Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சந்தியா... வந்தியா...?
சந்தியா... வந்தியா...?
சந்தியா... வந்தியா...?
Ebook116 pages39 minutes

சந்தியா... வந்தியா...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மங்கிய அந்த வெளிச்சம் ரெஸ்டாரெண்ட்டைக் கழுவிக் கொண்டிருந்தது. காற்றில் மெலிதாகக் குளிர் பரவியிருந்தது.

தலைக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சோடியம் டூம்கள், குறிப்பிட்ட மேஜைகளுக்கு மட்டும், வெளிச்ச வட்டத்தை வழங்கிக் கொண்டிருக்க... 

சானல் இசை நழுவிக் கொண்டிருக்க... 

ஷ்யாம் இரண்டாவது லார்ஜில் இருந்தான். கண்கள் சிவப்பின் ஆரம்பத்தில் அனுமதி கேட்டு நிற்க, புகையும் சிகரெட் விரலிடுக்கில் தவித்தது. 

"ம், சொல்லு! எதுக்காக இப்ப மெட்ராஸுக்கு மாற்றல் கேட்டிருக்க?" – சுனில். 

"ப்ஸ்... சும்மாத்தான். கேரளா போரடிச்சுப் போச்சு. பரபரப்பான பட்டணத்துல போய் கொஞ்ச நாள் இருந்தா, ஒரு மாறுதலா இருக்காதா?" 

"உனக்கு ரிலேட்டிவ் யாராவது மெட்ராஸ்ல உண்டா ஷ்யாம்?"

ஷ்யாம் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்களில் ஒரு அறுபது வாட் பல்ப் வெளிச்சம் 'சட்'டெனத் தோன்றி மறைந்தது ஒரு நொடி. 

ஷாம்ப்பெயினை கண்ணாடிக் கோப்பையில் வார்த்து, 'மடமட'வென தொண்டையில் சரித்துக் கொண்ட ஷ்யாம், 'சட்'டென எழுந்தான். 

"வெல். போலாமா சுனில்?" 

"இன்னும் காபரே ஆரம்பமாகலை ஷ்யாம்!" 

"ப்ளடி காபரே... ஐ'யாம் நாட் இன் எ மூட், யூ நோ? நீ வேணும்னா இருந்து பார்த்துட்டு வா." பதிலுக்குக் காத்திராமல் நடந்தான். 

இந்த நேரத்தில் ஷ்யாம் பற்றி கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு விடலாமா? 

அடுத்த மாதம், இருபத்தொன்பது மெழுகுவர்த்திகளை அணைக்கப் போகும் ஷ்யாம், மருத்துவக் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி. நாலு இலக்கச் சம்பளம். போக்குவரத்துச் செலவு, அவனுக்காக ஒதுக்கப்பட்ட கோட்டயம், இடுக்கி, பாலக்காடு அவனது ராஜ்யம். நாலு வருடங்களாக இதே பிரதேசத்தில் உத்தியோகம். ஒரே பார்வையில் யுவதிகளை வசீகரிக்கும் ஆண்மை. மில்லி மீட்டர், மில்லி மீட்டராக உடலெங்கும் வாலிபம். சொல்லிக் கொள்ள, சொந்தம் என்று எதுவும் இல்லை.

இல்லாத கெட்ட பழக்கம் எதுவும் பாக்கியில்லை.

எதற்கும் கவலைப்படாத திமிர்த்தனம்.

இப்போதைக்கு ஷ்யாம் பற்றி இது போதும். 

மறுநாள் அலுவலகம் வந்தவுடன், மாற்றல் செய்தி காதில் விழ, துள்ளிக் குதித்தான் ஷ்யாம். 

அன்று இரவே சென்னை செல்ல, சகல ஆயத்தங்களையும் செய்யத் தொடங்கினான். ஆபீசிலிருந்து விலகி, ஃபார்மாலிடிகளை முடித்து, எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு, தன் லாட்ஜுக்கு வந்தான்.  

