாங்க,"
 "சரி. கை அலம்பிட்டு வா."
 ராஜாமணி வாஷ்பேசினை அடைந்து கையையும் முகத்தையும் அலம்பினான். பின்னாலேயே வந்திருந்த அவன் சீப்பை எடுத்து நீட்டினான்.
 "இந்தா. தலை சீவிக்கோ."
 சீப்பை அவன் கையிலிருந்து வாங்கி தலை வாரினான்.
 வாரி முடித்ததும் - சீப்பைத் திருப்பிக் கொடுத்தான்.
 அவன் பாக்கெட்டிலிருந்து தேடி எடுத்து சின்ன பேப்பர் மடிப்பை நீட்டினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223534938
மலிவு விலையில் ஒரு மரணம்

Read more from Rajeshkumar

Related to மலிவு விலையில் ஒரு மரணம்

Related ebooks

Related categories

Reviews for மலிவு விலையில் ஒரு மரணம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மலிவு விலையில் ஒரு மரணம் - Rajeshkumar

    1

    மாவட்ட வேலை. வாய்ப்பு அலுவலகம்.

    பெயிண்ட் உதிர்த்த போர்டு. கோபி கரைந்த சுவர்கள். அந்த நாளின் காலை பதினோரு மணி. நாட்டின் எதிர்காலங்கள் நிறைய பேர், முகத்தில் அவநம்பிக்கையோடு அந்த அலுவலக கட்டிட வராந்தா முழுக்க சிதறியிருந்தார்கள். இன் செய்திருந்த, டீ சர்ட் போட்டிருந்த, ஜீன்ஸுக்குள் பதுங்கியிருந்த இளவட்ட பட்டதாரிகள் காம்பவுண்ட் சுவர்களில் வானரங்களாகி தலைக்கு மேலே புகை கிளப்பிக் கொண்டு எண் - புதுப்பித்தலுக்காகக் காத்திருந்தார்கள்.

    இந்த நாவலைப் படிக்கிற இந்த நிமிஷம் –

    நமக்குத் தேவையான நபர் –

    ராஜாமணி.

    ராஜாமணி தளர்வு நடையில் அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். பிரவுன் நிற காட்டன் பேண்ட்டிலும் வரி போட்ட சட்டையிலும் வசதிக் குறைவாய் தெரிந்தான். கொஞ்சம் உயரப் பற்றாக்குறை. எண்பதில் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மேலே படிக்க வைக்க ஆசைப்பட்ட அப்பாவின் ஆசையில் நிறைய மண்ணைப் போட்டு - ‘ஒரு உருப்படியான வேலையிலாவது சேருடா’ என்ற அவரின் அறிவுரையையும் அலட்சியப்படுத்திவிட்டு மனம் போனபடி ஊர் சுற்றிக் கொண்டிருந்த ராஜாமணி போன வாரத்தின் ஒரு நாளில் திடீரென்று ‘ஹார்ட் அட்டாக்’கில் அப்பா கண்மூடின விநாடிதான் தனக்கென்று இந்த உலகத்தில் யாருமே கிடையாது என்கிற ஞானக்கண் திறந்தது.

    விளைவு -

    அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலினால் ப்ளஸ் டூ முடித்த கையோடு வந்து வேலை வாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்து விட்டுப் போனது ஞாபகம் வர - இன்று இங்கே வந்திருந்தான்.

    யாரிடம் போய்க் கேட்டாலும் எரிச்சலான - ஏளனமான பதில். வாய்யா - போய்யா என்கிற மாதிரி மரியாதைக் குறைவான வார்த்தைப் பிரயோகங்கள்.

    சீனியாரிடி பிரகாரம்தான் வரும். இன்னும் ஒரு வருஷம் ஆகும்.

    ஸார்... ப்ளீஸ், எப்படியாவது இன்ட்டர்வியூ கார்டு அனுப்ப ஏற்பாடு பண்ணுங்க ஸார். எந்த வேலை செய்யறதுக்கும் நான் தயார் ஸார்.

    இப்படி தினம் ஆயிரம் பேர் வந்து அழுதுட்டுப் போறாங்க. எல்லாருக்குமே கார்டு அனுப்ப முடியுமா? போய்யா... சீனியார்டி பிரகாரம்தான் கார்டு வரும்.

    ஸார்... ப்ளீஸ்...

    அவன் சீறினான். ஏய்யா, பஸ்ஸ்டாண்ட் பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சிக்கிட்டு நிக்கறே? காலையில நாங்க வேற வேலை பார்க்க வேண்டாமா? மொதல்ல இடத்தைக் காலி பண்ணுய்யா. பெரிய ரோதனையாப் போச்சு.

    ராஜாமணி அவனையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு -

    அலுவலகக் கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தான்.

    தனக்கு வேலை கொடுக்காத கவர்மெண்ட்டைத் திட்டிக் கொண்டே நடந்தவனின் கண்ணில் எதிர் வரிசையிலிருந்த டீக்கடை பட -

    டீ குடிக்கும் ஆசை நாக்கில் ஊறியது. பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு தன் பொருளாதார நிலைமையை அலசினான்.

    வெளியே கையை எடுத்தபோது -

    கையில் ஒரே ஒரு ரூபாய் நாணயம் வெய்யிலில் மின்னியது.

    இப்போதைக்கு அவனுடைய பேங்க் பாலன்ஸ் சொத்து நிலவரம் ஒரு ரூபாய் மட்டும்தான்.

    கையிலிருந்த ஒரு ரூபாயை பார்த்துக் கொண்டே - டீ குடிக்கிற ஆசையைக் கைவிட்டான். இந்த நேரத்துக்கு டீ குடிப்பது அநாவசியம் என்பது போல் ஓர் எண்ணம். மத்தியானம் கண்டிப்பாய் பசிக்கும். அப்படிப் பசிக்கிற நேரத்துக்கு ஒரு டீயைக் குடித்து வயிற்றை தாஜா செய்து வைக்கலாம்.

    ரோட்டைக் கடந்து எதிர்ப்புற பிளாட்பாரத்துக்கு வந்தான் ராஜாமணி.

    மனசுக்குள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் - அடி வயிற்றில் ஒரு பனிக்கட்டியின் ஜில்லிப்போடு உட்கார்ந்திருந்தது.

    ‘அப்பாவின் பேச்சை அப்போதே ஒழுங்காய் கேட்டிருக்கலாம். கிழவனுக்கு வேற வேலை இல்லை என்று திட்டினோம். ப்ளஸ்டூவை ஒழுங்காய் படித்து நல்ல மார்க் எடுத்திருந்தால் - காலேஜில் நுழைந்திருக்கலாம். முன் பெஞ்ச் ராஜலட்சுமியைப் பார்த்துக் கொண்டே படிப்பை கோட்டை விட்டாயிற்று!

    புத்தி சொன்ன ஹெட்மாஸ்டரை ‘மாங்காய் மண்டை’ என்று திட்டினது எவ்வளவு பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1