Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சாகசக் கலை
சாகசக் கலை
சாகசக் கலை
Ebook232 pages1 hour

சாகசக் கலை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்டரியிலிருந்து ரிசப்ஷனுக்கு வந்தான் கார்த்தி.


“என்ன பாரதி? ஆபீசுக்கு லீவா?”


“ம்! உங்களைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம்! பர்மிஷனோ, லீவோ போட முடியுமா?”


“பிளாண்ட்ல வேலை நிறைய இருக்கு! கஷ்டம்தான்!”


“சரி! இங்கேயே அரை மணி நேரம் ஒதுக்கலாமா?”


“இரு! சீஃப் என்ஜினியர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்!”


கார்த்திகேயன் வந்தான்.


சற்றே ஒதுக்குப்புறமான இடமாக உட்கார்ந்தார்கள்.


“சொல்லு பாரதி!”


பாரதி எல்லாம் சொன்னாள்.


கார்த்திகேயன் மௌனமாக இருந்தான்.


“என்ன பேசலை?”


“நான் என்ன பேசறது? எங்க வீட்ல எங்கம்மா என் பேச்சைத் தாண்ட மாட்டாங்க நல்ல மருமகளா இருக்கணும்! உங்கப்பா பிடிவாதத்தை எப்படி உடைக்கப்போறே?”


“ஒரு நொடில கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலாம். ஆனா முகமுழி இல்லாம செஞ்சுகணுமானு பாக்கறேன்! பெத்து வளர்த்தவங்க. உறவை முறிச்சுக்கவும் மனசு கேட்கலை! உங்களைத் தவிர்த்து இன்னொருத்தர் கூட வாழவும் பிடிக்கலை!”


“சரி என்ன யோசனை?”


“அப்பா பிடிவாதம் ஜாதகம் பொருந்தணும்! இதுக்காக ஒரு பொய் சொன்னா என்ன கார்த்தி?”


“என்ன பொய்?”


“நல்ல ஜோசியரைப் புடிச்சு, காசைக் கொடுத்து, என் ஜாதகத்துக்குப் பொருந்துற மாதிரி உங்களுக்கு ஒரு ஜாதகம் எழுதச் சொல்லக் கூடாதா? அதுல உங்க வயசு, மற்ற விவரங்கள் பொருந்தற மாதிரி செட்டப் பண்ணிக்கலாம்.”


“பாரதி! கல்யாணம் அவசியம்தான்! அதுக்காக இத்தனை பெரிய பொய்யைச் செல்லணுமா?”


“கார்த்தி! என்னை நீங்க புரிஞ்சுகலை”


“புரியாம என்ன? என் மேல உள்ள காதலால இதை நீ சொல்ற? நான் பொய் சொல்லலாம்! என்னோட சேர்ந்து எங்கம்மாவும் பொய் சொல்லணும்!”


“எதுக்கு?'“


“நீ என்ன பேசற பாரதி? பொய்யா ஒரு ஜாதகத்தை உருவாக்கினா, நட்சத்திரம், ராசி லக்னம் எல்லாம் மாறும்!”


“மாறட்டும் கார்த்தி! ஆனா மாப்பிள்ளை மாறாம, ஜாதகம் மட்டும் மாறினா என்ன தப்பு? உங்க மனசு போல இருக்கறவங்க உங்கம்மானு சொன்னீங்க! உங்களுக்காக, உங்க சந்தோஷத்துக்காக இதைச் செய்ய மாட்டாங்களா?”


“நான் பேசிப்பாக்கறேன்!”


“ஏன் கார்த்தி? உங்களுக்கே இஷ்டமில்லையா?”


“எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையே இல்லைமா! சரி! அப்படியே இருந்தா, எந்த ஜோசியன் லஞ்சத்துக்கு மசிவான்?”


“ஆளைப் பிடிக்கலாம்! ஜோசியனை நாம பொய் சொல்லச் சொல்லலியே! ஜாதகம் தயாரிக்கணும், அவ்ளோதானே!”


