Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பாதரசப் பறவைகள்!
பாதரசப் பறவைகள்!
பாதரசப் பறவைகள்!
Ebook159 pages55 minutes

பாதரசப் பறவைகள்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்தக் குறுகலான தெருமுனையில், சபாக் காரர்களின் கார் வந்து ஒரு நாய்க்குட்டி மாதிரி காத்திருக்க, சம்பூரணம் தன் மர பீரோவை திறந்து வைத்துக் கொண்டு - எந்தப் பட்டுப்புடவையில் நுழையலாம் என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள்.
 மகுடபதி - சம்பூர்ணத்தின் கணவர் தன் முழு வழுக்கைத் தலையை அவஸ்தையாய்த் தடவிக் கொண்டே அறைக்குள் வந்தார். அறுபது வயது உடம்பில் அதிகபட்ச தள்ளாமை தெரிந்தது.
 "என்ன சம்பூர்ணம்...?" இன்னுமா புடவையைக் கட்டிமுடியலை...? சபாக்கார் வந்து பத்து நிமிஷமாச்சே...? கல்யாண நாளிலிருந்து இந்த முப்பத்தைந்து வருஷமாய் சம்பூர்ணத்தை அம்மா என்று கூப்பிட்டுத்தான் அவருக்குப் பழக்கம்.
 சம்பூர்ணம் நிமிர்ந்தாள்.
 ஐம்பது வயதான மெலிதான தேகம். பொன்நிறம். காலையில் குளிக்கும்போது உபயோகித்திருந்த மஞ்சள் இன்னமும் முகத்தில் உறைந்து போயிருந்தது. ஒரு பல்கூட விழாத அந்த ஒழுங்கான பல்வரிசையில் ஒரு புதுப் பெண் சிரிக்கிற மாதிரியே சிரித்தாள் சம்பூர்ணம். அந்தச் சிரிப்பில் கன்னத்துச் சுருக்கங்கள் சோம்பல் முறித்தன.
 "ஒரே குழப்பமா இருக்குங்க... இன்னிக்கு நடக்கப் போற கச்சேரிக்கு நிறைய வி.ஐ.பீஸூம், அவங்கவங்க சம்சாரமும் வர்றாங்களாம். ரொம்ப நாழி உட்கார்ந்து கச்சேரி கேட்பாங்களாம்... கச்சேரிக்குத் தகுந்த மாதிரி பட்டுச் சேலையை உடுத்திட்டு போகவேண்டாமா...?"
 சம்பூர்ணம் சொல்ல - மகுடபதி சிரித்தார்."எனக்கு இந்த ஆலோசனை சொல்ற உத்யோகமே வேண்டாம்மா..." மகுடபதி அறையை விட்டு வெளியே போனார்.
 அடுத்த ஐந்தாவது நிமிடம் -
 மூத்த மருமகள் ரேவதியும் சின்ன மருமகள் சுகுணாவும் ஒன்றாய் உள்ளே வந்தார்கள். ரேவதிக்குக் கொஞ்சம் தட்டியான உடம்பு. பிரசவம் ஆனதும் வயிற்றைத் துணியால் கட்டாமல் விட்டதால் லேசாய்த் தொந்தி விழுந்திருக்கிறது. காப்பி போர்டு டைரக்டராய் இருந்து ரிடையரான சாம்பசிவத்தின் மூன்றாவது புத்திரி. முன்கோபம் அதிகம். எதையாவது பேசிவிட்டு - ஐந்து நிமிஷம் கழித்து 'ஸாரி... நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது' என்று சொல்வாள். கணவன் ராஜசேகரனைத் தன் உள்ளங்கைக்குள் அதக்கி வைத்திருப்பவள். ஐந்து மணிக்கு ஆபீஸ் முடிந்தால், ஐந்து பத்துக்கு கணவன் வீட்டில் ஆஜராக வேண்டும் என்று எதிர்பார்ப்பவள். ஓசிக் காப்பி, ஓசி டிபன் சாப்பிடுகிற நண்பர்களை அவன் வீட்டுக்கு கூட்டி வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டு, அதை ஐந்து வருஷமாய் அமல்படுத்தி வருபவள். ஓட்டலுக்குப் போனால் அவள் இஷ்டப்படுகிற அயிட்டங்களையே கணவனும் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படுபவள். ரோட்டில் இருவரும் நடந்து போகும் போது, ராஜசேகரனின் பார்வை வேண்டுமென்றோ, எதேச்சையாகவோ பிற பெண்களின் மேல் பட்டால், எரிச்சலாகி... 'ப்ராக்கு பார்க்காம ஒழுங்க நடங்கள்' என்று பல்லைக் கடிப்பவள் - இவள் ரேவதி.
 இனி சுகுணா.
 சுகுணாவுக்குக் கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு. மாநிறமானாலும் கண்ணைப் பறித்தாள். சுமாரான குடும்பத்திலிருந்து வந்தவள். சினிமா நிறைய பார்க்கிற ரகம். கணவன் ஜெயராமனை நச்சரித்து நச்சரித்து வாரத்திற்கு எப்படியும் இரண்டு சினிமா பார்த்து விடுபவள்... மூன்று வருஷ காலமாய் தீவிரமாய் முயற்சி செய்தும் அந்த மூன்று நாட்களில் வருத்தத்தோடு கேர்ப்ரீயை உபயோகித்து வருபவள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223531289
பாதரசப் பறவைகள்!

