Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

"Aasai Mugam Arugirundhal...!"
"Aasai Mugam Arugirundhal...!"
"Aasai Mugam Arugirundhal...!"
Ebook183 pages1 hour

"Aasai Mugam Arugirundhal...!"

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன்னுரங்கம் அவ்வூரின் பெரிய மனிதர். அரிசி ஆலை, கல்யாண மண்டபம், ரியல் எஸ்டேட் பிசினஸ், என பல தரப்பட்ட வியாபாரங்களைக் கையிலெடுத்துக் கொண்டு அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டி, கோடிகளைக் குவிக்கும் கோமகன். ஆனால், “பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை” என்ற வார்த்தைகளை மெய்ப்பிப்பது போல் ஈகை குணம் சிறிதுமில்லாதவர். ஏழைகள் படும் வதைகளைக் கண்டு மனமிரங்காதவர். பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் பணி புரியும் அவர் மகள் கீர்த்தனா கொரோனா காரணமாய் சொந்த ஊருக்கு வருகிறாள். வந்த இடத்தில் தந்தையின் வில்லத்தனங்களை அறிந்து மனம் நொந்து அவரைத் திருத்தும் முயற்சியில் இறங்குகிறாள்.

அதே நேரம், அதே கொரோனா காரணத்திற்காக தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த அவள் காதலன் இளங்கோ, அங்கு வேறொரு பெண்ணை மணமுடிக்கும் சூழ்நிலை உருவாகின்றது. அதை அறியாத கீர்த்தனா அவனைத் தேடி அவனது சொந்த ஊருக்கு வருகிறாள். கீர்த்தனா தன் தந்தையைத் திருத்தினாளா? கீர்த்தனா தன் காதலனுடன் சேர்ந்தாளா? நாவலைப் படியுங்கள்…

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580130009005
"Aasai Mugam Arugirundhal...!"

Read more from Mukil Dinakaran

Related to "Aasai Mugam Arugirundhal...!"

Related ebooks

Reviews for "Aasai Mugam Arugirundhal...!"

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    "Aasai Mugam Arugirundhal...!" - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆசை முகம் அருகிருந்தால்…!

    Aasai Mugam Arugirundhal...!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் - 1

    கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மக்கள் மாநில அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து, அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்

    யாரோ ஒரு அரசியல் தலைவர் கூறியதை செய்தியாய்ச் சொல்லிக் கொண்டிருந்தது எஃப்.எம்.வானொலி.

    காருக்குள் சன்னமாய் ஒலித்துக் கொண்டிருந்த அந்தச் செய்தியைக் கேட்டவாறே பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தார் பொன்னுரங்கம்.

    அரிசி ஆலை, சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம், ரியல் எஸ்டேட், என ஒன்றுக்கு நாலு தொழிலில் ஈடுபட்டு எல்லாவற்றிலும் கொடி நாட்டி, கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் கோமான் அவர்.

    அவரது மச்சினர் ராமச்சந்திரன் ஒரு அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்பாளராய் இருப்பது அவருக்கு கூடுதல் பலமாகியது. அவ்வப்போது அந்த ஊருக்கு வரும் மந்திரிகளை மச்சினர்தயவில் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுத்து, தன்னை அவர்களுக்கு நெருக்கமானவராய்க் காட்டி, அதன் காரணமாய் ஊருக்குள் பெரும்புள்ளி அந்தஸ்தோடு வாழ்பவர்.

    அவர் மனைவி சரஸ்வதியும் ஏனோதானோ இல்லை. இவரைப் போலவே ஈரோடு மாவட்டத்தில் உச்சத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒரு பெரிய தொழிலதிபரின் மகள். சரஸ்வதி-பொன்னுரங்கம் தம்பதியர்க்கு ஒரே மகள்… செல்லமகள் கீர்த்தனா. பெங்களூருவில் ஏதோ ஒரு ஐ.டி.கம்பெனியில் கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள்.

    எங்கும் எதிலும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் மட்டுமே அனுபவித்துக் கொண்டு, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்னுரங்கத்தின் மனதில் எப்போதும் உறுத்திக் கொண்டேயிருக்கும் ஒரே விஷயம் அவரது பங்காளி சீதக்காதி.

    பெயரில் மட்டுமல்லாது வாரிக் கொடுப்பதிலும் அவர் சீதக்காதிதான்.

    பொருளாதார நிலைப்பாட்டில் அந்த சீதக்காதி பொன்னுரங்கத்தை விட மிக மிகக் குறைந்தவர்தான். ஆனாலும், அதைப் பற்றி யெல்லாம் சற்றும் கவலைப்படாதவராய், உதவி கேட்டு வரும் அனைவருக்கும் முகச்சுளிப்பின்றி அள்ளி வழங்குவார். ஊரிலுள்ள பல ஏழைக் குழந்தைகளின் கல்வி அவர் தயவால்தான். அதே போல் வெளியூர்களில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மாணவர்களுக்கு இவர்தான் கார்டியன்.