“நான் எங்கம்மாகிட்டப் பேசறேன்! நாளைக்கு எனக்கு நீ போன் பண்ணு!”


பாரதி புறப்பட்டு நேராக மீனா வீட்டுக்கு வந்தாள்.


மீனா அவளுடன் வேலை பார்ப்பவள்! நெருங்கிய தோழி! கல்யாணம் ஆனவள் அபார்ஷன் ஆகி லீவில் இருப்பவள்!


மீனா மட்டும்தான் இருந்தாள்.


பாரதி எல்லாம் சொன்னாள்.


மீனா யோசிக்கத் தொடங்கினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
சாகசக் கலை

Read more from தேவிபாலா

Related authors

Related to சாகசக் கலை

Related ebooks

Reviews for சாகசக் கலை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சாகசக் கலை - தேவிபாலா

    1

    "அம்மா நான் சொல்றதைக் கொஞ்சம் புரிஞ்சுகோ!"

    என்னடீ புரிஞ்சுகறது? உங்கப்பாவுக்கு ஒரு பக்கம் பிடிவாதம்னா, உனக்கு இன்னொரு பக்கம் பிடிவாதம்! நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கறது நான்!

    இதப்பாரு! வாழப்போறது நான்! அப்பாவா பார்த்து ஒரு முடிவெடுத்துட்டா எனக்கு மனசுக்குப் பிடிக்க வேண்டாமா?

    நான் சொல்றதைக் காது குடுத்துக் கேளு பாரதி! அப்பா ஜாதகப் பைத்தியம். எனக்கும் அதுல நம்பிக்கை இருக்கு! கைக்கு வந்த ஜாதகம் அபார ஜாதகம்! அத்தனை பொருத்தங்களும் அம்சமா இருக்கு. அமெரிக்கால மாசம் ஒண்ணரை லட்ச ரூபா சம்பாதிக்கறான் அந்தப் பையன்! அஞ்சு வருஷம் இருந்தாப் போதும்! நீயும் படிச்சவ! அங்கே போய் சும்மாவா இருப்பே! அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்பினா, கோடீஸ்வரியா திரும்பலாம்!

    முடிச்சிட்டியா?

    இருடி! பையன் அழகாகவும் இருக்கான்! பெரிய படிப்பு! எந்தக் குறையும் இல்லை நிறைஞ்ச குடும்பம்!

    அம்மா! எனக்கு வேண்டாம்! என் மனசு பொருந்தலை

    காரணம்?

    நான் ஒருத்தரை விரும்பறேன்!

    நீ என்னடீ சொல்ற?

    பதறாதே! அவரும் நம்ம ஜாதிக்காரர்தான்! என்ஜினியர்! இங்கே உள்ளூர்ல கை நிறைய சம்பாதிக்கறார். நல்ல குடும்பம்! எல்லா தகுதிகளும் இருக்கு!

    எத்தனை நாளா பழக்கம்?

    ஒரு வருஷமா

    அந்த அமெரிக்க பார்ட்டி நாளைக்கு தமிழ்நாட்டுக்கு வருது! வெள்ளிக்கிழமை உன்னைப் பெண் பார்க்க வர்றதா அப்பா சொன்னாரே!

    வேண்டாம்!

    என்ன வேண்டாம்?

    இதப்பாரும்மா! அப்பாவோட இந்த முரட்டுப் பிடிவாதத்தை அப்பா விடணும் பணம், வசதி எல்லாம் இருக்கும்! என் மனசுல சந்தோஷம் வேண்டாமா? அதை ஏன் அப்பா யோசிக்கறதில்லை! கழுத்தை நீட்டுனா, நீட்டற வயசும் இல்லை! அப்படிப்பட்ட நிலைல இன்னிக்குப் பெண்களும் இல்லை!

    சப்பாஷ்!

    படபடவென கைதட்டல்!

    பாரதி நிமிர, அப்பா நின்று கொண்டிருந்தார்.

    அம்மா நடுங்கி விட்டாள்.

    அவ பேசறதையெல்லாம் நீங்க பெரிசா எடுத்துக்க வேண்டாம்!