Read more from Rajeshkumar

Related to பாதரசப் பறவைகள்!

Related ebooks

Related categories

Reviews for பாதரசப் பறவைகள்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பாதரசப் பறவைகள்! - Rajeshkumar

    1

    நித்ய கல்யாணி தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தபோது - வீட்டின் ஹால் கடிகாரம் எட்டடித்து விட்டு 8.01-ஐ பார்க்கப் போனது. வீதியில் வெளிச்சம் பளீரென்று தெரிந்தது. வாகனங்கள் ஹார்ன் சத்தத்தோடு அவள் வீட்டைக் கடந்து கொண்டிருந்தது.

    அசிங்கமாய் வாயைப் பிளந்து - கொட்டாவி விட்டுக்கொண்டே கட்டிலை விட்டுக் கீழே இறங்காமல் குரல் கொடுத்தாள், நித்யகல்யாணி. கொஞ்சம் ஆம்பிளைத்தனமான அதட்டல்.

    தேவு... தேவு...

    வர்றேன்க்கா...

    ஹாலிலிருந்து குரல் கேட்டது. அந்த தேவு வருவதற்குள் மறுபடியும் ஒரு தடவை கொட்டாவிவிட முயன்ற நித்யகல்யாணிக்கு வயது முப்பத்தைந்து இருக்கலாம். ஆனால் எல்லோரிடமும் இருபத்தைந்து என்று சொல்லிக் கொண்டிருந்தாள். நல்ல அகலமான உடம்பு. ஜாக்கெட்டுக்கு துணி ஒரு மீட்டர் என்கிறாள். மாநிறத்துக்கும் சற்று எடுப்பான நிறம். சவுரி வைக்காமலேயே நிறையக் கூந்தல். கல்யாணம் பண்ணிக் கொள்ளாததால் வயிறும் மார்பும் சரியாமல் இவள் கன்னிதான் என்று சர்டிபிகேட் கொடுத்தது. இவளைப் பற்றின ஒரு முக்கியமான விஷயம். நித்யகல்யாணி ஒரு பாடகி. கடந்த பதினைந்து வருஷமாய்ப் பாடி வருகிறாள். சாஸ்த்திரிய சங்கீதம் முறையாய் படித்தவள். அற்புதமாய் பாடிக்கொண்டிருந்தவள், திடீரென்று யார் சொன்ன பேச்சையோ கேட்டு சாஸ்திரிய சங்கீதத்தைக் கொஞ்சம் டப்பாங்குத்துத் தனமாய்ப் பாட ஆரம்பித்துப் பெயரைக் கெடுத்துக் கொண்டாள். அவளுடைய தம்பி முப்பது வயதான தேவு, ஒரு சினிமாக்காரனை கூட்டி வந்து - அறிமுகம் செய்துவைத்து - அவன் மூலமாய் அக்காவை சினிமாவில் பாட வைக்க முயன்று கொண்டிருந்தான்.

