Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாழ் திறவாய்..!
தாழ் திறவாய்..!
தாழ் திறவாய்..!
Ebook179 pages1 hour

தாழ் திறவாய்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலா நாலே நாட்களில் புறப்பட்டுப் போய்விட்டாள். 

நாட்கள் வேகமாக ஓடத் தொடங்கின.

கலாவுக்கு எட்டாம் மாதம் வளைகாப்பு நடந்தது. 

சிவா இல்லாதது சகலத்துக்கும் ஒரு பெரிய குறையாகவே இருந்தது. பிரசவ காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அம்மாவும், சீனுவுமாக அவளைப் போய் அழைத்து வந்துவிட்டார்கள் வீட்டுக்கு!

அவள் ஏற்கெனவே பலவீனமாக இருந்ததால், பிரசவம் கொஞ்சம் கஷ்டமாக - இருக்கும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். 

குறிப்பிட்ட காலகட்டம் வந்தும் வலி வரவில்லை டாக்டரிடம் விசாரிக்க, 'அதற்குமேல கடந்துவிட்டால் வந்து அட்மிட் ஆகிவிடுங்கள்... ட்ரிப்ஸ் கொடுத்து வலி வரவழைத்து விடலாம்' என்றார். 

தெய்வாதீனமாக மறுநாள் பின்னிரவு மூன்று மணிக்கு வலி தொடங்கி விட்டது. 

அவசரமாக சீனு போய் ஆட்டோ எடுத்து வந்தான். கலாவை கைத்தாங்கலாக பிடித்து ஆட்டோவில் ஏற்றும் நேரம் டெலிபோன் ஒலித்தது. 

அவளை, அம்மாவை ஆட்டோவில் உட்கார வைத்தபின், ஓடிவந்து டெலிபோனை எடுத்தான். 

"சீனு பேசறேன்" 

"சீனு! நான் சிவகுமார் அண்ணன்" 

"சொல்லுங்க" 

"இப்பத்தான் மிலிடரிலேருந்து தந்திப்பா சிவா ஆக்ஷன்ல போயிட்டானாம்" அவர் குரல் உடைந்து, அழுகையாகச் சிதற –

ரிசீவரை நழுவவிட்டான் சீனு! 

ஒரு நொடி நொறுங்கி, அவசரமாக சுதாரித்துக்கொண்டு, "சார் கலாவுக்கு வலி எடுத்தாச்சு! நான் போயிட்டே இருக்கேன். வர்றன் அங்கே!"

கதவைக்கூட பூட்டாமல் ஆட்டோவில் வந்து ஏறினான். 

"சீனு நீ கதவைப் பூட்டலியா?" அம்மா கேட்க - 

"ஓ... மறந்துட்டேனோ?" 

அவசரமாக வந்து பூட்டினான். படி இறங்கும் போது கால் மடங்கியது. 

"சீனு என்னடா ஆச்சு? டென்ஷன் படாதே"

ஆட்டோவில் ஏறினான்.

"தெய்வமே! பிரசவ நேரம் இப்ப புருஷன் செத்த விஷயம் தெரிஞ்சா, தாங்குவாளா? நிச்சயமா இந்த நிலைல சொன்னா, எல்லாமே தப்பா முடிஞ்சிடும்" 

"சீனு அவருக்குத் தகவல் சொல்லணும்" 

"ஆகட்டும் கலா" 

"போன்ல யாரு சீனு?"

அம்மா கேட்க –

"ஏன் புடுங்கி எடுக்கற?" 

"ஏண்டா கோவப்படற? சொல்ல இஷ்டமில்லைனா வேண்டாம்!"  

ஆஸ்பிட்டல் வந்துவிட்டது. 

ஆட்டோவில் துடித்துவிட்டாள் கலா. 

ஸ்ட்ரெச்சரில் போட்டு அழைத்துச் செல்லப்பட்டாள்.. 

டாக்டர் வந்து பார்த்தார். 

"நேரா லேபர் வார்டுக்குக் கொண்டு போயிடுங்க!" 

அழைத்துச் செல்லப்பட்டாள்.

கதவு மூடிக்கொண்டது. 

சீனுவால் நிற்கக்கூட முடியவில்லை! 