    நீ ஏன்மா பயப்படற? அப்பா சிங்கமா? புலியா?

    அப்பா அருகில் வந்தார்.

    யாரந்தப் பையன்?

    பேரு கார்த்திகேயன்! எம்.ஆர்.எல்லுல வேலை பாக்கறார். வீடு பெரம்பூர்ல! அப்பா இல்லை! அம்மாவும் காலேஜ்ல படிக்கற ஒரு தங்கையும் உண்டு!

    அந்தப் பையன் போட்டோ உங்கிட்ட இருக்கா?

    இருக்கு!

    பாரதி தன் கைப்பையை திறந்து கார்த்திகேயனின் புகைப்படம் எடுத்து தந்தாள். அப்பா பார்த்தார்.

    அம்மாவிடம் தந்தார்.

    அம்மா எந்த அபிப்ராயமும் சொல்லாமல் அப்பாவைப் பார்த்தாள்.

    அப்பா! நான் வேற்று ஜாதியைக் காதலிக்கலை! எல்லாத் தகுதிகளும் நிறைஞ்ச, உங்க கௌரவத்தைப் பாதிக்காத ஒருத்தரைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கேன்!

    சரிம்மா! ஆனா ஒண்ணு!

    என்னப்பா?

    அந்தப் பையன் ஜாதகம், உன் ஜாதகத்தோட பிரமாதமா பொருந்தணும்!

    அப்பா!

    அந்த விஷயத்துல நான் ரொம்ப கறார் பேர்வழினு உங்க எல்லாருக்கும் தெரியும்!

    என்னைக் கொஞ்சம் பேச விடுங்கப்பா!

    சொல்லு!

    ரெண்டு பேரும். ஒருத்தரையொருத்தர் மனசார விரும்பறம். மனசு பொருந்திட்டா, மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். இப்ப ஜாதகத்தை நீங்க எடுத்துட்டு, அது ஒரு வேளை பொருந்தலைனா, என்ன முடிவைப்பா எடுக்க முடியும்?

    வேண்டாங்கற முடிவைத்தான்!

    எப்படீப்பா?

    தெய்வ சித்தம் அதுன்னு நீ ஏத்துக்கத்தான்மா வேணும்! இதப்பாரு பாரதி! காதலிச்ச எல்லாருமே கணவன் மனைவிகளா ஆகறதில்லை! ஏன்? வாழப்போறது நீதான்! ஆனா பார் கூடங்கறதைத் தீர்மானிக்கற உரிமை நிச்சயமா உனக்கில்லை! அந்த பகவான் ஒரு முடிச்சைப் போட்டு வச்சிருப்பான்! அதை நிச்சயமா உன்னால அவிழ்க்க முடியாது!’

    நான் ஒப்புக்கறேன்பா! ஜாதகம் பொருந்தறவனோட மனசு பொருந்தி வாழ முடியலைனா, கட்டிக்கற தாலிக்கு என்னப்பா அர்த்தம்?

    இல்லைமா! அது தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கைனா, உன்னால மீற முடியாது!

    அப்பா...!

    லுக் பாரதி! ஜாதகப் பொருத்தம் சரியா இல்லாத பையன் உனக்குப் புருஷனாக முடியாது. அப்படியும் நீ பிடிவாதம் பிடிச்சா, எங்களை விட்ரு!

    அப்பா வெளியேறி விட்டார்.

    அம்மா அருகில் வந்தாள்.

    கண்ணீருடன் பாரதியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

    பாரதி! நாலு அபார்ஷனுக்கு அப்புறம் பொறந்தவள் நீ! உன்னை சுமக்கும் போது எத்தனை பயந்தேன் நான்! நீ பிறந்து உனக்கொரு சளிப் புடிச்சாக்கூட சாவேன் நான். என் உலகமே நீதானே கண்ணே!

    அம்மா! எனக்குப் புரியுது! நான் உனக்கு சாசுவதமா? கல்யாணமானா பிரிஞ்சுதானே போகப் போறேன்!

