Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

துரத்தி வரும் துரோகம்
துரத்தி வரும் துரோகம்
துரத்தி வரும் துரோகம்
Ebook81 pages27 minutes

துரத்தி வரும் துரோகம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த நாள் பள்ளியில்...
 மேடையும், அதன் சுற்றுப்புறமும், பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
 மேடையின் ஒரு ஓரத்தில் பெரிய மைக் வைக்கப்பட்டு, நடுவில் மேஜையிட்டு, நாலைந்து நாற்காலிகள்; நடுவில் மாலைகள்.
 பிரின்ஸிபால்... இன்னும் ஒரு சிலர் வந்தாயிற்று.
 பிரதம விருந்தினருக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. அந்த நடு நாற்காலி ஆளில்லாமல் அதை ஆமோதித்தது.
 "யாருங்க சீஃப் கெஸ்ட்?" கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆர்த்தி.
 "ரங்கதுரையா இருக்கணும். இந்த ஸ்கூல் உருவாகக் காரணமே அவர்தான். இந்த ஊருக்கும் பெரிய மனுஷர் அவர் தானே?'
 "யார் அது?"
 "நீயும், நானும் இந்த ஊருக்கு வந்தே மூணு வருஷம் தானே ஆவுது. நானே ஒரு தடவைதான், ரங்கதுரையைப் பார்த்திருக்கேன். எங்க ஆபீஸ்ல ஒரு கல்சுரல் ஃபங்ஷனுக்குத் தலைமை தாங்க, அவரை அழைச்சப்பப் பார்த்தேன்."
 திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது. வந்து நின்ற அம்பாஸ்டர் கதவு திறக்க, அதிலிருந்து இறங்கினார் அந்த மனிதர். தழையத் தழைய பட்டு வேஷ்டியும், உள்ளே பனியன் தெரியும்படி மஸ்லின் ஜிப்பாவும் அணிந்து, கால்களை அழுந்த நிலத்தில் பதித்தார்.
 பள்ளி அதிகாரிகள் பவ்யமாகப் போட்ட மாலையை, அவிழ்த்து உதவியாளரிடம் கொடுத்து விட்டு,நடக்கத் தொடங்கினார்.
 தலை கொள்ளாத முடியும்... மேலுதட்டை சாப்பிட்டிருந்த கனத்த மீசையும் கறுப்பு சாயத்தில் சிக்கி பழுப்பாகியிருந்தது. கிழட்டுச் சிங்கமொன்று கம்பீரமாக நடந்து வருவது போலத் தோன்றியது.
 "அறுபது வயசு இருக்குமா இவருக்கு?"
 "இருக்கும்... உல்லாசப் பேர்வழி. இந்த வயசானா கூட, எல்லாம் வேணும் இவருக்கு. ரங்கதுரையே தான்!"
 மேடையில் படபடவென கைதட்டல் எழ, பேச்சை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள் ஆர்த்தி.
 பிரின்ஸிபாலின் ஆரம்ப அழைப்பைத் தொடர்ந்து, ரங்கதுரை, தன் கரகரப்பான, வசீகரக் குரலால், ரத்ன சுருக்கமாக நாலு வார்த்தைகள் பேசி விட்டு உட்கார, நிகழ்ச்சிகளின் ஆரம்ப அறிவிப்பு வந்தது.
 முக்கியஸ்தர்கள், மேடையிலிருந்து இறங்கி, முன் வரிசையில் உட்கார...
 திரை விலகி...
 முதல் நிகழ்ச்சி தொடங்கி விட்டது.
 இரண்டாவது ஒரு பரதநாட்டியம்.
 "அடுத்த நிகழ்ச்சி, மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் வீர முழக்கம்!"
 அறிவிக்கப்பட்டதும்,
 நெஞ்சு கொள்ளாத பூரிப்புடனும், படபடக்கும் இதயத்தோடும், நாற்காலி நுனிக்கு வந்தார்கள் பிரபுவும், ஆர்த்தியும்.
 திரை விலக, வாளோடு, மஞ்சு நடந்து வந்தது.
 மேடையின் மத்தியில் வந்து நின்று, பார்வையை ஒரு முறை சுழற்றியது. டாடியும், மம்மியும் எங்கே என்று விழிகள் அவசரமாக அலை பாய, முதல் வரிசையில் பார்வை பதிய, படக்கென்று நின்றது பார்வை.
 மீசையைத் தடவிக் கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் ரங்கதுரை. அவர்மேல் பதித்த விழிகளை எடுக்கவேயில்லை.உள்ளே, மிஸ் பதறினாள்...
 "என்ன இது, மஞ்சு பேசாமல் நிற்கிறது? கூட்டத்தைப் பார்த்ததும் பயத்தில், வசனம் மறந்து விட்டதா?"
 மாணவர்கள் மத்தியிலிருந்து கேலியும், சிரிப்பும் கலந்த கூச்சலொன்று மெலிதாகக் கிளம்பியது.
 பிரபுவுக்கும் புரியவில்லை.
 "என்னங்க ஆச்சு? வசனத்தை மறந்துட்டாளா?" - ஆர்த்தி அவசரமாகக் கேட்க...
 உள்ளேயிருந்து மிஸ், மஞ்சுவுக்கு மட்டும் கேட்கும் படி, மைக் இல்லாமல், "ஜெய்பவானி" என்று ஆரம்பித்தாள்.
 மஞ்சு ஒன்றும் பேசாமல், மேடையிலிருந்து நடந்து, பக்கவாட்டுப் படிகள் வழியாகக் கீழே இறங்கியது. எல்லோரும் ஆச்சர்யம் தடவிய விழிகளோடு பார்க்க, முதல் வரிசையில் பிரவேசித்து விடுவிடுவென்று நடந்து ரங்கதுரையை நெருங்கியது.
 அவருக்கு முன் வந்துநின்று, அவரையே இமைக்காமல் மறுபடியும் பார்த்தது.
 ரங்கதுரை ஆச்சர்யமாகி, "என்ன பாப்பா வேணும்?" என்று கேட்க -
 "நீ சாகணும்!" - வாளை உயர்த்தியது. அத்தனை பேரும் மிரண்டு எழுந்தார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223706724
துரத்தி வரும் துரோகம்

