Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு வானம் இரு நிலவு..!
ஒரு வானம் இரு நிலவு..!
ஒரு வானம் இரு நிலவு..!
Ebook127 pages47 minutes

ஒரு வானம் இரு நிலவு..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'தாய் இல்லம்' என்ற பெரிய போர்டு அவர்களை வரவேற்றது. அவனுடைய காரையும், அவனையும் அடையாளம் கண்டு கொண்ட காவலாளி, சிரித்த முகத்ததுடன் 'வணக்கம்' சொல்லி கதவைத் திறந்து விட்டான்.
 அந்த இல்லத்தை நடத்தி வருபவர் 'தேவி மாதா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும், அம்மாள்.
 யோகா, தியாகம் முதலியவற்றை பயிற்றுவிப்பதோடு ஆதரவற்ற பெண்களுக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும் ஆதரவளித்து, தொண்டு புரிந்து கொண்டிருப்பவர்.
 சஞ்சய், காரை நிறுத்திவிட்டு ஜோதியோடு இறங்கிய போது வெள்ளச் சேலை அணிந்த பெண் ஒருத்தி அவர்களை அருகே வந்து வரவேற்றாள்.
 சஞ்சையை அங்கு எல்லார்க்கும் தெரியும். ஜோதியும், அவனும் அவர்களுடைய ஒவ்வொரு பிறந்த நாள்-கல்யாண நாள் என அங்கே வந்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கியும், அன்னதானம் செய்தும் மகிழ்வார்கள். அதனால் அவர்களைக் கண்டாலே அங்கு உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தப்படுவார்கள்.
 ஊஞ்சலில், சறுக்கு மரத்திலும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து ஜோதியின் கையைப் பற்றிக் கொண்டனர். சஞ்சையை தூக்கச் சொல்லி கைகளை உயர்த்தினர்.
 ஆசையாகக் கொஞ்சினாள், ஜோதி. சஞ்சய் அந்தக் குழந்தைகளின் முகங்களை ஆர்வமாகப் பார்த்தான்.
 'தேவி மாதா எங்களுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் குழந்தை, இவர்களில் யார்?' மனசு அலைபாய்ந்தது.
 அவர்கள் அந்த ஆசிரமத்திற்கு நிறைய நன்கொடைகள் கொடுப்பதால், குழந்தையைப் பற்றிய கோரிக்கையை வைத்ததுமே தேவி மாதா சலுகை கொடுத்தார்.
 "இந்த ஆசிரமத்துல வளர்ற எந்தக் குழந்தையை வேணுமின்னாலும் நீங்க தத்து எடுத்துக்கலாம்" என்றார்."இல்ல மாதா... நம்ம துணையை மட்டும்தான் நாமே தேடிக்கிற உரிமையை கடவுள் நமக்குக் கொடுத்திருக்காரு. நம்மோட அம்மா - அப்பா, சகோதர - சகோதரிகள், நமக்கு பிறக்கப்போற குழந்தையையெல்லாம் அந்தக் கடவுள்தான் தீர்மானிக்கிறார். எங்களோட குழந்தையை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொடுங்க. ஆணோ - பெண்ணோ, கருப்போ...சிவப்போ எப்படி அமையுதோ அப்படியே நாங்க ஏத்துக்கிறோம்" என்று ஜோதி கூறினாள்.
 நேற்றைக்கு தேவி மாதாவிடம் இருந்து தொலைபேசி வந்தது. 'உங்களுக்கான குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். நேரில் வரவும்' என்று.
 இதோ வந்துவிட்டனர்.
 உதவியாளர், தேவி மாதாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
 தேவி மாதாவிற்கு ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். ஒரு இழைகூட நரைக்காத கூந்தல். எந்த அலங்காரமும் இல்லாத முகம். ஆத்மாவை அடையாளம் காட்டுவதைப் போல் இருபுருவங்களுக்கு மத்தியில் திலகம் மட்டுமே. தூய வெண்ணிற சேலை. தன் இருக்கையில் அமர்ந்து ஏதோ ஒரு கோப்பினைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
 "வணக்கம் மாதாஜி!" இருவரும் கைகூப்பி வணங்க - நிமிர்ந்தார். அவர் சிரிக்கும்போது கண்களில் அன்பும், கருணையும் பொங்கின.
 ஒரு பெண் நடனம் ஆடத் தெரிந்தவள் என்பதை அவள் ஆடிப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் எனபதில்லை. அவள் பேசினாலே தெரிந்துவிடும். கண்கள், கைகள் என ஒவ்வொரு அவயங்களின் சாதாரண அசைவிவில் கூட அபிநயம் தெரியும். அதைப் போல்தான் தேவி மாதாவின் ஒரு பார்வையில் தெரிந்த அன்பும், கருணையும் அவருடைய சக்தியை வெளிப்படுத்துவதாக இருந்தன.
 இருவரையும் எதிரே இருந்த இருக்கைகளில் அமரச் செய்தார்.
 "எப்படி இருக்கீங்க?" சிரிப்பு சிந்தும் இதழ்களோடு கேட்டார்.
 "உங்க ஆசிர்வாதத்துல எங்களுக்கு என்ன குறை, மாதாஜி? ஒரு குறையும் இல்லை.உங்க ஆசிர்வாதத்துல எங்களுக்கு என்ன குறை, மாதாஜி? ஒரு குறையும் இல்லை."
 அவர்களின் பதிலில் நிறைவாக சிரித்தார்.
 "வாழக் கத்துக்கிட்டவங்க வாயிலிருந்து இப்படித்தான் வார்த்தைகள் வரணும். எவன் ஒருவன் தனக்கு ஒரு குறையும் இல்லைன்னு நினைக்கிறானோ அவனால மட்டும்தான் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். எல்லாத் தம்பதிகளும் உங்களை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு ஆத்மார்த்தமா வாழ்ந்தா ஒவ்வொரு வீடும் கோவிலா இருக்கும். உங்களை மாதிரி அன்பான தம்பதிகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு."
 மாதாஜி புகழுரையில் இருவரும் பனியில் நனைந்த மலர்களைப் போல் சிரித்தனர்.
 "உங்களை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. உங்க மாதிரி குழந்தை இல்லாத தம்பதிகள் இப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முன் வந்தா நம்ம நாட்டுல அநாதை என்ற வார்த்தையே இல்லாமப் போயிடும்."
 இருவரும் மகிழ்ச்சியாக மாதாஜியைப் பார்த்தனர். ஜோதி தான் பொறுமை இழந்தவளைப் போல் பரபரத்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223425861
ஒரு வானம் இரு நிலவு..!