"ஷ்யாம்... உங்களுக்கு டெலிபோன்!" ரிசப்ஷன் சொன்னது.

"ஹலோ... ஷ்யாம்!" 

"நான் மருதப்பா பேசறேன்!" எதிர் முனையில் கரகரப்பான குரல்வழிய - 

'சட்'டென பவ்யமானான் ஷ்யாம்.

"சொல்லுங்க!" 

"உடனே புறப்பட்டு வா!" 

அவசரமாக வெளிப்பட்ட ஷ்யாம், கம்பெனி வண்டியான ராஜ்தூத்தில் ஆரோகணித்து, சீறத் தொடங்கினான். 

கோட்டயம் ஸ்டேஷனை ஒட்டியதுபோல வெளிப்பட்ட அந்தக் குறுகலான சாலையில் மிதந்து, டூரிஸ்ட் ஹோமைத் தொட்டு, மித்ரா அபார்ட்மெண்ட்டைக் கடந்து, சரிவில் 'சரே'லென இறங்கி, தனியாக நின்ற அந்த ஓட்டு வீட்டின் முன் ராஜ்தூத்துக்கு ஓய்வுகொடுத்தான். 

இறங்கி, முகத்தைத் துடைத்துக் கொண்டான். 

ஷூவை அவிழ்த்து முற்றத்தில் வைத்துவிட்டு, சாக்ஸ் அணிந்த கால்களோடு, அந்தப் பழங்கால வீட்டின் நீண்ட ரேழியைக் கடந்தான். 

பிளந்திருந்த அறைக்கதவில், நாகரீகம் கருதி விரலால் ஓசைப்படுத்தினான். 

"உள்ளே வா ஷ்யாம்!"

நுழைந்தான். 

மண்தரை, காலில் 'பிசுக்'கென்றது. 

சற்று தாழ்வான கூரை. 

நடுவில் பாய் விரிக்கப்பட்டு, அதன் மேல் திறந்த உடம்பும் இடுப்பில் காவித்துண்டுமாக அந்த உருவம் திரும்பி, ஷ்யாமுக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்திருந்தது. 

Languageதமிழ்
Release dateFeb 26, 2024
ISBN9798224308576
சந்தியா... வந்தியா...?

Read more from Devibala

Related to சந்தியா... வந்தியா...?

Related ebooks

Related categories

Reviews for சந்தியா... வந்தியா...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சந்தியா... வந்தியா...? - Devibala

    1

    இடம்: ஜெய நகர் - 4 டி ப்ளாக் எக்ஸ்டென்ஷன்.

    பெங்களூர் - 560001.

    நேரம்: காலை ஒன்பது மணி.

    டிரஸ்ஸிங் டேபிள் முன் உட்கார்ந்திருந்தான் குரு. ரேவலான் இன்டிமேட்டை உடம்பில் அங்கங்கே ஸ்பிரே செய்து கொண்டான்.

    சாப்பிட வர்றீங்களா? - குரல் உள்ளேயிருந்து வந்தது.

    சீப்பால் மீசையை ஒரு முறை வாரி விட்டுக்கொண்டே எழுந்தான்.

    என்ன ஸ்பெஷல் அயிட்டம் இன்னிக்கு?

    வத்தக் குழம்பு, சுட்ட அப்பளம்!

    விளையாடறியா வசந்தி?

    ஆமா, நான் பாப்பா பாருங்க. பொழுது போகாம உங்க கூட விளையாடறேன். நாளைக்கு என்ன தேதி?

    முப்பது!

    என்ன நாள்?

    என் சம்பள நாள்!

    பட்ஜெட்ல நாநூறு ரூபா துண்டு விழுது. என்ன செய்யப் போறீங்க?

    ஏன் அவ்ளோ?