Read more from Devibala

Related to துரத்தி வரும் துரோகம்

Related ebooks

Reviews for துரத்தி வரும் துரோகம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    துரத்தி வரும் துரோகம் - Devibala

    1

    பாத்ரூமிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட - உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் மஞ்சு வெளிப்பட்டபோது அலறிவிட்டான் பிரபு.

    ஆர்த்தி, இங்க வா! சீக்கிரம் வந்து பாரு, இங்க நடக்கற கூத்தை! - பிரபு குரலெடுத்து அலறினான் காட்டமாக.

    கிச்சனில், ரசத்துக்கு தாளித்துக் கொண்டிருந்த ஆர்த்தி, போட்டது போட்டபடி ஓடி வந்தாள். பதட்டத்துடன் கவலையோடு உள்ளே நுழைந்தவள் ‘பக்’கென்று சிரித்து விட்டாள்.

    "நான் வந்து குளிப்பாட்டி விட மாட்டேனா? ரசத்துக்கு தாளிச்சிட்டு இருக்கிற நேரத்துல, இதுவா உள்ளே நுழைஞ்சு, பெரிய மனுஷிமாதிரி தானே, தண்ணியை எடுத்துக் கொட்டிக்கிட்டா, யார் தப்புங்க அது? என் மேல் பாயத் தெரியுது. அஞ்சு வயசு முடிஞ்சும், விரல் சூப்பற பழக்கம் நிக்கலை. அதெல்லாம் கண்ணுல படாது!’

    முழுவதும் துவட்டி, டவலை இடுப்பில் கட்டி விட்டான்.

    டாடீ... டாடீ...!

    என்னடா செல்லம்?

    நாளைக்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் டே டாடீ!

    இதை நீ ஆயிரத்தெட்டாவது தடவையா சொல்லிட்டியே கண்ணம்மா.

    நானு... திவாஜியா நடிக்கப் போறேன்!

    திவாஜி இல்லம்மா... சிவாஜி...!

    அவளுக்கு ‘சி’, ‘ச’ எல்லாம் வராது. நல்ல பொண்ணைப் பெத்து வச்சிருக்கோம்!

    குழந்தையை கேலி செஞ்சா, கோவம் வரும் எனக்கு. நீ போ உள்ளே. நீ சொல்லுடா தங்கம்!

