Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

துர்க்காஷ்டமி
துர்க்காஷ்டமி
துர்க்காஷ்டமி
Ebook102 pages34 minutes

துர்க்காஷ்டமி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆபீஸ் டூர் முடிந்து அன்று அதிகாலைதான் சூர்யா வீடு திரும்பியிருந்தான்.
 ஒருநாள் முன்னதாகவே வந்து விட்டான்.
 குளித்துவிட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் துர்கா!
 "முதல்ல காபி குடு துர்கா!"
 "ஒரு நாள் முன்னாலயே வந்துட்டீங்களே!"
 "உன்னை, குழந்தையை விட்டுட்டு இருக்க முடியலை! எப்படா வேலை முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன்!"
 துர்கா காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள்!
 "இன்னிக்கு ஆபீஸ் போகணுமா?"
 "ஆமாம்! ப்ராஜக்ட் ரிப்போர்ட் எல்லாம் குடுத்தாகணும் இல்லையா? கொஞ்சம் லேட்டா போகலாம்!"
 தனியாக ஒரு பை இருந்தது - விதம் விதமான சேலைகள், குழந்தைக்கு ட்ரஸ் என வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.
 "கலர் புடிச்சிருக்கா துர்கா?"
 "கேள்வியே வேண்டாம். என்னை விட உங்க செலக்ஷன் நல்லாவே இருக்கும்! டூர்ல அதிகப்படியான பணம் கெடச்சா, இப்படி செலவழிச்சிடறதா?"
 "தப்பில்லைம்மா! இந்த வயசுல அனுபவிக்காம எப்ப அனுப விக்கறது?"
 "நாம ஒரு பெண்ணை பெத்து வச்சிருக்கோம். ஜாக்கிரதை!

"நீதான் அதுக்காக சேமிச்சிட்டு வர்றியே! சம்பளத்தை வாங்கி அப்படியே உன் கைல தர்றேன். காபி செலவுக்கு கூட நீதான் தர்றே! சேமிக்கறதும், செலவழிக்கறதும் நீ! என்னைக் கேக்கக்கூடாது!"
 துர்கா சிரித்தாள்.
 குழந்தை எழுந்து ஓடி வந்தது. அவனைக் கட்டிக் கொண்டு முத்த மழை பொழிந்தது!
 "நிஷா! அப்பாகிட்ட கொஞ்சினது போதும். ஸ்கூலுக்கு லேட்டாயிடும். புறப்படு!"
 "நான் இன்னிக்குப் போகலை! டாடி கூடத்தான் இருக்கப் போறேன்!"
 "டாடி ஆபீசுக்குப் போயிடுவார். புரியுதா?"
 "டாடி! இந்தம்மா ரொம்ப மோசம்!"
 "செல்லம்மா! இன்னிக்கு நீ போயிடு! வர்ற ஸன்டே ஜாலியா எங்கியாவது போகலாம்!"
 "எம்.ஜி.எம்?"
 "ஷ்யூர்!"
 "ஏய் சும்மாருடி! மூணு டிக்கெட், உள்ள போய் ஐஸ்க்ரீம் இத்யாதிகள், ஓட்டல்ல சாப்பாடுனு ஆயிரத்து ஐநூறு ரூபா செலவாகும்! தேவையில்லை!"
 "பாரு டாடி!"
 சூர்யா, மகளைப் பார்த்து கண்ணடித்தான். காதில் ஏதோ சொன்னான்.
 "ஓ.கே டாடி!" அது உள்ளே ஓடிவிட்டது.
 "எனக்கெதிரா அப்பாவும், மகளும் சதி பண்றீங்களா? உங்களை...!"
 சூர்யா அருகில் வந்தான்.
 அவள் கைகளைப் பிடித்தான்.
 "குழந்தையை சீக்கிரம் அனுப்பு. பத்து நாளாச்சு! நான் போறதுக்குள்ளே...