    இந்தச் சினிமாக்காரர்களின் சகவாசம் ஏற்பட்ட நாளிலிருந்துதான் நித்யகல்யாணி இப்படி... லேட்டாய் எட்டு மணிக்கு எழப் பழக்கமாயிருந்தாள். ‘சாங் கம்போஸிங்’ என்ற பெயரில் ராத்திரி ஒரு மணி வரைக்கும், ஓட்டல் அறையில் ஏதேதோ பேச்சு பேச்சு... ஆரம்பத்தில் அவளுக்கு முன்னால் சிகரெட் குடிக்கத் தயங்கிய டைரக்டரான அந்த இளைஞன் போகப்போக அவள் மூஞ்சியிலேயே சிகரெட் புகை விட்டுப் பேசினான். மன்னிச்சுக்கோங்கம்மா... இத சாப்பிடாட்டி... எனக்கு கைகாலெல்லாம் நடுங்கும் என்று சொல்லிக்கொண்டே - குவார்ட்டர் விஸ்கியின் மூடியைத் திருகிக் கடகட வென்று வயிற்றுக்குள் வார்த்துக்கொண்டான். வீட்டிற்கு வந்த பின்னால் ‘என்னடா தேவு இதெல்லாம்’ என்று தம்பிக்காரனை கேட்க, அவன் சிரித்துக் கொண்டே ‘அதெல்லாம் சினிபீல்ட்ல சகஜமக்கா... கண்டுக்காதே என்று சொன்னான். ஒரு பாட்டு ரிக்கார்டாவதற்குள் தேவும் குடிக்கப் பழகியிருந்தான். ஒரு எக்ஸ்ட்ரா நடிகையைத் தொட்டிருந்தான்.

    என்னக்கா... இப்பத்தான் எந்திரிச்சியா...? தேவு கரிசனத்தோடு கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். ராத்திரி சாப்பிட்ட விஸ்கி கண்களுக்குச் சிவப்பு சாயத்தைத் தடவியிருந்தது. தலை முடி ஒரு பக்கமாய் பம்மென்று உயர்ந்திருந்தது.

    புரொட்யூசர்கிட்டயிருந்து போன் வந்ததா தேவு...?

    இல்லேக்கா...

    அடுத்த ரிக்கார்டிங்கோட டேட் சொல்றேன்னு சொன்னாரேடா…

    ஒருவேளை இனிமே போன் பண்ணினாலும் பண்ணுவார் அக்கா...

    நித்யகல்யாணி சிரித்துக்கொண்டே கட்டிலை விட்டுக் கீழே இறங்கினாள். உன்னோட பேச்சைக் கேட்டு சினிமாவுல இறங்கினது தப்பா போச்சுடா தேவு... முன்னையாவது மாசத்துக்கு மூணு ராவு சபாக்கச்சேரிக்கு சான்ஸ் வந்திட்டிருந்தது. மாசம் அஞ்சாயிரம் ரூபாயை கண்ணால பார்த்துட்டிருந்தோம். இப்போ அதுவும் போச்சு... ஆறு மாசத்துக்கு முன்னாடி கூப்பிட ஆளில்லாம வீட்ல உட்கார்ந்திட்டிருந்த அந்த சம்பூர்ணக் கிழவிக்கு ஏகப்பட்ட கச்சேரி...

    பேப்பரைப் பார்த்தியாக்கா...? அந்த சம்பூர்ணக் கிழவிக்கு ‘சாஸ்திரிய சங்கீத ரத்னா’ன்னு சபா அகாடமியில விருது குடுத்திருக்காங்களாம்... பேப்பர்ல போட்டோவும் நியூஸூம் வந்திருக்கு... அடுத்த வாரம் அகாடமியில் பாராட்டு விழாவாம்...