    ஜெய நகர்ல பெரிய வீடாப் பார்த்து உங்க ஆபீஸ்ல ஏற்பாடு செஞ்சிட்டாங்க. தவணைல வாங்கிக் குவிச்சிருக்கிற ஆடம்பரப் பொருட்களுக்கு, பணம் கட்டுவாங்களா? நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க போக்கு சரியில்லை. இத்தனை ஆடம்பரம் நமக்கேன்?

    நான் யார் தெரியுமா வசந்தி?

    யாரு?

    ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்தவன். எங்கப்பாவோட தாத்தா ராஜலிங்க பூபதி கூடைல நகைகளை அள்ளினவர். பட்டுக் கம்பளத்துல நடந்த பரம்பரை நாங்க. ஞாபகம் வச்சுக்கோ!

    சரி, இப்ப குப்பைக் கூடைக்குக் கூட வழியில்லை. நடக்கறதைப் பத்திப் பேசுங்க! எரிச்சலோடு உள்ளே போனாள்.

    சாதத்தின் மேல் படர்ந்திருந்த வத்தக் குழம்பை எரிச்சலுடன் பார்த்தான். வழியில்லையே என்று பிசையத் தொடங்கிய சமயம்,

    சார், டெலிக்ராம்!

    ‘சரக்’கென எழுந்தான். வாஷ்பேசினில் கை கழுவியவன் அவசரமாக வாசலுக்கு வந்தான்.

    கையெழுத்திட்டு வாங்கி, விரல் நுழைத்துக் கிழித்தவன், அவசரமாகப் பார்வையைப் படர விட்டான். (ஃபாதர் சீரியஸ் ஸ்டார்ட் அட் ஒன்ஸ்) ‘FATHER SERIOUS START AT ONCE.’

    வசந்தி சீக்கிரம் வா!

    தந்தியைப் படித்த வசந்தி, என்னங்க, நானும் உங்ககூட வந்துரட்டுமா? என்றாள் பதட்டத்துடன்.

    நீ ரெடி பண்ணு. நான் ஸ்கூல்ல போய் சுரேஷைக் கூட்டிட்டு, ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு வந்திர்றேன். கையில் பணம் வேற இல்லை!

    அடுத்த மூன்றாவது மணி நேரம் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்தார்கள் மூன்று பேரும்.

    குருவிடம் ஒரு பதட்டம் இருந்தது!

    ராமலிங்கத்துக்கு குரு ஒரே பிள்ளை. தேவகி, குருவின் தங்கை. கல்யாணம் முடிந்த இரண்டாவது வருடமே, கார் விபத்தில் கணவனை தேவகி இழக்க... அவளுக்கொரு துணையாக ராமலிங்கம் சென்னையிலேயே தங்கிவிட்டார். தேவகிக்கு குழந்தைகளும் இல்லை. கணவன் பார்த்த உத்யோகம் அவளுக்குத் தரப்பட, தகப்பனாரின் துணையோடு காலம் ஓடுகிறது.

    குரு, இரவு எட்டரை மணிக்கு மந்தைவெளியில் இருந்த, தங்கையின் வீட்டை அடைந்தான்.

    எப்படியிருக்கு அப்பாவுக்கு?

    இப்ப தூங்கறார்!

    என்னம்மா ஆச்சு?

    திடீர்னு நெஞ்சு வலின்னு சொன்னார். அது அதிகமாகி, அவஸ்தைப் பட்டு, டாக்டர் வந்து ஊசி போட்டு... ஓ... எனக்கு அதிர்ஷ்டம் இருந்தா, அப்பா பிழைக்கட்டும்.

    இரவு பத்தரை மணிக்குக் கண் விழித்தார் ராமலிங்கம்.

    குரு... குரு... வந்துட்டியா?

    உங்களுக்கு ஒண்ணுமில்லைப்பா. சரியாயிரும்!

    அவசரமாகத் தலையசைத்தார் ராமலிங்கம். மெள்ள தலையை உயர்த்தி, இடது கையால் தலையணையை விலக்கி, சாவியை எடுத்தார். குருவிடம் கொடுத்து, பீரோவைக் காண்பித்தார்.