போறதுக்குள்ளே...? அய்யோ! பட்டப் பகல்ல என்ன இது? விடுங்க...!"
 "டாடி!"
 "வந்துட்டேன்மா!" அவசரமாக சூர்யா ஓடினான். துர்கா சிரித்தபடி நின்றாள்!
 துர்காவுக்குப் பெருமையாக இருந்தது!
 'எப்பேர்ப்பட்ட குடும்பம்! இந்த நிம்மதியும், சந்தோஷமும் எப் போதும் நிலைக்க வேண்டுமே' என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223906803
துர்க்காஷ்டமி

Read more from Devibala

Related to துர்க்காஷ்டமி

Related ebooks

Related categories

Reviews for துர்க்காஷ்டமி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    துர்க்காஷ்டமி - Devibala

    1

    பூஜை அறையில் விளக்கேற்றி தெய்வங்களைத் தொழுதுவிட்டு வெளியே வந்தாள் துர்கா!

    காலை மணி ஆறு! சூரிய உதயம் ஆகிவிட்டது!

    அடுப்பில் பாலை வைத்திருந்தாள். மற்ற வேலைகளை மளமளவென கவனிக்கத் தொடங்கிவிட்டாள்!

    படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

    ஏழு வயது நிஷா ஆழமான உறக்கத்தில் இருந்தது!

    நிஷா! எழுந்திரும்மா! குளிச்சு ரெடியாகணும். ஏழரைக்கு ஸ்கூல் பஸ் வந்துடும்!

    குழந்தை புரண்டு படுத்தது!

    நிஷா! இந்தத் தூக்கம் நல்லதில்லை! விடிஞ்ச பிறகும் பொம்பளைப் புள்ளை தூங்கினா சரிப்படாது! எழுந்திருடி!

    முனகிக் கொண்டே நிஷா எழுந்தது!

    ஏறத்தாழ இழுத்துக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டாள்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் சமையல், டிபனை முடித்து, நிஷாவைத் தயார் செய்து அவளுக்கு சாப்பாடு கட்டி, அவளை பள்ளிக்கூட பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்குள் முழி பிதுங்கி விடும்!

    அதன் பிறகு மிச்சமீதி வேலைகளை முடித்துவிட்டு நிமிர்வதற்குள் பத்தாகி விடும்!

    கணவன் சூர்யா ஆபீஸ் வேலையாக ஒரு வாரத்துக்கு மும்பை போயிருக்கிறான்.

    அவன் இருந்தால் இன்னும் பரபரப்பு.

    சிலசமயம் வெறும் காபியைக் குடித்துவிட்டு ஆறுக்கே புறப்பட்டுப் போய்விடுவான்.

    சில சமயம் நிதானமாக.

    தனியார் நிறுவனமொன்றில் பர்ச்சேஸ் அதிகாரி. ஐந்து இலக்கச் சம்பளம்!

    கம்பெனி கொடுத்த வீடு, கார் இத்யாதி வசதிகள்.

    துர்காவுக்கு எந்தக் குறையுமில்லை!

    கண் நிறைந்த கணவன் - அழகான பெண் குழந்தை! குடும்பத்தில் ஒரு குறையும் இல்லை!

    துர்காவும் பட்டதாரிதான்.

    அவள் வேலைக்குப் போவதை சூர்யா விரும்பவில்லை!

    வீட்டு நிர்வாகத்தை நல்லபடியாக கவனிக்க வேண்டுமானால், மனைவி வேலைக்குப் போகக் கூடாது என்ற அபிப்ராயம் கொண்டவன் சூர்யா!

    துர்கா அதை ஒப்புக் கொண்டு விட்டாள்.

    அமைதியான, நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும். கிடைத்திருக்கிறது. அவர் சொல்லை மீறி, பிடிவாதம் பிடித்து வேலைக்குப் போய், அதனால் புதுப்புது பிரச்சினைகளை ஏன் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்?

    துர்கா சரியென்று சம்மதித்து விட்டாள்.

    இன்றுவரை எந்தக் குறையும் இல்லை!

    துர்கா சாப்பிட்டுவிட்டு டீ.வி. முன்னால் வந்து உட்காரும்போது பதினொன்று.

    தொலைபேசி அழைத்தது!

    துர்கா போய் எடுத்தாள்.

    ஹலோ!

    திருமதி சூர்யா இருக்காங்களா?

    நான்தான் பேசறேன். நீங்க யாரு பேசறது?

    அது முக்கியமில்லைம்மா! உங்க கணவர் மும்பைக்குப் போயிருக்காரா?

    நீங்க யார்னு தெரியாம நான் எதுக்கு பதில் சொல்லணும்?