    கண்களில் அதிர்ந்தாள் நித்யகல்யாணி.

    எங்கே பேப்பரைக் கொண்டா பார்க்கலாம்?

    தேவு வேகமாய்ப் போய் பேப்பரைக் கொண்டு வந்தான். பேப்பரைப் பார்த்து மூன்றாவது பக்கத்தில் வெளியாகியிருந்த அந்தச் செய்தியைக் காட்டினான்.

    நித்யகல்யாணியின் பார்வையை அந்தச் செய்தி கவ்வியது.

    ‘பிரபல பாடகி சம்பூர்ணத்திற்கு

    சாஸ்திரிய சங்கீத ரத்னா விருது.’

    கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கும், சாஸ்திரிய சங்கீதத்திற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் பிரபல பாடகி சம்பூர்ணத்திற்கு மியூசிக் அகாடமி தன்னுடைய உயர்ந்த விருதான ‘சாஸ்திரிய சங்கீத ரத்னா விருதை அளித்து மகிழ்கிறது. அடுத்த வாரம் நடக்கப்போகும் பாராட்டுவிழாவில் அரசு அதிகாரிகளும் ஒரு அமைச்சரும்...’

    மேற்கொண்டு செய்தியைப் படிக்கப் பிடிக்காமல், அந்த பேப்பர் தாளை அப்படியே கசக்கினாள் நித்யகல்யாணி.

    கிழவி யாரையோ பிடிச்சு... எப்படியோ இந்த விருதை வாங்கிட்டா. நான் அஞ்சு வருஷமா கனவு கண்டிருந்த விருதுடா தேவு...

    கவலைப்படாதேக்க. அடுத்த வருஷம்... நீ வாங்கிக்கலாம்...

    அப்படியெல்லாம்... அதை வாங்கிக்க முடியாதடா தேவு... அஞ்சு வருஷத்துக்கு ஒரு தபாதான் அதைத் தருவாங்க...

    தேவு ஏதோ சொல்ல வாயெடுத்த அதே நேரம் –

    வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது.

    போய்ப்பாரு தேவு... ப்ரொடியூஸர். வந்திருந்தாலும் வந்திருப்பார்...

    தேவு கதவை நோக்கி ஓடிப்போனான்.

    அடுத்த நிமிஷத்தின் ஆரம்பத்தில் சோர்வோடு வந்தான்.

    யார்ரா...?

    சபா செக்ரட்ரி... கோதண்டம்...

    அந்த ஆளு இப்ப எதுக்கு வந்திருக்கான்...? வர்ற மாசந்தானே கச்சேரிக்கு டேட் குடுத்திருக்கோம்... கேட்டுக்கொண்டே ஹாலை நோக்கிப் போனாள் நித்யகல்யாணி.

    கோதண்டம் சோபாவில் உட்கார்ந்து, புதிதாய் வாங்கியிருந்த எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து கொண்டிருந்தார். சிவப்பான எலும்பு தட்டிப்போன முகம். கண் பார்வையிலும் உதட்டுச் சிரிப்பிலும் நிறைய வியாபாரம் தெரிந்தது. காலர் பகுதியில் அழுக்கு கெட்டித்துப் போயிருந்த ஜிப்பாவிலும், பழுப்பேறிய ஜரிகைக் கரை வேட்டியும் புகையிலை நாற்றம் கமழ உட்கார்ந்திருந்தார்.

    வாங்க... நமஸ்காரம்...

    நித்யகல்யாணி வேண்டா வெறுப்பாய் ஒரு கும்பிடு போட்டுக்கொண்டே, அவருக்கு எதிரே இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தாள்.

    கோதண்டம் காது வரை இளித்துக் கொண்டே, வெற்றிலைப்பாக்குப் பெட்டியை மூடிவிட்டு நிமிர்ந்தார்.

    காலங்கார்த்தாலே தொந்தரவு தர்றேன்...

    என்ன விஷயம் சொல்லுங்க...