    ஏங்க மாப்ள… நீங்க என்ன பரம்பரைப் பணக்காரரா?... இல்லை உங்க பங்காளி பொன்னுரங்கம் மாதிரி அஞ்சாறு தொழில் பண்ணி ஆஸ்தி சேர்த்து வெச்சிருக்கீங்களா?..ஒரே ஒரு தொழில்தான் பண்ணிட்டிருக்கீங்க!… அதுவும் கயிறு திரிக்கற தொழில்!… அதுல ஒண்ணும் அவ்வளவு பெரிசா வருமானமும் வராது!... அப்படியிருக்கும் போது நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு தான தர்மம் பண்ணிட்டிருக்கீங்களே?... உங்களுக்கே இதுசரின்னு படுதா?... அவருடைய மாமனார் ஒரு முறை அவரிடம் மெல்லக் கேட்க,

    மாமா… எந்த ஒரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடாது!... அதனால நாம என்னிக்குமே மத்தவங்களுக்கு உதவி பண்றதை நிறுத்தி விடக் கூடாது!... ஏன்னா… நாம செய்யற உதவிதான்… நம்மோட வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாய் ஆக்கிட்டிருக்கு

    இருந்தாலும்…  தனக்குப் பின் தான் தானம் தர்மம்ன்னு என்று மாமனார் இழுக்க,

    அதெல்லாம் கஞ்சப்பயலுக சொல்ற வார்த்தை!... இன்னிக்கு என்கிட்டே இருக்கு…  நான் மத்தவங்களுக்கு உதவி செய்யறேன்!... ஒருவேளை நாளைக்கு என்கிட்ட இல்லாத நிலை வரும் போது… .மத்தவங்க எனக்கு உதவி செய்வாங்க!"

    ஆணித்தரமாய்ச் சொன்ன மருமகனை பரிதாபமாய்ப் பார்த்த மாமனார், அப்படின்னு நீங்க நெனைச்சிட்டிருக்கீங்க… ஒரு பயல் திரும்பிப் பார்க்க மாட்டான் என்றார்.

    அதைக் கேட்டு கோபமோ… ஆவேசமோ அடையாமல் புன்னகையோடு கடந்து செல்வதுதான் சீதக்காதியின் இயல்பு.

    குமாரு!... ..திரும்பின பக்கமெல்லாம் என் பங்காளி படம் போட்ட போஸ்டர் ஒட்டியிருக்கே கவனிச்சியா? டிரைவர் குமாரிடம் கேட்டார் பொன்னுரங்கம்.

    ம்… கவனிச்சேனுங்க அய்யா பவ்யமாய்ச் சொன்னான் அவன்.

    என்ன போட்டிருக்கு… அந்த போஸ்டர்ல?

    டிரைவ் பண்ணிக்கிட்டே படிக்க முடியலைங்க அய்யா!..வேணா போஸ்டர் பக்கத்துல போய் வண்டியை நிறுத்தட்டுங்களா? என்றான் டிரைவர் குமார்.

    அய்யய்ய!…  அவனுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து… அவன் போஸ்டர் பக்கத்துல நம்ம காரை நிறுத்தி, நாம அதைப் படிக்கறதை யாராச்சும் பார்த்தா… அது கேவலம்டா… . தனது பெரிய மீசையை நீவியவாறே சொன்னார்.

    அப்ப… காரை தூரத்துல நிறுத்திட்டு… .நான் மட்டும் போய் படிச்சிட்டு வந்து சொல்லவா?

    ஒண்ணும் வேண்டாம்…  ஊருக்கு வெளியே…  மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லா இடத்துல அந்த போஸ்டர் ஒட்டியிருந்தா… அங்க போய் நிறுத்து… நானே என் கண்ணால… பார்த்துப் படிச்சாத்தான் எனக்கு திருப்தியாகும் என்றார் பொன்னுரங்கம்.

    அவர் சொன்னது போலவே சற்று ஒதுக்குப்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் அருகே காரின் வேகத்தைக் குறைத்து, இங்கேயே நிறுத்தட்டுமா? டிரைவர் கேட்க,

    ம்… போதும்… போதும்… என்ற பொன்னுரங்கம் காரின் கண்ணாடியை இறக்கி விட்டுப் படித்தார்.

    "கொரோனா காலத்தில் வாழ்வாதாரம்

    பாதிக்கப்பட்டு,

    உண்ணும் உணவிற்கே சிரமப்படும் நம்

    ஊர் ஏழை

    மக்களுக்கு வருகிற புதன்கிழமையன்று

    அரிசி உட்பட

    மளிகைப்பொருட்களை இலவசமாக

    வழங்குகிறார்

    நம் ஊரின் வள்ளல் பெருந்தகை.

    சீதக்காதி அய்யா.