Read more from R.Sumathi

Related to ஒரு வானம் இரு நிலவு..!

Related ebooks

Related categories

Reviews for ஒரு வானம் இரு நிலவு..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு வானம் இரு நிலவு..! - R.Sumathi

    1

    கண்ணாடி - மிகப்பெரிய மனோதத்துவ மருத்துவர். வெளித் தோற்றத்தை மட்டும் காட்டுவதில்லை. உள்மாற்றத்தையும் சேர்த்தே காட்டி விடுகிறது.

    நிலைக்கண்ணாடியில் - தன் சிலை போன்ற அழகை மட்டும் பார்க்கவில்லை ஜோதி. நிலை கொள்ளாத உணர்வுகளையும் தனது முகத்தில் பார்த்தாள்.

    அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரே முகம்தான். பிறந்ததிலிருந்து அதே முகம்தான். பழையமுகம்தான். ஆனால், இப்படி அழகு யிழையப் பார்த்ததில்லை என்று தோன்றியது.

    அழகு என்பது கடையில் விற்கும் கிரீமையெல்லாம் வாங்கிப் பூசிக் கொள்வதால் வருவதல்ல. விதவிதமான உடையில் உடலை சொருகிக் கொள்வதால் வருவதல்ல. உள்ளத்தின் மகழ்ச்சி, மலர்ச்சிதான் மனித முகத்தில் அழகென்ற அம்சத்தைத் தருகிறது.’

    அடிக்கடி சஞ்சய் இப்படிச் சொல்லுவான். அது உண்மை என்றே தோன்றியது. தான் இதுவரை பார்க்காத முகம். இது புது முகம். அவனுடைய அன்பு - அருகாமை - அரவணைப்பு - இதமான நேசம் இவையெல்லாம்தான் இந்த அழகிற்கு காரணம். அதில் இன்றைக்கு அவள் ஆசைப்பட்ட ஒன்றைப் பரிசளிக்கப் போகிறான்.

    மனமானது கடலின் குணம் கொண்டு அலை பாய்ந்தாலும், மனதின் அடி ஆழத்தில் அமைதியான நிலையில் - நிம்மதியான உணர்வில் அந்தப் பரிசை எண்ணி தியான நிலையில் ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தது.

    வாசலில் கார் சத்தம். சித்தத்தை இறைவனிடம் வைத்த பித்தனைப் போல் ஓடினாள். சஞ்சய் படியேறிக் கொண்டிருந்தான்.