    சபா பிரசிடெண்ட் அனுப்பி வெச்சார். வர்ற மாசம் பதினேழாந்தேதி கச்சேரிக்கு டேட் குடுத்திருக்கீங்களாம்... அது விஷயமா பேச அனுப்பிச்சார்...

    என்ன விஷயம்...?

    கச்சேரி டேட்டை மாத்தணும்னு அபிப்பிராயப்படறார்.

    ஏன்...?

    எதிர்பார்த்தபடி டிக்கட் விக்கலையாம்... அடுத்த மாசத்துக்குள்ள டிக்கெட் விக்கும்ங்கிற நம்பிக்கையும் இல்லையாம். அதனால...

    நித்யகல்யாணியின் முகம் மாறியது.

    டிக்கட் விக்கலையா... ஏன்...?

    காரணம் என்னான்னு புரியலையம்மா... ஆனா பிரஸிடெண்ட் ஒரு காரணம் சொன்னார்...

    என்ன சொன்னாரு...?

    உங்க பர்மாமென்ஸ் முன்னமாதிரி இல்லையாம்... சினிமா பீல்டுக்குப் போய் வித்தையை நாசம் பண்ணிட்டதா அவர் ஃபீல் பண்றார். அதேசமயம்... அந்த அம்மா சம்பூர்ணம் இப்போ அற்புதமா கச்சேரி பண்றாளாம். மாசத்துல பதினைஞ்சு நாள் சபா மாத்தி சபா கச்சேரி பண்றா... போதாத குறைக்கு அகாடமி விருது வேற வாங்கிட்டா. அவ பேரைப் போட்டாலே... டிக்கெட் சீக்கிரமா வித்துடுதாம்...

    நித்யகல்யாணியின் முகம் கடுகடுவென்று மாறியது.

    அந்தக் கிழவியைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க... எரிச்சலா வருது... சபா பிரஸிடெண்ட் நினைச்சு நினைச்சு தேதியை மாத்தறார்... என்னால அப்படி மாத்திக்க முடியாது. அவருக்கு இஷ்டமிருந்தா அதே தேதியில் கச்சேரி வெச்சுக்கச் சொல்லுங்க...

    அந்த தேதியில வேண்டாம்ன்னு சொல்றார்...

    என்னால வேற தேதியைத் தர முடியாது...

    அப்படி நீங்க பிடிவாதம் பிடிச்சா... வாங்கின அட்வான்ஸைத் திரும்பக் குடுத்துடச் சொன்னார் கோதண்டம் இயல்பாய்ச் சொல்ல, நித்யகல்யாணி திடுக்கிட்டு போனாள்.

    பிரஸிடெண்ட் அப்படிச் சொன்னாரா?

    நானென்ன பொய்யாம்மா சொல்வேன்...? அவர் சொன்னதையேதான் சொல்றேன்... அவர் சொல்ற தேதிக்கு நீங்க ஒத்துக்கலைன்னா... அதே தேதியிலே சம்பூர்ணத்தை வெச்சு கச்சேரி நடத்தப் போறதா சொன்னார்...

    நித்யகல்யாணி முகம் சிவக்க - ஹாலின் உள்பக்கமாய் திரும்பினாள் கத்தினாள். டேய்... தேவு...

    என்னக்கா...? தேவு ஓடி வந்தான்.

    பீரோவைத் தொறந்து ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்துட்டு வா...

    அவன் போய்க் கொண்டு வந்தான். அவனிடமிருந்து வாங்கிய அந்த நூறு ரூபாய் நோட்டுக் கட்டை, கோதண்டத்தின் மடியை நோக்கி வீசியெறிந்தாள், நித்யகல்யாணி.

    எடுத்துட்டுப் போங்க... அந்தக் கிழவியை வெச்சே... கச்சேரி நடத்தச் சொல்லுங்க... காலம் இப்படியே இருந்துடாது... என்னிக்காவது ஒரு நாள் அவர் இந்த வீட்டுப்படியேறி வந்து என்கிட்டே டேட் கேக்கத்தான் போறார்...

    கோதண்டம்

    Enjoying the preview?
    Page 1 of 1