Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எடு ஆயுதம்!
எடு ஆயுதம்!
எடு ஆயுதம்!
Ebook46 pages16 minutes

எடு ஆயுதம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாரம் ஒன்று கரைந்து போயிருக்க, அன்று மாலை ஐந்து மணி சுமாருக்குத் திவாகரைத் தன் ஆபீஸ் அறைக்குக் கூப்பிட்டான் கைலாஷ்.
 "உட்கார்."
 திவார் உட்கார்ந்தான்.
 "என்ன, வேலை பிடிச்சிருக்கா?"
 "பிடிச்சிருக்கு."
 "பிடிக்கலைன்னா சொல்லு. வேற செஷனுக்கும் போட்டுடலாம்."
 "இல்லை, இதே செஷன் போதும்."
 "சம்பளம் உனக்கு ரெண்டாயிரம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். போதுமா?"
 "போதும். இதுவே போதும்."
 "கல்யாணம் பண்ணிகிட்டா இந்தச் சம்பளம் காணாது. அப்ப நீயே கேட்பே."
 "நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை."
 "அட, ஏண்டா?"
 "பெரிசா காரணம் எதுவுமில்லை. வேண்டாமேன்னுதான்."
 கைலாஷ் சிரித்தான். "ஒரு வருஷம் போகட்டும். இந்த ஊர் பொண்ணுகளைப் பார்க்கப் பார்க்க உனக்குக் கல்யாண ஆசை தன்னால வரும்."

வாகர் சிரித்துக்கொண்டு மௌனமாய் இருக்க கைலாஷ் கேட்டான்: "இப்ப வாடகைக்கு எடுத்திருக்கிற வீடு வசதியா இருக்கா?"
 "பரவாயில்லை."
 "வசதியா இல்லைன்னா, நம்ம பங்களா அவுட் ஹவுஸுக்கு வந்துரு."
 "வேண்டாம். இப்ப பார்த்திருக்கிற வீடே வசதியா இருக்கு."
 மேஜை மேலிருந்த இன்டர்காம் முணுமுணுத்தது. கைலாஷ் ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
 "எஸ்..." மறுமுனையில் ஜி.எம். பேசினார்.
 "ஸார், ஆடிட்டர் பூசக்கண்ணன் வந்திருக்கார். 'ந்யூரியோ கார்டன் அவென்யூ' சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்ஸ் வேணும்ன்னு கேட்கிறார். உங்க டேபிள்ல இருக்கா சார்?"
 "இல்லை. நேத்து ராத்திரி படிக்கிறதுக்காக வீட்டுக்கு எடுத்துட்டுப் போனேன். அங்கேயே வெச்சுட்டேன்."
 "ஆடிட்டர் இன்னிக்கு நைட் மெட்ராஸ் போறாராம். அதுக்கு முந்தி டாக்குமெண்ட்ஸைப் பார்க்கணும்ன்னு சொல்றார்."
 "இப்ப... கொண்டு வர ஏற்பாடு பண்றேன்." சொல்லி ரிஸீவரை வைத்த கைலாஷ் திவாகரை ஏறிட்டான்.
 "திவாகர் நீ ஒரு காரியம் பண்ணணும்."
 "சொல்லு..."
 "என் காரை எடுத்துக்க. வீட்டுக்குப் போ. என்னோட பர்சனல் ரூம்ல மேஜை ட்ராயர்க்குள்ளே 'க்யூரியோ கார்டன் அவென்யூ' சம்பந்தப்பட்ட ஒரு ஃபைல் இருக்கும். கொண்டாந்துடு."
 "வீ... வீட்டுக்கா?"- குரலை இழந்த திவாகரை வியப்பாய்ப் பார்த்தான் கைலாஷ்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223401797
எடு ஆயுதம்!

Read more from Rajeshkumar

Related to எடு ஆயுதம்!