    வடநாட்டுக்காரன் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரியும்படியான தோற்றம். கோதுமை மாவில் கொஞ்சம் குங்குமப்பூவை விட்ட மாதிரி நிறம். நல்ல உயரம் உயரத்திற்கேற்ற சதைப்பிடிப்பு.

    இத்தனை நிறம் ஒரு ஆடவனுக்குத் தேவையா? மாநிறம் தான் ஆணுக்கு அழகு - அவனைத் திருமணத்திற்கு முன்பு பார்க்கும்போதெல்லாம் இப்படி நினைத்துக் கொள்வாள்.

    திருமணமான பிறகு அவள் போட்ட முதல் நிபந்தனையை ‘மீசை வைத்துக் கொள்ள வேண்டும்’ என்பதுதான்.

    எனக்குப் பழக்கமே இல்லை. காலையில் எழுந்ததுமே நான் செய்யற முதல் வேலையே இந்த மீசையை சுத்தமா மழிச்சிடுறதுதான்.

    அதெல்லாம் முடியாது. எனக்கு மீசை வச்சாத்தான் பிடிக்கும். மீசைங்கிறது வீரத்தோட அடையாளம். ஒவ்வொரு மீசைக்கும் பின்னாடி ஒரு கதை உண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் மீசை, பாரதியோட மீசை, ம.பொ.சி. யோட மீசை - இப்படி...

    எனக்கென்னமோ இருபத்திமூன்றாம் புலிகேசி வடிவேலுவோட மீசைதான் பிடிச்சிருக்கு. வேணுமின்னா அந்த மாதிரி வச்சுக்கிறேனே!

    ‘சீச்சீ...’ என செல்லமாகக் குத்துவாள், அவன் மார்பில். அவன் அவளை இழுத்தணைத்து முத்தமிடுவான். அவன் முத்தமிடும் போது முகத்தைத் தாங்கி, ரகசியம் போல் சொல்லுவாள்.

    இப்படி முத்தம் கொடுக்கும்போது கூடவே மீசை குத்தினா அந்த சுகமே தனிதான். இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகுது?

    அட... இப்படி ஒரு ரகசியம் இருக்கா இதுல? இருந்தாலும் பொண்ணுங்க இந்த விஷயத்துல பெரிய ஆளுங்க தான் போலிருக்கு.

    அட... இப்படி ஒரு ரகசியம் இருக்கா இதுல? இருந்தாலும் பொண்ணுங்க இந்த விஷயத்துல பெரிய ஆளுங்க தான் போலிருக்கு.

    ஏது? ஏதோ... ஆயிரம் பொண்ணுங்ககூடப் பழகின மாதிரியில்ல பேசறீங்க?

    ஒரு பானை சப்பாத்திக்கு ஒரு சப்பாத்தி பதம்னு சொல்லணும் - உங்க ஊர் பழக்கப்படி...

    இப்படித்தான் அவன் மீசை வைத்தான். அந்தக் கூடுதல் நிறத்திற்கு கொஞ்சமாக வைத்த மீசை - அழகாக மட்டுமில்லை... ஆண்மையின் கம்பீரத்தைக் கூடுதலாக்கிக் காட்டியது.

    படியேறி வரும் கணவனைப் பரவசமாகப் பார்த்தபடி நின்றிருந்த மனைவியைப் பார்த்தவன், ஏய் தயாரா? என்றான்.

    ‘நான் எப்பவோ கிளம்பிட்டேன். நீங்கதான் தாமதம்."

    எப்பவோ கிளம்பிட்டியா? இந்தக் கதைதானே வேண்டமாகிறது? நான் வர்றவரை நீ கண்ணாடி எதிரேதானே நின்னுக்கிட்டு இருந்திருப்பே? எனக்குத் தெரியாதா?

    போதும், ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க. நாம என்ன கல்யாணத்துக்கா போறோம்? பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணி - நேரத்தை செலவிட! மனசு இருக்கிற பரபரப்புல அலங்காரமாவது... அகங்காரமாவது? எனக்கு எப்போ அந்தக் குழந்தையைப் பார்ப்போம்னு இருக்கு. ஏங்க... நமக்கு அந்தக் குழந்தையை இன்னைக்கே கொடுத்துடுவாங்களா?

    கண்களில் பரபரப்பு தெரிய கணவனின் தோள்களில் கிளி போல் தொற்றிக் கொண்டவள் கேட்ட குரலில் - ஏக்கம் ஏகத்திற்கும் தெரிந்தது.