    குரு பீரோவைத் திறந்தான்.

    அருகில் வரும்படி அழைத்தார். மெல்லிய குரலில் சொன்னார். லாக்கர்ல ஒரு சாக்லெட் டப்பா இருக்கும். அதை எடுத்துட்டு வா!

    குரு கொண்டு வந்தான்.

    அதைத் திற!

    திறந்தான்.

    உள்ளே ஏராளமான காகிதங்கள். லாண்டரி பில், பழைய துணிக்கடை பில்... மொத்தத்தில் உபயோகிக்கப் படும்படியான எதுவும் அங்கே இல்லை.

    அப்பாவே அந்தப் பெட்டியை கவனித்து, நைந்து விடும் நிலையிலிருந்த அந்தப் பழுப்பு நிறக் காகிதத்தை எடுத்து குருவிடம் தந்தார். பிரிக்கச் சொன்னார்.

    குரு பிரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு மேப் போல அதில் வரையப்பட்டிருந்தது. குருவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

    என்னப்பா இது?

    ‘என்னை எழுப்பி உட்கார வை!’ என்பது போல சைகை செய்தார்.

    குரு அவர் சொன்னது போல் செய்து விட்டு, அவரைத் தாங்கிக் கொண்டான்.

    எங்க தாத்தா ராஜலிங்க பூபதி வரைஞ்ச மேப் இது. சாகும்போது, தன் கையால அதைப் பிரதி எடுத்துக்கிட்டார் எங்கப்பா ராமலிங்க பூபதி. அவர் சாகும் போது, நான் எடுத்துக்கிட்ட பிரதிகள் இது... இப்ப உனக்குத் தர்றேன்!

    சரி... என்ன இதுல?

    "எங்க தாத்தா ராஜலிங்க பூபதி, ஆறு தங்கக் குடங்கள் நிரம்ப, தங்க நாணயங்கள் - அத்தனையும் ராஜாத்தலை பசும்பொன் - சேகரிச்சு, அதை பூமிக்கடில புதைச்சிருக்கார். இதோட மதிப்பு பல கோடிகள். பகை காரணமா அவர் திடீர்னு கொல்லப்பட்டப்ப, சாகும் தறுவாய்ல, எங்கப்பாவுக்கு இந்த ரகசியத்தைச் சொல்லிட்டு, சங்கேதமா குறிச்சுத் தந்து, உயிரை விட்டிருக்கார்.

    அப்புறமா மிச்சமிருக்கிற சொத்துக்களும் எதிரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு நம்ம ஜமீனும் போய், குடும்பமே தெருவுக்கு வந்தது. அப்பா வாழ்நாள் முழுக்க தேடிப் பார்த்தார். இந்த மேப் கடைசி வரைக்கும் அவருக்குப் புரியலை. சாகும்போது என்கிட்ட ஒப்படைச்சார்.

    நானும் தேடித் தேடி சலிச்சேன். எனக்கும் புரியலை. நானா சில ஊகங்களை செஞ்சுட்டு முன்னேறினேன். நான் இதே சென்னைல இருக்க, இதுவும் ஒரு காரணம். நானும் தோத்துட்டேன் குரு. இனி நீயாவது முயற்சி செஞ்சு வெற்றியடையப் பாரு. ஆனா, அரசாங்கத்துக்குத் தெரிஞ்சா நமக்கு ஒரு நாணயம் கூட மிஞ்சாது. ஜாக்ரதை." மூச்சிரைத்து, வியர்வை கசிந்தது அவருக்கு.

    அப்பா, நீங்க பேச வேண்டாம் இனி!

    "இல்லை குரு. எனக்கு அதிக சமயமில்லை. இப்பப் பேசினாத்தான் உண்டு. உன்

    Enjoying the preview?
    Page 1 of 1