"அம்மா நான் சிவா வீட்டுக்குப் போயிட்டு வந்திரட்டுமா ஒரு நடை?" 

"இப்ப எதுக்கப்பா? அவளோட பிரசவ நிமிஷங்கள். நீ தேவைப்படலாம். எங்கேயும் போகாதே. குழந்தை பிறந்த நல்ல சேதியைச் சொல்லப் போகலாம். கல்கண்டு, சக்கரை எடுத்துட்டு நீ போகணும்!" 

சீனுவுக்கு தலையில் அறைந்து  கொண்டு அழத் தோன்றியது. 

டாக்டர் வெளியில் வந்தார்.

"ஓப்பன் பண்ணித்தான் எடுக்கணும்! இந்தம்மா ஹஸ்பெண்ட் எங்கே?" 

"இல்லை டாக்டர்!" 

"அவர் மிலிடிரில இருக்கார் டாக்டர்!" அம்மா சொன்னாள்.. 

"நீங்க கையெழுத்து போடுங்க!" 

சீனு போட்டான்.

"பயமில்லையே டாக்டர்?" 

"நிச்சயமா இல்லை! பிரசவம் முடிஞ்சு அவளை பூ மாதிரி பாத்துக்கணும். அலுப்பு தட்டிட்டா ஆபத்து!" 

டாக்டர் உள்ளே போய்விட்டார். 

சீனுவால் அங்கே உட்கார முடியவில்லை வெளியே வந்துவிட்டான். 

'உடனடியாக கணவன் இறந்த சேதியை இவளிடம் சொல்ல முடியாது' 

'எத்தனை நாளைக்கு மறைப்பது?' 

உடம்பு முழுக்க நெருப்பால் தடவியதைப் போல இருந்தது. தவித்தான். 

ஒரு மணிநேரம் கழித்து உள்ளே வந்தான்.

அம்மா எந்த விவரமும் புரியாமல் டென்ஷனில் இருந்தாள். 

குழந்தை அழும் சப்தம் கேட்டது. 

சற்று நேரத்தில் நர்ஸ் வெளிப்பட்டாள். 

"பெண் குழந்தை!"

"அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லையே?" 

"இல்லைம்மா" 

மேலும் ஒரு மணிநேரம் கழித்து மயக்க நிலையில் கலா கொண்டு வந்து தனியறையில் போடப்பட்டாள். 

குழந்தை சிகப்பாக, நல்ல எடையுடன் அம்சமாக இருந்தது. 

சீனுவுக்கு அதைப் பார்க்கப் பார்க்க அழுகை பீறிட்டது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223585282
தாழ் திறவாய்..!

Read more from Devibala

Related to தாழ் திறவாய்..!

Related ebooks

Reviews for தாழ் திறவாய்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாழ் திறவாய்..! - Devibala

    1

    "நல்ல எடமாப் பார்த்து நீ கல்யாணம் பண்ணிட்டுப் போயிடு பூமா அதுதான் பெட்டர்!"

    சீனு இது என்ன பேச்சு?

    என் நிலைமை புரிஞ்சா, இதை நீ கேக்கமாட்டே பூமா

    அவன் குரலில் வெறுப்பு இருந்தது.

    நான் உங்க வீட்ல யாருக்கும் புதுசு இல்லை உங்க ஸ்நேகிதியாத் தொடங்கி,, இப்பக் காதலியா மாறிட்டு வர்றது உங்கம்மாவுக்குத் தெரியுமில்லையா?

    தெரியும்

    உங்க திடீர் குழப்பத்துக்கு எந்தக் காரணமும் இல்லை உங்கம்மாகிட்ட நான் பேசிக்கறேன்!

    எனக்கு உறுத்துது பூமா!

    எது?

    கலா இப்படி வந்து நிக்கறாளே! அவளை வீட்ல வச்சுக்கிட்டு எந்த சந்தோஷமும் கூடாதுனு மனசு சொல்லுது பூமா! அதான் வாழ்க்கை பிடிக்கலை வாழப் பிடிக்கலை! என்னை மன்னிச்சிடு பூமா

    ஓக்கே! இதை உங்கம்மாகிட்ட சொல்லியாச்சா?