    புரியுதும்மா! ஆனா வந்து போயிட்டு இருக்கற ஒட்டுறவு வேண்டாமா? அப்பா விருப்பத்தைப் புறக்கணிச்சு நீ தேர்ந்தெடுத்தா, உன் முகத்துல அப்பா முழிக்க மாட்டார். அவரை மீறி நான் உன்னோட வர முடியுமா? சொல்லும்மா?

    பாரதி பேசவில்லை.

    இப்பவும் அப்பா வேண்டாம்னு சொல்லலை! ஆனா நீ விரும்புற பையனோட ஜாதகம் உனக்குப் பொருந்தணும்னு பிடிவாதம் பிடிக்கறார்!

    ஒருவேளை பொருந்தலைனா?

    விட்ர வேண்டியதுதான்!

    இல்லைமா! இதை நான் டீல் பண்ணிக்கறேன்!

    எப்படீடி?

    இப்ப என்னை எதுவும் கேக்காதே! ஆனா அப்பா விருப்பம் போல கார்த்தியோட ஜாதகம் பொருந்தும்!

    அப்படி சொல்ல வைக்கப் போறியா?

    யாரை?

    இதப்பாரு பாரதி! உங்கப்பாவுக்கு ஜோசியர் சபாரத்னம் பாக்கணும்! சபாரத்னத்தை யாரும் கன்வின்ஸ் பண்ண முடியாது! நீ என்ன சொல்ல போறேனு எனக்கே புரியலை!

    பொறுத்திருந்து பாரேன்!

    அம்மா கவலையுடன் மகளைப் பார்த்தபடி நின்றாள்.

    2

    பாக்டரியிலிருந்து ரிசப்ஷனுக்கு வந்தான் கார்த்தி.

    என்ன பாரதி? ஆபீசுக்கு லீவா?

    ம்! உங்களைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம்! பர்மிஷனோ, லீவோ போட முடியுமா?

    பிளாண்ட்ல வேலை நிறைய இருக்கு! கஷ்டம்தான்!

    சரி! இங்கேயே அரை மணி நேரம் ஒதுக்கலாமா?

    இரு! சீஃப் என்ஜினியர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்!

    கார்த்திகேயன் வந்தான்.

    சற்றே ஒதுக்குப்புறமான இடமாக உட்கார்ந்தார்கள்.

    சொல்லு பாரதி!

    பாரதி எல்லாம் சொன்னாள்.

    கார்த்திகேயன் மௌனமாக இருந்தான்.

    என்ன பேசலை?

    நான் என்ன பேசறது? எங்க வீட்ல எங்கம்மா என் பேச்சைத் தாண்ட மாட்டாங்க நல்ல மருமகளா இருக்கணும்! உங்கப்பா பிடிவாதத்தை எப்படி உடைக்கப்போறே?

    ஒரு நொடில கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலாம். ஆனா முகமுழி இல்லாம செஞ்சுகணுமானு பாக்கறேன்! பெத்து வளர்த்தவங்க. உறவை முறிச்சுக்கவும் மனசு கேட்கலை! உங்களைத் தவிர்த்து இன்னொருத்தர் கூட வாழவும் பிடிக்கலை!

    சரி என்ன யோசனை?

    அப்பா பிடிவாதம் ஜாதகம் பொருந்தணும்! இதுக்காக ஒரு பொய் சொன்னா என்ன கார்த்தி?

    என்ன பொய்?

    நல்ல ஜோசியரைப் புடிச்சு, காசைக் கொடுத்து, என் ஜாதகத்துக்குப் பொருந்துற மாதிரி உங்களுக்கு ஒரு ஜாதகம் எழுதச் சொல்லக் கூடாதா? அதுல உங்க வயசு, மற்ற விவரங்கள் பொருந்தற மாதிரி செட்டப் பண்ணிக்கலாம்.

    பாரதி! கல்யாணம் அவசியம்தான்! அதுக்காக இத்தனை பெரிய பொய்யைச் செல்லணுமா?