    அவளுடைய மங்கலமான முகத்தை மகிழ்ச்சியோடு பார்த்தவன், நெற்றியில் வைத்த குங்குமம் கலைந்து விடாமல் சற்று மேலாக உன் உதடுகளைக் குவித்து பதித்தபடி சொன்னான்.

    எப்பவோ நாம கொடுத்த விண்ணப்பத்திற்கு அந்த ஆசிரமத்திலிருந்து இப்பத்தான் வரச்சொல்லி இருக்காங்க. உடனே குழந்தையைத் தூக்கி கையில கொடுத்துடுவாங்களா? அதுக்கு சில விதிமுறைகளெல்லாம் இருக்கு. அதன்படிதான் தத்துக் கொடுப்பாங்க.

    ஜோதியின் முகத்தில் பிரகாசம் குறைந்தது. சோர்வாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, அவனுடைய சட்டை பட்டனைத் திருகினாள்.

    ப்ச்! என்னங்க இப்படிச் சொல்றீங்க? நான் இன்னைக்கே குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்துடலாம், ஆசைத்தீரக் கொஞ்சலாம்னு இருந்தேன். ஆனா, நீங்க விதிமுறை அது இதுங்கிறீங்க.

    குழந்தை மெதுவா வரட்டுமே! இப்ப என்ன அவசரம்? கொஞ்சனும்னு ஆசையா இருந்தா நான் இருக்கேனே... கொஞ்சேன். கண்ணன் ஒரு கைக்குழந்தை... கண்கள் சொல்லும் பூங்கவிதை’ன்னு பாடேன்.

    ம்... ரொம்பத்தான் ஆசை, உங்களுக்கு! செல்லமாக அவனுடைய காதைத் திருகினாள்.

    ரெண்டு நிமிடத்துல நான் கிளம்பிடுறேன் என்றபடி முகம் கவச் சென்றான்.

    சூடாகத் தேநீரும், பிஸ்கட்டும் எடுத்து வைத்தாள். சுவைத்து, பருகிவிட்டுக் கிளம்பினான்.

    காரில் செல்லும்போது அதுவரை ஜோதியின் முகத்திலிருந்த பிரகாசம் மறைந்து - ஒருவித இருண்ட உணர்வுகள் தோன்றின.

    அவளுடைய மையிட்ட அழகிய கண்கள் கலங்குவதையும், அவள் அதை மறைக்க முயல்வதையும் அவன் கவனித்தான். வலக்கையால் காரை செலுத்திக் கொண்டே இடக்கையால் அவளைத் தோளோடு சாய்த்துக் கொண்டான்.

    டார்லிங்! என்னாச்சு? எதுக்கு கண் கலங்கிறே? எல்லாருமே நீ ஆசைப்பட்ட மாதிரிதானே நடக்குது? தத்து எடுத்தே தீரணும்னு சொன்னே! நானும் அதுக்கு ஏற்பாடு செய்தேன். குழந்தையை இன்னைக்கே வீட்டுக்கு அழைச்சிட்டு வர முடியாதுன்னு நினைச்சு வருத்தப்படுறியா?

    அவனுடைய அனுசரணையான வார்த்தைகளுக்கு மெல்ல தலையசைத்தாள்.

    இல்லைங்க! நான் அதுக்காக அழலை. கிடைக்கப்போற செல்வம் பத்து, பதினைஞ்சு நாள் தாமதமா கிடைக்கிறதால நம்ம மகிழ்ச்சி குறைஞ்சிடாது. ஆனா, அப்படி ஒரு செல்வத்தை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியலையே! என் மேல உயிரையே வச்சிருக்கிற உங்களுக்கு அது மாதிரி ஒரு பரிசைத் தர முடியலையே... அதை நினைச்சுத்தான்...

    ஜோதி! இல்லாததை பத்தி பேசி ஏன் வருத்தப்படணும்? அதுக்குத்தான் இப்ப மாற்று வழி கண்டு பிடிச்சுட்டோமே! பிறகென்ன?

    அவனது கையை எடுத்து தனது மடியில் வைத்து, தன கைகளால் அழுத்திக் கொண்டாள்.

    நினைக்காம இருக்க முடியலைங்க. நமக்கு கல்யாணம் ஆனதும் முதல்ல நீங்க கேட்டதே குழந்தைதான். ‘எவ்வளவு சீக்கிரம் பெத்துக்கணும்’னு சொன்னீங்க. ஆனா, ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்க முடியாம போயிட்டேனே.

    "இதோ பாரு ஜோதி! மனசு எல்லாத்துக்கும்தான் ஆசைப்படும்.

    Enjoying the preview?
    Page 1 of 1