    ஆர்த்தி முகவாயில் இடித்துக் கொண்டு, சரேலென விலகிப் போக -

    நா நடிச்சுக் காட்டட்டுமா டாடீ?

    சரி!

    கையில வாள் வத்துக்கணும் டாடீ!

    இந்தா... இந்த முருங்கைக் காய் தான் வாள்... இப்ப பேசு!

    ‘ஜெய் பவானி!’ என்று ஆவேசமாகத் தொடங்கியது. பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த வசனத்தை நன்றாகத்தான் பாடம் செய்திருந்தது.

    இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபு.

    2

    அடுத்த நாள் பள்ளியில்...

    மேடையும், அதன் சுற்றுப்புறமும், பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    மேடையின் ஒரு ஓரத்தில் பெரிய மைக் வைக்கப்பட்டு, நடுவில் மேஜையிட்டு, நாலைந்து நாற்காலிகள்; நடுவில் மாலைகள்.

    பிரின்ஸிபால்... இன்னும் ஒரு சிலர் வந்தாயிற்று.

    பிரதம விருந்தினருக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. அந்த நடு நாற்காலி ஆளில்லாமல் அதை ஆமோதித்தது.

    யாருங்க சீஃப் கெஸ்ட்? கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆர்த்தி.

    "ரங்கதுரையா இருக்கணும். இந்த ஸ்கூல் உருவாகக் காரணமே அவர்தான். இந்த ஊருக்கும் பெரிய மனுஷர் அவர் தானே?’

    யார் அது?

    நீயும், நானும் இந்த ஊருக்கு வந்தே மூணு வருஷம் தானே ஆவுது. நானே ஒரு தடவைதான், ரங்கதுரையைப் பார்த்திருக்கேன். எங்க ஆபீஸ்ல ஒரு கல்சுரல் ஃபங்ஷனுக்குத் தலைமை தாங்க, அவரை அழைச்சப்பப் பார்த்தேன்.

    திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது. வந்து நின்ற அம்பாஸ்டர் கதவு திறக்க, அதிலிருந்து இறங்கினார் அந்த மனிதர். தழையத் தழைய பட்டு வேஷ்டியும், உள்ளே பனியன் தெரியும்படி மஸ்லின் ஜிப்பாவும் அணிந்து, கால்களை அழுந்த நிலத்தில் பதித்தார்.

    பள்ளி அதிகாரிகள் பவ்யமாகப் போட்ட மாலையை, அவிழ்த்து உதவியாளரிடம் கொடுத்து விட்டு,

    நடக்கத் தொடங்கினார்.

    தலை கொள்ளாத முடியும்... மேலுதட்டை சாப்பிட்டிருந்த கனத்த மீசையும் கறுப்பு சாயத்தில் சிக்கி பழுப்பாகியிருந்தது. கிழட்டுச் சிங்கமொன்று கம்பீரமாக நடந்து வருவது போலத் தோன்றியது.

    அறுபது வயசு இருக்குமா இவருக்கு?

    இருக்கும்... உல்லாசப் பேர்வழி. இந்த வயசானா கூட, எல்லாம் வேணும் இவருக்கு. ரங்கதுரையே தான்!

    மேடையில் படபடவென கைதட்டல் எழ, பேச்சை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள் ஆர்த்தி.

    பிரின்ஸிபாலின் ஆரம்ப அழைப்பைத் தொடர்ந்து, ரங்கதுரை, தன் கரகரப்பான, வசீகரக் குரலால், ரத்ன சுருக்கமாக நாலு வார்த்தைகள் பேசி விட்டு உட்கார, நிகழ்ச்சிகளின் ஆரம்ப அறிவிப்பு வந்தது.

    முக்கியஸ்தர்கள், மேடையிலிருந்து இறங்கி, முன் வரிசையில் உட்கார...

    திரை விலகி...

    முதல் நிகழ்ச்சி தொடங்கி விட்டது.

    இரண்டாவது ஒரு பரதநாட்டியம்.

    அடுத்த நிகழ்ச்சி, மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் வீர முழக்கம்!

    அறிவிக்கப்பட்டதும்,

    நெஞ்சு கொள்ளாத பூரிப்புடனும், படபடக்கும் இதயத்தோடும், நாற்காலி நுனிக்கு வந்தார்கள் பிரபுவும், ஆர்த்தியும்.

    Enjoying the preview?
    Page 1 of 1