    கார்த்தி! என்னை நீங்க புரிஞ்சுகலை

    புரியாம என்ன? என் மேல உள்ள காதலால இதை நீ சொல்ற? நான் பொய் சொல்லலாம்! என்னோட சேர்ந்து எங்கம்மாவும் பொய் சொல்லணும்!

    எதுக்கு?’

    நீ என்ன பேசற பாரதி? பொய்யா ஒரு ஜாதகத்தை உருவாக்கினா, நட்சத்திரம், ராசி லக்னம் எல்லாம் மாறும்!

    மாறட்டும் கார்த்தி! ஆனா மாப்பிள்ளை மாறாம, ஜாதகம் மட்டும் மாறினா என்ன தப்பு? உங்க மனசு போல இருக்கறவங்க உங்கம்மானு சொன்னீங்க! உங்களுக்காக, உங்க சந்தோஷத்துக்காக இதைச் செய்ய மாட்டாங்களா?

    நான் பேசிப்பாக்கறேன்!

    ஏன் கார்த்தி? உங்களுக்கே இஷ்டமில்லையா?

    எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையே இல்லைமா! சரி! அப்படியே இருந்தா, எந்த ஜோசியன் லஞ்சத்துக்கு மசிவான்?

    ஆளைப் பிடிக்கலாம்! ஜோசியனை நாம பொய் சொல்லச் சொல்லலியே! ஜாதகம் தயாரிக்கணும், அவ்ளோதானே!

    நான் எங்கம்மாகிட்டப் பேசறேன்! நாளைக்கு எனக்கு நீ போன் பண்ணு!

    பாரதி புறப்பட்டு நேராக மீனா வீட்டுக்கு வந்தாள்.

    மீனா அவளுடன் வேலை பார்ப்பவள்! நெருங்கிய தோழி! கல்யாணம் ஆனவள் அபார்ஷன் ஆகி லீவில் இருப்பவள்!

    மீனா மட்டும்தான் இருந்தாள்.

    பாரதி எல்லாம் சொன்னாள்.

    மீனா யோசிக்கத் தொடங்கினாள்.

    எனக்குத் தெரிஞ்சு பெசன்ட் நகர்ல ஒரு ஜோசியர் இருக்கார்! அவர் எங்க குடும்ப நண்பர்தான். நாளைக்கே அவர்கிட்டப் போகலாம்!

    சம்மதிப்பாரா மீனா?

    நான் சம்மதிக்க வைக்கறேன்!

    மறுநாள் காலை மீனா வீட்டுக்கு சீக்கிரமே வந்து விட்டாள் பாரதி!

    இரண்டு பேருமா ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு பெசன்ட் நகர் வந்துவிட்டார்கள்.

    பாரதியை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு மீனா மட்டும் உள்ளே போனாள். பதினைந்து நிமிடங்களில் பாரதி அழைக்கப்பட்டாள்.

    அம்மாடீ! உங்க ஜாதகம் கொண்டு வந்தீங்களா?

    இருக்கு!

    குடுங்க! அதுக்குப் பொருத்தமா, நான் ஒரு ஜாதகம் தயார் பண்றேன்!

    எல்லா பொருத்தங்களும் அபாரமா இருக்கணும்!

    தெரியும்! ஆனா பிறந்த தேதியெல்லாம் மாறும் அவருக்கு!

    மாறட்டும்! எங்கப்பா அவரோட சர்டிபிகேட்டைக் கேக்கப் போறதில்லை!

    நாளை சாயங்காலம் வந்து புது ஜாதகத்தை வாங்கிட்டுப் போங்க!

    இருவரும் வெளியே வந்தார்கள்.

    இந்த ஜோசியருக்கு என்ன தரணும் மீனா?

    ரெண்டாயிரம்!

    நாளைக்கே நான் எடுத்துட்டு வர்றேன்! சரியா இருக்குமில்லையா?

    பிரமாதமான ஜோசியர்! ஆனா காசுக்கு ஆசை அதிகம்! சரி அவர் பொருந்தாத இரண்டு ஜாதகங்களை, பொருந்துதுனு பொய் சொல்லலியே! பொருத்தமா ஒரு புதுஜாதகம் எழுதித் தர்றார்! தப்பில்லை அதுல!