    சரி வேண்டாம். நானே சொல்லிர்றேன். ஆபீஸ் வேலைங்கற பேர்ல மும்பைக்குப் போயிருக்காங்க. கூடவே அவரோட செக்ரட்டரி சாரதாவும் போயிருக்கு. ரெண்டு பேரும் இத்தனை நாள் உள்ளூர்ல ஜல்சா பண்ணிட்டு இருந்தாங்க! இப்ப வெளியூருக்கு மாறியிருக்கு கொட்டம்!

    துர்கா பேசவில்லை!

    மாதவி வந்தாச்சு மை டியர் கண்ணகி! எல்லாத்தையும் இழந்துட்டு கோவலன் வர்றவரைக்கும் விட்டு வைக்கப் போறீங்களா? ஜாக்கிரதை!

    ரிசீவர் வைக்கப்பட்டது!

    துர்கா வந்து உட்கார்ந்தாள். முகம் சிவந்து, நரம்புகள் இடமாறி, சன்னமாக பாதிக்கப்பட்டிருந்தாள்.

    ‘சேச்சே! இது பொய்! அவரைப் பிடிக்காதவர்கள் கட்டிவிட்ட கதை! ஒன்பது வருஷங்களாக நானும் அவருடன் குடித்தனம் நடத்துகிறேன்!

    இன்றுவரை அவர் மேல் ஒரு அப்பழுக்கு கிடையாது!’

    ‘மற்ற பெண்களை தப்பாக ஒரு பார்வை பார்க்க மாட்டார்!’

    ‘படுக்கையறையில் மனைவியைத் தொடக்கூட அனுமதி கேட்குமளவுக்கு நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்’

    ‘சிகரெட், மது என்று எந்தப் பழக்கமும் இல்லை!’

    ‘தப்பான வார்த்தைகள் ஒன்றுகூட வாயிலிருந்து வராது!’

    ‘இது அபாண்டம்!’

    ‘என் புருஷன் நல்லவர். இந்த போன் காலை நான் பெரிசுபடுத்தக் கூடாது!’

    ‘புருஷனை மனைவி நம்ப வேண்டும். இருவரும் பரஸ்பரம் நம்பிக்கை வைக்காவிட்டால், தாம்பத்தியம் நரகமாகிவிடும்!’

    ‘அதற்கு நான் விதை போடக்கூடாது!’

    தலையை உதறிக் கொண்டு எழுந்தாள். அந்த எண்ணத்தை உதறிவிட்டு, வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

    நாம் மௌனமாக இருந்தாலும், பிரச்சினைகள் நம்மை பல சமயம் விடுவதில்லை!

    துரத்திக் கொண்டு வந்து வழி மறிக்கும்!

    2

    ஆபீஸ் டூர் முடிந்து அன்று அதிகாலைதான் சூர்யா வீடு திரும்பியிருந்தான்.

    ஒருநாள் முன்னதாகவே வந்து விட்டான்.

    குளித்துவிட்டு விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் துர்கா!

    முதல்ல காபி குடு துர்கா!

    ஒரு நாள் முன்னாலயே வந்துட்டீங்களே!

    உன்னை, குழந்தையை விட்டுட்டு இருக்க முடியலை! எப்படா வேலை முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன்!

    துர்கா காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள்!

    இன்னிக்கு ஆபீஸ் போகணுமா?

    ஆமாம்! ப்ராஜக்ட் ரிப்போர்ட் எல்லாம் குடுத்தாகணும் இல்லையா? கொஞ்சம் லேட்டா போகலாம்!

    தனியாக ஒரு பை இருந்தது - விதம் விதமான சேலைகள், குழந்தைக்கு ட்ரஸ் என வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

    கலர் புடிச்சிருக்கா துர்கா?

    கேள்வியே வேண்டாம். என்னை விட உங்க செலக்ஷன் நல்லாவே இருக்கும்! டூர்ல அதிகப்படியான பணம் கெடச்சா, இப்படி செலவழிச்சிடறதா?

    தப்பில்லைம்மா! இந்த வயசுல அனுபவிக்காம எப்ப அனுப விக்கறது?

    நாம ஒரு பெண்ணை பெத்து வச்சிருக்கோம். ஜாக்கிரதை!

    "நீதான் அதுக்காக சேமிச்சிட்டு வர்றியே! சம்பளத்தை வாங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1