Related ebooks

Related categories

Reviews for எடு ஆயுதம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எடு ஆயுதம்! - Rajeshkumar

    1

    வெள்ளை பேண்ட், வெள்ளை சர்ட், வெள்ளைக் குல்லா சகிதம் இருந்த அந்த ஆபீஸ் பியூன்- உள்ளே நுழைய இருந்த திவாகரை இடது கை உபயோகப்படுத்தி நிறுத்தினான்.

    யாரைப் பார்க்கணும்?

    ராஜாராம்... அட்மினிஸ்ட்ரேஷன்...

    ப்யூன், திவாகரை ஓர் அவசரப் பார்வையில் உழவினான். சிலும்பிய தலை. மழிக்காத முகத்தில் குத்துக் குத்தாய் ரோமம். காலர் பகுதியில் அழுக்குப் பிசுக்கோடு நிறம் - செத்துப் போன சர்ட். ஜிப் காலாவதியாகியிருக்க மின் விசையோடு -- இன்ன நிறம் என்று சொல்ல முடியாத பேண்ட்,

    ப்யூன் தன் மூக்கை நிரடிக்கொண்டே கேட்டான்: என்ன விஷயமாப் பார்க்கணும்?

    பர்சனல். ராஜாராம் எனக்கு ரிலேடிவ்,

    உம் பேரென்ன?

    திவாகர்.

    அப்படி அந்த பெஞ்சில போய் உக்காரு. சொல்லிவிட்டு ப்யூன் உள்ளே போக, திவாகர் சுவரோரமாய்ப் போட்டிருந்த பெயிண்ட் உதிர்ந்துபோன அந்தப் பெஞ்சில் போய் உட்கார்ந்தான். வயிற்றுக்குள் பசி. சிறுகுடலிலிருந்து பெருங்குடல் வரை காற்று மட்டும் நிரப்பியிருக்க- தலை சிலுசிலுக்கக் கண்களுக்குள் இருட்டுப் பாய்ந்தது. கண்களை அப்படியே மூடிக் கொண்டான். மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு கல்யாண வீட்டுப் பந்திக்குள் திருட்டுத்தனமாய்ப் புகுந்து வயிறு ரொம்பச் சாப்பிட்டது தான். அதற்குப் பிறகு சரியாய் எதுவும் வாய்க்கவில்லை.

    என்ன?

    குரல் கேட்டு, கண்களைத் திறந்தான் திவாகர். எதிரே க்ரீம் நிற சபாரியில் - பளபளப்பாய் ராஜாராம்.

    திவாகர் எழுந்து நின்றான். உடம்புக்குள் இருந்த எல்லா மான அவமானங்களும் கை கட்டிக் கொண்டன. உலர்ந்து போன உதடுகளை அசைத்தான். வ... வந்து...

    தெரியும். நீ ஒண்ணையும் சொல்லாதே. இந்தா வாங்கிட்டு, மொதல்ல இடத்தைக் காலி பண்ணு. ராஜாராம் ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டினான்.

    திவாகர் வாங்கிக் கொள்ளாமல் ராஜாராமனின் முகத்தைத் தயக்கமாய் ஏறிட்டான்.

    வ... வந்து... எனக்குப் பணம் வேண்டாம்.

    பி... பின்னே?

    ஓர் உபகாரம் பண்ணணும்.

    சொல்லு...

    வசந்த விஹார் ஹோட்டல்ல... ஒரு மாதத்துக்கு மத்தியான சாப்பாடு சாப்பிட்டுக்கிற மாதிரி... மீல்ஸ் டிக்கெட் வாங்கிக் குடுத்துட்டால் பரவாயில்லை.

    ராஜாராம் சிடுசிடுத்தான்.

    "அப்படியெல்லாம் ஒட்டு மொத்தமாக் கொட்டி அழ என்னால முடியாது. ஏதோ சொந்தமாச்சேன்னு... உன்னைச் சரிசமமா நிக்க வெச்சுப் பேசி இந்த அஞ்சு ரூபாயைக் குடுத்துட்டிருக்கேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1