    ம் சொல்லியாச்சு

    நான் வந்து பேசறேன். பயப்பட வேண்டாம். காதலினு உரிமை எடுத்துட்டு வரமாட்டேன். நல்ல ஸ்நேகிதியா வர்றேன். என்ன தப்பு?

    சரி உன் இஷ்டம். என்னை நீ புரிஞ்சுக்க முயற்சி செய்

    சொல்லுங்க சீனு

    எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு அம்மா ஆசைப்படறது நிஜம்தான்! ஆனா, நாளைக்கு ஒருத்தி வந்துட்டா யதார்த்த வாழ்க்கைல அவ கொஞ்சம் அவஸ்தைப் பட வேண்டிவரும்

    நான் பேசறேனே

    சரி உன் இஷ்டம்

    சீனு புறப்பட்டுப் போய்விட்டான்.

    அவனை அனுப்பிவிட்டு அந்தக் காலி பேருந்தில் பூமா ஏறி உட்கார்ந்தாள்...

    சீனு ஒரு பத்திரிகையில் - பிரபலமான வார இதழில் -- தலைமை நிருபராகப் பணிபுரிகிறான். அப்பா இல்லை அம்மா மட்டும். ஒரே தங்கை கலா அந்த வீட்டுக்குச் செல்லப் பெண் பட்டதாரி தன் படிப்பை முடித்த கையோடு அவள் வேலை தேடத் தொடங்க, அம்மா வரன் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

    தரகர் பல வரன்களைக் கொண்டு வந்தார்.

    அதில் ஒன்று ராணுவ அதிகாரி சிவகுமார்.

    அந்த வரன் பிரமாதமாகப் பொருந்திவிட்டது. கடிதம் போட்டார்கள்.

    அடுத்த மாதத்தில் ‘ஒருநாள் லீவில் வந்த சிவா, தன் அண்ணி, அண்ணன் ஆகியோருடன் கலாவைப் பெண் பார்க்க வந்துவிட்டான்.

    பார்த்தார்கள். பேசினார்கள்.

    உடனே பிடித்துவிட்டது.

    நிச்சயதார்த்தம் அன்றைக்கே நடத்திவிட்டார்கள்.

    ‘எந்த டிமாண்டும் இல்லை அற்புதமான இடம். தகுதியான பையன்.’

    தலையாட்டி விட்டான் சீனு!

    ஏற்கனவே அப்பா வைத்துவிட்டுப் போன பணம் கொஞ்சம் இருந்தது. சீனுவும் ஓரிரண்டு லோன்கள் போட்டால் கல்யாணத்தை ஜாம், ஜாமென நடத்தி விடலாம் என்று தீர்மானித்தார்கள்.

    ஆனால், அம்மாவுக்கு மட்டும் உறுத்தல் இருந்தது.

    சீனுவை அழைத்து ராத்திரி பேசி விட்டாள்.

    சீனு நாம ரொம்ப அவசரப்படறோமா?

    எதைச் சொல்ற நீ?

    கலா கல்யாணத்தை

    இல்லையேம்மா முறையா ஜாதகம் பொருந்தி, எல்லாம் பேசி சரியாத்தானே செய்யறோம்?

    அதில்லைப்பா நான் சொல்ல வந்தது வேற

    புரியுது கலாவை நம்ம பக்கத்துல இருந்து அடிக்கடி பாக்க முடியாது. வடதேசத்துக்கு போறாளேங்கற கவலை உனக்கு சரிம்மா பொண்ணாப் பொறந்தவ, பொறந்த வீட்டுக்கு சாசுவதமில்லை. உனக்கு இது தெரியாதா?

    அது எனக்குத் தெரியும்டா சீனு

    அப்புறம்?

    எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியலை

    எதுவானாலும் சொல்லும்மா

    பெரிய ராணுவ அதிகாரியா இருக்கார். சண்டை, பிரச்னைனு நாளைக்கு வரும். இப்பவும் உலகத்துல எங்கியாவது சண்டை நடந்துட்டுத்தான் இருக்கு அவர் உயிருக்கு... வேண்டாம்டா சீனு

    சீனு சிரித்தான்.

    அம்மா! விதி முடிஞ்சிட்டா, ராணுவத்துல போய்த்தான் உயிரை விடணும்னு இல்லை இங்கேகூட அது போக வாய்ப்புண்டு புரியுதா?