    நாளைக்கு சாயங்காலம் அதை வாங்கிட்டு, அப்பாகிட்ட கொண்டுபோய் தரணும்!

    இவர்கள் இவ்விதம் பேசும்போது, அம்மா எதிரே கார்த்திகேயன் விவரங்களை சொல்லி முடித்திருந்தான்.

    அம்மா பேசவில்லை!

    ஏம்மா பேசலை?

    அதில்லைப்பா! நீ பிறந்த ஜாதகம் ஒண்ணு! ஒரு கல்யாணத்துக்காக ஜாதகத்தையே மாத்தறது சரியா?

    மாத்தலைம்மா! அவ ஜாதகத்துக்குப் பொருத்தமா ஜாதகம் எழுதப் போறம்!

    செருப்புக்காக காலை வெட்டற மாதிரி!

    அம்மா!!

    என் மனசுக்கே இது சரியாப்படலை கார்த்தி!

    அம்மா! புதுசா தயாரிக்கப்படற ஜாதகம் பாரதியோட அப்பாவுக்காக மட்டும்தான்! மற்றபடி என் உண்மையான ஜாதகம் நிச்சயமா மாறப் போறதில்லை! அம்மா! பாரதி ராம்ப நல்ல பொண்ணு! மனசு ரெண்டு பேருக்கும் பொருந்திப் போச்சு! நிச்சயமா உனக்கும் ஒரு நல்ல மருமகளா அவ இருப்பா! உன் பிள்ளையோட சந்தோஷத்துக்காக வாழறவள் நீ! சம்மதிக்கக் கூடாதாம்மா?

    கைகளைப் பிடித்துக் கொண்டான்.

    எனக்குத் தடையே இல்லைடா கண்ணா! நீங்க ரெண்டு பேரும் நீண்ட காலத்துக்கு சந்தோஷமா இருக்கணுமேனு எனக்கொரு கவலை!

    நீ என் பக்கத்துல இருக்கும் போது எனக்கென்னம்மா கவலை?

    சரி! பாரதியோட ஜாதகத்தை முடிஞ்சா எடுத்துட்டு வா!

    எதுக்கு?

    சும்மாத்தான்!

    வேண்டாம்மா! என் ஜாதகத்தோட அதை நீ யார்கிட்டேயாவது பொருத்தம் பாக்கப் போவே! ஏதாவது ஏடா கூடமாச் சொன்னா, ஆயுசுக்கும் உன்னை அது உறுத்திட்டே இருக்கும்! மனசுதான்மா இங்கே பெரிசு!

    அம்மா உள்ளே போய்விட்டாள்.

    பிகாம் படிக்கும் லாவண்யா அம்மா அருகில் வந்தாள்.

    அம்மா! அண்ணன் சந்தோஷம்தான் முக்கியம் நமக்கு. சரினு சொல்லும்மா தயங்காதேம்மா! நம்மைப் பொறுத்தவரைக்கும் ஜாதகமே பாக்கலைனு வச்சுக்கோ! இதப்பாரு! நாளைக்கே கோயில்ல போய் பூக்கட்டி போடறதுன்னு தொடங்காதே! நெகட்டிவா வந்தா மனச்சஞ்சலம். முடிவே பண்ணிடு!

    சரிடீ!

    அம்மா சம்மதம் சொல்லிவிட்டாள். கார்த்திகேயனுக்கு குஷியாகிவிட்டது.

    ‘இது மாதிரி அம்மாக்கள் அமைந்தால், பிள்ளைகளுக்கு இந்த பூமியே சொர்க்கம் தான்!’

    3

    ரெண்டாயிரத்தை, தாம்பூலத்துடன் ஒரு தட்டில் வைத்துத் தந்தாள் பாரதி!

    ஜாதகம் நாலு மூலைகளிலும் குங்குமம் தடவி, பாரதி கைக்கு வந்தது.

    அதை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

    "இது நல்லா பொருந்துது

    Enjoying the preview?
    Page 1 of 1