    மக்கள் அனைவரும் அன்று

    காலையே அரசுப்பள்ளி

    மைதானத்திற்கு வந்து வரிசையில்

    நின்று தங்களுக்கான

    பொருட்களை பெற்றுச்

    செல்லவும்"

    இளைஞர் நற்பணி மன்றம்,

    அய்யா… படிச்சிட்டீங்களா?... வண்டியை நகர்த்தலாமா? டிரைவர் குமார் கேட்க, ம்..ம்..எடு… எடு என்றார் பொன்னுரங்கம்.

    போகிற வழியில் அவர் சிந்தனை முழுவதும் பங்காளி சீதக்காதியையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பயல் சும்மாவே இருக்க மாட்டேங்கறானே?... ஏதோ ஒண்ணைப் பண்ணி ஊருக்குள்ளார பேர் வாங்கிட்டே இருக்கான்!... அப்படியும் ஒண்ணும் பெரிய வசதிக்காரனும் கெடையாது… ஆனாலும் தானம்… தர்மம்!ன்னு ஊருக்கு அள்ளி வீசிக்கிட்டே இருக்கானே?... எதுக்காக இருக்கும்?... என்ன நோக்கத்துக்காக இருக்கும்?

    தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர், டிரைவர் குமாரைப் பார்த்து தன் சந்தேகத்தைக் கேட்டார். ஏம்பா…  குமாரு நான் ஒண்ணு கேட்கறேன் அதுக்கு சரியான பதிலைச் சொல்லு!... என் பங்காளி சீதக்காதி… அப்பப்ப இப்படி தானம் தர்மம்!னு பண்ணி…  ஊருக்குள்ளார பேர் வாங்கிட்டு இருக்கானே?... அதைப்பத்தி நீ என்ன நினைக்கறே?... அவனோட நோக்கம் என்ன?

    என்னங்க அய்யா…  எவ்வளவோ விஷயங்கள் தெரிஞ்ச உங்களுக்கு இது கூடப் புரியலைங்களா?... .அவரு அடுத்த எலக்சன்ல போட்டி போட இப்ப இருந்தே தயாராகறாரு!... உங்க மச்சினர் இருக்கும் அதே கட்சிலதான் இவரும் இருக்காரு… உண்மையைச் சொல்லணும்!னா… . அந்தக் கட்சி மேலிடமே அவரைத்தான் வேட்பாளரா அறிவிக்கும்னு ஊருக்குள்ளார பேசிக்கறாங்க… சற்றும் தயங்காமல் தனக்குத் தெரிந்த விஷயத்தை அப்படியே போட்டுடைத்தான் அந்த குமார்.

    அவன் சொன்ன அந்த உண்மை பொன்னுரங்கத்தை லேசாய் அதிரச் செய்தாலும், ஒரு டிரைவர் முன் அதைக் காட்டி விடக் கூடாது என்பதால், அடப் போய்யா… இவனெல்லாம் நேத்திக்குப் பேஞ்ச மழையில் இன்னிக்கு மொளைச்ச காளான்… ஆனா… என் மச்சினர் ராமச்சந்திரன்… பல வருஷமாஅந்தக் கட்சில பழந்தின்னு கொட்டை போட்டவன்… !... ஆரம்ப காலத்துல போஸ்டர் ஒட்டுற வேலையில ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வந்தவன்… அவனையும்… இவனையும் ஒப்பிடவே முடியாது" என்று சொல்லி சமாளித்தார்.

    ஆனால், அடிமனசில் ஒரு நெருடல் இருக்கவே செய்தது. ம்ஹூம்… விடக் கூடாது… சீதக்காதியை வளர விடக் கூடாது… .இந்தக் குமார் சொன்ன மாதிரி அந்தக் கட்சில இவனுக்கு சீட்டு குடுத்து… ஒரு வேளை இவன் ஜெயிச்சிட்டான்னா… அப்புறம் ஊருக்குள்ளார எனக்கு மரியாதையே இல்லாமப் போயிடும்!... இவனை எப்படியாவது டம்மியாக்கணும்… .என்ன செய்யலாம்? யோசிக்கலானார்.

    கரெக்ட்… அது ஒண்ணுதான் நல்ல வழி!... நாமும் இவனை மாதிரியே பேருக்கு கொஞ்சம் தானதர்மங்களைப் பண்ணி வெப்போம்!... தீர்மானமே செய்து விட்டார்.

    குமார்… காரை நேரா நம்ம ரைஸ் மில்லுக்கு விடு என்றார் பொன்னுரங்கம்.

    அய்யா… வீட்டுக்குப் போகலாம்!னு சொன்னீங்க…

    ப்ச்… இந்த மாதிரி எதிர்க் கேள்வியெல்லாம் கேட்கறதை மொதல்ல நிறுத்து!... ரைஸ் மில்லுக்குப் போ… ன்னா… போ!

    காரை யூ டர்ன்அடித்தான்குமார்.

    அத்தியாயம் – 2

    "கீர்த்தனா

    Enjoying the preview?
    Page 1 of 1