    சரிப்பா அந்த ரிஸ்கை நம்ம பொண்ணு மூலமா எடுக்கணுமா?

    சரி நான் பேசலை கலாவையே கேப்போம்

    கலா அழைக்கப்பட்டாள்.

    சீனு விவரமாகச் சொன்னான்.

    நீ உன் பதிலை யாருக்காகவும் சொல்ல வேண்டாம். உன் மனசுல உள்ள நிஜமான பதிலை சொல்லு

    எனக்கு சிவாவை ரொம்பப் புடிச்சிருக்கு வாழ்க்கைல யாருக்கு என்ன விதிச்சிருக்கோ, அதுதான் நடக்கும். அம்மா... ரொம்பத் தாண்டி யோசிக்காதே!

    அவள் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

    பிறகென்ன?

    கல்யாணத்தை சீனு பிரமாதப் படுத்திவிட்டான்.. ஊரே மூக்கில் விரல் வைக்குமளவுக்கு அசத்திவிட்டான்.

    இத்தனை கடன் வாங்கிச் செய்யணுமாடா சீனு? அம்மாவே கேட்டாள்.

    தப்பில்லைம்மா! நம்ம வீட்டுக்கு கலா ஒரே பொண்ணு அவளுக்குச் செய்யாம யாருக்குச் செய்யப் போறம்?

    தேதிகள் கிழிபட்டன.

    சிவா லீவு முடிந்து புறப்படும் நாள் நெருங்கிவிட்டது. அவன் பார்ட்ரில் இருந்ததால் கலாவை அழைத்துப் போக முடியவில்லை!

    கலா வெகுநேரம் அவனுடன் தனித்திருந்தாள்.

    அவனுக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினார்கள்.

    சிவாவின் அண்ணா, அண்ணி சொல்லிவிட்டார்கள்.

    சிவாவுக்கு அப்பா, அம்மா ஸ்தானத்துல நாங்கதான் இருக்கோம்! எங்கக்கூட இருக்க விருப்பப்பட்டா கலா இருக்கட்டும். இல்லைனா, பிறந்த வீட்டுக்கு வந்துரட்டும். எங்களுக்கு எதுக்குமே சம்மதம்தான்.

    கலா மறுத்துவிட்டாள்.

    புகுந்த வீட்டில்தான் இருப்பேன் என்று பிடிவாதமே பிடித்துவிட்டாள்.

    அவர்கள் சந்தோஷமாக அவளை அழைத்துப் போனார்கள். வாரத்துக்கு ஒரு நாள் - ஆரம்ப காலத்தில் சிவா போனில் பேசிக் கொண்டிருந்தான்.

    அதன் பிறகு அது மாதம் ஒரு முறை எனக் குறைந்துவிட்டது. சிவா போய் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் முடிந்துவிட, கலா வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டாள்.

    அவள் தாய்மை அடைந்திருப்பதை டாக்டர் சொன்னார்.

    புகுந்த வீடு, பிறந்த வீடு எல்லாருக்கும் மகிழ்ச்சி கொண்டாடினார்கள்.

    சிவா அடுத்தமுறை போன் செய்தபோது விவரம் சொன்னார் அண்ணா!

    லீவு போட்டுட்டு வாடா

    இல்லைண்ணே ஒரு வருஷத்துக்கு அசைய முடியாது. கூடாது. நான் வரும்போது என் ஜூனியர் பயல் எனக்கு ஹலோ சொல்லட்டும்

    கலாவிடமும் பேசினான்.

    எனக்கு பிரச்னையே இல்லை அண்ணா, அண்ணி தாங்கறாங்க

    அண்ணி அவளை பெட் ரெஸ்டில் வைத்து நன்றாக கவனித்துக் கொண்டாள்.

    மூன்று முழுமாதம் முடிந்துவிட்டது.

    அம்மா, சீனு சீரோடு வந்த பிறகு, அவளை மசக்கைக்காக பிறந்த வீட்டுக்கு அழைத்துப் போக அனுமதி கேட்டார்கள்.

    தாராளமா கூட்டிட்டுப் போங்க உங்களுக்கில்லாத உரிமையா? அவ ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாது. நீங்க பெத்தவங்க, உங்களுக்கு இதையெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை

    கலா அழைத்து வரப்பட்டாள்.

    அம்மா! நான் நாலு நாள் இருக்கேன். அப்புறமா என்னைக் கொண்டு போய் எங்க வீட்ல விட்டுடு

    ஏண்டீ? மாப்ளைகூட அங்கே இல்லை நீ யாருக்காக அந்த வீட்ல இருக்கணும்?

    சீனு குறுக்கிட்டான்.

    அம்மா! உன் குசும்பை நீ காட்டாதே அவ பொருந்தி வாழறா அந்த வீட்ல அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் இதப்பாரு கலா! உன் இஷ்டம் போல முடிவெடு

    கலா தலையாட்டினாள்.

    2

    கலா நாலே நாட்களில் புறப்பட்டுப் போய்விட்டாள்.

    நாட்கள் வேகமாக ஓடத் தொடங்கின.

    கலாவுக்கு எட்டாம் மாதம் வளைகாப்பு நடந்தது.

    சிவா இல்லாதது சகலத்துக்கும் ஒரு பெரிய குறையாகவே இருந்தது. பிரசவ காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அம்மாவும், சீனுவுமாக அவளைப் போய் அழைத்து வந்துவிட்டார்கள் வீட்டுக்கு!

    அவள் ஏற்கெனவே பலவீனமாக இருந்ததால், பிரசவம் கொஞ்சம் கஷ்டமாக - இருக்கும் என்று டாக்டர் சொல்லியிருந்தார்.

    குறிப்பிட்ட காலகட்டம் வந்தும் வலி வரவில்லை டாக்டரிடம் விசாரிக்க, ‘அதற்குமேல கடந்துவிட்டால் வந்து அட்மிட் ஆகிவிடுங்கள்... ட்ரிப்ஸ் கொடுத்து வலி வரவழைத்து விடலாம்’ என்றார்.

    தெய்வாதீனமாக மறுநாள் பின்னிரவு மூன்று மணிக்கு வலி தொடங்கி விட்டது.

    அவசரமாக சீனு போய் ஆட்டோ எடுத்து வந்தான். கலாவை கைத்தாங்கலாக பிடித்து ஆட்டோவில் ஏற்றும் நேரம் டெலிபோன் ஒலித்தது.

    அவளை, அம்மாவை ஆட்டோவில் உட்கார வைத்தபின், ஓடிவந்து டெலிபோனை எடுத்தான்.

    சீனு பேசறேன்

    சீனு! நான் சிவகுமார் அண்ணன்

    சொல்லுங்க

    இப்பத்தான் மிலிடரிலேருந்து தந்திப்பா சிவா ஆக்ஷன்ல போயிட்டானாம் அவர் குரல் உடைந்து, அழுகையாகச் சிதற –

    ரிசீவரை நழுவவிட்டான் சீனு!

    ஒரு நொடி நொறுங்கி, அவசரமாக சுதாரித்துக்கொண்டு, சார் கலாவுக்கு வலி எடுத்தாச்சு! நான் போயிட்டே இருக்கேன். வர்றன் அங்கே!

    கதவைக்கூட பூட்டாமல் ஆட்டோவில் வந்து ஏறினான்.

    சீனு நீ கதவைப் பூட்டலியா? அம்மா கேட்க -

    ஓ... மறந்துட்டேனோ?

    அவசரமாக வந்து பூட்டினான். படி இறங்கும் போது கால் மடங்கியது.

    சீனு என்னடா ஆச்சு? டென்ஷன் படாதே

    ஆட்டோவில் ஏறினான்.

    தெய்வமே! பிரசவ நேரம் இப்ப புருஷன் செத்த விஷயம் தெரிஞ்சா, தாங்குவாளா? நிச்சயமா இந்த நிலைல சொன்னா, எல்லாமே தப்பா முடிஞ்சிடும்

    சீனு அவருக்குத் தகவல் சொல்லணும்

    ஆகட்டும் கலா

    போன்ல யாரு சீனு?

    அம்மா கேட்க –

    ஏன் புடுங்கி எடுக்கற?

    "ஏண்டா கோவப்படற?

    Enjoying the preview?
    Page 1 of 1